PDA

View Full Version : ஒரு அழகு தேவதை...



prasannavigneshr
21-07-2007, 05:30 AM
ஒரு அழகு தேவதை என் அருகிள் வந்தநாள்
என் இத்யத்திலே மலர்கள் பூத்த நாள்
பெண் கருவினிலே உனரும் அசைவை என் இதயத்திலே
சுமையோ சுகமோ அந்த சுமையும் சுகம் தானோ ?

(ஒரு அழகு தேவதை....)

கண்ணோடு கண்பேசும் கவிதை என்னவோ
குழலோடு ஸ்வரம் சேர்த்த தென்றல் அல்லவோ
மலரோடு தேன் கொண்ட மயக்கம் என்னவோ
உன்னோடு நான் கொண்ட மோகம் அல்லவோ
உன்கால் மணியோசை இசையினிலே என் கவிதைகளை கொஞ்சம் கலந்திடவோ
உன் புன்னகையில் சிந்தும் முத்துக்களை பாமாலையாகவெ கோர்த்திடவோ
ரதியே ரதியே உன்னில்நான் வந்து கலந்தது எப்போ.......
(ஒரு அழகு தேவதை....)

நிலவு இங்கு நிலவென்று முகம் மூடவே
உன் இமைகண்டு விழிமூட மறுக்கின்ற்தே
அலை வந்து கரைகொஞ்ச ---------------
உன் இதழோடு இதல் சேர்த்து ----------------
மின்மினி பூக்கும் கண்களிலே அந்த விண்வெளியின் வெட்கம் தெரிகிறதே
விண்ணில் உள்ள துருவமெல்லாம் உன்முகம் பார்க்க தவம் இருக்கிறதே
ரதியே ரதியே உன்னில்நான் வந்து கலந்தது எப்போ.......

(ஒரு அழகு தேவதை....)


----------------------------------------------------------------------

:grin: ஒரு பாட்டு எழுத ஆசை, அதா இப்படி. :music-smiley-010:

பிர*ச*ன்ன* விக்னேசஷ் ர*.

அமரன்
21-07-2007, 07:45 AM
வணக்கம் பிரசன்னா..ஏற்கனவே இக்கவிதையை மன்றத்தில் பதிந்துள்ளீர்கள். அதனால் இத்திரியை அகற்றுவதற்கு பரிந்துரை செய்கின்றேன்.
நன்றி
-அமரன்

இளசு
21-07-2007, 08:20 AM
உங்கள் ஆர்வமான பங்களிப்புக்கு நன்றி பிரசன்னா..

1) இருமுறை பதிப்பதால் இதைப் பூட்டுகிறேன். பின்னர் அகற்றப்படும்.

2) மற்ற தளச்சுட்டிகளை இங்கே பதிவுகளின் கீழ் தரக்கூடாது. ஓரிரு சொந்தத் தளங்களை உங்கள் ப்ரொஃபைலில் சுட்டலாம்.


நன்றி.