PDA

View Full Version : விலாங்கும் வெளவாலும்



ஓவியன்
22-07-2007, 03:52 AM
விலாங்கும் வெளவாலும்
விலங்குகளிடம் மட்டுமல்ல
மனிதர்களிடையும் உண்டு
ஏராளம் ஏராளமாய்............!

ஓவியன்
22-07-2007, 04:00 AM
மீனுக்கு தலையையும்
பாம்புக்கு வாலையும்
காட்டுவது மட்டுமின்றி
நழுவுவதிலும் பலர்
சமத்தர்களாய் நம்மிடை
விலாங்குகளாய்......!

ஓவியன்
22-07-2007, 04:03 AM
கட்டப் பொம்மனுக்கு
ஒரு எட்டப்பன்....!
பண்டார வன்னியனுக்கு
ஒரு காக்கை வன்னியன்....!
இன்னமும் தொடர்கிறது
வெளவால்களின் கதை.............!

ஆதவா
22-07-2007, 04:05 AM
முதலாவதாக விலாங்கு விலங்கு அல்லவே.. அது மீன்வகையை சேர்ந்தது,,, (அப்பாடி தப்பை கண்டுபிடிச்சுட்டேன்)

நீங்கள் எந்த அர்த்தம் எடுத்து எழுதினீர்களோ நான் அறியேன். ஆனால் இருக்கலாம்.... சில மனிதர்கள் வெளவால்களாய்.... விலாங்கைப் பற்றி அவ்வளவாக அறியேன்..

மனிதர்களிடையே உண்டு ; மனிதனுக்குள்ளேயும் உண்டு. சிறப்பான கவிதை ஓவியன். மனிதர்களை குறுகுறுக்கவைக்கும் குறுங்கவிதை... வாழ்த்துக்கள்.

ஆதவா
22-07-2007, 04:08 AM
அடுத்தடுத்த கவிதைகள்... முன்னதைப் பிடித்து சொல்லுகின்றன ஓவியன். குணங்களில் மோசமானது என்று கூட நழுவலைச் சொல்லலாம்.. விலாங்குமீன் நழுவலை கவனிக்காமல் போய்விட்டேன்..

அருமையான முன் உதாரணத்தோடு தொடர்ச்சியாக கவிதை. இதை முழுவதுமாக பதித்திருக்கலாமே ?

ஓவியன்
22-07-2007, 04:15 AM
முதலில் அப்படித்தான் நினைத்தேன் ஆதவா(தனியாகப் பதிக்க) ஆனால் இப்படி குறுங்கவிதைகளாக்கினால் அதற்கு மன்றத்திலிருந்து ஏராளம் பதில் கவிதைகள் வருமென்ற நம்பிக்கையிலேயே குறுங்கவிதையாக பதித்தேன்.

பி.கு - விலாங்கு பாம்புக்கு நானும் பாம்புதான் என்று வாலைக் காட்டுமாம், மீனுக்கு நானும் மீன்தான் என்று தலையைக் காட்டுமாம். (என் பாட்டி சொன்னது, ஹீ!,ஹீ!:grin: )

சிவா.ஜி
22-07-2007, 04:21 AM
நிஜம் சொல்லும் மற்றுமொரு குறுங்கவிதை. எத்தனை வேடங்கள் தான் இந்த மானிடர் போடுவார். இவர்களுக்கு இடையேதான் வாழ்ந்த்து தீர வேண்டியிருக்கிறது.எட்டப்பர்கள் இடையிடயே நம் வாழ்க்கையிலும் எட்டிப்பார்க்கிறார்கள் அவர்களின் துரோகத்தின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள திடமான மன உறுதியுடன் இருப்போம். பாராட்டுக்கள் ஓவியன்.

