PDA

View Full Version : இயற்கை அனைத்தும்



இனியவள்
21-07-2007, 06:48 AM
புல்நுனிப் பனித்துளிபோல்
உன் உதட்டோரத்தில் ஒரு நொடி
அரும்பும் புன்னகை கண்டு
சிறகு முளைக்கும் பறவை
போல் ஆகாயத்தை அடைய
பறக்கின்றேன்....

பட்டாம் பூச்சியின் வர்ணங்கள்
உன்னோடு சென்று விட நிறங்கள்
இன்றி தவிக்கின்றன....

பூக்களின் வாசனை உன் கூந்தலோடு
சங்கமிக்க வாசனையின்றி வாடுகின்றன
மலர்கள்....

பசுமை தன் குளிர்மையைத்
உனக்கு தத்துக்கொடுக்க உன்
கண்கள் அள்ளித் தருகின்றன
இனிமையை....

குயில்கள் தனது குரலை உனக்கு
தாரைவார்த்து இன்னொர் குரலைத்
தேடி நான்குலோகம் அலைகின்றன...

மயில்கள் தனது ஓய்யார நடனத்தை
உனக்குத் தந்து உனது விசிறியாய்
மாறி உன் நாட்டியத்தை இமை
வெட்டாது ரசிக்கின்றன....

கடவுள் படைத்த அனைத்தும்
தன்னிடம் உள்ள சிறப்பைத் தர
என்னிடம் உள்ள ஒரே சிறப்பான
உயிரை தாரை வார்க்கின்றேன்
உன் உயிரோடு..........

அமரன்
21-07-2007, 08:58 AM
இனியவள் பிரம்மன் இயற்கை சுருக்கி படைத்தவனுக்கு /படைத்தவளுக்கு உயிரைக் கொடுக்க மறந்து விட்டானோ? உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாதவன் உயிரற்றவனே/ளே. பாராட்டுகள் இனியவள்.

இனியவள்
21-07-2007, 11:42 AM
இனியவள் பிரம்மன் இயற்கை சுருக்கி படைத்தவனுக்கு /படைத்தவளுக்கு உயிரைக் கொடுக்க மறந்து விட்டானோ? உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாதவன் உயிரற்றவனே/ளே. பாராட்டுகள் இனியவள்.

நன்றி அமர்

சிவா.ஜி
21-07-2007, 01:09 PM
பட்டாம் பூச்சியின் வர்ணங்கள்
உன்னோடு சென்று விட நிறங்கள்
இன்றி தவிக்கின்றன....

பூக்களின் வாசனை உன் கூந்தலோடு
சங்கமிக்க வாசனையின்றி வாடுகின்றன
மலர்கள்....
அழகான சொல்லாடல். அவள் கூந்தலுக்கு வாசத்தைக் கொடுத்துவிட்டு
வாசமில்லா மலராக இருக்கும் அந்த பூக்கள் மீண்டும் அவள் கூந்தலேறி இழந்ததைப் பெற்றுக்கொள்ளும்.

குயில்கள் தனது குரலை உனக்கு
தாரைவார்த்து இன்னொர் குரலைத்
தேடி நான்குலோகம் அலைகின்றன...
இனி அப்படி ஒரு குரல் எந்த லோகத்திலும் கிடைக்காமல்
மீண்டும் அவளிடம்தான் வரவேண்டும்.

கடவுள் படைத்த அனைத்தும்
தன்னிடம் உள்ள சிறப்பைத் தர
என்னிடம் உள்ள ஒரே சிறப்பான
உயிரை தாரை வார்க்கின்றேன்
உன் உயிரோடு..........
இயற்கையனைத்தயும் தன்னகத்தே கொண்ட அந்த தாரகைக்கு
உயிரை ஏன் தாரை வார்க்கவேண்டும்....உயிருடன் இருந்து உள்ளவரை
ரசிக்கலாமே.....!
அழகான கவிதை.பாராட்டுக்கள் இனியவள்.

இனியவள்
21-07-2007, 02:21 PM
நன்றி சிவா

lolluvathiyar
21-07-2007, 03:00 PM
முதலில் உங்கள் உயிரை காதலியுங்கள்
பிறகு அடுத்த உடலை காதலிக்கலாம்
சொன்னவர் − லொள்ளுவாத்தியார்