PDA

View Full Version : வேட்டை...!ஓவியன்
21-07-2007, 05:53 AM
வேட்டை நாய்
கச்சிதமாய் வேட்டை
முடித்து வீடு ஏக,
பாலுண்டு பசிதீர்க்க
இன்னமும்
தாய்க்காகத் தவமிருக்கின்றன
குட்டி முயல்கள்.....!

அக்னி
21-07-2007, 05:59 AM
இரு வகையில் பார்க்கலாம் ஓவியன்...

வேட்டை நாய்களின் வேட்டை,
கடமையா... வெறிச்செயலா..?
ஆனால்,
கடமையெனினும், வெறியாட்டமெனினும்,
பாதிக்கப்படுவது முயல்களே...
போரினால் பாதிக்கப்படும்,
பொதுமக்கள், முயல்களாக...

பாராட்டுக்கள்...

சிவா.ஜி
21-07-2007, 06:04 AM
அருமை ஓவியன். வேட்டை நாயின் வேட்டையில் சிக்கியது தாய் முயல் மட்டுமல்ல அதன் சேய்களும்தான். இந்த மாதிரியான சிறிய அதே சமயம் ஆழமான அர்த்தமிருக்கும் கவிதைகள் மிக நன்று. பாராட்டுக்கள் ஓவியன்.

இனியவள்
21-07-2007, 06:07 AM
கவிதை அருமை ஓவியன்...

ஏவாளன் சொல்கேட்டு
பறித்து விட்டது ஒருயிரை
குற்றவாளி யார் இங்கு ?

ஓவியன்
21-07-2007, 06:46 AM
கடமையெனினும், வெறியாட்டமெனினும்,
பாதிக்கப்படுவது முயல்களே...
போரினால் பாதிக்கப்படும்,
பொதுமக்கள், முயல்களாக...நன்றி அக்னி!

வேட்டையாட வந்தவன்
வெட்டையாடப் பட்டான்
ஈழத்தில் ஓயாத அலைகள் 01,02,03 !

மதி
21-07-2007, 06:58 AM
நல்ல கவிதை ஓவியன். தாய் முயல் வேட்டையாடப்பட்டதால் தவித்து காத்திருக்கின்றன சேய் முயல்கள்..
வேட்டையாடியது நாயின் தவறா..? ஏவியவன் தவறா?

ஓவியன்
21-07-2007, 07:18 AM
அருமை ஓவியன். வேட்டை நாயின் வேட்டையில் சிக்கியது தாய் முயல் மட்டுமல்ல அதன் சேய்களும்தான். இந்த மாதிரியான சிறிய அதே சமயம் ஆழமான அர்த்தமிருக்கும் கவிதைகள் மிக நன்று. பாராட்டுக்கள் ஓவியன்.மிக்க நன்றி சிவா.ஜி!
முன்பொருமுறை ஊரில் என் செல்ல நாய் ஒரு முயலை வேட்டையாடி வந்தது, அப்போது அது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை, ஆனால் இன்று சட்டென்று அந்த சம்பவம் என் ஞாபக அலையில் சிக்கிய போது - மனம் வலித்தது. அந்த வலிகளே இங்கே இந்த வரிகளாக.......

அமரன்
21-07-2007, 07:27 AM
வேட்டைநாய்....இது நேரடியாக நாயை குறிக்கலாம். அல்லது இதன் குணத்தை அடிப்படையாக வைத்து மனிதனைக்குறிக்கலாம். அப்படி மனிதனை குறிப்பதாகவே எனக்கு தெரிகின்றது. வேலைக்குப் போனவன். வயலுக்குப் போனவன் என எத்தனை பேரை கொன்று குவிக்கின்றனர். சில ராணுவமும் பல தீவிரவாதிகளும் . அவர்களைத் தேடி அன்புபசியில் பலர் வயிற்றுப்பசியில் சிலர் என எத்தனை ஜீவன்கள்..நெஞ்சு வெடிக்கும் நிகழ்வுகள். இதில் யாரை குற்றம் சொல்வது? கடமையைச் செய்யும் வேட்டை நாயையா? ஏவிவிடும் கயவர்களையா? ஓவியன் நாய், முயலென மிருகங்களை நினைத்து சொன்னாலும் அங்கே நான் மனிதர்களையும் பார்கின்றேன். பாராட்டுக்கள் ஓவியன்.

