PDA

View Full Version : நினைவுகள்



Raaj
23-07-2007, 04:57 AM
அன்பே உன் நினைவுகளையே !
எழுதி பழக்கப்பட்ட என் பேனா
நீ எழுதும் போது கூட
அது உன் நினைவுகளையே
எழுதும்.

guna
23-07-2007, 06:07 AM
"அவர்/அவள் எழுதும் போது அவரின்/அவளின் நினைவுகளையே எழுதுவாதால் என்ன பயன்" என்று புரியலையே...

முதல் கவிதைக்கு வாழ்துக்கள் திவ்யா..
இப்படி சின்ன சின்னதா தொடங்கி, பிறகு அனைவரும் பாராட்டும் பல கவிதைகளைப் பதிய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

பென்ஸ்
23-07-2007, 06:10 AM
அன்பே உன் நினைவுகளையே !
எழுதி பழக்கப்பட்ட என் பேனா
நீ எழுதும் போது கூட
அது உன் நினைவுகளையே
எழுதும்.

கவிதை புரியலையே....
விளக்கலாமா...???

இன்பா
23-07-2007, 06:10 AM
அன்பே உன் நினைவுகளையே !
எழுதி பழக்கப்பட்ட என் பேனா
நீ எழுதும் போது கூட
அது உன் நினைவுகளையே
எழுதும்.


ஆம் நான் எழுதும் போது கூட
என் நினைவுகளை தான் எழுதும்...

என் நினைவுகளில் எப்போதும் நீ தானே நிறைந்திருக்கிறாய்...

நல்ல கவிதை திவ்வியா... வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்...

Raaj
23-07-2007, 06:28 AM
கவிதை புரியலையே....
விளக்கலாமா...???



விள*க்கலாம் என* தொட*ங்கும்போதுதான் கீழே பார்த்தேன்
நீங்க*ளும் பாருங்க*ள் தெளிவாக* விள*க்கி இருக்கிறார்

Raaj
23-07-2007, 06:31 AM
இன்றுதான் என் படைப்புக்களை (கவிதைகள்) வெளியிட்டேன் விமர்சனங்களையும் இன்றே பெற்றேன் மிக்க மகிழ்ச்சி

இனியவள்
23-07-2007, 06:35 AM
அன்பே உன் நினைவுகளையே !
எழுதி பழக்கப்பட்ட என் பேனா
நீ எழுதும் போது கூட
அது உன் நினைவுகளையே
எழுதும்.

கவிதை அருமை வாழ்த்துக்கள் திவ்யா


நீ மற்றும் அது தவிர்க்கப்
பட்டிருந்தால் கவி இன்னும் நன்றாக
இருந்து இருக்கும் திவ்யா தவறாயின்
மன்னிக்க்க

அமரன்
23-07-2007, 08:37 AM
காதல் பறவையின் நினைவுகள் எப்படி அதன் ஜோடிப் பறவைக்குள் வியாபித்து இருக்கின்றன என்பதை அழகாக சொன்ன திவ்வியராஜுக்கு பாராட்டுக்கள். முதல் படைப்பா..வாழ்த்துக்கள். தொடருங்கள் தோழரே...!

Raaj
23-07-2007, 08:45 AM
"அவர்/அவள் எழுதும் போது அவரின்/அவளின் நினைவுகளையே எழுதுவாதால் என்ன பயன்" என்று புரியலையே...

முதல் கவிதைக்கு வாழ்துக்கள் திவ்யா..
இப்படி சின்ன சின்னதா தொடங்கி, பிறகு அனைவரும் பாராட்டும் பல கவிதைகளைப் பதிய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

பயன் எதுவும் இல்லை
ஆனால் அவளின் மீது வைத்த அதீத காதலின்
வெளிப்படுகளின் விளைவுகள் தான் அது
(கவிதைக்கு பொய்தானே அழகு)

Raaj
23-07-2007, 08:49 AM
கவிதை அருமை வாழ்த்துக்கள் திவ்யா


நீ மற்றும் அது தவிர்க்கப்
பட்டிருந்தால் கவி இன்னும் நன்றாக
இருந்து இருக்கும் திவ்யா தவறாயின்
மன்னிக்க்க
தங்களின் யோசனைக்கு
மிக்க நன்றி
அதற்கு மாற்றீடாக ஏதாவது
பொருத்தமான வரிகளை சொல்ல முடியுமா?

Raaj
23-07-2007, 08:52 AM
காதல் பறவையின் நினைவுகள் எப்படி அதன் ஜோடிப் பறவைக்குள் வியாபித்து இருக்கின்றன என்பதை அழகாக சொன்ன திவ்வியராஜுக்கு பாராட்டுக்கள். முதல் படைப்பா..வாழ்த்துக்கள். தொடருங்கள் தோழரே...!
மிக்க நன்றி தோழரே
அழகாக புரிந்துகொன்டீரே

அக்னி
23-07-2007, 05:02 PM
வாழ்த்துக்கள் திவ்யா..!
முதல் படைப்பு கவிதையாய் தந்து கவனயீர்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள்...
உங்கள் கவித்தாகத்திற்கேற்ற களங்கள் மன்றத்தில், நிறையவே உண்டு...
உண்டு, களித்து, சமைத்து, பரிமாறுங்கள்...
இந்தக் கவிதை, காதல்கவிதைகள் பகுதியில் இடம்பெறவேண்டும்...
நிர்வாகிகளுக்கு திரிமாற்றத்திற்குச் சிபாரிசு செய்கின்றேன்...

நன்றி!

theepa
23-07-2007, 09:32 PM
ம்ம் முதல் படைப்பாக இருந்தாலும் பயம் இன்றி முன் வந்து உங்கள் கவியை எமக்கண்டி தந்ததுக்கு முதலில் எனது பாராட்டுக்கள் தோழியே
இன்னும் பல கவியை நமக்காண்டி தரனும் அதுக்கும் எனது வாழ்த்துக்கள்

அன்புடன்
லதுஜா

இளசு
23-07-2007, 09:37 PM
முற்றிலும் புதிய கற்பனை..

முதல் கவிதைக்கு வாழ்த்துகள் திவ்வியராஜ் அவர்களே..

அக்னி−யின் ஆலோசனைப்படி, இது காதல் கவிதைகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது..