PDA

View Full Version : முகமூடி மனிதர்கள்



அமரன்
22-07-2007, 07:05 PM
அந்திக்கடை கரைய
பொறுப்பு மறந்தவர்கள்
இரைப்பை நிரப்ப-என்
இருப்பைக் குறைத்தேன்.

காரமுத்துக்களால் வாயை நிரப்பி
பார்வையை திக்கெல்லாம் பரப்பி
வாகாய் நடந்த எனக்கு- சிவப்பு
கொடிகாட்டியது ஒய்யார மயில்.

என்னய்யா பார்க்கிறாய்?
என்னை பார்க்கிறாயா?
எனக்கேட்டவளுக்கு
எண்ணையாய் சொன்னேன்.

உன்னைத்தான் பார்த்தேன்
உண்ணப் பார்க்கவில்லை..

ஊனை பருக
உனை உருக்குவோரை
உன்னிப் பார்த்தேன்..
உன்னலராய் பார்த்தேன்

பகர்ந்ததைக் கேட்டதும்
அலர்ந்த அந்திமந்தாரையின்
விரிந்த மடல்களில் தெரிந்தது
கடலை தாங்கிய குருத்து.

அதிகாரமான கடலையும்
ஆரவாரமான கடலலையும்
உறைக்க உரைத்தன
முகமூடியை கழற்றிவிடு.

சிவா.ஜி
23-07-2007, 04:57 AM
சில நேரங்களில் இப்படித்தான் உள்ளொன்று இருக்க வெளித்தெரிவதோ மறக்கப்பட்ட முகங்கள். நிறைய புது சொற்களை பயன் படுத்தி ஒரு நிஜக்கவிதை படைத்துள்ள அமரனுக்கு வாழ்த்துக்கள். சில சொற்கள் விளங்காததால் புரிந்து கொண்டு பிறகு விரிவாய் பின்னூட்டமிடுகிறேன்.

அமரன்
23-07-2007, 08:53 AM
சிவா..உள்லொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களும் உள்ளார்கள்..இயலாமையை அல்லது சுய நலத்தை மறைக்க நல்லவராகக் சமூகத்தின் மேல் பற்றுள்ளவராக முகமூடி அணிந்து இருப்போரும் உண்டு. காத்திருகின்றேன் உங்கள் பின்னூட்டத்திற்கு..

ஷீ-நிசி
23-07-2007, 09:01 AM
கவிதையில் சில இடங்களில் உங்கள் வார்த்தைகள் வெகுவாய் ரசிக்க வைத்தது அமரன்...


உன்னைத்தான் பார்த்தேன்
உண்ணப் பார்க்கவில்லை..

ஆயாசமாய் நடக்கின்ற ஒருவனின் பார்வை பலவாறாய் சுழன்றி ஓரிடத்தில் நிற்கிறது.. அவ்விடத்தில் ஒரு பெண்! இருவருக்குமான உரையாடல்..

இவ்வளவுதான் எனக்கு விளங்குகிறது... மற்றபடி கவிதை எதை நோக்கி செல்கிறது என்று எனக்கு புரியவில்லை அமரன்... அந்த முதல் நான்கு வரிகளையும் கூட கொஞ்சம் விளக்குங்கள்!

அமரன்
23-07-2007, 09:34 AM
ஷீ..சிறுவர்கள் கடற்கரை ஓரங்களில் கடலை விற்பது கண்டேன்..அந்த வரிகள் கிடைத்தன.

சிவா.ஜி
23-07-2007, 09:41 AM
அதிகாரமான கடலையும்
ஆரவாரமான கடலலையும்
உறைக்க உரைத்தன
முகமூடியை கழற்றிவிடு.

அதி−காரமான கடலை உறைத்தது
ஆரவாரமான கடலலையும் உரைத்தன

அழகான சொல்லாடல்.

என்னய்யா பார்க்கிறாய்?
என்னை பார்க்கிறாயா?
எனக்கேட்டவளுக்கு
எண்ணையாய் சொன்னேன்.

அசடு வழிந்ததா எண்ணையாய்...?
அதற்கு அடுத்த வரிகள் கலக்கல் ரகம்.

உன்னலராய் பார்த்தேன்
இந்த வரி புரியவில்லை அமரன்.
உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் கவிதை.உங்கள் பார்வையின் விசாலம் அதிகரித்துக்கொண்டே போகிறது. வாழ்த்துக்கள் அமரன்.

அமரன்
23-07-2007, 09:46 AM
சிவா...நன்றி..அழகான அலசல்...ஆழமானதும்....என் விசாலப் பார்வையின் விலாசம் தமிழ் மன்றமல்லவா?
உன்னலர்=எதிரிகள்

சிவா.ஜி
23-07-2007, 10:14 AM
உன்னலர்−எதிரிகள்...புதிய வார்த்தை உபயத்துக்கு நன்றி அமரன்.

