PDA

View Full Version : சுத்தி சுத்தி அடிவாங்கlolluvathiyar
21-07-2007, 03:41 PM
சுத்தி சுத்தி அடிவாங்க

பொம்பள பிள்ளைய போற்றி வளத்தணும்
ஆம்பள பிள்ளைய அடிச்சு வளத்தணும்
எவனோ பாவி சொல்லிட்டு போயிட்டான்

தடுக்கி விழுந்துதான் தங்கச்சி அழுதா
ஏன்னு கேக்காம அம்மா கிட்ட அடிவாங்க

ரஜனி படத்த சுவத்துல ஒட்டி வச்சா
காரணமில்லாம அப்பாக்கிட்ட அடிவாங்க

பஞ்சுமிட்டாய் பங்குதான் கேட்டேன்
அதுக்கு அண்ணன் கிட்ட அடிவாங்க

காலைல 6 மணிக்கு தான் எழுப்பிவிட்டேன்
சரமாரிக்கு தங்கைகிட்ட அடிவாங்க

பொறுக்க முடியாமதான் வகுப்புல தூங்கினேன்
செமத்தியா வாத்திகிட்ட அடிவாங்க

ஐ லவ் யூனு ஒரு வார்த்தைதான் சொன்னேன்
அவ அப்பன்கிட்ட அடிவாங்க

மந்திரி லஞ்சம் வாங்கினதத்தான் போட்டா பிடிச்சேன்
அதுக்கு போலீஸ் கிட்ட அடிவாங்க

கொலுசு வாங்க காசில்லன்னு உண்மையைத்தான் சொன்னேன்
பொண்டாட்டிகிட்ட கிட்ட அடிவாங்க

ஏண்டா தண்ணி போட்டு சுத்தறன்னுதான் கேட்டேன்
பெத்த பையன்கிட்ட அடிவாங்க

இப்படி சுத்தி சுத்தி அடிவாங்கறதே
ஆம்பளைக பொழப்பாப் போச்சு!

ஆரம்பிக்கலாமா ஆணுரிமைச் சங்கங்கள்?

அன்புரசிகன்
21-07-2007, 03:48 PM
அப்பப்பா... எத்தனை அடி வாங்கினீங்க,???...

சுவையாக உள்ளது வாத்தியாரே.

namsec
21-07-2007, 03:57 PM
வாழ்க்கையில் ரோம்ப அடிப்பட்டவர் வாத்தியார்

அமரன்
21-07-2007, 03:57 PM
வாத்தியாரே..எப்படி? ரொம்ப வலியோ...?பாராட்டுக்கள்.

ஆதவா
21-07-2007, 06:08 PM
ரொம்பத்தான் அடிவாங்கியிருக்கிறீங்க வாத்தியாரே.... யோசிக்கவேண்டிய சப்ஜெக்ட்.. கவிதையும் பலத்த அடிதான்... பயங்கர எழுத்துப் பிழை....

ஓவியன்
21-07-2007, 07:20 PM
அடிக்கிற கை தான் அணைக்கும் வாத்தியாரே............:grin:
ஆதலால் அழாதீங்க இன்னமும் நல்லா அடி வாங்குங்க................:grin:

சிவா.ஜி
22-07-2007, 04:51 AM
அநேக அடிகளை அழகான அடிகளில் கவிதையாய் வடித்திருக்கும் வாத்தியாருக்கு என் சார்பாக இரண்டு செல்ல அடிகள்.(பாராட்டுதான்....!)

இனியவள்
22-07-2007, 09:02 AM
வாழ்த்துக்கள் வாத்தியாரே நல்லா அடி வாங்கி இருக்கீங்கள் போல

சிரிச்சாலும் அடிவாங்கிறேன்
அழுதாலும் அடிவாங்கிறேன்:shutup:

அய்யா
22-07-2007, 09:09 AM
இங்கு சொல்லலாமோ கூடாதோ தெரியவில்லை. வாத்தியார் கவிதை அழகும்,பொருளும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கிறது. ஆனால் எழுத்துப்பிழைகள் மலிந்திருப்பது நல்ல உணவினூடே பல்லில் கற்கள் கடிபடுவது போன்று சுவையைக் குறைக்கிறது. வாத்தியார் பிழை செய்யலாமா?