இதயம்
22-07-2007, 04:24 AM
முதலாவதாக விலாங்கு விலங்கு அல்லவே.. அது மீன்வகையை சேர்ந்தது,,, (அப்பாடி தப்பை கண்டுபிடிச்சுட்டேன்)



மனிதர்களிடம் மனிதம் இல்லாமல் விலங்குகளின் குணத்தை பெற்றிருக்கிறார்கள் என்ற கருவை அடிப்படையாக கொண்டு எழுத நினைத்ததால் நடந்த சிறு குழப்பம் இது. விலங்குகளிலேயே விஷப்பாம்பு, பச்சோந்தி, குள்ளநரி, ஓநாய் என்று மனிதனை உருவகப்படுத்த நிறைய விலங்குகள் இருக்கிறது என்பதால் அதற்கு மாற்று இல்லை என்று ஓவியன் குழம்ப தேவையில்லை.

நமக்கு தான் இந்த குழப்பமெல்லாம். விலங்குகளிடையே வஞ்சகம், புரட்டு, பித்தலாட்டம், துரோகம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் அவை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் "மனிதனை போல் இருக்கிறாயே..!" என்று அடுத்த விலங்கிடம் சொல்லலாம். உலகில் உள்ள எல்லா தீய குணங்களுக்கும் உதாரணமான ஒரு உயிரினம் மனிதன் தான்..!!

சிறப்பான கவிதையளித்த ஓவியனுக்கு பாராட்டுக்கள்..!!

ஆதவா
22-07-2007, 04:29 AM
மனிதர்களிடம் மனிதம் இல்லாமல் விலங்குகளின் குணத்தை பெற்றிருக்கிறார்கள் என்ற கருவை அடிப்படையாக கொண்டு எழுத நினைத்ததால் நடந்த சிறு குழப்பம் இது. விலங்குகளிலேயே விஷப்பாம்பு, பச்சோந்தி, குள்ளநரி, ஓநாய் என்று மனிதனை உருவகப்படுத்த நிறைய விலங்குகள் இருக்கிறது என்பதால் அதற்கு மாற்று இல்லை என்று ஓவியன் குழம்ப தேவையில்லை.

நமக்கு தான் இந்த குழப்பமெல்லாம். விலங்குகளிடையே வஞ்சகம், புரட்டு, பித்தலாட்டம், துரோகம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் அவை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் "மனிதனை போல் இருக்கிறாயே..!" என்று அடுத்த விலங்கிடம் சொல்லலாம். உலகில் உள்ள எல்லா தீய குணங்களுக்கும் உதாரணமான ஒரு உயிரினம் மனிதன் தான்..!!

சிறப்பான கவிதையளித்த ஓவியனுக்கு பாராட்டுக்கள்..!!

ஆமாம் இதயம் அவர்களே! அவருடைய மற்ற கவிகளைக் கண்ட பிறகுதான் எனக்குத் தெளிவு வந்தது..

ஓவியன்
22-07-2007, 04:59 AM
நிஜம் சொல்லும் மற்றுமொரு குறுங்கவிதை. எத்தனை வேடங்கள் தான் இந்த மானிடர் போடுவார். இவர்களுக்கு இடையேதான் வாழ்ந்த்து தீர வேண்டியிருக்கிறது.எட்டப்பர்கள் இடையிடயே நம் வாழ்க்கையிலும் எட்டிப்பார்க்கிறார்கள் அவர்களின் துரோகத்தின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள திடமான மன உறுதியுடன் இருப்போம். பாராட்டுக்கள் ஓவியன்.
உண்மைதான் சிவா!
துரோகிகள் அதிகரிக்க அதிகரிக்க நாம் தழுவி நிற்கும் சிதாந்தம் மீதான எம் பற்றுதல் மேன் மேலும் உறுதியாவதை யாராலும் தடுக்க முடியாது.

ஓவியன்
22-07-2007, 05:04 AM
சிறப்பான கவிதையளித்த ஓவியனுக்கு பாராட்டுக்கள்..!!நன்றி இதயம் உங்கள் விரிவான விளக்கமான பார்வைக்கு.......

இளசு
22-07-2007, 06:50 AM
மனிதம் மேல் நம்பிக்கைக் குறையும் தருணங்களில்
மனம் வெதும்பி கருப்பு வண்ணத்தைக் கொண்டு
கவி ஓவியன் எழுதிய இருள் ஓவியம்...

