PDA

View Full Version : சமயபுரம் மாரியம்மன் வெளியேறியதாக புரளி



namsec
20-07-2007, 05:24 AM
அம்மன் வெளியேறியதாக புரளி ஆத்துїர் அருகே பெரும் பரபரப்பு

ஆத்தூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களைச் சேர்ந்தோர் மத்தியில், சமயபுரம் மாரியம்மன், கோவிலில் இருந்து வெளியேறி விட்டதாக புரளி கிளப்பப்பட்டது. அதை உண்மை என நம்பிய கிராம மக்கள், அம்மனை மகிழ்விக்க தங்களது வீடு முன் வேப்பிலை கட்டி வழிபடுகின்றனர்.
திருச்சி சமயபுரத்தில் பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள அம்மன், கோவிலில் இருந்து வெளியேறி விட்டதாக ஆத்துїர் சுற்றுவட்டார கிராம மக்கள் மத்தியில் புரளி கிளப்பிவிடப்பட்டது.
கோவிலில் இருந்து வெளியேறிய அம்மனை மகிழ்வித்து, மீண்டும் கோவிலுக்கு திரும்ப வேண்டி ஆத்துїர் சுற்றுவட்டார கிராம மக்கள், தங்களது வீடு முன் வேப்பிலை கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். வாழப்பாடி அருகே பேளூர் கிராமத்தைச் சேர்ந்தோர் அவர்களது வீடுகளின் முன், சிறு கல்லில் வெள்ளையடித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வேறு சில காரணங்களையும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆத்துїர் அருகே உள்ள தாண்டவராயபுரம் கிராம மக்கள் தெரிவித்தது: ஆத்துїர் அருகே வீட்டில் தனியாக இருந்த நபரிடம் வழிப்போக்கர் ஒருவர் தாகத்துக்கு தண்ணீர் கேட்டு பருகியுள்ளார். பருகிய தண்ணீரை, கொடுத்தவர் மீதும், அருகில் இருந்தவர் மீதும் வழிப்போக்கர் உமிழ்ந்தார். தண்ணீர் பட்டதும் அவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். பின், அவ்வழிப்போக்கர் அங்கிருந்து மாயமானார். இதுபோன்ற சம்பவம், தங்கள் பகுதியில் நடக்காதவாறு தடுக்கவே வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டியுள்ளோம். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

நன்றி தினமலர்

родроЩрпНроХро╡рпЗро▓рпН
20-07-2007, 05:36 AM
இதென்ன கலாட்டா ? அண்ணா, சுட சுட செய்திகள் . அசத்தல்...

роЬрпЛропрпНро╕рпН
20-07-2007, 06:03 AM
இப்படியும் நடக்குமா?
பின்ன என்ன,மூட நம்பிக்கையாயிருக்குமோ!

aren
20-07-2007, 06:13 AM
நம்புவதற்கு ஒரு லிமிட்டே இல்லாமல் போய்விட்டது நம் மக்களுக்கு. இதற்குக்காரணம் படிப்பறிவு நம்மிடம் குறைவாக இருப்பதாலா அல்லது மூடநம்பிக்கை நம் மக்களின் கண்களை மூடிவிட்டதா?

ஏமாறுவதற்கு ஆட்கள் இருந்தால் ஏமாற்றுபவர் அறுவடை செய்துகொண்டுதானே இருப்பார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

lolluvathiyar
20-07-2007, 11:53 AM
ஆமாம் ஆரென், படித்தவர்கள் கூட இன்றூ பார்க்கும் டீவி சீரியலிகளில் மூட நம்பிக்கை பற்றிய நாடகங்களே வருகிறது.

рокрпЖройрпНро╕рпН
20-07-2007, 12:21 PM
ஆமாம் ஆரென், படித்தவர்கள் கூட இன்றூ பார்க்கும் டீவி சீரியலிகளில் மூட நம்பிக்கை பற்றிய நாடகங்களே வருகிறது.

படித்தவர்கள் டிவி சீரியல் ஏன் பார்க்கிறார்கள்... குழப்புகிறீர்களே...!!!!

роУро╡ро┐ропройрпН
20-07-2007, 12:45 PM
தொலைக்காட்டிசித் தொடர் எடுப்பவர்களும் என்னதான் செய்வது மக்களைப் பயமுறுத்தியாவது தங்கள் தொடரை ஓட்ட வைக்கலாமென்று எண்ணுகிறார்கள் போல........