அமரன்
23-07-2007, 08:28 PM
எனக்கு உபயம் என் சக பணியாளர் சிவா. நன்றி.

இளசு
23-07-2007, 09:07 PM
குளிரும் ஏசி அறை...
தழுவும் கடற்காற்று..

இரண்டும் இதமே..
இரண்டாவதில் கிடைப்பது புத்துணர்வும்.. கிளர்ச்சியும்..

அமரனின் இக்கவிதை இரண்டாம் ரகம்..


சுய நையாண்டி (எள்ளல்) சொல்லும் பல சுவைச்சொற்கள்.. சிலேடைகள்..

அடிமன ஆசைகளை அடக்கிப்புதைத்து
வித்தியாசமானவனாய்க் காட்ட
வாழ்வில் ஒருமுறையேனும் எண்ணாதவர் யார்?

எண்ணிப்பார்க்கிறேன்..
என் வாழ்வில் எத்தனை முறை!!!???
எண்ண முடியவில்லை!

வாழ்த்துகள் அமரா..

கவிதையின் அடுத்த நிலைக்கு எளிதாக செல்லும் லாவகத்துக்கு...

இனியவள்
24-07-2007, 03:03 PM
அமர் கவிதை பிரமாதம் :aktion033: வாழ்த்துக்கள் அமர் :icon_03:

சூரியன்
24-07-2007, 03:19 PM
வாழ்த்துக்கள் அமர், நல்ல படைப்பு.

அமரன்
24-07-2007, 05:12 PM
நன்றி இனியவள் மற்றும் சூரியன்.

அமரன்
24-07-2007, 06:33 PM
இளசு அண்ணா நன்றி...கவிதையைப் பதிந்து விட்டு பயந்தேன்.
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் மிதந்தேன்.
.நான் என்ன நினைத்து எழுதினேனோ
அதை அப்படியே சொல்லி விட்டீர்கள்.
மீண்டும் நன்றி அண்ண*லே...

ரிஷிசேது
24-07-2007, 06:58 PM
வார்த்தைகளும் கருத்தும் புதுமை. சொல்லவந்ததை ரத்தினச்சுருக்கமாய் அழகாய் சொன்னீர்கள்
வாழ்த்துக்களுடன்,
ரிஷிசேது

அமரன்
24-07-2007, 07:07 PM
நன்றி ரிஷி.

lolluvathiyar
26-07-2007, 10:06 AM
கவிதையில் வரிகள் புரிந்தன.
ஆனால் அதன் ஒத்தை பொருள் விளங்க வில்லையே
இந்த இடத்தில் யார் முகமூடி அனிந்தார்கள் ஆணா அல்லது பெண்ணா
உன்னை பார்த்தேன்
உன்ன பார்க்க வில்லை
(அருமையான வரிகள்)

அமரன்
27-07-2007, 03:44 PM
கவிதையில் வரிகள் புரிந்தன.
ஆனால் அதன் ஒத்தை பொருள் விளங்க வில்லையே
இந்த இடத்தில் யார் முகமூடி அனிந்தார்கள் ஆணா அல்லது பெண்ணா



வாத்தியாரே இதற்குப் பதில் இளசு அண்ணாவின் பின்னூட்டத்தில் உள்ளது.

அடிமன ஆசைகளை அடக்கிப்புதைத்து
வித்தியாசமானவனாய்க் காட்ட
வாழ்வில் ஒருமுறையேனும் எண்ணாதவர் யார்?

நன்றி வாத்தியாரே!

ஓவியன்
27-07-2007, 10:50 PM
அமரா!

இப்படித்தான் எல்லோருக்கும் பல முகமூடிகள்............
நல்லவராய்...!
வல்லவராய்...!
நண்பராய்...!
நலன் விரும்பியாய்...!
சமூக சேவகராய்...!

இப்படிப் பலப்பல...........!
ஒவ்வொரு முகமூடிகளும் ஒவ்வொரு காரியத்திற்குத் தேவைப்படுகிறது, விரும்பியோ விரும்பாமலோ நமக்கும் சில தேவைப்படுகின்றன, அல்லது நாம் அவற்றைப் பாவித்துப் பழகி விட்டோமோ...........?

என்ன தான் காரணம் பகன்றாலும் தவறு தவறு தானே − வலிய ஆயுதம் தாங்கித் தவறைச் சாடியமைக்குப் பாராட்டுக்கள்.

அமரன்
28-07-2007, 08:15 AM
ஓவியன் அழ்மாக உள்வாங்கி அழகாக விமர்சித்துள்ளீர்கள்.நன்றி