PDA

View Full Version : இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டிaren
18-07-2007, 01:45 AM
இன்று இந்தியாவும் இங்கிலாந்தும் முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த டெஸ்ட் இன்று லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்திய குழு இதுவாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது:

1. தினேஷ் கார்திக்
2. வாசிம் ஜாஃபர்
3. ராகும் திராவிட்
4. சச்சின் டெண்டுல்கர்
5. சவுரவ் கங்குலி
6. லஷ்மன்
7. யுவராஜ் சிங்
8. அனில் கும்ளே
9. ஜாஹீர் கான்
10. சிரிசந்த்
11. ஆர்.பி. சிங்

தோனியின் விக்கெட் கீப்பிங் கொஞ்சம் மோசமாக இருந்ததால் கார்த்திக்கையே விக்கெட் கீப்பிங் செய்ய சொல்லலாம். அப்படியில்லாதபட்சத்தில் யுவராஜ் சிங்கிற்கு பதில் தோனி உள்ளே வரக்கூடும்.

நம் மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். இதுதான் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் லஷ்மனுக்கு கடைசி சந்தர்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் சிறப்பாக ஆடினாலே அடுத்த ஆட்டங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இல்லையென்றால் ஊத்தி மூடிவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
18-07-2007, 02:01 AM
இங்கிலாந்து குழு இதுவாக இருக்கக்கூடும்:

1. ஸ்டிராஸ்
2. குக்
3. வான்
4. கெவின் பீட்டர்சன்
5. இயன் பெல்
6. காலிங்வுட்
7. ப்ரயர்
8. ஹோகார்ட்
9. ரெயான் சைட்பாட்டம்
10. ஸ்டுவர்ட் பிராட்
11. மாண்டி பனேசார்

aren
18-07-2007, 02:02 AM
ஜேம்ஸ் ஆண்டர்சன் மிகவும் தகுதியானவர். ஆனால் இங்கிலாந்து ஐந்து பந்து வீச்சாளர்களை இங்கே உபயோகிப்பதால் பாட்டிங்கில் கொஞ்சம் சரிவு ஏற்படும். ஆகையால் அதற்கு கொஞ்சம் ஈடுகட்டு ஸ்டுவர்ட் பிராட் உள்ளே வருகிறார்,

ஓவியன்
18-07-2007, 02:11 AM
ஓ இன்று ஆரம்பமாகின்றதா..............?

கார்த்திக்கே விக்கெட் கீப்பிங் செய்வதே நல்லதென நானும் நினைக்கிறேன் − எதற்கும் பொறுத்திருந்தே பார்ப்போம்.

mania
18-07-2007, 05:18 AM
இன்றா....???? நாளையல்லவா தொடங்குகிறது.....?
அன்புடன்
மணியா...

aren
18-07-2007, 07:18 AM
நாளைதான் தொடங்குகிறது. இன்று வியாழக்கிழமை என்று தவறுதலாக பதித்துவிட்டேன்.

தவறுக்கு வருந்துகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ராஜா
18-07-2007, 08:34 AM
இந்திய நேரம் எத்தனை மணிக்குத் துவங்குகிறது ஆரென்..?

அப்படியே, பயண அட்டவணையும் முடிந்தால் தாருங்கள்..!

mania
18-07-2007, 08:36 AM
இந்திய நேரம் பகல் 3.30க்கு தொடங்குகிறது ராஜா...
அன்புடன்
மணியா

ராஜா
18-07-2007, 08:39 AM
தோனியை விட கீப்பிங், பேட்டிங் இரண்டிலும் கார்த்திக் மேம்பட்டவர்..

கார்த்திக்கிடம் மைதானத்தின் எந்த மூலைக்கும் பந்தை அனுப்பும் ஷாட்கள் இருக்கின்றன.. தோனியோ, ஐ சைட், ஆர்ம் பவர் இரண்டையும் மட்டும் வைத்துக்கொண்டு கதையை ஓட்டுகிறார்.

ராஜா
18-07-2007, 08:41 AM
இந்திய நேரம் பகல் 3.30க்கு தொடங்குகிறது ராஜா...
அன்புடன்
மணியா

நன்றி அண்ணா..! நலமா..?

