PDA

View Full Version : ஒரு பழம் காயாகிறது



சிவா.ஜி
23-07-2007, 11:50 AM
தன் திருமணத்திற்கான தவம்
தகப்பனால் சித்தியடையுமென
நினைத்திருந்தவள்,
'சித்தி'யை அடந்தாள்!
அம்மா என்ற
அழைப்பை எதிர்நோக்கியவள்
அக்காவென்றழைக்கப்பட்டாள்!
அப்பன் செய்த சதி,
மாறியது இவள் விதி!

இதயம்
23-07-2007, 11:55 AM
முதிர்கன்னியின் எண்ண வேட்கையை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கொடுத்த தலைப்பு அருமையானது, புதுமையானது..!! வாழ்த்துக்கள்..!

சிவா.ஜி
23-07-2007, 11:57 AM
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் இதயம்.

அமரன்
23-07-2007, 12:11 PM
முதிர்கன்னிகள்
சீதனம் பார்ப்பவர்களும்
வதனம் பார்ப்பவர்களும்
சகுனம் பார்ப்பவர்களும்
குணம் பார்க்க மறுப்பதால்
கிடைத்த கன்றிய கனிகள்..


ஓரறிவுமரம்
கனியை காயாக்கினால்
அது பாசம்
ஆறரிவுமரம்
கனியைக் காயாக்கினால்...?????


சொன்ன கருத்துக்கும்
சொன்ன விதத்துக்கும்
சிரசாக இருக்கிறது
தலைப்பு

பாராட்டுக்கள் சிவா.

சிவா.ஜி
23-07-2007, 12:45 PM
ஓரறிவுமரம்
கனியை காயாக்கினால்
அது பாசம்
ஆறரிவுமரம்
கனியைக் காயாக்கினால்...?????வேஷம்.

அருமையான வரிகள் அமரன்.பாராட்டுக்கள். பதில் கவிதைகளில் பின்னுகிறீர்கள்.
சரியாகச் சொன்னால் தலைப்பு தோன்றிய பின்னர்தான் வார்த்தைகள் வந்தது.நன்றி அமரன்.

இனியவள்
23-07-2007, 12:49 PM
சிவா உங்கள் கவியும்
அமரின் பதில் கவியும்
ஒன்றையொன்று விஞ்சி
நிற்கின்றது வாழ்த்துக்கள்
இருவருக்கும்

சிவா.ஜி
23-07-2007, 12:55 PM
எல்லாம் நீங்கள் வகுத்துக்கொடுத்த பாதைதான் இனி.
பின்னூட்டங்கள் பதில் கவிகளால் நிரப்பப்படுவது நன்றாக இருக்கிறது. நன்றி இனியவள்.

அமரன்
23-07-2007, 08:06 PM
ஓரறிவுமரம்
கனியை காயாக்கினால்
அது பாசம்
ஆறரிவுமரம்
கனியைக் காயாக்கினால்...?????வேஷம்.
.

விஷம்....

இளசு
23-07-2007, 09:30 PM
உண்ணாமல் ஒரு உயிர் வாட*
அஜீரணம் வரவைத்துக்கொண்ட*
அஃறிணை அப்பனே..

மரத்தை வைத்தவன் நீ..
நீரூற்றவில்லை!
வேரையும் வெட்டினால்???

சிவாஜி கவிதையும் அமரனின் பின்கவிதையும்
கருத்து வாள்களாய்க் கீறுகின்றன..

பாராட்டுகள் கவிகளே!

சிவா.ஜி
24-07-2007, 04:18 AM
உண்ணாமல் ஒரு உயிர் வாட*
அஜீரணம் வரவைத்துக்கொண்ட*
அஃறிணை அப்பனே..
அருமையான சாட்டையடி இளசு சார், அஃறிணை அப்பன்களுக்கு.
மரத்தை வைத்தவன் நீ..
நீரூற்றவில்லை!
வேரையும் வெட்டினால்???
தன் வேரை தானே வெட்டும் தன்னலம் மிக்க தகப்பன்கள், தவிக்கும்
கல்யாண கனவில் வாழும் முதிர் கன்னிகள்.
சிவாஜி கவிதையும் அமரனின் பின்கவிதையும்
கருத்து வாள்களாய்க் கீறுகின்றன..

பாராட்டுகள் கவிகளே!

அருமையான பின்னூட்டம். மிக்க நன்றி இளசு சார்.

ஓவியன்
29-07-2007, 06:48 PM
சித்தி என்ற
பெயராலேயே
வாழ்வின்
சித்திக்கு தந்தையே
கத்தி வைத்த
அவலம்............!

வரிகள் அருமையாக கருவைப் பிடித்து நிற்கின்றன − பாராட்டுக்கள் சிவா.ஜி.

சிவா.ஜி
30-07-2007, 04:21 AM
கத்தி போன்ற கூரான பின்னூட்டம். மிக்க நன்றி ஓவியன்.

விகடன்
02-08-2007, 04:08 AM
ஏக்கங்களால் காலத்தை வீணடித்த முதிர் கன்னியின் களைய முடியாத கானல் நீராய்ப் போன எதிர்பார்ப்புக்கள்.

பாராட்டுக்கள் சிவா

சிவா.ஜி
02-08-2007, 04:09 AM
ஏக்கம் மட்டும்தான் அவள் சொத்து வீணடித்தது அந்த பொறுப்பில்லாத அப்பன். மிக்க நன்றி விராடன்.