PDA

View Full Version : கருநிலவு



அமரன்
22-07-2007, 08:35 AM
இருண்டு இருக்கையில்
மின்னும் மீன்களே...!
சிந்தையில் இருத்துங்கள்.
ஒளிநிலா மறையவில்லை
கருநிலவாய்க் காய்கிறது.

சிவா.ஜி
22-07-2007, 08:50 AM
ஆட்டம் போடும் வால் பையன்களே
வாத்தியார் இருக்கிறார் மறந்து விடாதீர்கள். கரு நிலா ஒளி நிலா...அழகான கற்பனை. அசத்தல் அமரன்.

நில மகளின் கூந்தலில் மலர்களாய்
நட்சத்திரங்கள்...
அந்த பக்கம் உள்ள அழகு முகத்தில்
திலகமாய் திங்கள்.

இளசு
22-07-2007, 09:00 AM
கிடைக்கும் இடைவெளியில்
மின்மினி ஆட்டம் காட்டுவது
(வால்) நட்சத்திரங்களின்
வாடிக்கைதானே.. அமரன்..!

இயற்பியல் உண்மைகளை மீறி
இயற்கையை நம் கருத்தேற்றிச் சொல்லும்
இனிய கவிதை..

சுருக்கமாய்.. கொஞ்சம் குறும்புடன்..

பாராட்டுகள் அமரன்!

இனியவள்
22-07-2007, 09:09 AM
இருண்டு இருக்கையில்
மின்னும் மீன்களே...!
சிந்தையில் இருத்துங்கள்.
ஒளிநிலா மறையவில்லை
கருநிலவாய்க் காய்கிறது.

அருமை அமர் வாழ்த்துக்கள்

இது மானிடர்களுக்கு சொல்லும்
கருத்தாகப் படுகின்றது எனக்கு

நான் தோற்று விட்டாதாக
எண்ணி ஆனந்தப் படாதே
இது தற்காலிகமே வாழ்க்கை
என்னும் சக்கரத்தில் ஏற்றம்
தாழ்வு அனைவருக்கும்
சகயமானதே

நான் சொல்வது சரியோ :confused:

ஆதவா
22-07-2007, 09:10 AM
மறைமுக உவமை.. சிவா. அதை சொன்னவிதம் அருமை.. இளசு அண்ணாவின் பாராட்டு உடனே பெற்றது கவிதைக்கு சிறப்பு.

தமக்குக் கிடைத்த இடத்தை பயன்படுத்தப்பார்க்கிறார்கள் மீன்கள்.. நிலவை நிந்திக்க அவசியமில்லாமல்.. ஆனால் இருக்கக்கூடும் சில மீன்கள்.. நிலவு மறைந்ததை ஒளிந்ததாக ஏற்கும் மீன்கள்.

சிறப்பாக அமைந்த கவிதையிது.. வாழ்த்துக்கள் அமரன்

அமரன்
22-07-2007, 09:38 AM
நன்றி சிவா...
கருவை இரு வரிகளில் சொல்லிவிட்டீர்கள்.
அடுத்த வரிகள் இன்னொரு ஆனந்தம்.
தொடர்வோம்.

அமரன்
22-07-2007, 09:55 AM
இளசு அண்ணா!
ஆமாம் அண்ணா ஆட்டம்போடும் வால் நட்சத்திரங்களை மனதில் வைத்தே எழுதினேன்.

வெந்த புண்களில்
வேலை பாய்ச்சுகின்ற

ஆறிய ரணங்களை
கீறிப்பார்க்கின்ற

வீண் மீன்களே.....!

ஒளிநிலா வரும்போது
மங்கிப்போவீர்கள்.

அளவோடு ஆடுங்கள்...

ஆதங்கத்துடன் வானத்தை பார்த்த எனக்கு தோன்றிய கவிதை இது..
அதனால் இயற்பியல் மீறிவிட்டதோ
குறும்பாகத்தான் சொன்னேன்..அத்துடன் கொஞ்சம் காரமாகவும்..

ஓவியன்
22-07-2007, 10:20 AM
இருண்டு இருக்கையில்
மின்னும் மீன்களே...!
சிந்தையில் இருத்துங்கள்.
ஒளிநிலா மறையவில்லை
கருநிலவாய்க் காய்கிறது.சுயமாய் ஒளிர்பவை
விண் மீன்கள்
நிலா போல்
கடன் வாங்கி
பூமி பின் அலையாமல்..........

கவிதை அருமை அமரா!.

அமரன்
22-07-2007, 10:25 AM
ஓவியன்...

கடன் வாங்கினாலும்
கண்ணாய் இருப்பது நிலா..?

அமரன்
22-07-2007, 01:34 PM
நில மகளின் கூந்தலில் மலர்களாய்
நட்சத்திரங்கள்...
அந்த பக்கம் உள்ள அழகு முகத்தில்
திலகமாய் திங்கள்.