எங்கே உங்கள் நகைச்சுவை ததும்பும் தனிமடல்கள் ஒன்றையும் காணோமே..?

mania
18-07-2007, 08:41 AM
பயண அட்டவணை

1st Test: England v India at Lord's - Jul 19-23, 2007
Match scheduled to begin at 11:00 local time (10:00 GMT)
2nd Test: England v India at Nottingham - Jul 27-31, 2007


Tour Match: Indians v Sri Lanka A at Leicester - Aug 3-5, 2007


3rd Test: England v India at The Oval - Aug 9-13, 2007


Only ODI: Scotland v India at Glasgow - Aug 16, 2007


Tour Match: England Lions v Indians at Northampton - Aug 18, 2007


1st ODI: England v India at Southampton - Aug 21, 2007


2nd ODI: England v India at Bristol - Aug 24, 2007


3rd ODI: England v India at Birmingham - Aug 27, 2007


4th ODI: England v India at Manchester - Aug 30, 2007


5th ODI: England v India at Leeds - Sep 2, 2007


6th ODI: England v India at The Oval - Sep 5, 2007


7th ODI: England v India at Lord's - Sep 8, 2007


அன்புடன்
மணியா

ராஜா
18-07-2007, 08:44 AM
மீண்டும் நன்றி அண்ணா..!

mania
18-07-2007, 08:45 AM
தோனியை விட கீப்பிங், பேட்டிங் இரண்டிலும் கார்த்திக் மேம்பட்டவர்..

கார்த்திக்கிடம் மைதானத்தின் எந்த மூலைக்கும் பந்தை அனுப்பும் ஷாட்கள் இருக்கின்றன.. தோனியோ, ஐ சைட், ஆர்ம் பவர் இரண்டையும் மட்டும் வைத்துக்கொண்டு கதையை ஓட்டுகிறார்.


கதை என்றால் ஸ்டோரியையா...அல்லது அவர் கையில் வைத்திருக்கும் ஆயுதமா....?? (கடோத்கஜன் ஸ்டைலில் தானே ஆடுகிறார்...!!!)
அன்புடன்
மணியா...

ராஜா
18-07-2007, 09:55 AM
கதை என்றால் ஸ்டோரியையா...அல்லது அவர் கையில் வைத்திருக்கும் ஆயுதமா....?? (கடோத்கஜன் ஸ்டைலில் தானே ஆடுகிறார்...!!!)
அன்புடன்
மணியா...

ஹா..ஹா..ஹா..! சிலேடையை நன்கு ரசித்தேன் அண்ணா..!

அப்படித்தான் அண்ணா செய்கிறார்.. கதை சுழற்றுவது போல்தான் இருக்கிறது..!

aren
18-07-2007, 02:29 PM
இன்று மாத்யூ ஹோகார்ட் முதுகுவலியால் அவதிப்படுகிறார். ஆகையால் அவர் முதல் டெஸ்டில் ஆடுவது கஷ்டம் என்றே தெரிகிறது.

முன்னாடியே ஆண்டிரூ ஃபிளிண்டாஃப் மற்றும் ஸ்டீவ் ஹார்மிஸ்ன் அடி காரணமாக இந்த போட்டியில் கலந்துகொள்ள முடியாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் ஹோக்கார்ட் வேறு இப்படி இருக்கிறார். இதனால் இங்கிலாந்தின் பெளலிங்கின் பலம் மிகவும் குறைந்துவிட்டது. ஆனால் பல புதியவர்கள் இங்கிலாந்திடம் இருக்கிறார்கள். அதுவும் மாட்ச் நடக்கும் இடம் இங்கிலாந்து. ஆகையால் புதியவர்கள் பிரகாசிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

என்ன நடக்கப்போகிறது என்று நாளை தெரிந்துவிடும்.

நன்றி வணக்கம்
ஆரென்

mania
18-07-2007, 04:39 PM
முதல் நாளிலேயா ஆரென்....!!!!!
அன்புடன்
மணியா

aren
18-07-2007, 05:26 PM
முதல் நாளிலேயா ஆரென்....!!!!!
அன்புடன்
மணியா


ஆமாம். முதல் நாளிலேயே மாட்ச் எப்படி போகிறது என்று தெரிந்துவிடுமே.

mania
19-07-2007, 01:41 AM
ஆமாம். முதல் நாளிலேயே மாட்ச் எப்படி போகிறது என்று தெரிந்துவிடுமே.


:grin: :grin: :grin:
அன்புட*ன்
ம*ணியா

தாமரை
19-07-2007, 02:14 AM
ஆமாம். முதல் நாளிலேயே மாட்ச் எப்படி போகிறது என்று தெரிந்துவிடுமே.

மேட்ச் போகுமா? (கையை விட்டு) அவ நம்பிக்கையா பேசாதீங்கோ!

ஓவியன்
19-07-2007, 02:21 AM
மேட்ச் போகுமா? (கையை விட்டு) அவ நம்பிக்கையா பேசாதீங்கோ!
மேட்ச் எப்ப*டி வ*ருகுதுனு பார்ப்போம்? :grin:

aren
19-07-2007, 03:21 AM
மேட்ச் போகுமா? (கையை விட்டு) அவ நம்பிக்கையா பேசாதீங்கோ!

சரி. மாட்ச் எப்படி வருகிறது என்று பார்க்கலாம்.

மூன்று சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியில் கிடையாது. ஆகையால் நம் மட்டையாளர்கள் ரன் குவிக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன்.

டெண்டுல்கர் இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிக்கவில்லையாம். அதனால் சதம் அடிக்க ஆடுவார் என்றே தோன்றுகிறது.

ராஜா
19-07-2007, 12:10 PM
எந்தத் தொலைக்காட்சியில் ஆட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது..?

aren
19-07-2007, 01:26 PM
142/1 இங்கிலாந்து பொளந்து கட்டுகிறது. மாட்சை பார்க்காமல் இருப்பதே மேல். விழுந்த விக்கெட்டும் கங்குலிக்கு.

ஓவியன்
19-07-2007, 09:53 PM
நம்பிகையுடன் காத்திருப்போம் − அட அந்த நம்பிக்கை விளையாடுபவர்களுக்கும் இருக்க வேண்டுமே...........

ராஜா
20-07-2007, 05:32 AM
யாராச்சும் சொல்லுங்கப்பா..!

நேரடி ஒளிபரப்பு இருக்கா..? எங்கே மணியா அண்ணா..?

mania
20-07-2007, 05:55 AM
யாராச்சும் சொல்லுங்கப்பா..!

நேரடி ஒளிபரப்பு இருக்கா..? எங்கே மணியா அண்ணா..?


நேரடி ஒளிபரப்பு ஸ்டார் கிரிக்கெட் என்ற சேனலில் வருகிறது.

இந்த மாதம் புதிதாக தொடங்கிய இந்த சேனல் இல நாட்களுக்கு முன் வரை ஃப்ரீயாக கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இரு தினங்களுக்கு முன் கட் செய்து பே சேனல் ஆக்கிவிட்டார்கள்.இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. சென்னையில் எஃப் எம் ரேடியோவில் கேட்க முடிகிறது.
நம்ம ஊரிலே (திருச்சியிலே)
எப்பிடி என்று தெரியவில்லை ராஜா....
கவலையுடன்
மணியா...

ராஜா
20-07-2007, 06:12 AM
நன்றி அண்ணா..!

திருச்சியில் ஸ்டார் கிரிக்கெட் வரவில்லை.. செய்தி அலைவரிசைகளின் உபயத்தில் ஒருவாறு ஸ்கோர் தெரிந்துகொள்ள முடிகிறது அண்ணா..!

aren
20-07-2007, 06:24 AM
இங்கிலாந்து ஆடுவதைப் பார்த்தால் பேசாமல் மாட்சைப் பார்க்காமல் இருப்பதேமேல்.

நன்றி வணக்கம்
ஆரென்

ராஜா
20-07-2007, 11:47 AM
இலங்கை − வங்க தேசம் முதல் ஒருநாள் போட்டி.

71 ஓட்டங்கள் வேறுபாட்டில் இலங்கை வெற்றி.

