PDA

View Full Version : பார்வை பார்



இனியவள்
20-07-2007, 04:35 PM
சுட்டெரிக்கும் சூரியன் குளிர்கின்றது
உன்னைக் கண்டு........

உன் விழி கண்டு உருகுகின்றதே
பனி மலை......

சீறும் பாம்பு சிரிக்கின்றது
உன்னோடு சேர்ந்து.....

உன் நிலா முகம் கண்டு குளம்
கூட உறைகின்றது பனி மலையாய்....

மெட்டுக்கள் பூக்கின்றன
உன் புன்னகை கண்டு.....

மேகங்கள் ஒன்றாய் திரண்டு
மழையாய் பெய்து நிலத்தைக்
குளிர்விக்கின்றன் உன் கொஞ்சும்
குரல் கேட்டு....

என் பசுமையை வெறுமையாக்குகின்றாயே
அழகைக் கொண்டு என இயற்கையே
பொறாமை கொள்கின்றதே உன்னைக்
கண்டு....

ஆனால் எனக்கு மட்டும் ஏனோ
சூரியனாய் சுட்டெரிக்கின்றாய்
நிலவாய் அமிலத்தைத் தெளிக்கின்றாய்
வார்த்தை கொண்டென்னைக் குத்திக்
கிழிக்கின்றாய்...

வாடிய கொடியாய் துளிர்க்க
காத்திருக்கின்றேன் நான்
தெய்வீக பார்வை பார்
அன்பே உன் மின்னல்
வீச்சுக்காய் ஒர் உயிர்
காத்துக்கொண்டிருக்கின்றது......

aren
20-07-2007, 04:57 PM
சூரியனாய் சுட்டெரித்தாலும்
அனலாய் அமிலத்தைக் கொட்டினாலும்
உன் குறிக்கோளிலிருந்து மாறாதே
பார்வை தானாகவே திரும்பும்
வெற்றிக்கனியாகும்!!!

அருமையான கவிதை வரிகள் இளையவள் அவர்களே. உங்களுக்கு எங்கிருந்துதான் வார்த்தைகள் இப்படி வந்து விழுகிறதோ தெரியவில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
20-07-2007, 04:58 PM
இனியவள் எங்கிருந்து இப்படியெல்லாம் பிடிக்கிறீங்க...வர்ணனை அருமை..பார்வைக்கு ஏங்குவதை சிறப்பாக காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்..


பார் பார்
என்கிறாய்
பார்த்துவிட்டால்
அம்பை வீசுகிறேன்
என்கிறாய்....
என்னதான் செய்வது.....!?

ஆதவா
20-07-2007, 05:24 PM
பார்வை பார்த்தேன் இனியவள்..

முதல் ஐந்து பத்திகளைத் தவிர்த்து மற்றவைகள் அனைத்தும் அழகானவைகள்... காதலை எந்த அளவுக்கு எழுதிவிட முடியுமோ அந்த அளவிற்கு எழுதும் சிலரில் நீங்களும்...

காதல் ஒரு பிரசாதம் போல... கடவுள் சன்னதில் அது கிடைத்தாலும் வெறும் உணவுதான். கவிஞர்கள் என்ற மசாலாக்கள் நிறைந்த உலகம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முக்கி குளிக்கிறார்கள்.. நீங்கள் நன்றாக நனைக்கிறீர்கள்.

காதல் வரிகளில் புதுமை அழகோடுகிறது. வரிகள் அனைத்தும் வெகு அருமை.. ஆனால் ஒட்டுமொத்த கவிதையாகக் காணும்போது இன்னும் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்.

கவிதைக்கான உங்கள் உழைப்பு இன்னும் அதிகரிக்கவேண்டும் என்பது என் அவா.

வாழ்த்துக்கள் இனியவள்... (வரியமைப்புகள் அழகாக இருக்கின்றன.)

ரிஷிசேது
20-07-2007, 05:29 PM
மின்னல் வீச்சுக்காய்
உயிர் காத்திருக்கிறது....

காதல் எனும் உயிர் கவிதை முழுவதும் ஒடுகிறது

வாழ்த்துக்கள்
ரிஷிசேது

அன்புரசிகன்
20-07-2007, 05:36 PM
ஆனால் எனக்கு மட்டும் ஏனோ
சூரியனாய் சுட்டெரிக்கின்றாய்
நிலவாய் அமிலத்தைத் தெளிக்கின்றாய்
வார்த்தை கொண்டென்னைக் குத்திக்
கிழிக்கின்றாய்...


