PDA

View Full Version : அவளின் முதல் ஸ்பரிசம்!



lenram80
20-07-2007, 10:47 PM
உன் முகத்தில் யார் இப்படி கோவைப்பழத்தை ஒட்டி வைத்தது?
ஓ! இது என்மேல் கோபத்தில் இருக்கும் உன் மூக்கா?

உன் கொடிகயிற்றில் தொங்குவது பூஞ்சோலையா?
ஓ! அது நீ கழட்டி போட்ட கொடுத்து வைத்த சேலையா?

நீ திரும்பும் போது உன் கழுத்தையும்
நீ சாயும் போது உன் கன்னத்தையும் தடவி பார்க்கும்
யார் அந்த களவானி?
ஓ! அது உன் காது கம்மலா?

"இவள் உனக்கு தான்" என்று பிரம்மன் எனக்காக குத்தி அனுப்பிய முத்திரையின் மிச்சமா அது?
ஓ! அது என்னை மடக்கிய உன் கையில் இருக்கும் மச்சமா?

உன் விஷம விழிகள்! அதில் விளக்கு பார்வை!
உன் அமைதி இதழ்கள்! அதில் அடாவடி வார்த்தைகள்!
உன் மெலிந்த விரல்கள்! அதில் உயிர் எடுக்கும் கிள்ளல்கள்!
எப்படி உன் வீட்டில் மட்டும் பூக்கள் துப்பாக்கி சுடுகின்றன?
ஏன் இப்படி அராஜக செயல் செய்யும் உனது உடல் பாகங்கள் அனைத்தும்
அடக்கமான தோற்றம் கொண்டு, என்னை ஏமாற்றுகின்றன?
என்னை ஏன் உனக்காக மாற்றுகின்றன?

நீ என்னை தொட்டு விட்டு அமைதியாக தான் இருக்கிறாய்!
ஆனால்,
நெற்றி வேர்த்து
இதயம் படபடத்து
உடல் வெடவெடத்து
வாய் வார்த்தை அடைத்து
என்னுள் மட்டும் ஏன் இப்படி கலவரம்?

இதுவரை கவிதையை எழுதி தான் இருக்கிறேன்!
இன்று தான் ஒரு கவிதையை தொடுகிறேன்!

இதுவரை கவிதையை வாசித்து இருக்கிறேன்!
இன்று தான் ஒரு கவிதையை சுவாசித்து இருக்கிறேன்!

இதுவரை பூக்களோடு நான் மட்டும் தான் பேசி இருக்கிறேன்!
இன்று தான் பூவும் பேச, நானும் பேசி இருக்கிறேன்!

இதுவரை பூக்களால் மனசு வழுக்கி இருக்கிறேன்!
இன்று தான் பூவோடு கை குலுக்கி இருக்கிறேன்!

உன் கை பிடித்த நொடி,
என்னில் மெல்லிய மின்சார அடி!

உம் மெல்லின தீண்டல்,
என்னில் வல்லின தீ மூண்டல்!

உன் கன்ன இளம்சிவப்பு!
என்னில் ரத்தக் கொதிப்பு!

உன் துள்ளல் பேச்சு!
எனக்கு உயிர் நின்று போச்சு!

உன் குயில் சிரிப்பு!
மற்ற பெண்களின் ஆணவம் மரிப்பு!

ஆக மொத்தம் உன் தென்றல் ஸ்பரிசம்,
என்னுள் வாழும், அது இன்னும் ஆயிரம் வருஷம்!

guna
21-07-2007, 01:54 AM
அழகு..அழகு..
சந்தங்கள் அசத்தல்..

வித்தியாசமான வரிகளாய் வலம் வரும் உங்கள் கவிதைகள் தொடர வாழ்த்துக்கள்..

இனியவள்
21-07-2007, 07:14 AM
லெனின் நெய்யாய்
வழுக்கிச் செல்கின்றது
எங்கள் மனங்களில்
உங்கள் கவிதையெனும்
பொக்கிஷம் வாழ்த்துக்கள்

சிவா.ஜி
21-07-2007, 07:42 AM
லெனின் பிரமாதம். உருகி உருகி காதல் செய்யும் கவிதையின் நாயகன் கொடுத்து வைத்தவன். வரிவரியாய் ரசிக்க வைத்த காதல் சொட்டும் கவித்தேன். பாராட்டுக்கள்.

அமரன்
21-07-2007, 08:51 AM
ராம்...அழகான வர்ணனைகள்..காதல் ரசம் கொட்டும் வரிகள். முதல் ஸ்பரிசம் எப்படி இருக்கும் என்பதை அப்படியே உணர வைக்கின்றது. எல்லை மீறாத வார்த்தைகள். கலக்கல் கவிதை. பாராட்டுக்கள்.

ஓவியன்
21-07-2007, 07:12 PM
லெனின் ரொம்பவே இரசித்தேன் உங்கள் கவிதையை..........
முக்கியமா.............

இதுவரை கவிதையை எழுதி தான் இருக்கிறேன்!
இன்று தான் ஒரு கவிதையை தொடுகிறேன்!
இதுவரை கவிதையை வாசித்து இருக்கிறேன்!
இன்று தான் ஒரு கவிதையை சுவாசித்து இருக்கிறேன்!
மிக ரொம்பவே இரசித்தேன் இந்த வரிகளை...........

பாராட்டுக்கள் லெனின்..........!

theepa
21-07-2007, 10:31 PM
ஆகா அருமையான ரசனை நன்பரே உங்கலுக்கு கவிதை மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கல்

அன்புடன்
லதுஜா

lenram80
24-07-2007, 12:38 AM
உங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி சுகுணா, இனியவள், சிவாஜி, அமரன், ஓவியன் & லதுஜா