என் கருத்து ஒவ்வாததாக இருந்தால் நீக்கிவிடுங்கள்.

இளசு
22-07-2007, 09:14 AM
தனியே வெளியிலே போகலாம்..
எத்தனை மணிக்கும் வீட்டுக்குத் திரும்பலாம்..

இந்தச் சலுகைக்குக் கிடைத்தது முதல் அடி!

வகுப்பு மட்டம் போடலாம்..
''வாத்தி'' என மட்டம் தட்டலாம்..

அந்த தெனாவெட்டுக்குக் கிடைத்தது மற்றொரு அடி!

பார்வையால் வெட்டலாம்..பெண்
பார்த்துவிட்டு மறுக்கலாம்..

அந்த எதேச்சதிகாரத்துக்கு இன்னொரு அடி!

தனக்குக் கிடைத்த சலுகைகளை
மகனுக்கு (மகளுக்கல்ல) கொடுத்து
குடிக்கும் வரை போனதில் அடுத்த அடி!

ஏராளம் உரிமைகள்..சலுகைகள்
ஏற்கனவே ஆணிடம்..
கிடைத்த அடிகள் எல்லாம்..
சலுகைகளின் இலவச இணைப்புகள்!

ஒன்றின்றி மற்றொன்றில்லை!

ஆணின் வாழ்வில் இதெல்லாம் சகஜமப்பா....

சிவா.ஜி
22-07-2007, 09:15 AM
இல்லை அய்யா உங்கள் கருத்தில் எந்த தவறும் இல்லை. எங்கள் வாத்தியாரின் எழுத்துப்பிழை மிகப்பிரபலமானது. இது அவரே ஒத்துக்கொண்டது. குறும்பு செய்யும் பிள்ளைகளை அந்த குறும்புக்காவே ரசிப்பது போல் அவர் எழுத்தையும் ரசிக்கிறோம்.

lolluvathiyar
22-07-2007, 12:51 PM
அப்பப்பா... எத்தனை அடி வாங்கினீங்க,???...
சுவையாக உள்ளது வாத்தியாரே.

பாத்தீங்களா நான் அடி வாங்கியது அன்பு ரசிகனுக்கு சுவையாக இருக்காம்.
இங்கியும் சுத்தி சுத்தி அடிதானா

இதயம்
22-07-2007, 12:59 PM
பாத்தீங்களா நான் அடி வாங்கியது அன்பு ரசிகனுக்கு சுவையாக இருக்காம்.
இங்கியும் சுத்தி சுத்தி அடிதானா

திருவிளையாடல் படத்தில் இடம்பெரும் சிவபெருமான்−தருமியின் உரையாடலில் சேர்க்கவேண்டிய வசனம்..

சேர்ந்தே இருப்பது............ எழுத்துப்பிழையும், வாத்தியாரும்..!!:D :D

ஷீ-நிசி
22-07-2007, 01:56 PM
இதெல்லாம் பன்னிட்டு அடிவாங்காம எஸ்கேப்பாக முடியுமா வாத்தியாரே!

lolluvathiyar
23-07-2007, 04:10 PM
ஆதலால் அழாதீங்க இன்னமும் நல்லா அடி வாங்குங்க................:grin:

எத்தன நாளா இப்படி ஒரு ஆசையுடன் இருந்தீர்கள் ஓவியரே.
இருங்க நீங்க அடி வாங்கர ஒரு 10 வரி கவிதையாவது எழுதி போடரேன்

பென்ஸ்
23-07-2007, 05:32 PM
வாத்தியார்....

எழுத்துபிழை இல்லாத உங்கள் கவிதை (நன்றி: இளசு) வாசிக்க அபாரம்...

புது கவிதைக்கு இலக்கணம் வேண்டாம் என்று சொல்லும் போது எல்லாம், தமிழை கொலை செய்ய வைக்கும் எண்ணம் என்று சில நேரங்களில் தோன்றியது உண்டு....

ஆனால் இது போன்ற சில மறுக்கமுடியாத (ஒரு பக்க) உண்மைகளை சொல்லும் போது அனுமதி கொடுக்கலாம் என்றே தோன்றும்....

