PDA

View Full Version : இதற்கு பெயர் தான் காதலோ



இனியவள்
22-07-2007, 06:01 PM
இரு மின்னல்களும்
ஒன்றையொன்று உரசும் போது
ஏற்படும் ஒளி போன்று
அவன் கண்கள் என்
கண்ணோடு உரசும் போது
என் இதயத்தில் ஒர் ஓளிக்கீற்று....

இதயத் துடிப்பு முன்பை
விட வேகமாக துடிக்கின்றதே
அவனின் அழகிய குறும்பைக்
கடைகண் கொண்டு நோக்கையில்...

சூரியனோடு வெண்ணிலா
காதல் கொண்டதோ....

கண்கட்டி வித்தை காட்டி
என்னுள் நுழைந்து
கொண்டாயே கரம் கொண்டு
தடுத்து விட முயற்சித்தேன்
காற்றாய் மாறி விரல்களுக்கிடையில்
தவழுகின்றாய்.....

காற்றுக்கள் அனைத்தும்
உன் பெயரை சுமந்து
வந்து ரீங்காரம் இடுகின்றது
என் காதினிலே....

ஒவ்வொரு நிமிடமும்
உன் பெயரை வேதம்
போல் உச்சரிக்கின்றேன்...

கோயில் கற்பகிரக்ததில்
இறைவனுக்கு பதில்
உன் முகம்...

பாதத்தை மெதுவாய்
அடிவைத்து நடக்கின்றேன்
தரையில் காணும் மணல்துகல்களில்
உன் முகம் காண்பதால்...

இதற்கு பெயர் தான்
காதலோ
காணும் அனைத்திலும்
உன் முகம்
கேட்கும் குரலனைத்தும்
உன் குரல்..

இணைய நண்பன்
22-07-2007, 06:32 PM
ஆம்.இதற்கு பெயர் தான் காதல்.பாரட்டுக்கள்

அமரன்
22-07-2007, 06:37 PM
காதல் எப்படி எங்கே ஆரம்பிக்கும்..? யாருக்கும் தெரியாது. கண்கள் சந்திக்கும்போதா..அலைவரிசை ஒன்றாகும்போதா..? எப்படி ஆரம்பித்தாலும் அலை வரிசை ஒத்துவரவேண்டும். சுரங்கள் அபசுரங்களாக்குவதும் அபசுரங்கள் சுரங்களாகுவதும் காதலில் சாத்தியம்.

இங்கே..
விழிமின்னல்கள் ஒன்றுடன் ஒன்று உரச
பிரகாசமான இதயத்தின் துடிப்பை அதிகரிக்கும்
ஹோமோனாக கோமானின் கடைக்கண் பார்வை. (அப்போ முழுசாகப் பார்த்தால்)...
சுவாசிக்கும் காற்று கூட அவன் பெயரையே வாசிக்க..
தனியாக இருக்கும்போதும் அவன் பெயரையே உச்சரிக்க(காதல் பைத்தியம் என்பது இதுவோ)
உள்ளக்கோயிலில் இருப்பவன் ஊர்க்கோயிலும் இருக்க(பார்த்துங்க ஏல்லோருக்கும் சாமியாக போறாரு)
மண்ணாகதெரியும் அவன்முகத்தில்
மன்னிக்கவும் மண்ணில் தெரியும்
அவன் முகத்தில் கால் வைக்க மறுத்து..
படுத்தே இருந்தால் ........
அம்மா ஒத்துக்கொள்வாரா காதலை...

இந்த சந்தேகம் இனியவளுக்கு வந்ததோ
பாராட்டுக்கள் இனியவள்

இனியவள்
23-07-2007, 07:21 AM
ஆம்.இதற்கு பெயர் தான் காதல்.பாரட்டுக்கள்

நன்றி இக்ராம்

இனியவள்
23-07-2007, 07:26 AM
அழகிய வர்ணனை அமர்

நன்றி

Raaj
23-07-2007, 07:28 AM
வணக்கம் இனியவளே
அழகான கவிதை
பலரின் உணர்வுகளின்
வடிவம் வரிகளாய்
உங்களது மொழியில்.........