இனியவள்
20-07-2007, 09:07 PM
இங்கிலாந்து ஆடுவதைப் பார்த்தால் பேசாமல் மாட்சைப் பார்க்காமல் இருப்பதேமேல்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆரென் அண்ணா இங்கிலாந்து
முதல் அடித்த வேகம் இரண்டாம்
நாளில் புஸ்வானம் ஆகிட்டு

298 ஓட்டங்களுக்கு எல்லாரும் அவுட்
நாங்களும் விடுவமா பாருங்க என*
இந்தியாவும் 4 விக்கெட் போயாச்சு 145 ஓட்டங்களுக்கு :icon_cool1:

இனியவள்
20-07-2007, 09:09 PM
இங்கே (http://www.techsatish.tv/2007/06/cbn-channel.html) நேரடி ஒளிபரப்பைக் கண்டு களியுங்கள் இலவசமாய் :music-smiley-010:

ராஜா அண்ணா கேட்டுட்டே இருந்தீங்கள் ஒரு மாதிரி இணையத்தில புடிச்சுட்டன்

அமரன்
20-07-2007, 09:12 PM
இனியவள் தகவல் பகிர்வுக்கு நன்றி. இதை ஆரென் அண்ணாவின் திரியுடன் இணைத்தால் சிறப்பாக இருக்கும். மேற்பார்வையாளர்களே! இணைத்துவிடுங்கள்.

இனியவள்
20-07-2007, 09:20 PM
இங்கே (http://www.techsatish.tv/)

சென்று விளையாட்டு என்று இருக்கும் பகுதியை சுடக்கினால் நேரடியாக போகும் விளையாட்டுக்களைப் பார்க்க முடியும் மற்றும் பல சனல்களும் உண்டு :icon_cool1:
கூடுதலாக சி.பி.என் சனலில் நேரடி ஒளிபரப்புக்களைப் பார்க்கலாம் கிரிக்கெட் மட்டும் :grin:

ராஜா அண்ணா இது உங்களுக்கு உதவலாம்

இனியவள்
20-07-2007, 09:24 PM
இனியவள் தகவல் பகிர்வுக்கு நன்றி. இதை ஆரென் அண்ணாவின் திரியுடன் இணைத்தால் சிறப்பாக இருக்கும். மேற்பார்வையாளர்களே! இணைத்துவிடுங்கள்.

ம்ம் அமர் அங்கு தான் இணைக்கலாம் என்றிருந்தேன்
சிலர் அங்கு எட்டிப்பார்ப்பார்களோ என ஒரு சந்தேகம்
அது தான் தனித் திரியில் போட்டு விட்டேன்..

பாரதி
21-07-2007, 12:43 AM
தகவலுக்கு நன்றி இனியவள்.

mania
21-07-2007, 01:11 AM
நன்றி இனியவள்...:4_1_8: .என்னை மாதிரியே இன்னொரு பைத்தியம் (கிரிக்கெட்) கிடைத்ததில் மகிழ்ச்சி. (சண்டை போட்டு நேற்று கனெக்ஷன் வாங்கிவிட்டேன்...!!!!!)
அன்புடன்
மணியா...

ஓவியன்
21-07-2007, 03:32 AM
ஆகா இனியவள் மிக்க நன்றிங்கோ!!!

இனியவள்
21-07-2007, 11:47 AM
நான் விடுவனா அவையயும்
பார்க்க மிக வேகமாக ஆட்டம்
இழந்து காட்டுகின்றேன் பார் என
இந்தியா அணி போட்டி போட்டு
எப்படியோ 201 ஓட்டங்களுக்குள்
ஆட்டமிழந்து விட்டது.....

இங்கிலாந்து 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
முன்னிலை வகிக்கின்றது முதலாவது இன்னிங்ஸில் :wuerg019:

இனியவள்
21-07-2007, 11:49 AM
நன்றி இனியவள்...:4_1_8: .என்னை மாதிரியே இன்னொரு பைத்தியம் (கிரிக்கெட்) கிடைத்ததில் மகிழ்ச்சி. (சண்டை போட்டு நேற்று கனெக்ஷன் வாங்கிவிட்டேன்...!!!!!)
அன்புடன்
மணியா...

ஹீ ஹீ அண்ணா சண்டை போட்டு
கணெக்ஷன் வாங்கிட்டீங்களே என்று
அந்தக் கோபத்தை கிரிக்கெட் நல்ல
கட்டத்தை அடையும் சமயம் பார்த்து
கட் பண்ணிட போறினம் கேப்ள்லை
பார்த்து

mania
21-07-2007, 12:30 PM
நீ கொடுத்துள்ள லின்க் பாதி நேரம் வேலை செய்ய மாட்டேன்கிறதே....????
அன்புடன்
மணியா...

