PDA

View Full Version : காத்திருக்கின்றேன்

இனியவள்
21-07-2007, 06:59 AM
இயற்கை அனைத்தும்
மண்டியிடுகின்றது உன்
அன்பின்பால் ஈர்க்கப்பட்டு..

என்பால் எப்பொழுது
ஈர்க்கப்படுவாய் கந்தத்தைக்
கவரும் இரும்பாய்...

அன்பே உன் இதயம்
இரும்பல்லவே உணர்ச்சிகள்
கொண்டு செதுக்கப்பட்ட
அழகிய சிற்பம் அல்லவா..

உணர்ச்சிகளுக்கு வேலிகள்
போட்டென்னை சோகம்
என்னும் நரகத்தில்
தள்ளிவிடாதே....

கண்ணைமூடி பால் குடிக்க
நினைக்காதே பூனைபோல்
ஏமாறுவது நான் அல்ல நீயே....

வேலி என்னும் ஆடை பூண்டு
கருமேகமாய் காட்சியளிக்கின்றாய்
மழை என்னும் அன்பு பொழிந்து
எப்பொழுது வெண்மேகம் ஆவாய்....

காத்திருக்கின்றேன் உனக்குள்
பிறக்கபோகும் காதல் என்னும்
குழந்தைக்கு தாயாய் ஆவதற்கு....

வசீகரன்
21-07-2007, 07:55 AM
இயற்கை அனைத்தும்
மண்டியிடுகின்றது உன்
அன்பின்பால் ஈர்க்கப்பட்டு..

என்பால் எப்பொழுது
ஈர்க்கப்படுவாய் கந்தத்தைக்
கவரும் இரும்பாய்...

பெண்ணே உன் இதயம்
இரும்பல்லவே உணர்ச்சிகள்
கொண்டு செதுக்கப்பட்ட
அழகிய சிற்பம் அல்லவா..

உணர்ச்சிகளுக்கு வேலிகள்
போட்டென்னை சோகம்
என்னும் நரகத்தில்
தள்ளிவிடாதே....

கண்ணைமூடி பால் குடிக்க
நினைக்காதே பூனைபோல்
ஏமாறுவது நான் அல்ல நீயே....

வேலி என்னும் ஆடை பூண்டு
கருமேகமாய் காட்சியளிக்கின்றாய்
மழை என்னும் அன்பு பொழிந்து
எப்பொழுது வெண்மேகம் ஆவாய்....

காத்திருக்கின்றேன் உனக்குள்
பிறக்கபோகும் காதல் என்னும்
குழந்தைக்கு தாயாய் ஆவதற்கு....
கவிதை பிரமாதம்....! ஆழ காதலின் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள உண்மையான உணர்ச்சிகளை உணர்த்துகிறது உங்கள் வரிகள்

வசீகரன்

அமரன்
21-07-2007, 08:45 AM
இனியவள் கவிதை அழகாக இருக்கின்றது. கருவில் தளம்பல் இருப்பதாக நினைக்கின்றேன். வழக்கமாக காந்தம் இரும்பை இழுப்பது என்றே சொல்வார்கள்..விதி படத்தில் கூட அப்படி ஒரு வசனம் வரும்.."இந்த இரும்பை அந்தக்காந்தம் இழுத்துக்கொண்டது". காந்தத்தை இரும்பு கவரலாம்..காந்தம் சின்னதாகவும் இரும்பு பெரிதாகவும் இருக்கவேண்டும்.

முதல் இரு பந்திகளில் ஆண் கேட்பது என்று வைத்துக்கொண்டால் அடுத்த வரிகளில் அவள் இதயம் இரும்பல்ல என்கின்றீர்கள்..அப்படியானால் அந்த இரண்டும் பெண் கேட்பது அமைந்துள்ளதோ? ஏதோ ஒரு தளம்பல் எனக்கு..
வெண்மேகம் மழை தருவதில்லை. கருமேகமே மழை தரும். காதலில் எதுவும் நடக்கலாம்..

வழக்கம் போலவே கவிதையில் ரசம் அதிகம். பாராட்டுக்கள்.

இனியவள்
21-07-2007, 02:23 PM
கவிதை பிரமாதம்....! ஆழ காதலின் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள உண்மையான உணர்ச்சிகளை உணர்த்துகிறது உங்கள் வரிகள்

வசீகரன்

நன்றி வசி

lolluvathiyar
21-07-2007, 03:04 PM
கடைசிவரை காத்திருக்கும் படி
ஆகிவிட போகிறது.
அதிக நாள் காத்திருக்காமல் நெக்ஸ்ட் பட்டனை அழுத்தி விடு

ஓவியன்
22-07-2007, 03:39 AM
காத்திருக்கின்றேன் உனக்குள்
பிறக்கபோகும் காதல் என்னும்
குழந்தைக்கு தாயாய் ஆவதற்கு....