உங்களிடம் மட்டும் வித்தியாசமாக தென்படுகிறானே. புரியவில்லையா... இதுவும் காதல் என்று...

நன்றாக உள்ளது உங்கள் வரிகள். :icon_clap:

இனியவள்
20-07-2007, 06:20 PM
சூரியனாய் சுட்டெரித்தாலும்
அனலாய் அமிலத்தைக் கொட்டினாலும்
உன் குறிக்கோளிலிருந்து மாறாதே
பார்வை தானாகவே திரும்பும்
வெற்றிக்கனியாகும்!!!
அருமையான கவிதை வரிகள் இளையவள் அவர்களே. உங்களுக்கு எங்கிருந்துதான் வார்த்தைகள் இப்படி வந்து விழுகிறதோ தெரியவில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா..

இனியவள்
20-07-2007, 06:21 PM
இனியவள் எங்கிருந்து இப்படியெல்லாம் பிடிக்கிறீங்க...வர்ணனை அருமை..பார்வைக்கு ஏங்குவதை சிறப்பாக காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்..

பார் பார்
என்கிறாய்
பார்த்துவிட்டால்
அம்பை வீசுகிறேன்
என்கிறாய்....
என்னதான் செய்வது.....!?

நன்றி அமர்...

விழி என்னும் அம்பு
கொண்டு இதயம் என்னும்
கயிற்றை வீசுகின்றேன்
இரு இதயத்தையும்
ஒன்றாய்ப் இணைப்பதற்கு...

இனியவள்
20-07-2007, 06:23 PM
நன்றி ஆதவா உங்கள் அழகான விமர்சனத்திற்கும் வாழ்த்துக்கும்..

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க முயற்ச்சிக்கின்றேன் அனைவரின் ஒத்துழைப்போடு உங்கள் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வேன் என
நினைக்கின்றேன்..

நன்றி ஆதவா

இனியவள்
20-07-2007, 06:24 PM
மின்னல் வீச்சுக்காய்
உயிர் காத்திருக்கிறது....
காதல் எனும் உயிர் கவிதை முழுவதும் ஒடுகிறது

வாழ்த்துக்கள்
ரிஷிசேது

நன்றி ரிஷி

அமரன்
20-07-2007, 06:24 PM
ஆகா இனியவள்.

"இரு"தயமே பிரிந்திருக்கே
எப்படி இணைப்பீங்க...

இனியவள்
20-07-2007, 06:24 PM
உங்களிடம் மட்டும் வித்தியாசமாக தென்படுகிறானே. புரியவில்லையா... இதுவும் காதல் என்று...
நன்றாக உள்ளது உங்கள் வரிகள். :icon_clap:

நன்றி அன்பு

இனியவள்
20-07-2007, 06:25 PM
ஆகா இனியவள்.
"இரு"தயமே பிரிந்திருக்கே
எப்படி இணைப்பீங்க...

ஹீ ஹீ அமர்

அதனை வால்பு
கொண்டு இணைக்க
வேண்டியது தான்

aren
21-07-2007, 12:29 AM
தான்
நீ எனக்குத் தான்
எனக்கே சொந்தமானவள் தான்
என்ற அகம்பாவத்தில் இருந்தேன்
உன்னுடைய மாமன் மகனைக்
காணும்வரை!!
அகம்பாவம் நீங்கி
நல்ல சுபாவம் கொண்டு
இனிமேல் உனக்கு
வேண்டியமாதிரி
என் வாழ்க்கையை
அமைத்துக்கொள்கிறேன்
உன் மாமன் மகனை
மறந்துவிடு!!!!

lolluvathiyar
21-07-2007, 05:13 AM
குளிராகவும் வெப்பமாகவும் இருக்குமா காதல்,
எதிலிலும் உக்கிரம் தானா
சீராக இருகாதா

இனியவள்
21-07-2007, 06:26 AM
குளிராகவும் வெப்பமாகவும் இருக்குமா காதல்,
எதிலிலும் உக்கிரம் தானா
சீராக இருகாதா

வாத்தியாரே
காதலில் ஏன்
உமக்கு வெறுப்பு
யாராவது தந்து
விட்டார்களா ஆப்பு :icon_cool1: