PDA

View Full Version : பூவும் பொட்டும்

சுகந்தப்ரீதன்
23-07-2007, 08:16 AM
விதவை வைத்திருந்தாள்
பூவும் பொட்டும்
விற்பனைக்கு மட்டும்!

இனியவள்
23-07-2007, 08:20 AM
விதவை வைத்திருந்தாள்
பூவும் பொட்டும்
விற்பனைக்கு மட்டும்!

கவி நன்று வாழ்த்துக்கள் சுகந்

இரு கரம் நீட்டி அழைக்கின்றனர்
மறுவாழ்வு கொடுக்க விதவைகளுக்கு
கரம் கொட்டி சிரிக்கின்றனர் சிலர்
இரு கரம் நீட்டி அழைத்தவனை..

அமரன்
23-07-2007, 08:20 AM
சுகந்தா..நச் முரண் கவிதை..
காட்சிப் பொருளாகவும்
காய்ச்சும் பொருளாகவும்
அவளுக்கு பூவும் பொட்டும்...
இது போல பல நச்கள் இங்கே.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8044)
பாராட்டுக்கள் சுகந்தா.

சுகந்தப்ரீதன்
23-07-2007, 08:24 AM
கவி நன்று வாழ்த்துக்கள் சுகந்

இரு கரம் நீட்டி அழைக்கின்றனர்
மறுவாழ்வு கொடுக்க விதவைகளுக்கு
கரம் கொட்டி சிரிக்கின்றனர் சிலர்
இரு கரம் நீட்டி அழைத்தவனை..

சில்லரை மாந்தர்கள் சிரிக்கட்டும்!
சீர்த்திருத்தம் தொடரட்டும்!

சுகந்தப்ரீதன்
23-07-2007, 08:26 AM
சுகந்தா..நச் முரண் கவிதை..
காட்சிப் பொருளாகவும்
காய்ச்சும் பொருளாகவும்
அவளுக்கு பூவும் பொட்டும்...
இது போல பல நச்கள் இங்கே.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8044)
பாராட்டுக்கள் சுகந்தா.

முரண் கவிதையில் மட்டுமல்ல*
நாம் அன்றாட வாழ்விலும் தான் நண்பரே!

பாராட்டியமைக்கு நன்றி!

அமரன்
23-07-2007, 08:29 AM
வாழ்க்கைக் கவிதையில்
காணும் கவின்களும்
கலையும் வணங்களும்
கவிதைகளாக...இல்லையா சுகந்தன்.

இனியவள்
23-07-2007, 08:31 AM
சில்லரை மாந்தர்கள் சிரிக்கட்டும்!
சீர்த்திருத்தம் தொடரட்டும்!

சீர்திருத்தும் சமுதாயத்தை
சிதைக்கும் கத்தியாய்
சில்லரை மாந்தர்களில்
காரப்பேச்சுக்கள்..

இனியவள்
23-07-2007, 08:33 AM
வாழ்க்கைக் கவிதையில்
காணும் கவின்களும்
கலையும் வணங்களும்
கவிதைகளாக...இல்லையா சுகந்தன்.

ம்ம் ஆமாம் அமர்

காணும் காட்சிகள்
உவமையாக மாற
இனிக்கும் நினைவுகள்
உணர்வுகளாக உருவெடுக்க
அழகிய கவி உருப்பெருகின்றது
வாழ்க்கை என்னும் பாடத்தில்
இருந்து.....

சிவா.ஜி
23-07-2007, 08:54 AM
குறுகச் சொல்லி நிறைய சிந்திக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள் சுகந்தன்.

ஷீ-நிசி
23-07-2007, 09:32 AM
அடடா! ஹைக்கூனா இப்படித்தான் அப்படின்னு உதாரணம் காட்டும் அளவிற்கு மிக பிரமாதமாய் இருக்கிறது கவிதை! வாழ்த்துக்கள்!

இதயம்
23-07-2007, 09:37 AM
ஹைக்கூ கவிதையின் பயனாளர்கள் பெருகியதற்கும், அதை அதிகம் விரும்புவதற்கும் காரணம் அதன் சுருங்கச்சொல்லி, விளங்க வைக்கும் "நச்" பாணி தான். 2, 3 சிறு வரிகளில் சொல்லவந்த கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் கீழ் உள்ள ஹைக்கூ கவிதை..!!!

அருமையான ஹைக்கூ தந்த சுகந்தப்ரீதனுக்கு பாராட்டுக்கள்.

namsec
23-07-2007, 09:40 AM
விதவை வைத்திருந்தாள்
பூவும் பொட்டும்
விற்பனைக்கு மட்டும்!

அருமையான் கவி
சிறந்தசிந்தனை
வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
23-07-2007, 12:24 PM
குறுகச் சொல்லி நிறைய சிந்திக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள் சுகந்தன்.

நன்றி சிவா.....

சுகந்தப்ரீதன்
23-07-2007, 12:26 PM
அடடா! ஹைக்கூனா இப்படித்தான் அப்படின்னு உதாரணம் காட்டும் அளவிற்கு மிக பிரமாதமாய் இருக்கிறது கவிதை! வாழ்த்துக்கள்!

மிக்க மகிழ்ச்சி நண்பரே!

சுகந்தப்ரீதன்
23-07-2007, 12:27 PM
ஹைக்கூ கவிதையின் பயனாளர்கள் பெருகியதற்கும், அதை அதிகம் விரும்புவதற்கும் காரணம் அதன் சுருங்கச்சொல்லி, விளங்க வைக்கும் "நச்" பாணி தான். 2, 3 சிறு வரிகளில் சொல்லவந்த கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் கீழ் உள்ள ஹைக்கூ கவிதை..!!!

அருமையான ஹைக்கூ தந்த சுகந்தப்ரீதனுக்கு பாராட்டுக்கள்.

உங்கள் அன்பிற்க்கு நன்றிகள் இதயம்!

சுகந்தப்ரீதன்
23-07-2007, 12:29 PM
அருமையான் கவி
சிறந்தசிந்தனை
வாழ்த்துக்கள்

உங்கள் பாராட்டுக்கு எனது நன்றிகள் நண்பரே!

விகடன்
02-08-2007, 05:12 AM
முரண் கவி நன்றே சுகந்தன்.
ஒரு சவாலாக இருக்கும் பெண்ணின் சீவியம். பூக்களை விற்றாலும் அமங்கலி என்று எத்தனைபேர் தட்டிக் கழிக்கக்கூடும். அதிலும் விற்பனை செய்து பிழைப்பதாகில் ...

ஓவியன்
09-08-2007, 10:41 PM
ம்!

உறுத்த வைக்கும் ஒரு முரண் கவி சுகந்தா!

நன்றாக வரிகளைக் கையாளத் தெரிகிறது உங்களுக்கு − பாராட்டுக்கள்!. :thumbsup:

சுகந்தப்ரீதன்
28-08-2007, 03:56 AM
ம்!

உறுத்த வைக்கும் ஒரு முரண் கவி சுகந்தா!

நன்றாக வரிகளைக் கையாளத் தெரிகிறது உங்களுக்கு − பாராட்டுக்கள்!. :thumbsup:

நன்றிகள் பல* விராடன் மற்றும் ஓவியருக்கு!