சுகந்தப்ரீதன்
23-07-2007, 12:45 PM
அழகிய கவிதை வாழ்த்துக்கள் இனியா....

theepa
25-07-2007, 08:56 PM
ம்ம் அழகிய காதல் கவி ஒருத்தர் மேல காதல் வரும் போதும் வந்த பிறகும் எற்படும் மாற்றங்கள் அனைத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கிறிங்க இனியா வாழ்த்துக்கள்

அன்புடன்
லதுஜா

சிவா.ஜி
26-07-2007, 05:10 AM
பாராட்டுக்கள் இனியவள். எழுத்துப்பிழைகள் இல்லாத அழகான காதல் கவிப் பாடியதற்கு.

சூரியனோடு வெண்ணிலா
காதல் கொண்டதோ....
சூரியனின் காதல்தான் வென்னிலாவின் வெளிச்சம். வெண்ணிலாவின் காதல்தான் சிலநேரம் சூரியனிலும் குளுமை. அழகான சொல்லாடல்.

காற்றுக்கள் அனைத்தும்
உன் பெயரை சுமந்து
வந்து ரீங்காரம் இடுகின்றது
என் காதினிலே....

காற்றுக்கு பன்மையில்லை இனியவள். காற்று உன் பெயரை..என்று எழுதினாலும் அழகாகத்தான் இருக்கும்.
வாழ்த்துக்கள்.

விகடன்
26-07-2007, 05:13 AM
காதலின் அறிகுறிகள் ஆளுமைகளை கவிதை வடிவில் வடித்திட்ட இனியவளிற்கு பாராட்டுக்கள்.

இனியவள்
26-07-2007, 06:16 AM
வணக்கம் இனியவளே
அழகான கவிதை
பலரின் உணர்வுகளின்
வடிவம் வரிகளாய்
உங்களது மொழியில்.........

நன்றி திவ்யாராஜ்

இனியவள்
26-07-2007, 06:17 AM
அழகிய கவிதை வாழ்த்துக்கள் இனியா....

நன்றி சுகந்

இனியவள்
26-07-2007, 06:18 AM
ம்ம் அழகிய காதல் கவி ஒருத்தர் மேல காதல் வரும் போதும் வந்த பிறகும் எற்படும் மாற்றங்கள் அனைத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கிறிங்க இனியா வாழ்த்துக்கள்

அன்புடன்
லதுஜா

நன்றி லதுஜா


காதலின் அறிகுறிகள் ஆளுமைகளை கவிதை வடிவில் வடித்திட்ட இனியவளிற்கு பாராட்டுக்கள்.

நன்றி விராடன்

இனியவள்
26-07-2007, 06:20 AM
பாராட்டுக்கள் இனியவள். எழுத்துப்பிழைகள் இல்லாத அழகான காதல் கவிப் பாடியதற்கு.

சூரியனோடு வெண்ணிலா
காதல் கொண்டதோ....
சூரியனின் காதல்தான் வென்னிலாவின் வெளிச்சம். வெண்ணிலாவின் காதல்தான் சிலநேரம் சூரியனிலும் குளுமை. அழகான சொல்லாடல்.

காற்றுக்கள் அனைத்தும்
உன் பெயரை சுமந்து
வந்து ரீங்காரம் இடுகின்றது
என் காதினிலே....

காற்றுக்கு பன்மையில்லை இனியவள். காற்று உன் பெயரை..என்று எழுதினாலும் அழகாகத்தான் இருக்கும்.
வாழ்த்துக்கள்.

நன்றி சிவா..

காற்று என்று போடுவதையும் பார்க்க காற்றுக்கள் என்று போட்டால்
அழகாய் தோன்றியது போடுவிட்டேன் சிவா..