மல்லாக்க படுத்து யோசிக்க வேண்டிய விசயம்தான்....

இருந்தாலும் நம்ம இளசு இப்படிதான்... அமர்க்களமா அதுக்கு விமர்சணம் கொடுத்து நிம்மதியை கொ(கே)டுத்திட்டு போயிடுவார்...

நன்றி இருவருக்கும்...

அக்னி
23-07-2007, 05:40 PM
வாத்தியாரே...
ஆணுரிமைச்சங்கங்கள் ஆரம்பிக்கலாம்தான்...
ஆனா, தனித்தனியா விழுந்த அடிகள், மொத்தமா இடிகளா விழுந்திடுமோ...
என்று சின்ன பயம் மனசுக்குள்...

தொடர்ந்தும் சுரக்கட்டும் உங்கள், சுவையூற்றுக்கள்...

lolluvathiyar
26-07-2007, 03:08 PM
வாத்தியார் கவிதை அழகும்,பொருளும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கிறது. ஆனால் எழுத்துப்பிழைகள் மலிந்திருப்பது நல்ல உணவினூடே பல்லில் கற்கள் கடிபடுவது போன்று சுவையைக் குறைக்கிறது.


. கவிதையும் பலத்த அடிதான்... பயங்கர எழுத்துப் பிழை....குறும்பு செய்யும் பிள்ளைகளை அந்த குறும்புக்காவே ரசிப்பது போல் அவர் எழுத்தையும் ரசிக்கிறோம்.சேர்ந்தே இருப்பது............ எழுத்துப்பிழையும், வாத்தியாரும்.

எழுத்து பிழையை சுட்டி காட்டிய நன்பர்களுக்கு நன்றி, முடிந்தவரையில் அதை தவிர்த்து வருகிறேன்.

aren
04-08-2007, 02:13 AM
தர்ம அடி கேள்விப்பட்டிருக்கேன்.
இது லொள்ளுஅடி
நல்ல செமத்தியாக வாங்கியிருக்கிறீர்கள்
போலிருக்கிறது

நான் வாங்கியதை வெளியே சொன்னால்
என்பாடு அவ்வளவுதான்

இளசு அவர்கள் சொன்னதுபோல்
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்பா

நாம் வாங்குவதற்கே பிறந்தோம்
வாங்கும், வாங்கிக்கொன்டேயிருப்போம்

நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பூமகள்
29-08-2007, 11:01 AM
சிரிப்பூட்டும் கவிதை... பாராட்டுக்கள்...!:nature-smiley-002:
அழாதீர்கள் வாத்தியாரே..:icon_nono:
உள்ளத்து குமுறலை வெளியிட்டு விட்டீரே..
இதற்கும் வீட்டில் அடி விழுமோ????:waffen093::waffen093:

தாமரை
29-08-2007, 11:17 AM
சுத்தி சுத்தி அடிவாங்க

பொம்பள பிள்ளைய போற்றி வளத்தணும்
ஆம்பள பிள்ளைய அடிச்சு வளத்தணும்
எவனோ பாவி சொல்லிட்டு போயிட்டான்

தடுக்கி விழுந்துதான் தங்கச்சி அழுதா
ஏன்னு கேக்காம அம்மா கிட்ட அடிவாங்க

ரஜனி படத்த சுவத்துல ஒட்டி வச்சா
காரணமில்லாம அப்பாக்கிட்ட அடிவாங்க

பஞ்சுமிட்டாய் பங்குதான் கேட்டேன்
அதுக்கு அண்ணன் கிட்ட அடிவாங்க

காலைல 6 மணிக்கு தான் எழுப்பிவிட்டேன்
சரமாரிக்கு தங்கைகிட்ட அடிவாங்க

பொறுக்க முடியாமதான் வகுப்புல தூங்கினேன்
செமத்தியா வாத்திகிட்ட அடிவாங்க

ஐ லவ் யூனு ஒரு வார்த்தைதான் சொன்னேன்
அவ அப்பன்கிட்ட அடிவாங்க

மந்திரி லஞ்சம் வாங்கினதத்தான் போட்டா பிடிச்சேன்
அதுக்கு போலீஸ் கிட்ட அடிவாங்க

கொலுசு வாங்க காசில்லன்னு உண்மையைத்தான் சொன்னேன்
பொண்டாட்டிகிட்ட கிட்ட அடிவாங்க

ஏண்டா தண்ணி போட்டு சுத்தறன்னுதான் கேட்டேன்
பெத்த பையன்கிட்ட அடிவாங்க

இப்படி சுத்தி சுத்தி அடிவாங்கறதே
ஆம்பளைக பொழப்பாப் போச்சு!