இனியவள்
21-07-2007, 02:15 PM
நீ கொடுத்துள்ள லின்க் பாதி நேரம் வேலை செய்ய மாட்டேன்கிறதே....????
அன்புடன்
மணியா...

போட்டி தொடங்கியபிறகு தான் வேலை செய்யும் அண்ணா

ஓவியன்
21-07-2007, 02:29 PM
அது தானே போட்டி தொடங்கிய பின்னர் தானே ஒளிபப்புச் செய்ய முடியும். :grin:

mania
22-07-2007, 08:35 AM
போட்டி தொடங்கியபிறகு தான் வேலை செய்யும் அண்ணா

:D :D அது வேலை செய்ய* தொட*ங்குவ*த*ற்கு முன் போட்டியே முடிந்துவிடும்....:confused: :Nixe_nixe02b:
அன்புட*ன்
ம*ணியா...

mania
22-07-2007, 08:36 AM
அது தானே போட்டி தொடங்கிய பின்னர் தானே ஒளிபப்புச் செய்ய முடியும். :grin:

:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :D :D :D
அன்புட*ன்
ம*ணியா..

இனியவள்
22-07-2007, 08:48 AM
:D :D அது வேலை செய்ய* தொட*ங்குவ*த*ற்கு முன் போட்டியே முடிந்துவிடும்....:confused: :Nixe_nixe02b:
அன்புட*ன்
ம*ணியா...

நேற்று போட்டி தொடங்க பிந்திவிட்டதே எனக்கு வேலை செய்ததே போட்டி தொடங்கியவுடன்:whistling:

mania
22-07-2007, 09:27 AM
நேற்று போட்டி தொடங்க பிந்திவிட்டதே எனக்கு வேலை செய்ததே போட்டி தொடங்கியவுடன்:whistling:

என*க்கு நேற்று முழுவ*தும் வேலை செய்ய*வில்லை....இன்று பார்க்க*லாம்....
அன்புட*ன்
ம*ணியா:D

இனியவள்
22-07-2007, 09:29 AM
என*க்கு நேற்று முழுவ*தும் வேலை செய்ய*வில்லை....இன்று பார்க்க*லாம்....
அன்புட*ன்
ம*ணியா:D

வேலை செய்யேலையா :ohmy: எனக்கு வேலை செய்ததே :sprachlos020:

mania
22-07-2007, 09:32 AM
வேலை செய்யேலையா :ohmy: எனக்கு வேலை செய்ததே :sprachlos020:

நீ கொடுத்து வைத்த*வ*ள்.....நானோ கெடுத்து வைத்த*வ*ன்.....:D :D
சோக*த்துட*ன்
ம*ணியா
(என்ன* இன்று உன*க்கும் வேலை செய்ய*க்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்...:D :D )

பாரதி
23-07-2007, 06:40 PM
ஆகாயத்தின் கருணையால், ஆச்சரியப்படும் வகையில் ஆட்டம் சமனில் முடிந்தது!!!

aren
31-07-2007, 02:09 PM
இந்தியா அபாரமாக விளையாடி இரண்டாவது டெஸ்ட் மாட்சில் 7விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றியை பெற்றுத் தந்த இந்திய கிரிக்கெட் குழுவிற்கு நம்முடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

அடுத்த டெஸ்ட் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் இந்தியா வெற்றியோ அல்லது டிராவோ செய்தால் தொடரை கைப்பற்றிவிடலாம். செய்வார்களா?

இந்த டெஸ்டில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்திக் (77, 22), வாசிம் ஜாஃபர் (62, 22), டெண்டுல்கர் (91, 1) மற்றும் கங்குலி (79, 2 அவுட் இல்லை) ஆகியோருக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

அது போல் சிறப்பாக பந்து வீசிய ஜாஹீர் கான், ஆர். பி. சிங், கும்ளே அகியோருக்கும் நம்முடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஜாஹீர் கானுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்தினைச் சொல்வோம்.

இந்த மாதிரி வெற்றிகள் தொடர வேண்டும். தொடருமா? பொருத்திருந்து பார்போம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
31-07-2007, 02:13 PM
இந்த ஆட்டத்தில் மீண்டும் ஒரு முறை ஒரேஅணியாகச் செயல்பட்டு வெற்றியீட்டித்தந்த வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

அக்னி
31-07-2007, 02:15 PM
இந்திய அணியின் வெற்றிகள் தொடரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்...