ஓவியன்
21-07-2007, 07:27 AM
தாய் முயல் வேட்டையாடப்பட்டதால் தவித்து காத்திருக்கின்றன சேய் முயல்கள்..
வேட்டையாடியது நாயின் தவறா..? ஏவியவன் தவறா?


ஏவாளன் சொல்கேட்டு
பறித்து விட்டது ஒருயிரை
குற்றவாளி யார் இங்கு ?

அம்பை நோவதா?, எய்தவனை நோவதா எனக்கும் சரியாக விடை தெரியாத வினா இது.....
அம்பு இருப்பதால் தானே அம்பை ஏய்கிறான் என்ற கோணத்தில் பார்த்தால் தவறுக்கு அம்பும் துணை போகிறதே......

பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி மதி, மற்றும் இனியவள்!.

lolluvathiyar
21-07-2007, 07:29 AM
தாய் மூயல் நாய்க்கு இரையானது, இனி குட்டிகள் பசியால் செத்து காக்கை இரையாகுமே,
ஏற்பது கடினம் ஆனால் படைப்பின் இலக்கனம் இதுவல்லவா

ஓவியன்
21-07-2007, 08:07 AM
ஓவியன் நாய், முயலென மிருகங்களை நினைத்து சொன்னாலும் அங்கே நான் மனிதர்களையும் பார்கின்றேன். பாராட்டுக்கள் ஓவியன்.உண்மைதான் அமர், உண்மையில் நான் நேரடியாகவே வரிகளை வடித்தாலும் அக்னியின் பின்னூட்டத்திற்கு பின் வேறு ஒரு கோணம் கிடைக்கவே, உருவகக் கவிதையாகிவிட்டது. ஆனால் ஒரு வித்தியாசம் முயல்களால் பதிலுக்கு நாயை வேட்டையாட முடியாது ஆனால் இங்கே மக்கள் ஒன்று திரண்டால் கயவர்களை வேட்டையாடித் தீர்த்துவிடுவார்கள்.

நன்றி அமர் - உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு.

ஓவியன்
21-07-2007, 08:09 AM
தாய் மூயல் நாய்க்கு இரையானது, இனி குட்டிகள் பசியால் செத்து காக்கை இரையாகுமே,
ஏற்பது கடினம் ஆனால் படைப்பின் இலக்கனம் இதுவல்லவாஉண்மைதான் நண்பரே!

அப்பாவி மிருகங்களைப் படைத்த அதே கடவுள் தானே பயங்கர மாமிச உண்ணிகளையும் படைத்துள்ளார்.......!

அமரன்
21-07-2007, 08:11 AM
ஓவியன்....சாவின் விளிம்பில் இருக்கும்போது சுண்டெலிகூட சிலிர்க்குமாம். சுண்டெலிகளே சிலிர்க்கும்போது முயல்கள்...?

ஓவியன்
21-07-2007, 08:21 AM
ஓவியன்....சாவின் விளிம்பில் இருக்கும்போது சுண்டெலிகூட சிலிர்க்குமாம். சுண்டெலிகளே சிலிர்க்கும்போது முயல்கள்...?போராடும் தான் அமர், ஆனால் வெற்றி பெறுவதென்றால்.......

இப்போது இன்னுமொரு சுவையான சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது முன்பு நான் இலங்கையின் வவுனியாவில் கொஞ்ச காலம் தங்கி இருந்த போது அந்த பகுதியில் ஒரு வகை பெரிய சாக்கடை எலிகள் இருந்தன, ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஒரு பூனை மாதிரி இருக்கும்(மிகப் பெரியவை). ஒரு நாள் நான் தங்கியிருந்த வீட்டு நாய் அப்படியான ஒரு எலியை மறிக்கப் போக அந்த எலி நாயின் வாய்ப்பகுதியில் கடித்து விட்டு ஓடி விட்டது, நாய் பயந்து கத்திக் கொண்டு பின்வாங்கியது.:grin:

அமரன்
21-07-2007, 08:23 AM
முயலாமைதான் ஜெயிக்காது ஓவியன். உங்கள் அனுபவப் பகிர்வும் சொல்கிறது.

ஓவியன்
21-07-2007, 10:17 AM
முயலாமைதான் ஜெயிக்காது ஓவியன். உங்கள் அனுபவப் பகிர்வும் சொல்கிறது.
ஆமாம் முயல் ஜெயிக்கலாம், ஆமை கூட ஜெயிக்கலாம் முயலாமை எப்படி ஜெயிக்கும்?:nature-smiley-002: :nature-smiley-002: :nature-smiley-002:

சிவா.ஜி
21-07-2007, 10:22 AM
ஆரம்பிச்சுட்டாங்கப்பா......ஆரம்பிச்சுட்டாங்க......