ஒற்றை நாக்கு − இரட்டைப் பேச்சு..
பேச்சில் வீரம் − செயலில் பூச்சியம்..
தலைகீழ்க் கோலம் போட்டாவது
தனிக்கவனம் கவர எண்ணும் அழிச்சாட்டியம்..

ஓவியனின் கவலைகள் நம்மில் பலருக்கும்..
நல்லவை பெருக, அல்லவை அருகும் என்ற
நம்பிக்கை மட்டும் மிச்சம் என்றைக்கும்!


வாழ்த்துகள் ஓவியன்!

ஓவியன்
22-07-2007, 06:54 AM
ஓவியனின் கவலைகள் நம்மில் பலருக்கும்..
நல்லவை பெருக, அல்லவை அருகும் என்ற
நம்பிக்கை மட்டும் மிச்சம் என்றைக்கும்!

வாழ்த்துகள் ஓவியன்!

அந்த நம்பிக்கை மீதே நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறோம்.

மிக்க நன்றி அண்ணா!.

மள்ளர்
22-07-2007, 06:54 AM
எல்லாம் பொழைக்கத்தான்!

ஓவியன்
22-07-2007, 10:14 AM
துரோகம் செய்து தான் பிழைப்பதென்றால் அப்படி ஒரு பிழைப்பே தேவையில்லையே....!

அமரன்
22-07-2007, 10:16 AM
ஓவியன்..!
ஆதவா, இதயம், சிவா, இளசு அண்ணா என பலர் இவ்விழையை அலங்கரிக்க அதைப் பார்த்து மகிழ்கின்றேன்...
பண்டாரவன்னியை காட்டிக்கொடுத்தது காக்கைவன்னியனா..? கதிர்காமநாயகமா? என்பது சந்தேகமாக இருக்கின்றது. அவகாசம் கொடுங்கள்..
பாராட்டுக்கள்.

ஓவியன்
22-07-2007, 10:22 AM
நன்றி அமரா!

காக்கை வன்னியன் என்றே படித்த ஞாபகம்...!

இதயம்
22-07-2007, 10:28 AM
பண்டாரவன்னியை காட்டிக்கொடுத்தது காக்கைவன்னியனா..? கதிர்காமநாயகமா? என்பது சந்தேகமாக இருக்கின்றது. அவகாசம் கொடுங்கள்..
பாராட்டுக்கள்.

காலம் கடந்தாலும் பரவாயில்லை, கன கச்சிதமாக கருத்தையளியுங்கள். காட்டிக்கொடுத்தவனை மாற்றி, போற்றிப்புகழப்பட வேண்டியவனை தூற்றி எழுதினால் புகழுக்குரியவனுக்கு வேண்டியவர்கள் பொங்கி எழுந்து விடுவார்கள்..!! :D

ஓவியன்
22-07-2007, 10:29 AM
இதயம் பண்டார வன்னியனைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

சிவா.ஜி
22-07-2007, 10:34 AM
ஓவியன் எப்போதோ படித்திருக்கிறேன். ஆனால் அவரை பண்டாரக வன்னியன் என்று வாசித்ததாக நினைவு. எது சரி?

அன்புரசிகன்
22-07-2007, 10:37 AM
கதிர்காமநாயகம் என்ற பெயர் கேள்விப்பட்டதில்லை. ஆனால் காக்கைவன்னியனைத்தான் துரோகத்தனத்திற்கெல்லாம் உவமானமாக பேசுவார்கள். (கல்லூரிக்காலங்களில்)...

இதயம்
22-07-2007, 10:39 AM
இதயம் பண்டார வன்னியனைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

பண்டார வன்னியன் காவியம் என்று கலைஞர் ஒரு நூல் எழுதியதாகவும், அது குங்குமம் இதழில் தொடராக வந்தது போலவும் ஒரு ஞாபகம். ஆனால், படித்ததில்லை..!!