சிவா..பின்னூட்டங்களில் காணப்படும் சில கவிதைகள் என் மனதில் ஒட்டிக்கொள்ளும். இன்று அப்படி ஒட்டிக்கொண்ட கவிதை இது..கணினியை விட்டு கண்களை விலக்கியும் என்னை விட்டு விலகாத கவிதை. அருமையான கற்பனை. கூந்தல்பூக்களாக நட்சத்திரங்கள். திலகமாக நிலா..பாராட்டுக்கள்..இது என்னை என்னமோ செய்கிறது. சிலநேரங்களில் அது கவிதையாகும் போது அது உங்களுக்கே சொந்தமானது...

சிவா.ஜி
22-07-2007, 01:40 PM
நன்றி அமரன்.நல்ல ரசிகன் நீங்கள். உங்கள் கவிதையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

அமரன்
22-07-2007, 01:51 PM
இனியவள்..ஏதோ கிறுக்குகின்றேன். சமயத்தில் எனக்கே என்ன கிறுக்கியுள்ளேன் என்று தெரிவதில்லை. அதில் கருத்து இருப்பது தெரிகின்றது என்றால் அது உங்கள் திறமை. பின்னூட்டக்கவிதை அருமை.
---------------------------------------------------------
சிவா ரொம்ப எதிர்பார்க்காதீங்க சுமாரா எதிர்பாருங்க

அமரன்
22-07-2007, 02:12 PM
ஆதவா.. நிலவை நித்திக்காது, அதிகமாக ஆட்டம் போடாது ஒளிகொடுப்போம் என நினைக்கும் வரை அவை அழகு. நன்றி. இல்லையேல் அவை களை.

ஷீ-நிசி
22-07-2007, 02:38 PM
இருண்டு இருக்கையில்
மின்னும் மீன்களே...!
சிந்தையில் இருத்துங்கள்.
ஒளிநிலா மறையவில்லை
கருநிலவாய்க் காய்கிறது.


இருண்டு இருக்கையிலே...
இருள் நிறைந்த நேரத்திலே

மின்னும் மீன்களே...
மின்னுகின்ற நட்சத்திரங்களே!

சிந்தையில் நிறுத்துங்கள்...
நினைவில் வைத்து கொள்ளுங்கள்!

ஒளிநிலா மறையவில்லை...
நிலா ஒளிகொடாமல் மறைந்திருக்கிறது என்றால்... அது அமாவாசை தினம்(?)...

கருநிலவாய் காய்கிறது..
மறையவில்லை.. இருளோடு பின்னியபடி கரு நிறத்தில் உள்ளது...

கவிதை எடுத்துகொண்ட சூழல் மிக அழகு அமரன்... ஆனால் இதில் எனக்கு ஒரு நெருடல் ஏற்படுகிறது... எல்லா நேரங்களிலும் மின்னுகின்ற நட்சத்திரங்கள் ஒரே மாதிரிதானே உள்ளன... நிலா இருந்தாலும் இல்லையென்றாலும், அவைகள் தங்கள் மின்னுவதை மாற்றிக்கொள்வதில்லை.. மனிதர்களைப்போல, குறிப்பிட்ட ஒருவர் இருந்தால் ஒருமாதிரி, அவர் இல்லையென்றால் ஒருமாதிரி அவைகள் நடப்பதில்லையே! இதை எப்படி நீங்கள் உவமையாக கொண்டீர்கள் அமரன்??

அமரன்
22-07-2007, 02:40 PM
நிலவின் ஒளியில் அவை அதிகமாக பிரகாசிக்கின்றனவே..அதனாலேயே அப்படிச் சொன்னேன்.. அழகான பின்னூட்டம் நன்றி ஷீ...

ஷீ-நிசி
22-07-2007, 02:45 PM
நிலவின் ஒளியில் அவை அதிகமாக பிரகாசிக்கின்றனவே..அதனாலேயே அப்படிச் சொன்னேன்.. அழகான பின்னூட்டம் நன்றி ஷீ...

நிலவின் ஒளியில்தானே, அதாவது நிலவு இருக்கும்போதுதானே அவைகள் அதிகம் பிரகாசிக்கின்றன!

கவிதையை ஆராய்வதை
தவறாக எடுத்துகொண்டிருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்... அமரன்.

ஓவியன்
22-07-2007, 02:50 PM
இருண்டு இருக்கையிலே...
இருள் நிறைந்த நேரத்திலே

அழகான பின்னூட்டம் ஷீ!
ஒவ்வொரு வரியாக இரசித்தேன் − பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
22-07-2007, 02:50 PM
அழகான பின்னூட்டம் ஷீ!
ஒவ்வொரு வரியாக இரசித்தேன் − பாராட்டுக்கள்.


நன்றி ஓவியன்.....

அமரன்
22-07-2007, 02:56 PM
என் கவிதை ஆராயப்படும்போது மிகவும் சந்தோசமாக உணர்கின்றேன்.

