PDA

View Full Version : ஒரு முட்டையின் புலம்பல் அல்லது ஆப்பாயில்



தீபா
20-07-2007, 10:24 AM
எனது உயிரை
கருவோடு உடைத்துவிட்டாய்
மலராத மொட்டை
பறிப்பது போலவே

அது கரைந்து
வழிந்தோடும் பாதையில்
நகமாவது பதித்திருப்பாயா?

பூக்களின் மேல் தெளிக்கப்பட்ட
நீர் போலவே என்னுயிரின்மேல்
தெளிக்கப்படுகின்றன
உவர்ப்பு நிறைந்த
உன் கண்களின் பார்வையும்
சுவைக்கூட்ட பொடிகளும்.

கொன்றபின்னும் கொடூரமா?
அடக்கமுடியா நாக்கின்
தாகமா?

கண்களை மூடிவிட்டு
மெல்ல எனைத் தின்றுவிடு.
தகனத்தோடு நுழைவேன்
ஆகாரமாய்
காதலனே!

ஓவியன்
20-07-2007, 01:09 PM
எனது உயிரை
கருவோடு உடைத்துவிட்டாய்
மலராத மொட்டை
பறிப்பது போலவே!
ரொம்பவும் டச் பண்ணிய வரிகளிவை தென்றல்!.

வித்தியாசமான பார்வையில் ஒரு வித்தியாசமான கவிதை − வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தென்றல்.

அமரன்
20-07-2007, 02:34 PM
அப்போ
அவலின் சோகம் தந்து
இப்போ
ஆம்லெட்டின் சோகம் தந்து
வித்தியாசமாய் பொரியும்
தென்றலே பாராட்டுக்கள்

ரிஷிசேது
20-07-2007, 05:35 PM
ஒரு பொது நல விரும்பியால் மட்டுமே இப்படி சிந்திக்கமுடியும்
இந்த நடை ஒரு பாரசீக கவிஞ்ஞரை நினைவூட்டுகிறது
தென்றலுக்குள் ஒரு புயலா?

வாழ்த்துக்கள்
ரிஷிசேது

ஷீ-நிசி
20-07-2007, 07:02 PM
கடிக்கமாட்டேன்!

அப்படியே முழுதாய் சாப்பிடுவேன்!

ஆப்பாயில் சாப்பிடுவதே ஒரு சுகம்! அதற்கு ஒரு கவிதயென்றால் அதுவும் சுகமாகதான் உள்ளது...

தென்றலே! சும்மா கலக்குறீயேம்மா :)

இனியவள்
20-07-2007, 07:07 PM
தென்றல் அருமை
முட்டைக்கு ஒரு
இரங்கலா..

உன்னை பலிகொண்டு
என் பிள்ளைக்கு
ஊட்டம் அளிக்கின்றேன்

என்று தாய்க்குலம் சண்டைக்கு
வரப்போறினம் தென்றல்
பார்த்துங்கோ:grin:

lolluvathiyar
21-07-2007, 05:04 AM
முட்டைக்கும் கவிபாடிய தென்றல் இனி முட்டைகவி என்று அழைக்க படுவார்

சிவா.ஜி
21-07-2007, 06:13 AM
அரைவேக்காட்டுக்கு கவி எழுதிய தென்றலின் வரிகள் முழுதாய் இனிக்கிறது. வித்தியாசமான சிந்தனையில் விளைந்த வளமான கவிதை. பாராட்டுக்கள் முட்டைக்கவி(உபயம்−லொள்ளு வாத்தியார்)தென்றலே.

தீபா
05-08-2007, 07:55 AM
முட்டையை
ரசித்து
ருசித்து
முழுங்கிய அனைவருக்கும்
முதற்கண் வணக்கம்

முட்டைக்க*வி
ப*ட்ட*ம் த*ந்த
வாத்தியாருக்கு
வணக்கம்.