நான் சொன்னது சரியா..? தெரிந்த நண்பர்கள் சொல்லுங்களேன்..!!

அமரன்
22-07-2007, 10:39 AM
யப்பா...கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டேனே...

ஓவியன்
22-07-2007, 10:44 AM
ஓவியன் எப்போதோ படித்திருக்கிறேன். ஆனால் அவரை பண்டாரக வன்னியன் என்று வாசித்ததாக நினைவு. எது சரி?பண்டார வன்னியன் தான் சரியானது, இவர் இலங்கையின் இறுதி சுதந்திர மன்னன் அடங்கா பற்று எனப்படும் (இன்று வன்னி என அழைக்கப்படும் அடியேனின் சொந்த பிரதேசம்:D ) ஒரு பகுதி மன்னனாக இருந்து வெள்ளையருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து காட்டிக் கொடுப்பால் உயிர் துறந்த மாவீரன் இவர். இன்றும் இந்த வன்னிப் பிரதேசம் அடங்காப் பற்றாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. பல முறை இலங்கை அரசு கைப்பற்ற முயன்றும் முடியவில்லை.

பண்டார வன்னியனின் கதையை கலைஞர் பாயும் புலி பண்டார வன்னியன் என்ற பெயரில் எழுதி இருந்தார்.

இதயம்
22-07-2007, 10:46 AM
பண்டார வன்னியனின் கதையை கலைஞர் பாயும் புலி பண்டார வன்னியன் என்ற பெயரில் எழுதி இருந்தார்.[/FONT][/COLOR]

சரியாக சொன்னீர்கள்..! பாயும் புலி அடைமொழி கேட்டதும் தான் நன்றாக நினைவுக்கு வருகிறது.

சிவா.ஜி
22-07-2007, 01:17 PM
பண்டார வன்னியன் தான் சரியானது, இவர் இலங்கையின் இறுதி சுதந்திர மன்னன் அடங்கா பற்று எனப்படும் (இன்று வன்னி என அழைக்கப்படும் அடியேனின் சொந்த பிரதேசம்:D ) ஒரு பகுதி மன்னனாக இருந்து வெள்ளையருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து காட்டிக் கொடுப்பால் உயிர் துறந்த மாவீரன் இவர். இன்றும் இந்த வன்னிப் பிரதேசம் அடங்காப் பற்றாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. பல முறை இலங்கை அரசு கைப்பற்ற முயன்றும் முடியவில்லை.

பண்டார வன்னியனின் கதையை கலைஞர் பாயும் புலி பண்டார வன்னியன் என்ற பெயரில் எழுதி இருந்தார்.

நன்றி ஓவியன்.தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்முவின் ஊரான பாஞ்சாலங்குறிச்சியைப் போன்றதாக இருக்கிறது. வீரம் விளைந்த மண் அத்தனை சீக்கிரம் கைப்பற்ற முடியாது.

அமரன்
22-07-2007, 01:23 PM
யாழ்ப்பாண சரிதம் என்ற நூலில் காக்கைவன்னியன் போர்த்துக்கேய,சங்கிலியன் காலத்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனாலேயே சந்தேகத்தை சொன்னேன். சில புத்தகங்களை தேடிப்பார்த்தபோது கதிர்காமநாயகம் என்பவனே பண்டாரவன்னியனைக் காட்டிக்கொடுத்துள்ளான் என்பது புரிகிறது.
அன்பு..துரோகத்தனத்துக்கு காக்கைவன்னியனையே உதாரணமாக சொல்வது வழக்கம். உண்மைதான்....

அன்புரசிகன்
22-07-2007, 01:31 PM
சற்று குழப்பமாக உள்ளது அமரா. எனக்கு தெரிந்தவரை காக்கை வன்னியனானவன் பண்டாரவன்னியனின் சகோதரன். வேறுபட்ட காலங்களில் வந்ததாக நானறியவில்லை. இன்றிரவு கதைத்துவிட்டு எனது அம்மாவுடன் கூறுகிறேன்.