காத்திருத்தலும் சுகமே
அது காதலுக்கென்றால்.......
காத்திருப்பு கனிந்து வர*
என் வாழ்த்துக்கள்!

ஆதவா
22-07-2007, 04:12 AM
காத்திருப்பு அருமையாக இருக்கிறது இனியவள். உங்கள் கவிதைத்திரிகளில் கவிதைப் பின்னூட்டங்கள் போட்டு கலக்குகிறீர்கள்... வாழ்த்துக்கள்..

இனியவள்
22-07-2007, 08:57 AM
இனியவள் கவிதை அழகாக இருக்கின்றது. கருவில் தளம்பல் இருப்பதாக நினைக்கின்றேன். வழக்கமாக காந்தம் இரும்பை இழுப்பது என்றே சொல்வார்கள்..விதி படத்தில் கூட அப்படி ஒரு வசனம் வரும்.."இந்த இரும்பை அந்தக்காந்தம் இழுத்துக்கொண்டது". காந்தத்தை இரும்பு கவரலாம்..காந்தம் சின்னதாகவும் இரும்பு பெரிதாகவும் இருக்கவேண்டும்.

முதல் இரு பந்திகளில் ஆண் கேட்பது என்று வைத்துக்கொண்டால் அடுத்த வரிகளில் அவள் இதயம் இரும்பல்ல என்கின்றீர்கள்..அப்படியானால் அந்த இரண்டும் பெண் கேட்பது அமைந்துள்ளதோ? ஏதோ ஒரு தளம்பல் எனக்கு..
வெண்மேகம் மழை தருவதில்லை. கருமேகமே மழை தரும். காதலில் எதுவும் நடக்கலாம்..

வழக்கம் போலவே கவிதையில் ரசம் அதிகம். பாராட்டுக்கள்.

நன்றி அமர்...

உங்கள் கருத்துக்களைக் கவனத்தில்
எடுத்துக் கொள்கின்றேன் அடுத்த கவியில்
தளம்பல் இல்லாதவாறு தர முயற்ச்சிக்கின்றேன்
நன்றி அமர்..:icon_b:

இனியவள்
22-07-2007, 08:58 AM
கடைசிவரை காத்திருக்கும் படி
ஆகிவிட போகிறது.
அதிக நாள் காத்திருக்காமல் நெக்ஸ்ட் பட்டனை அழுத்தி விடு

வாத்தியாரே நெக்ஸ்ட் பட்டனை
அழுத்தி விடுவதற்கு காதல்
ஒன்றும் ரீமொட் இல்லை
வாழ்க்கை படமுமல்ல

இனியவள்
22-07-2007, 08:59 AM
காத்திருத்தலும் சுகமே
அது காதலுக்கென்றால்.......
காத்திருப்பு கனிந்து வர*
என் வாழ்த்துக்கள்!

காத்திருத்தல் சுகமே
அது காதலுக்கு மட்டுமல்ல
அழகாய் கனிந்து வரும்
கவியோடு கூடிய
பின்னூட்டங்களுக்காகவும்

நன்றி ஓவியன்

இனியவள்
22-07-2007, 09:00 AM
காத்திருப்பு அருமையாக இருக்கிறது இனியவள். உங்கள் கவிதைத்திரிகளில் கவிதைப் பின்னூட்டங்கள் போட்டு கலக்குகிறீர்கள்... வாழ்த்துக்கள்..

நன்றி ஆதவா

இளசு
22-07-2007, 09:03 AM
அமரனின் பின்னூட்டம் தாண்டி சொல்ல எதுவும் என்னிடமில்லை..

அதை ஆக்கபூர்வமாய் ஏற்ற கவிதாயினிக்கு வாழ்த்துகள்..

இனியவள்
24-07-2007, 03:00 PM
அமரனின் பின்னூட்டம் தாண்டி சொல்ல எதுவும் என்னிடமில்லை..
அதை ஆக்கபூர்வமாய் ஏற்ற கவிதாயினிக்கு வாழ்த்துகள்..

நன்றி இளசு அண்ணா

சூரியன்
24-07-2007, 03:18 PM
அருமை படைப்பு

இனியவள்
24-07-2007, 03:31 PM
அருமை படைப்பு

நன்றி சூரியன்

ஷீ-நிசி
24-07-2007, 03:39 PM
நல்ல கவிதை இனியவளே! வாழ்த்துக்கள்!

இனியவள்
24-07-2007, 03:58 PM
நல்ல கவிதை இனியவளே! வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