PDA

View Full Version : உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் கேபிள்TV



namsec
20-07-2007, 05:52 AM
உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வருகிறது கேபிள் 'டிவி' * உண்மையான சேவை மக்களுக்கு கிடைக்க தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் கேபிள் 'டிவி' தொழிலில் ஏகோபித்த உரிமை கொண்டாடுவதை கட்டுப்படுத்த, 'கேபிள் 'டிவி' வரன்முறைச் சட்டம்' என்ற புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர உள்ளது. அதிக செலவாகும் என்பதால் கேபிள் 'டிவி'யை எடுத்து நடத்தும் முடிவை கைவிட்ட தமிழக அரசு, புதிய சட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்க உள்ளது.தமிழகத்தில் கேபிள் 'டிவி' தொழில் ஒரு சிலரின் ஏகோபித்த கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களின் வளர்ச்சியை சிலர் தடுப்பதோடு, கொள்ளை லாபமும் அடைந்து வந்தனர். இதை கட்டுப்படுத்த முந்தைய அ.தி.மு.க., அரசு, கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களுக்கு இணைப்பு வழங்கும், 'எம்.எஸ்.ஓ.,'க்களை அரசே கையகப்படுத்த முடிவு செய்தது. கேபிள் 'டிவி' கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்த தொழிலில் ஏகபோகமாக சம்பாதித்து வந்த சிலர் இதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சி அமைந்த பின்னரும், இந்த தொழிலில் கொடிகட்டி பறந்து வருபவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அரசே கேபிள் 'டிவி'களை எடுத்து நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சித் தலைவரான ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ராமதாசின் இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசு சமீபத்தில் ஆய்வு செய்தது. இது தொடர்பாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:அரசே கேபிள் தொழிலை நடத்தினால், அதற்கு மிக அதிகளவு முதலீடு தேவைப்படும். கேபிள்கள், டிரான்ஸ்பாண்டர்கள் உட்பட கருவிகளை வாங்குவதற்கு மட்டுமே இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவாகும். அவ்வாறு செலவழித்து பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் இணைந்து கேபிள் மூலம் 'இணையதள' இணைப்பு கொடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இவ்வாறு செயல்படுத்தும் போது மாதம் மாதம் இதற்காக ஆகும் செலவு மிகவும் அதிகமாக இருக்கும். உதாரணமாக, தற்போது ஆயிரம் கேபிள் இணைப்புகளை ஒரு தனி ஆபரேட்டர் நடத்தி வந்தால், அதற்காக மூன்று ஊழியர்களை மட்டுமே நியமிக்கிறார். இவர்களை புதிய இணைப்புகள் கொடுப்பது, வீடு மாறியவர்களிடம் பாக்கித் தொகை வசூலிப்பது, புகார்கள் வந்தால் அவற்றை சரிசெய்வது உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.ஆனால், அரசு ஏற்று நடத்தினால் 500 கேபிள் இணைப்புகளுக்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவுக்கு ஒரு மேனேஜர் நியமிக்க வேண்டும். ஒரு குழுவில் ஐந்து பேர் என இடம் பெற்றாலும், அதை மூன்று 'ஷிப்ட்'களாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மேனேஜர்கள் என நியமிக்கும் போது ஆயிரம் பேருக்கு 35 ஊழியர்களை நியமிக்க வேண்டியிருக்கும்.அவ்வாறு நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு சம்பளம் ஆரம்பத்தில் ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கினாலும், ஒரு ஆண்டில் அவர்கள் கூடுதல் சம்பளம் கேட்டும், அரசு ஊழியர்களாக்கக் கோரியும் போராட்டம் நடத்துவர். எனவே 500 கேபிள் இணைப்புகள் மூலம் வரும் வருவாய்க்கு மேலாகவே செலவிட வேண்டியிருக்கும்.இதையெல்லாம் பார்க்கும் போது, கேபிள் தொழில் தனியாருக்கு மட்டுமே லாபம் அளிக்கக் கூடியது என்பது தெரியவருகிறது. அரசு நேரடியாக நடத்தினால் லாபகரமாக இயக்குவது கடினம். இதனால் கேபிள் 'டிவி' தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரலாம்.இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதை பரிசீலித்த தமிழக அரசு, கேபிள் 'டிவி' தொழிலை அரசே ஏற்று நடத்தும் திட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், 'கேபிள் 'டிவி' வரன்முறைப்படுத்தும் சட்டம்' என்ற புதிய சட்டத்தை அமல்படுத்த அரசு தயாரானது. இந்த சட்டத்தை தயாரிக்குமாறும் உத்தரவிடப் பட்டது. இந்த சட்டம் தயாராகி தற்போது முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. முதல்வர் ஒப்புதல் அளித்ததும், அவசர சட்டமாக விரைவில் பிறப்பிக்கப்படும்.இச்சட்டப்படி, ஒவ்வொரு கேபிள் இணைப்பு பற்றி முகவரியை சேகரித்தல், கட்டணம் பற்றிய தகவல்கள் பெறுதல், வரி கட்டுகிறார்களா, கலெக்டரின் அனுமதியை பெறுகிறார்களா உட்பட பல்வேறு அம்சங்களை அரசே கண்காணிக்கும். இதற்காக குழுக்கள் அமைக்கப்படும்.இதுதவிர, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் உள்ள கேபிள் இணைப்புகளை அவர்களே பார்த்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளே கேளிக்கை வரியை வசூலித்துக் கொள்ளவும், அவர் களது கண்காணிப்பில் விடப்படும் கேபிள் தொழிலை கட்டுப்படுத்தும் அதிகாரமும், வரன்முறைப்படுத்தும் அதிகாரமும் உள்ளாட்சிகளுக்கே வழங்கப்படும். இது போன்று பல்வேறு அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம்பெற உள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் தனியார் எம்.எஸ்.ஓ.,க்களின் ஏகபோக ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட உள்ளது.'சிறந்த சேவை கிடைக்க போட்டி அதிகரிக்க வேண்டும்':கேபிள் தொழிலில் மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க போட்டியை அதிகரிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.கேபிள் தொழிலை பொறுத்தவரை தமிழகத்தில் தான் தனிப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. இதனால் அவர்கள் காண்பிக்கும் சேனல்களை தான் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். பணம் கொடுத்தும், சென்னை தவிர மற்ற ஊர்க்காரர்கள் விளையாட்டு போட்டிகள் உட்பட கட்டண சேனல்களை பார்க்கும் போது, சென்னைவாசிகள் மட்டும் பார்க்க முடியாமல் தடுக்கப்பட்டு வந்தனர்.இதுபோன்று இல்லாமல், பணம் கொடுக்கும் வாடிக்கையாளர் தனக்கு விருப்பப்பட்ட கேபிள் ஆபரேட்டரை தேர்வு செய்து கொள்ளும் வகையில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். டி.டி.எச்., எனப்படும் வீடுகளுக்கு நேரடி இணைப்பு வழங்கும் முறையில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன. தூர்தர்ஷன், டாடா ஸ்கை, டிஷ் 'டிவி' என பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குவதால் வேண்டியவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட சேவையை பெற்றுக் கொள்ள முடிகிறது.இதனால் சேவை வழங்குவதில் இந்த நிறுவனங்களிடையே போட்டி அதிகம் உள்ளது. 'டிஷ்' வாங்குவோருக்கு ஓராண்டு இலவச சலுகை, இரண்டு ஆண்டு சலுகை என போட்டி போட்டு வழங்குகின்றனர். இது வாடிக்கையாளர்களுக்கு தான் பெரும் பலனை அளிக்கிறது. ஆனால், கேபிள் இணைப்பு தொழிலில் அந்த மாதிரி வாய்ப்பு இல்லை.எனவே, கேபிள் தொழிலில் பலரும் ஈடுபடும் வகையில் போட்டியை உருவாக்கினால் மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்கும். அதே நேரத்தில் யார் இந்த தொழிலை நடத்துகிறார்கள் என்று பார்க்கக் கூடாது. பா.ம.க., தலைவர் ராமதாஸ் கூறும் போது, அமைச்சரின் தம்பி போன்றவர்கள் இந்த தொழிலில் ஈடுபட தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தினார். அமைச்சரின் தம்பியாக இருந்தாலோ அல்லது பெரிய வி.ஐ.பி.,யாக இருந்தாலோ அவர்களுக்கும் இத்தொழிலை நடத்தும் உரிமையை மறுக்கக் கூடாது. பதவியில் இருப்பவர்கள் அதை பயன்படுத்தி மற்றவர்கள் நுழையாமல் தடுப்பதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். மற்றபடி பெரிய அளவில் முதலீடு செய்து நடத்துபவர்கள் வாடிக்கையாளர்களை கவர போட்டியை அதிகப்படுத்துவர். இதனால் மக்களுக்கே நல்லது கிடைக்கும்.