ஓவியன்
21-07-2007, 10:26 AM
ஆரம்பிச்சுட்டாங்கப்பா......ஆரம்பிச்சுட்டாங்க......

ஆமா இங்கே யார் ஆரத்தைப் பிச்சது?:icon_wacko:

சிவா.ஜி
21-07-2007, 10:28 AM
ம்ம்ம்ம்ம்முடியல........

அக்னி
21-07-2007, 10:28 AM
அடிக்கடி ஆரம் பிய்ப்பவர்கள் அதிகரித்துவிட்டது...

ஓவியன்
21-07-2007, 10:35 AM
ம்ம்ம்ம்ம்முடியல........ஆமா, ஆரத்தைப் பிய்க்க முடியவில்லையா சிவா.ஜி?
முயன்றால் ஜெயிக்கலாம், முயலாமை தான் ஜெயிக்காது!:nature-smiley-002: .

சிவா.ஜி
21-07-2007, 10:39 AM
மறுபடியும் முயலாமையா.........அழுதுருவேன்.....

ஓவியன்
21-07-2007, 12:42 PM
சரி சரி அழ வேண்டாம், முயாலாமை என்றால் தானே அழுவீங்க, அதால ஆமைமுயல் என்று பாவிக்கிறன்!.:grin:

மள்ளர்
21-07-2007, 12:50 PM
நாய்க்குட்டிகள் நாற்புறமும் தேடியது
சேய்க்குட்டிக*ள் ப*சியால் வாடிய*து.

சிவா.ஜி
21-07-2007, 12:55 PM
மள்ளர் அசத்திட்டீங்க, கவிதையின் மற்றொரு பரிமாணம். இன்னும் கலக்குங்க. ஓவியன் நம்மோடு துணை சேர இன்னொருவர் தயார்.

ஓவியன்
21-07-2007, 02:49 PM
மள்ளர் அசத்திட்டீங்க, கவிதையின் மற்றொரு பரிமாணம். இன்னும் கலக்குங்க. ஓவியன் நம்மோடு துணை சேர இன்னொருவர் தயார்.உண்மைதான் சிவா புதியவர்களுடன் கைகோர்க்க என்றும் நாம் ஆவலுடனேயே இருக்கிறோமல்லவா.........
இப்படி இளையவனாக என்றோ ஒரு நாள் மன்றம் வந்த என்னையும் மன்றத்தின் உறவுகளல்லவா கைகொடுத்து தூக்கி விட்டவர்கள், அவர்கள் எமக்குச் செய்ததை நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டியது நம் கடமையல்லவா............!.

ஓவியன்
21-07-2007, 07:48 PM
வேட்டையாடுபவனுக்குத்
தெரிவதில்லை
வேட்டையாடப் பட்டவையின்
வேதனைகளும் வலிகளும்..........!

ஆதவா
22-07-2007, 05:05 AM
வேட்டை நாய்
கச்சிதமாய் வேட்டை
முடித்து வீடு ஏக,
பாலுண்டு பசிதீர்க்க
இன்னமும்
தாய்க்காகத் தவமிருக்கின்றன
குட்டி முயல்கள்.....!

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பார்கள்.. தாயின் வரவை எதிர்பார்த்து குட்டி முயல்கள் , வருவாள் என்ற நம்பிக்கை. நாய்க் குட்டிகள் இரையை எதிர்பார்த்து..... இரையோடு வரும் நம் தாய் என்ற நம்பிக்கை..

அரசியலிலிருந்து குடும்பம் வரை பொருந்தும் கரு.. வாழ்த்துக்கள் ஓவியன்

ஓவியன்
22-07-2007, 05:11 AM
அரசியலிலிருந்து குடும்பம் வரை பொருந்தும் கரு.. வாழ்த்துக்கள் ஓவியன்மிக்க நன்றி ஆதவா உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு.........

சூரியன்
22-07-2007, 05:20 AM
கருத்துள்ள கவிதை

ஓவியன்
22-07-2007, 05:22 AM
மிக்க நன்றி சூரியன்!.

