PDA

View Full Version : ஒரு அழகு தேவதை...



prasannavigneshr
20-07-2007, 10:20 AM
ஒரு அழகு தேவதை என் அருகிள் வந்தநாள்
என் இத்யத்திலே மலர்கள் பூத்த நாள்
பெண் கருவினிலே உனரும் அசைவை என் இதயத்திலே
சுமையோ சுகமோ அந்த சுமையும் சுகம் தானோ ?

(ஒரு அழகு தேவதை....)

கண்ணோடு கண்பேசும் கவிதை என்னவோ
குழலோடு ஸ்வரம் சேர்த்த தென்றல் அல்லவோ
மலரோடு தேன் கொண்ட மயக்கம் என்னவோ
உன்னோடு நான் கொண்ட மோகம் அல்லவோ
உன்கால் மணியோசை இசையினிலே என் கவிதைகளை கொஞ்சம் கலந்திடவோ
உன் புன்னகையில் சிந்தும் முத்துக்களை பாமாலையாகவெ கோர்த்திடவோ
ரதியே ரதியே உன்னில்நான் வந்து கல்ந்ததெப்போ.......

(ஒரு அழகு தேவதை....)

நிலவிங்கு நிலவென்று முகம் மூடவே
உன் இமைகண்டு விழிமூட மருக்கின்ற்தே
அலை வந்து கரைகொஞ்ச --------------
உன் இதலோடு இதல் சேர்த்து ---------------
மின்மினி பூக்கும் கண்களிலே அந்த வின்வெளியின் வெட்கம் தெரிகிறதே
விண்ணில் உள்ள துருவமெல்லாம் உன்முகம் பார்க்க தவம் இருக்கிரதே
ரதியே ரதியே உன்னில்நான் வந்து கல்ந்ததெப்போ.......

(ஒரு அழகு தேவதை....)


Prasanna Vignesh R
Senior Software Engineer,
Buddies Infotech Pvt Ltd,
Chennai-18
www.prasannavignesh.com

அன்புரசிகன்
20-07-2007, 10:31 AM
உங்களைப்பற்றிய ஒரு அறிமுகத்தை இப்பகுதியில் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) தாருங்கள். அத்துடன் மன்றவிதிகளையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133) அவசியம் படியுங்கள். அதற்கேற்றால் போல் பதிவுகளை தாருங்கள்.

தீபா
20-07-2007, 10:33 AM
பாட்டு அழகு
ராகம் தெரிந்தால்
இனிமையோ இனிமை.
வந்த இடம் அற்புதம்..
பதித்த இடம் பட்டறையா?

ஓவியன்
20-07-2007, 01:14 PM
அழகாக பாடலாக அமைந்த வரிகள்!, பாராட்டுக்கள் பிரசன்னா!

இளசு
20-07-2007, 05:39 PM
வாழ்த்துகள்..

இசைக்கவிதையுடன் அறிமுகம்..
உங்கள் அறிமுகமும் தாருங்கள்..
நல்லாக்கங்களைத் தொடருங்கள்..


அழகு தேவதை −
கவிதைப் பட்டறையிலிருந்து
காதல் கவிதை பகுதிக்கு மாற்றப்படுகிறாள்..

kalaianpan
09-08-2007, 06:59 PM
வாழ்த்துக்கள்.
அறிந்து கொள்வோமா.... நண்பரே

சிவா.ஜி
11-08-2007, 04:57 AM
பாடலாக ஒரு கவிதை,காதலாக கனிந்து,வரிகளில் வசிக்கிறது,
மனதையும் வசீகரிக்கிறது.வாழ்த்துக்கள் பிரசன்னா.

aren
11-08-2007, 05:01 AM
ஒரு திரைப்படத்தில் இந்தப் பாடல் வந்தால் நிச்சயம் ஹிட்டாகும் போலவே இருக்கிறது.

உங்கள் திறமை இந்த ஒரு கவிதையில் அழகாக வெளிவந்திருக்கிறது.

நிறைய எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது நண்பரே.

முதல் பதிப்பிலேயே பல பர்சனல் விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். கொஞ்சம் மெதுவாக செல்லலாம் என்றே என் மனது சொல்கிறது.

பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்