நிலாக்காலத்தில் நட்சத்திரங்கள் மங்கலாகத்தானே தெரிகின்றன. பள்ளியில் படிக்கும்போது உடு உருக்களைக் காட்ட அமாவாசை தினத்தில்த்தான் எங்களை கூட்டிச்சென்றனர்
ஷீ. நிலவு இருக்கும்போது கூடுதலாக நிலவையே பார்கின்றோம். நட்சத்திரங்களை கவனிப்பது குறைவு. ஒரு இருட்டு நாளில் நிலாவைத்தேடும்போது நட்சத்திரங்கள் பிரகாசமாக தெரிகின்றன அல்லவா? அப்படியான ஒரு சந்தர்ப்பத்தை கொண்டே இப்படி எழுதினேன். இருட்டில் இருக்கும்போது நீங்கள்தான் ஒளி கொடுப்பதாக நினைத்து கர்வத்தில் ஆடாதீர். ஒளி கொடுக்கும் நிலா மறைந்து இருகின்றது. நிரந்தரமாக மறையவில்லை என்று சொல்ல வந்தேன்.

.

ஷீ-நிசி
22-07-2007, 03:08 PM
என் கவிதை ஆராயப்படும்போது மிகவும் சந்தோசமாக உணர்கின்றேன்.

நிலாக்காலத்தில் நட்சத்திரங்கள் மங்கலாகத்தானே தெரிகின்றன. பள்ளியில் படிக்கும்போது உடு உருக்களைக் காட்ட அமாவாசை தினத்தில்த்தான் எங்களை கூட்டிச்சென்றனர்
ஷீ. நிலவு இருக்கும்போது கூடுதலாக நிலவையே பார்கின்றோம். நட்சத்திரங்களை கவனிப்பது குறைவு. ஒரு இருட்டு நாளில் நிலாவைத்தேடும்போது நட்சத்திரங்கள் பிரகாசமாக தெரிகின்றன அல்லவா? அப்படியான ஒரு சந்தர்ப்பத்தை கொண்டே இப்படி எழுதினேன். இருட்டில் இருக்கும்போது நீங்கள்தான் ஒளி கொடுப்பதாக நினைத்து கர்வத்தில் ஆடாதீர். ஒளி கொடுக்கும் நிலா மறைந்து இருகின்றது. நிரந்தரமாக மறையவில்லை என்று சொல்ல வந்தேன்.

.

நன்றான விளக்கம் அமரன்... வாழ்த்துக்கள்!

அமரன்
22-07-2007, 03:11 PM
நன்றான விளக்கம் அமரன்... வாழ்த்துக்கள்!

ஷீ..நன்றி..விளக்கம் சரியானதா? எனது அனுபவத்திலியே எழுதினேன்..

ஷீ-நிசி
22-07-2007, 03:23 PM
ஷீ..நன்றி..விளக்கம் சரியானதா? எனது அனுபவத்திலியே எழுதினேன்..


உங்கள் விளக்கம் நன்று அமரன்....

நிலவது வரும்போது அதிகம் ஒளிர்வதாய் சொன்னீர்கள்! அது ஒருவிதமாய் இருந்தது.....

இரண்டாவது விளக்கத்தில், அமாவாசை தினத்தன்றில் நட்சத்திரங்கள் உமிழ்கின்ற அந்த ஒளிவெள்ளத்தினை வைத்து நட்சத்திரங்களே இந்த அளவுதான் உங்களின் ஒளி அளவு! இதை என்றும் மறந்துவிடாதீர்கள்! என்றும் அவைகளுக்கு உரைத்திடவே நிலவது மறைகிறதோ என்று எண்ண வைத்தீர்கள்... வாழ்த்துக்கள் அமரன்...

விகடன்
02-08-2007, 06:28 AM
பால் போலிருந்தால் ஒளினிலா
பளிச்சென்று இருட்டடித்தால் இருள் நிலா

அழகான சிந்தனை அமரன்.

அமரன்
02-08-2007, 08:43 AM
நன்றி விராடன்...இருவரிகள் அற்புதம்.

kalaianpan
09-08-2007, 07:15 PM
நான் புத்தகம் தேடிய நாட்கள் அதிகம்
இப்படி சுவயானவைக்காக....
கிடைத்தது ஒரு அருமயான நூலகம்.


:icon_b: :icon_b: :icon_b: :icon_b:

ஓவியன்
09-08-2007, 10:30 PM
நான் புத்தகம் தேடிய நாட்கள் அதிகம்
இப்படி சுவயானவைக்காக....
கிடைத்தது ஒரு அருமயான நூலகம்.

உண்மைதான் கலை!,

உங்களைப் போன்ற பலரது தேடல்களுக்குத் தீனி போடத் தவறுவதில்லை நம் தமிழ் மன்றம்.

தொடர்ந்தே வாருங்கள், கலந்து கலக்குங்கள்!.