PDA

View Full Version : இப்படிக்கு மெழுகுவர்த்தி.



அமரன்
21-07-2007, 10:14 AM
என் இனிய தென்றல் காற்றே
என்னைத் தீண்டாதே...!
ஒளிகொடுத்த களிப்பில்
என்னை இறக்கவிடு...
இப்படிக்கு மெழுகுவர்த்தி.

படித்துப் பார்த்தகவி
பரசவத்தில் மிதத்தியது
என்
காதல் தோற்கவில்லை.

சிவா.ஜி
21-07-2007, 10:20 AM
அமரன் முதல் பத்தி சரி. அடுத்த பத்தி..... விளக்கம் ப்ளீஸ்?

அக்னி
21-07-2007, 10:21 AM
என் இனிய தென்றலே...
சற்றே என்னைத் தாலாட்டு,
எனது சுடரின் அசைவில்,
மூலையில் மடங்கும் இருளும்,
விலக்கப்படட்டும்...
இப்படிக்கு மெழுகுவர்த்தி...

படித்துப் பார்த்ததும்
பரிதவித்தேன்...
காதல் பரவலாக்கப்படுகின்றதோ
என்று...

ஓவியன்
21-07-2007, 10:24 AM
தியாகத்தில் தீயில்
குளிக்கும் காதல்
தோற்பதில்லையே
அது அமரத்துவம் பெற்று
காலத்தை ஜெயிக்குமே.....!

வரிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அமர்!.

அக்னி
21-07-2007, 10:25 AM
என் இனிய தென்றல் காற்றே
என்னைத் தீண்டாதே...!
ஒளிகொடுத்த களிப்பில்
என்னை இறக்கவிடு...
இப்படிக்கு மெழுகுவர்த்தி.

படித்துப் பர்த்ததும்
பரவசத்தில் மிதந்தேன்
என்
காதல் தோற்கவில்லை.

காதல் தேடி காத்திருந்த இதயம் ஒன்று...
ஏற்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா
எனத் தெரியாமல்,
வாழ்க்கைப்பட்டுவிட்ட காதலை
தேடியபடி....

வாழ்க்கைப்பட்ட காதலிடமிருந்து,
வந்த மடல்...
காதல் தோற்கவில்லை...
தோற்கடிக்கப்பட்டது சந்தர்ப்பத்தால் என்பதை உணர்த்த,
சந்தோஷித்த இதயம்,
வேதனையில், மகிழ்ந்தது...

பாராட்டுக்கள் அமரன்...
(சரிதானோ?)

சிவா.ஜி
21-07-2007, 10:25 AM
ஆஹா அக்னியாரின் பதில் கவியும் அசத்தல்தான். அமரனின் கவியையே பாதிதான் புரிந்து மீதிக்கு விளக்கம் வேண்டி நிற்கிறேன்...அதற்குள் அக்னி நீங்களுமா...?

இன்பா
21-07-2007, 10:29 AM
தென்றலே என்னை தீண்டாதே...!
ஒளிகொடுக்கும் என் மதி கெடுக்காதே...!

படித்துப் பார்த்தேன் காதலை புறிந்துக்கொண்டேன்...

அக்னி
21-07-2007, 10:30 AM
ஆஹா அக்னியாரின் பதில் கவியும் அசத்தல்தான். அமரனின் கவியையே பாதிதான் புரிந்து மீதிக்கு விளக்கம் வேண்டி நிற்கிறேன்...அதற்குள் அக்னி நீங்களுமா...?

என் மண்டையில் ஏறியதை... மேலே கொடுத்துள்ளேன்...
அப்படி வருமோ... அமரன் வரவேண்டும் விளக்கம் சரியா என்று கூற...

சிவா.ஜி
21-07-2007, 10:33 AM
உங்கள் விளக்கம் சரியாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் அக்னி. ஏனென்றால் புரிந்துகொண்டு உடனே வேறு கவிதை தந்திருக்கிறீர்களே.

இனியவள்
21-07-2007, 02:27 PM
என் இனிய தென்றல் காற்றே
என்னைத் தீண்டாதே...!
ஒளிகொடுத்த களிப்பில்
என்னை இறக்கவிடு...
இப்படிக்கு மெழுகுவர்த்தி.

படித்துப் பார்த்தகவி
பரசவத்தில் மிதத்தியது
என்
காதல் தோற்கவில்லை.