நன்றி தினமலர்

தங்கவேல்
20-07-2007, 06:02 AM
சும்மா ஊரை ஏமாற்ற இந்த பம்மாத்து வேலை செய்யுறாங்க.. பொன் முட்டை இடும் வாத்தை எவனவாது அறுப்பானா ? நம்பமுடியவில்லை. அரசே எம் எஸ் ஓ க்களை ஏற்று நடத்தினால் என்ன ? இப்போ சுமங்கலி செய்யும் வேலையை செய்யுறது... இதுல என்ன அரசுக்கு செலவு வரப்போவுது ? இதெல்லாம் விஞ்ஞான அரசியல் ...அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாது. அய்யாவுக்கு நல்லா தெரியும். அம்மாவே பரவாயில்லை போலும்..

namsec
20-07-2007, 06:09 AM
சும்மா ஊரை ஏமாற்ற இந்த பம்மாத்து வேலை செய்யுறாங்க.. பொன் முட்டை இடும் வாத்தை எவனவாது அறுப்பானா ? நம்பமுடியவில்லை. அரசே எம் எஸ் ஓ க்களை ஏற்று நடத்தினால் என்ன ? இப்போ சுமங்கலி செய்யும் வேலையை செய்யுறது... இதுல என்ன அரசுக்கு செலவு வரப்போவுது ? இதெல்லாம் விஞ்ஞான அரசியல் ...அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாது. அய்யாவுக்கு நல்லா தெரியும். அம்மாவே பரவாயில்லை போலும்..

அப்படி இல்லை உள்ளாட்சி என்றால் உள்ளூர் அரசியல் வாதி

உள்ளூர் தலைகள் சம்பாதிப்பதற்க்கு வழி

ஜோய்ஸ்
20-07-2007, 06:15 AM
என் யோசனை என்னவென்றால் மருத்துவர் ராமதாசு இருக்கும் வரை தன்னிச்சை செயல்களுக்கு ஒரு கிடுக்கி பிடி போடப்படுவதால் எந்த வகையிலும் மக்கள் பயனுக்காகவே வந்து முடியும்.

ஆதலால் மருத்துவர் திட்டம் அத்தனையும் பயன் விழைக்கும் என்பதில்லை.தனக்கு கிடைக்காததை மக்களுக்கு கிடைக்கட்டுமே என்ற பாணியில் போகுமே ஒழிய வேறில்லை.

அவருக்கு அருதிப் பெரும்பான்மை வந்தால் அவரும் இவரைப் போலவே சுயநலத்தை பேனுபவர் என்பதில் சந்தேகமேயில்லை.

இதில் ஒருவருக்கொருவர் சளத்தவர்கள் இல்லைதான்.
காந்திஜீக்கு ஜே........................

lolluvathiyar
20-07-2007, 11:55 AM
யார் கைக்கு போனா தான் என்ன நிச்சயம் ரேட்ட குரைக்க மாட்டாங்க. தரத்தை கூட்ட மாட்டாங்க*

ராஜா
20-07-2007, 12:26 PM
மருத்துவர் வாயை அடைக்க ஒரு தற்காலிக ஏற்பாடு.. பின்னர் யாரையாவது தயார் பண்ணி ஒரு வழக்கு போடவைத்து முடக்கிவிடுவார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் அப்புறம் யாரும் இதுபற்றி பேச இயலாதல்லவா..?

ஒருவேளை கலா & தயாவை மிரட்டி கறக்கவோ, பணியவைக்கவோ வேண்டியது இன்னும் பாக்கி இருக்கோ என்னவோ..!

தங்கவேல்
20-07-2007, 01:16 PM
சித்தர் அண்ணா, அதுதான் அய்யாவின் விஞ்ஞான அரசியல்....