PDA

View Full Version : காதல் துளிகள்



ரிஷிசேது
22-07-2007, 06:41 PM
துளி - 1

நீ
இல்லையெனச் சொல்லும்
ஒவ்வொருமுறையும்
ஒரு தீவிரவாதியைப்போல்
உன் மீதான என் காதல்
அதிகமாகிறது.

துளி - 2

நீ
நான்
மற்றும் நம் காதல்
ஒரு புதிய பிரபஞ்சம்...

துளி - 3

நீ
சொல்லாவிட்டாலென்ன
உன் கண்கள் பேசுகிறது
காதல் மொழி

துளி - 4

நீ
வைத்துப்போன செடிகள்
பூத்துக்குலுங்குகின்றன
விலாசமிருந்தால்
அனுப்பிவை
வாசனைகளை
அனுப்பிவைக்கிறேன்...

துளி - 5

நீ
உன் காதலை
உண்மைக்கும் பொய்யிற்கும்
இடையில் ஒளிக்கிறாய்
அது
இல்லாத ரகசியம் போல்
வெளியேறுகிறது...

துளி - 6

நீ
என்னை எதுவாகவோ
எதுவாகவோ நினைத்தாய்
நான் அதுவாக மாறினேன்
எல்லோரும் என்னை
பித்தனென்கிறார்கள்

துளி - 7

நீ
என்
சொர்க்கமும்
நரகமும்....

துளி - 8

நீ
உன் பிரியத்தை
கோபமாக காட்டுகிறாய்
உலகம் வெறுப்பதாய்
சொல்கிறது..

துளி - 9

நீ
நந்தவனம்
நான் சில்வண்டு
நம் காதல் மொட்டுகள்
எப்போதும்
நம்மைச்சுற்றி.....

துளி - 10

நீ
புதுமணலின்
வேராய் படரவிட்டுப் போகிறாய்
உன் நினைவுகளை...

இனியவள்
22-07-2007, 07:06 PM
துளி - 1

நீ
இல்லையெனச் சொல்லும்
ஒவ்வொருமுறையும்
ஒரு தீவிரவாதியைப்போல்
உன் மீதான என் காதல்
அதிகமாகிறது.

அதனால் தானோ
உன்னை நோக்கும்
அனைவரையும் வெறி
கொண்டு தாக்குகின்றேன்....


துளி - 2
நீ
நான்
மற்றும் நம் காதல்
ஒரு புதிய பிரபஞ்சம்...

பிரபஞ்சத்தில் நாம் இருவர்
மட்டுமே சஞ்சரிக்கின்றோம்
என்ற கற்பனையில் உலகை
மறந்து வாழ்கின்றோம்
அதனால் தான் எம்மைப்
பிரிக்க நடக்கும் சூழ்ச்சி
தெரியாமல் காதல் என்னும்
கடலிலே மூழ்கியிருக்கிறோம்

கவிதைகள் அனைத்தும் பிரமாதம் வாழ்த்துக்கள் ரிஷி

இணைய நண்பன்
22-07-2007, 07:34 PM
காதல் துளிகள் அருமை.பாரட்டுக்கள்

அமரன்
22-07-2007, 07:42 PM
கடலில் இருந்து
துளிகளை தருகிறாரோ?
இப்படி நினைத்தே வந்தேன்..
படித்த பின்னரே தெரிந்தது
முத்துக்களை தந்துள்ளார்...
நன்றிகள் ரிஷி.

சுகந்தப்ரீதன்
23-07-2007, 08:52 AM
துளி - 3

நீ
சொல்லாவிட்டாலென்ன
உன் கண்கள் பேசுகிறது
காதல் மொழி

...

எனக்கு மிக பிடித்த துளி இது! வாழ்த்துக்கள்!

Raaj
23-07-2007, 09:09 AM
நீ
வைத்துப்போன செடிகள்
பூத்துக்குலுங்குகின்றன
விலாசமிருந்தால்
அனுப்பிவை
வாசனைகளை
அனுப்பிவைக்கிறேன்



வணக்கம் ரிஷி

நீங்கள் விலசத்தை மறந்துவிட்டீர்கள்
உரியவர் உங்களை மறந்துவிட்டர் போலும் .....

பாரட்டுக்கள் அற்புதமான படைப்பு

theepa
23-07-2007, 01:37 PM
ஆகா ஒவ்வரு வரிகலும் எவ்வலவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் என் அருமை நன்பர்

அன்புடன்
லதுஜா

ரிஷிசேது
23-07-2007, 05:35 PM
விமர்சனங்களுக்கு நன்றி
ரிஷிசேது