PDA

View Full Version : போய்விடும்



இனியவள்
23-07-2007, 08:09 AM
வசந்தமாய் வீசிய காற்று
அனலை வீசி விட்டுச் செல்ல
அவன் நினைவுகளிலே உன்
காலத்தைக் கடத்த முயற்சிக்கின்றாய்
கனவுகளில் காலத்தைக் கடத்தாதே
நீ விழித்துப் பார்க்கையில் வசந்தம்
உன் கையை விட்டுப் போய்விடும்

சுகந்தப்ரீதன்
23-07-2007, 08:13 AM
வசந்தமாய் வீசிய காற்று
அனலை வீசி விட்டுச் செல்ல
அவன் நினைவுகளிலே உன்
காலத்தைக் கடத்த முயற்சிக்கின்றாய்
கனவுகளில் காலத்தைக் கடத்தாதே
நீ முழித்துப் பார்க்கையில் வசந்தம்
உன் கையை விட்டுப் போய்விடும்

உன் நினைவுகளில்
மூழ்கத்தான் எனக்கு விருப்பம்!
முழித்து பார்த்தால்
நிச்சயம் எனக்கு வருத்தம்!

வாழ்த்துக்கள் இனி....!

இனியவள்
23-07-2007, 08:16 AM
உன் நினைவுகளில்
மூழ்கத்தான் எனக்கு விருப்பம்!
முழித்து பார்த்தால்
நிச்சயம் எனக்கு வருத்தம்!

வாழ்த்துக்கள் இனி....!

நன்றி சுகந்

வலியோடு கூடிய
நினைவுகள் முத்தல்லவே
மூழ்கியெடுக்க
மலரோடு கூடிய
விஷச்செடி அல்லவா

சுகந்தப்ரீதன்
23-07-2007, 08:19 AM
நன்றி சுகந்

வலியோடு கூடிய
நினைவுகள் முத்தல்லவே
மூழிகியெடுக்க
மலரோடு கூடிய
விஷச்செடி அல்லவா

விசமென்று தெரியும்
விசனமும் புரியும்
இருத்தும் விரும்பும்
என்னவளின் நினைவும்!

சிவா.ஜி
23-07-2007, 08:19 AM
வசந்தமாய் வீசிய காற்று
அனலை வீசி விட்டுச் செல்ல
அவன் நினைவுகளிலே உன்
காலத்தைக் கடத்த முயற்சிக்கின்றாய்
கனவுகளில் காலத்தைக் கடத்தாதே
நீ முழித்துப் பார்க்கையில் வசந்தம்
உன் கையை விட்டுப் போய்விடும்
நல்ல அறிவுரை இனியவள். கனவிலேயே எத்தனைக்காலம் தான் வாழ்வது?
எதார்த்தத்தையும் பார்க்க வேண்டும். நல்ல கவிதையில் ஒரு சிறு திருத்தம்

நீ முழித்துப் பார்க்கையில் வசந்தம்
உன் கையை விட்டுப் போய்விடும்
இதில் முழித்து என்பதற்கு பதிலாக விழித்து என்று வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

அமரன்
23-07-2007, 08:23 AM
வாழ்த்துக்கள் இனியவள் சுகந்தா....
உங்கள் கவி முத்துகள் நெஞ்சைப் பறிக்கின்றன..
தொடருங்கள்..

இனியவள்
23-07-2007, 08:25 AM
நல்ல அறிவுரை இனியவள். கனவிலேயே எத்தனைக்காலம் தான் வாழ்வது?
எதார்த்தத்தையும் பார்க்க வேண்டும். நல்ல கவிதையில் ஒரு சிறு திருத்தம்
நீ முழித்துப் பார்க்கையில் வசந்தம்
உன் கையை விட்டுப் போய்விடும்
இதில் முழித்து என்பதற்கு பதிலாக விழித்து என்று வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

ம்ம் ஆமாம் சிவா நன்றி

கனவிலே
வாழ்ந்தால் வாழ்க்கை
கனவாய் போய்விடும்
உனக்கு மட்டுமல்ல
உன் நல்வாழ்வை
விரும்பும் பெற்றோருக்குமே...


உங்கள் அனுமதியோடு மாற்றிக்கொள்கின்றேன் அந்த வார்த்தைய சிவா
நன்றி

இனியவள்
23-07-2007, 08:28 AM
விசமென்று தெரியும்
விசனமும் புரியும்
இருத்தும் விரும்பும்
என்னவளின் நினைவும்!

விசமென்று தெரிந்து
விசனமும் புரிந்து
விரும்பப்படும் உன்னவள்
நினைவுகள் காற்றில்
கலைந்த கோலமாய்....

இனியவள்
23-07-2007, 08:29 AM
வாழ்த்துக்கள் இனியவள் சுகந்தா....
உங்கள் கவி முத்துகள் நெஞ்சைப் பறிக்கின்றன..
தொடருங்கள்..

நன்றி அமர்

சுகந்தப்ரீதன்
23-07-2007, 12:35 PM
விசமென்று தெரிந்து
விசனமும் புரிந்து
விரும்பப்படும் உன்னவள்
நினைவுகள் காற்றில்
கலைந்த கோலமாய்....

காற்றில் கலைந்த கோலமாய்
தண்ணீரில் வரைந்த ஒவியமாய்
பாலைவனத்தின் கானல் நீராய்
இருந்தும் மறுக்கவோ
வெறுக்கவோ மனமில்லை
எனோ எனக்கு?!

இனியவள்
23-07-2007, 12:43 PM
காற்றில் கலைந்த கோலமாய்
தண்ணீரில் வரைந்த ஒவியமாய்
பாலைவனத்தின் கானல் நீராய்
இருந்தும் மறுக்கவோ
வெறுக்கவோ மனமில்லை
எனோ எனக்கு?!

கலைந்த கோலம்
உருவம் தெரிவதில்லை
தண்ணீரில் ஓவியம்
நிலைப்பதில்லை
வெறுக்கவோ மனமில்லை
என இன்று கூறும் உன்
மனம் என்றாவது மறக்கத்
தான் செய்யும் ....

விகடன்
02-08-2007, 05:05 AM
சரிதான் இனியவள்.
ஆனால் மனத்தை சமாதானப்படுத்துவதும் பசுமரத்தாணி போன்று செதுக்கப்பட்ட நினைவுகளை கழற்றி எறிந்து விடலாமா? அந்த நினைவுகளைப் போல* மீண்டும் நிகழும்போது முன்னர் நடந்தவை ஞாபகத்திற்கு வந்து உயிரைப் பிழியாதா?

ஓவியன்
09-08-2007, 10:44 PM
நினைவுகள்
காலமாகியதாலேயே
கனவுகள்............?

கனவுகளிலாவது
அவன் தன் காதலியுடன்
வாழக் கூடாதா?

kalaianpan
12-08-2007, 04:28 PM
நெஞ்சை தொடுகிறது இனியவளே!!!
இனிமயான தலைப்பு...