இளசு
22-07-2007, 07:23 AM
பழைய நிகழ்வைச் சொன்ன அனுபவக்கவிதை..
தொடரும் நிகழ்கால உருவகக் கவிதை..
எய்தவன்..அம்பு..பலி..பழி..பாவன் என அலசி
தார்மீக உணர்வுகளைத் தட்டிய கவிதை..


முயல் − ஆமை, ஆரம் − பிச்சி என சிவா.ஜியை அழவும்
மள்ளரின் சிறுகவிதைப் பின்னூட்டத்தால் சிவா.ஜியை மகிழவும்

சிவா.ஜியை பழைய சிவாஜிபோல் அழுதுகொண்டே சிரிக்கவைத்த கவிதை!


பாராட்டுகள் ஓவியனுக்கும்
பங்குகொண்டு பல்வண்ணம் சேர்த்த அனைவருக்கும்!

ஓவியன்
22-07-2007, 10:11 AM
அண்ணா உங்கள் பார்வையினால் இந்த திரியையே அலசி விட்டீர்களே......!

மிக்க நன்றி அண்ணா!.

விகடன்
02-08-2007, 07:54 AM
முயலிற்கு பின்னால் அத நம்பியிருந்த குட்டிகள் அவலத்தில்.
இதே நிலை பல இடங்களில் காணலாம்.
னேரடியாகப் பார்த்தால் பலியானது ஏதோ ஒன்றுதான் ஆனால் அதைத் தொடர்ந்து பல பாதிப்புக்கள் இருக்கும் என்பதை ஒருவரும் கணக்கெடுப்பதில்லை.... சட்டமும் கூடத்தான்.

உதாரணத்திற்கு;
உயர் பதவியில் இருப்பவரிற்கு ஒருவரை பிடிக்காமலோ அல்லது எனக்கு பிடிக்கவில்லை என்று ஒருவனை போட்டுக்கொடுத்தோ அவனுடைய வேலைக்கு வேட்டு வைத்தால் அந்த நேரத்தில் சந்தோஷமாக இருப்பது போலத்தான் தோற்றும். ஆனால் அவனுக்கு பின்னால் எத்தனை பேர் அவனுடைய வருமானத்தை மட்டுமே நம்பி கூழ் குடித்துக்கொண்டிருந்தவர்கள் என்று சிந்தித்துப் பார்த்திருக்க தோன்றி இருக்குமா என்ன?

அவன் தன்னிலமை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
"தோழ்மையெனினும் ஏழ்மை பேசாதே" என்று சொல்லியிருப்பதை கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?

மொத்தத்தில் ஆழமிகுந்த கவி வரிகள். குடுவைக்குள் பூட்டி வைத்த வேதாளத்தை போல....

பாராட்டுக்கள்.

ஓவியன்
02-08-2007, 10:54 PM
தெளிவான உங்கள் பார்வையினால் கவிதையின் கருவை அலசிவிட்டீர்களே.........!

மிக்க நன்றிகள் விராடன்!

kalaianpan
09-08-2007, 04:20 PM
அய்யோ அருமயான படைப்புகள்...
தொடரட்டும் பணி.....

ஓவியன்
09-08-2007, 10:27 PM
மிக்க நன்றிகள் கலையன்பன் − தொடர்ந்து மன்றத்துடன் ஐக்கியமாகி இருங்கள்!.

ஓவியன்
23-07-2008, 10:24 AM
வேட்டை நாய்
கச்சிதமாய் வேட்டை
முடித்து வீடு ஏக,
பாலுண்டு பசிதீர்க்க
இன்னமும்
தாய்க்காகத் தவமிருக்கின்றன
குட்டி முயல்கள்.....!

வேட்டை ஆடியதைக்
கொடுத்து விட்டு
மீள ஓடுகிறது வேட்டை நாய்,
இன்னோர் வேட்டைக்கு....

முயல் குட்டிகளும்
நாய்க்குட்டிகளும்
தொடர்ந்தும் தவமிருக்கின்றன
தத்தம் தாய்மாருக்காக..!!

கண்மணி
23-07-2008, 10:26 AM
முயலுக்குப் பின்னால் வேட்டை நாய்
இரண்டின் வீடுகளிலும்
குட்டிகள்
பசியோடு காத்துக் கொண்டிருக்கின்றன


இப்படி எழுதி இருந்தா ரொம்ப யதார்த்தமா இருந்திருக்குமோ அண்ணா?

ஓவியன்
23-07-2008, 10:28 AM
உண்மைதான் கண்மணி, அழகாக பொருந்துகிறது நான் சொல்ல வந்த கருத்துடன்...!! :)