PDA

View Full Version : ஆசைகள்



theepa
23-07-2007, 02:16 PM
ஆசைகள்

ஆசைகள்

பாடங்கள் மீது ஆசை...
சித்தியடைந்தேன்..!

தாய் மீது ஆசை....
தாலாட்டுக் கேட்கிறேன்..!

நண்பர்கள் மீது ஆசை...
நட்பைப் பெறுகிறேன்..!

மலர்கள் மீது ஆசை...
களிப்படைகிறேன்...!

குயில்கள் மீது ஆசை...
குதூகலிக்கிறேன்....!

பூமி மீது ஆசை...
பூரிப்படைகிறேன்...!

காதலன் மீது ஆசை ....
அவன் கை பிடித்து மகிழ்வேனோ..!


என் வாழ்க்கை மன்னவனே உனை என்று நான் அடைவேன்:traurig001:

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

இனியவள்
23-07-2007, 02:21 PM
ஆசைகள் உன்னை
வழிநடத்தும் வெற்றிப்
பாதயை நோக்கி..

ஆசைகளை அளவாக
வைத்துக்கொள் ஆசைகளே
உன்னை அழிவை நோக்கி
நகர்த்தி விடும்....

அன்பை அதிகமாக வை
சொர்க்கத்தை உனக்கு
காட்டும் சில நேரம்
பாதை மாறி நரகத்தையும்
உனக்கு காட்டும்...

உன் வாழ்க்கை திசையின்
போக்கை நீயே முடிவு
செய் நல்லதும் கெட்டதும்
உன் செய்கையிலே

கவிதை அருமை லதுஜா வாழ்த்துக்கள் :aktion033:

namsec
23-07-2007, 02:23 PM
ஆசைகள்

ஆசைகள்

பாடங்கள் மீது ஆசை...
சித்தியடைந்தேன்..!

தாய் மீது ஆசை....
தாலாட்டுக் கேட்கிரேன்..!

நண்பர்கள் மீது ஆசை...
நட்பைப் பெறுகிரேன்..!

மலர்கள் மீது ஆசை...
களிப்படைகிரேன்...!

குயில்கள் மீது ஆசை...
குதூகளிக்கிரேன்....!

பூமி மீது ஆசை...
பூரிப்படைகிரேன்...!

காதலன் மீது ஆசை ....
அவன் கை பிடித்து மகிழ்வேனோ..!


என் வாழ்க்கை மன்னவனே உனை என்று நான் அடைவேன்:traurig001:

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

காலம் கனியும் கவலை கலைந்துவிடு

சிவா.ஜி
23-07-2007, 03:58 PM
ஆசை அன்பாக மாறும்போது அவன் நிச்சயம் வருவான். கை பிடித்தும் மகிழ்வாய். எழுத்துப்பிழைகளில் சிறிது கவனம் செலுத்துங்கள் தீபா. வாழ்த்துக்கள்.

அமரன்
23-07-2007, 09:20 PM
எல்லாவற்றிலும் நம்பிக்கை வைத்து செயல்படுங்கள் வெற்றி கிடைக்கும். என்று சொல்கிறார்கள்..காதலில் அது சாத்தியமா...சரியான கேள்விதான். கவிதை அமைப்பில் முன்னேற்றம் தெரிகிறது. பாராட்டுக்கள்.

இளசு
23-07-2007, 10:11 PM
நியாயமான ஆசைகள்
நிச்சயம் ஈடேறும்..

பாராட்டுகள் லதுஜா..

theepa
23-07-2007, 10:20 PM
என்னால் முடிந்த வரை எலுத்து பிலைகலை திருத்தி மேலும் இனிய கவியை உங்கலுக்காண்டி தருவேன் நண்பர்கலே

அன்புடன்
லதுஜா

இளசு
23-07-2007, 10:25 PM
நிச்சயம் லதுஜா அவர்களே..

இந்த ஊக்கமும் ஆர்வமும் நிச்சயம் உங்கள் பதிவுகளை மெருகேற்றும்..

பாராட்டுகள்..

theepa
24-07-2007, 10:04 PM
நன்ரிகள் என் அருமை நண்பரே

அக்னி
24-07-2007, 10:23 PM
எதிலும் ஆசைப்படலாம்...
அதிகமாக ஆசைப்படலாம்...
ஆசையில் கஞ்சத்தனம் இல்லாமல் அளவுக்கு மிஞ்சியே ஆசைப்படலாம்...
விதிவிலக்காக காதல்...
காதலில் அதிகம் வேண்டும் என்று ஆசைப்பட்டால், வாழ்க்கை நாசம்...

ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்...
எழுத்துப் பிழைகளைப்பற்றி கவலைப்படாதீர்கள். காலப்போக்கில் சரியாகிவிடும். தொடர்ந்தும் படையுங்கள் லதுஜா...

theepa
25-07-2007, 12:11 AM
நிச்சயமாக இன்னும் மேலும் மேலும் கவி படைத்திடுவேன் நண்பரே அதர்க்கு உங்கல போல நண்பர்களின் வாழ்த்துக்கல் எனக்கு நிச்சயம் வேண்டும்

அன்புடன்
லதுயா

இன்பா
25-07-2007, 06:59 AM
காதலன் மீது ஆசை ....
அவன் கை பிடித்து மகிழ்வேனோ..!

காத்திரு... அதை விட
உன் காதலை உணர்த்து...

வருவான் கரம் பிடிப்பான்...
மகிழ்விப்பான்...

Raaj
25-07-2007, 07:05 AM
கண்டிப்பாக இந்த ஆசையும் நிறைவேறும்
நல்ல சுவை கவிதைக்கு என் உளம் கனிந்த வழ்த்துக்கள்

அன்புடன்
திவ்வியராஜ்