ஆரம்பிக்கலாமா ஆணுரிமைச் சங்கங்கள்?

அடிச்சாங்களே ஆமாம் வளர்த்தாங்களா? ஆமாம் பையன் பொறந்து அடிக்கிற வரைக்குமா நீங்க வளரலை?

அப்ப உங்க பையனை நீங்க அடிக்கலையா? இல்லை வளர்க்கலையா?

ஆணை ஆண் அடித்தால் ஆணுரிமைச் சங்கம் அடிப்பவருக்காக வக்காலத்த்து வாங்குமா இல்லை அடிபட்டவனுக்காக வக்காலத்து வாங்குமா இல்லை அதுவே அடிபட்டு பரிதாபமா முழிக்குமா?

இந்தக் கவிதையை இங்க எழுதி எங்ககிட்டயும் அடி வாங்கறீங்களே!

:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

ஓவியன்
29-08-2007, 11:23 AM
ஆமாம் பையன் பொறந்து அடிக்கிற வரைக்குமா நீங்க வளரலை?

வளர்ந்தா அடி வாங்க கூடாது என்று எதாச்சும் சட்டமா என்ன?? :sport-smiley-018:

தாமரை
29-08-2007, 11:36 AM
கையால அடிக்கறவங்களுக்கு சட்டத்தையும் சவுக்கையும் எடுத்துக் கொடுப்பீங்க போல இருக்கே!..

பழமொழி என்ன?

பெண் பிள்ளையை பொத்தி (காப்பாற்றி, அணுசரணையாய்), (போற்றி அல்ல, இப்பவே பண்னற அலம்பல் தாங்க முடியலை) வளர்க்கணும்
ஆண் பிள்ளையை அடிச்சி வளர்க்கணும்

அதாவது வளர்ற வரைக்கும்தான் அடி
அதுக்கப்புறம் ????

வேறென்ன
இடிதான்..

ஓவியன்
29-08-2007, 01:14 PM
பழமொழி என்ன?
அப்படினா காய் மொழி என்ன?

ஆண் பிள்ளையை அடிச்சி வளர்க்கணும்..
ம்ம்ம்ம்ம்ம்.......!

பாவம் நம்ம அனுருத்........
அவருக்கு இப்படி ஒரு அப்பா.........! :innocent0002:

மனோஜ்
29-08-2007, 01:57 PM
அடிமேல் அடிவிழுந்து
ஆடிபோய் அதையும்
கவிதையாக்கி இங்கையும்
வாங்கி கட்டிய லொல்லரே நீர் ரோம்.................ப நல்லவர்

சாராகுமார்
29-08-2007, 03:17 PM
அடிக்கிற கைதான் அணைக்கும் வாத்தியரே.அடி கவிதை அருமை.

இலக்கியன்
29-08-2007, 04:44 PM
சில வீடுகளில் இப்படியான நிகழ்வுகள் நடை பெறுவதை நானும் கண்ணுற்றுள்ளேன். வாழ்த்துக்கள் வாத்தியார் நகைச்சுவை கலந்து தந்தீர்கள்

tkpraj
03-04-2009, 06:28 AM
சுத்தி சுத்தி அடிவாங்க

ஆரம்பிக்கலாமா ஆணுரிமைச் சங்கங்கள்?[/COLOR][/B]
எதுக்குங்க வாத்தியாரே ஆணுரிமைச் சங்கம் ஆரம்பித்து வேறு யாரிடமாவது அடி வாங்க விருப்பமா?
ஷ் ஷ் அப்பா போதுமடா சாமி!

xavier_raja
03-04-2009, 07:26 AM
எல்லோருக்கும் வாத்தியார் என்றால் அடிகொடுபவர் என்றுதான் நினைத்தோம், இவர் உல்டா போல.