PDA

View Full Version : கனவுRaaj
23-07-2007, 10:43 AM
என் கனவுகளின்
இடைவெளியை நிரப்பியது
அன்பே உன் நினைவுகளே
அதனால்தான் உன்னை காதலித்தேன்
பின்பு நீ என்னை காதலிகாத போதுதான்
புரிந்தது நீ கனவே கானவில்லை என்று !!!!!!!

theepa
23-07-2007, 12:42 PM
ம்ம்ம்ம் கனவுகள் வந்ததால் அவனை காதலித்தீர்கள் ஆனால் அது கனவாகி போச்சு அருமை உங்கள் சோகமான காதல் கவிதை பாராட்டுக்கள் திவ்யா

இனியவள்
23-07-2007, 12:46 PM
நீ என்னுள் வந்ததால்
வரமால் போனது
இடைவெளி கனவுக்குள்...

நீயே கனவாகிப் போக*
கானல் ஆனது எனது
காதல்....

வாழ்த்துக்கள் தோழியே கவிதை அழகு

அரசன்
23-07-2007, 12:54 PM
இனிமேல் களையாத கனவுகளை மட்டுமே காணுங்கள். அதாவது நிஜத்தை மட்டுமே. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
23-07-2007, 12:59 PM
காதலிக்கும் முன்பே கனவில் புகுந்தாளோ..அவளைப்போல் உங்களால் அவள் கனவில் புகவில்லை. அது உங்கள் நாகரீகம். அவளை ஏன் குறை கூறுகிறீர்கள். இனி இருவரும் கனவை விட்டு நிஜத்துக்கு வந்து விடுங்கள்.
பாராட்டுக்கள் திவ்யராஜ்.

இனியவள்
23-07-2007, 12:59 PM
இனிமேல் களையாத கனவுகளை மட்டுமே காணுங்கள். அதாவது நிஜத்தை மட்டுமே. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

ஹீ ஹீ மூர்த்தி என்ன இது
எமது ஆழ்மனதின் பரிணாமமே
கனவாக வெளிப்படுகின்றது
அதில் பல நிறைவேறலாம்
பல நிறைவேறாமல் போகலாம்
கனவு என்பது எமது கையில்
இல்லை