PDA

View Full Version : எண்ணங்கள்



சுகந்தப்ரீதன்
22-07-2007, 08:29 AM
எதையோ எழுத நினைத்து
ஏடுகளை கையில் எடுத்து
என் எண்ணங்களை எழுதிவைத்தேன்!
ஏனோ எழுத்தின் முடிவில்
ஏடாகூடாமாய் என் எண்ணங்கள்!

அமரன்
22-07-2007, 08:30 AM
சுகந்தா முதலில் சொல்லடுக்குக்கு ஒரு பாராட்டு. எண்ணங்களை ஏடேத்தியதும் முற்றுபுள்ளி போட்டனவோ கண்ணீர்துளிகள். பாராட்டுக்கள்.

இனியவள்
22-07-2007, 09:04 AM
எண்ணங்களை அழகாய்
சொல்லடுக்கில் கொண்டு
வந்து சொல்ல வந்ததை
அழகாய் சொல்லிய
சுகந்துக்கு பாராட்டுக்கள்

சிவா.ஜி
22-07-2007, 09:31 AM
ஏடாகூடமான எண்ணங்களையும் சுவைக்க வைத்த உங்கள் எழுத்துக்கு என் பாராட்டுக்கள் சுகந்தன்.

மள்ளர்
22-07-2007, 09:40 AM
முடித்தபிறகு உதித்த குழப்பத்தின் குவியல்களை ஏடாகூடாமாக்கியதில் எனக்கு வினாதான் எழுகிறது.

சுகந்தப்ரீதன்
23-07-2007, 07:46 AM
முடித்தபிறகு உதித்த குழப்பத்தின் குவியல்களை ஏடாகூடாமாக்கியதில் எனக்கு வினாதான் எழுகிறது.

உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான் எனக்குள் எண்ணற்ற கேள்விகள்!
விடைதான் இன்னும் கிட்டவில்லை.....
வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!

விகடன்
02-08-2007, 05:24 AM
சொல்லாமல் சொல்லினிற்கும் அந்த இறுதி வரிகள் ஆயிரம் வார்த்தைகளை சொல்லி நிற்கின்றது.

பாராட்டுக்கள்.

ஓவியன்
07-08-2007, 03:04 AM
ஏட்டிலே வடித்ததால்
ஏடாகூடமானதோ
எண்ணங்கள்........?

இல்லை
எண்ணங்கள்
ஏடாகூடமானதால்
ஏட்டில் வடித்தீரோ?

அருமை சுகந்தா!, கலக்குங்கள்.............:nature-smiley-008:

ஷீ-நிசி
07-08-2007, 03:31 AM
எதையோ எழுத நினைத்தால் ஏடாகூடமாகத்தானே முடியும்! என்று சொல்லாமல் சொல்கிறது கவிவரிகள்!

சுகந்தப்ரீதன்
07-08-2007, 04:17 AM
நன்றி விராடன்
நன்றி ஓவியன்
நன்றி ஷீ-நிசி

இளசு
18-08-2007, 07:19 AM
எதையும் சொல்லாமல்
எதையோ சொல்லும் புதுக்கவிதை!

வாழ்த்துகள் சுகந்தன்!

சுகந்தப்ரீதன்
22-08-2007, 04:29 AM
எதையும் சொல்லாமல்
எதையோ சொல்லும் புதுக்கவிதை!

வாழ்த்துகள் சுகந்தன்!

நசுக்காய் சொன்னதற்க்கு நன்றி இளசு!