மனோஜ்
22-07-2007, 01:52 PM
ஓவியன் அருமையான குறுங்கவிதை எனது விலங்குகளும் மனிதனும் கவிதைகளை விஞ்சி மனதை கொள்ளை கொள்வது அருமை நண்பா

இனியவள்
22-07-2007, 02:01 PM
அருமையான குறுங்கவி ஓவியன் வாழ்த்துக்கள் :nature-smiley-008:

ஓவியன்
22-07-2007, 02:31 PM
ஓவியன் அருமையான குறுங்கவிதை எனது விலங்குகளும் மனிதனும் கவிதைகளை விஞ்சி மனதை கொள்ளை கொள்வது அருமை நண்பாமிக்க நன்றி மனோ!
உங்களது பார்வை வேறு, எனது வேறு.......
இரண்டையும் ஒப்பிட முடியாது மனோஜ்!.

ஓவியன்
22-07-2007, 02:33 PM
அருமையான குறுங்கவி ஓவியன் வாழ்த்துக்கள் :nature-smiley-008:
மிக்க நன்றி இனியவள்!
பதில் கவிதை இல்லையா?:innocent0002:

அமரன்
22-07-2007, 02:35 PM
நன்றி இனியவள்!
பதில் கவிதை இல்லையா?:innocent0002:

ஏனுங்க கொடுத்து வாங்குறீங்க..

சிவா.ஜி
22-07-2007, 02:35 PM
மிக்க நன்றி இனியவள்!
பதில் கவிதை இல்லையா?:innocent0002:

அதானே எங்கே இனியின் இனிய கவிதை?

ஓவியன்
22-07-2007, 02:36 PM
ஏனுங்க கொடுத்து வாங்குறீங்க.. நெடுக தாரவங்க தாராட்டி ஒரு மாதிரியா இருக்குதில்லே! :sport-smiley-007:

அன்புரசிகன்
22-07-2007, 02:38 PM
மன்னிக்க ஓவியரே... திரியில் வேறுவிடையம் கதைத்ததால் உங்கள் கவியை படிக்க தவறிவிட்டேன். வாழ்க்கைநீரோட்டத்தில் நாம் காணும் சிலர்... சிலருக்கு நாமே சிலர்...

நிரந்தரமற்ற வாழ்க்கையில் எத்தனை நிதர்சனங்கள். வாழ்த்துக்கள் ஓவியரே.

ஷீ-நிசி
22-07-2007, 02:42 PM
கவிதை நன்று! வாழ்த்துக்கள் ஓவியன்!

ஓவியன்
22-07-2007, 02:45 PM
நிரந்தரமற்ற வாழ்க்கையில் எத்தனை நிதர்சனங்கள். வாழ்த்துக்கள் ஓவியரே.மிக்க நன்றி அன்பு! :nature-smiley-003:

ஓவியன்
22-07-2007, 02:46 PM
கவிதை நன்று! வாழ்த்துக்கள் ஓவியன்!
மிக்க நன்றிங்க ஷீ! :nature-smiley-003:

விகடன்
02-08-2007, 06:32 AM
ஓவியன்.
முதலாவது குறுங்கவிதையில் மறைத்து வைத்திருக்கும் கருத்து என்னவோ.

ஓவியன்
02-08-2007, 09:36 AM
விலாங்கும் வெளவாலும்
விலங்குகளிடம் மட்டுமல்ல
மனிதர்களிடையும் உண்டு
ஏராளம் ஏராளமாய்............!


ஓவியன்.
முதலாவது குறுங்கவிதையில் மறைத்து வைத்திருக்கும் கருத்து என்னவோ.

ஒன்றும் மறைத்து வைக்கவில்லை, விலாங்கும் வெளவாலும் இங்கே உவமைகளாகக் கையாளப் பட்டிருக்கின்றன.....

குணமாற்றி நிலை மாறுவதற்கும்.......
நழுவிக் கொண்டே செல்வதற்கும்........

தொடரும் பின்னூட்டங்கள் கருவைப் பிடித்து நிற்ற்கின்றன என நம்புகிறேன்.