அமர் கவிதை நல்லா இருக்கு

காதலாய் கசிந்து
உன் நினைவென்னை
மெழுகாய் உருக்குகின்றது

ஓவியன்
21-07-2007, 02:37 PM
தென்றலே என்னை தீண்டாதே...!
ஒளிகொடுக்கும் என் மதி கெடுக்காதே...!

படித்துப் பார்த்தேன் காதலை புரிந்துக்கொண்டேன்...

வரிப்புலியாரே உங்களை அடிக்கடி இனிமேல் கவிதைகள் பகுதியில் எதிர்பார்க்கப் போகிறேன் − ஏமாற்றி விடாதீர்கள்!.

அமரன்
21-07-2007, 03:50 PM
நன்றி சிவா,அக்னி,ஓவியன், வரிப்புலி, இனியவள்...
அக்னி பதில்க் கவிதை அருமை..
என் கவிதைக்கு நீங்கள் சொன்னது ஒரு பார்வை..
ஓவியன் சொன்னது இன்னொரு பார்வை.
வரிப்புலியும் புரிந்து கொண்டார்..
அழகான பின்னூட்டமுமிட்டார். தொடர வேண்டுகின்றேன்.
இனியவள் கவிதை அருமை...


சிவா...என்னைப் பொறுத்தவரை கல்யாணத்தில் முடியும் காதலை ஜெயிப்பதாக கருதமுடியாது. அதுபோல கல்யாணத்தில் முடியாத காதல் தோத்தாக கருதமுடியாது.
காதலித்தவன்/காதலித்தவள் நல்லவள் என்பது உண்மையானால் அதுதான் ஜெயித்த காதல்...அதை நினைத்தே இதை எழுதினேன். சரியா? தவறா நீங்களே சொல்லுங்கள்.

சிவா.ஜி
22-07-2007, 07:19 AM
புரிந்தேன்
தெளிந்தேன்
மீண்டும் படித்தேன்
ரசித்தேன்
ருசித்தேன்.
இது கவித்தேன்.
கண்டிப்பாக உண்மை அமரன். என்னைப்பொறுத்தவரை உண்மையான காதல் என்றுமே தோற்பதில்லை. அதிலும் காதலனோ காதலியோ உண்மையானவர்களாக இருந்தால் அது அமரக்காதல்,அழிவில்லா காதல்.
நல்ல கருத்துக்கு பாராட்டுக்கள் அமரன்

சூரியன்
22-07-2007, 07:23 AM
வாழ்த்துக்கள் அமர்

மள்ளர்
22-07-2007, 07:27 AM
சிவாஜி கவிதையாலே கொடுத்த விமர்சனம் நன்றாகவே இருந்தது.அத்தோடு அக்னியின் வரிகள் உண்மையில் அவர் கவிஞர் என நினைக்கிறேன்.

இன்பா
24-08-2007, 05:42 PM
தென்றலே என்னை தீண்டாதே...!
ஒளிகொடுக்கும் என் மதி கெடுக்காதே...!

படித்துப் பார்த்தேன் காதலை புறிந்துக்கொண்டேன்...

ஏ தென்றலே...
உன் அன்பால் என்னை
அணைக்கப் பார்க்கிறாய்
அறிவேன் உன் அன்பை
ஆனால் இந்த சமுதாயமோ...?
என் தீக்குளிப்பில் குளிர் காய்கிறார்கள்...

இளசு
05-09-2007, 06:21 AM
காதலித்தவன்/காதலித்தவள் நல்லவள் என்பது உண்மையானால் அதுதான் ஜெயித்த காதல்....

வென்றால் − இருவருமே '' நல்லவர்கள்''
தோற்றால்?

மெழுகுவர்த்தி சொல்லும் − அவள் நல்லவள்!
கொள்ளிக்கட்டை சொல்லும் − அவள் கொடியவள்!

மனம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது சூட்சுமம்!

நாம் நல்ல பார்வையுடன் வாழ்ந்தால்
பெரும்பாலும் எல்லாரும் நல்லவரே!


வாழ்த்துகள் அமரன்!

ஷீ-நிசி
05-09-2007, 07:00 AM
எல்லோருமே அழகாக விமர்சித்திருக்கிறார்கள்..

வாழ்த்துக்கள் அமரன்..

அமரன்
09-09-2007, 04:18 PM
நன்றி...அண்ணா.
நன்றி ஷீ.

வரிப்புலியின் வரிகள் பிரமாதம்.