PDA

View Full Version : என்னவள்



aren
20-07-2007, 03:12 AM
மென்பொருளில் அவள் ஒரு ஆரக்கிள்
மீடியா மென்பொருளில் அவள் ஒரு பிளாஃஷ்
கோப்புகளில் அவள் ஒரு பிடிஎஃப்
கோப்புகளை மடக்குவதில் அவள் ஒரு ஜிப்
கணக்கிடுவதில் அவள் ஒரு எக்ஸல்
கணிணியில் அவள் ஒரு எச்.பி.
மொத்தத்தில் அவள் ஒரு இண்டெர்னெட்
அவள் என்னவள்
எனக்கே சொந்தமானவள்!!!

aren
20-07-2007, 03:12 AM
கணிணி மென்பொருளை வைத்து என்னவளைப் பற்றி ஏதாவது கிருக்கவேண்டும் என்று தோன்றியது. எழுதினேன். மக்களே அடிக்கவராதீர்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
20-07-2007, 06:18 AM
என்னை நீ அழிப்பதில் வைரஸ்
அதை நான் முறியடிப்பதில் அன்ரிவைரஸ்

இதை விட்டுட்டீங்களே ஆரென் அண்ணா

வாழ்த்துக்கள் அண்ணா

aren
20-07-2007, 06:21 AM
என்னை நீ அழிப்பதில் வைரஸ்
அதை நான் முறியடிப்பதில் அன்ரிவைரஸ்

இதை விட்டுட்டீங்களே ஆரென் அண்ணா

வாழ்த்துக்கள் அண்ணா

நன்றி இனியவள் அவர்களே.

எல்லாம் கொஞ்சம் பாஸிட்டிவ்வாக இருக்கட்டுமே என்றுதான் வைரஸை உள்ளே நுழைக்கவிடவில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
20-07-2007, 06:27 AM
கணினி யுகத்துக்கான
காலங்களில் அவள் வசந்தம்!

வாழ்த்துகள் அன்பின் ஆரென்..

இதேபோல் காலையும் நீயே மாலையும் நீயே பாடல் பாணியில்
வன்பொருள் நீயே மென்பொருள் நீயே
நிரலும் நீயே நிகழ்வும் நீயே

எனப் பாடத்தோணுகிறது..

எப்படிப்பாடினாலும்
உட்பொருள் − '' சரணாகதி..''
சரிதானே ஆரென்?

aren
20-07-2007, 07:17 AM
கணினி யுகத்துக்கான
காலங்களில் அவள் வசந்தம்!

வாழ்த்துகள் அன்பின் ஆரென்..

இதேபோல் காலையும் நீயே மாலையும் நீயே பாடல் பாணியில்
வன்பொருள் நீயே மென்பொருள் நீயே
நிரலும் நீயே நிகழ்வும் நீயே

எனப் பாடத்தோணுகிறது..

எப்படிப்பாடினாலும்
உட்பொருள் − '' சரணாகதி..''
சரிதானே ஆரென்?

நன்றி இளசு அவர்களே. உட்பொருள் என்றுமே சரணாகதி. அவர்கள் கையிலே ஆட்சியை எடுத்துக் கொள்வதற்கு பதில் நாமே மரியாதையாக கொடுத்துவிடுவதுதான் நல்லது.

காலங்களில் அவள் வசந்தம் தான் இதன் மூலம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
20-07-2007, 08:40 AM
கணினி காதலி கவிதையில் துலங்க
ஆரென் அண்ணா கவியாக துலங்குகின்றர்.
பாராட்டுக்கள் அண்ணா..
வேகம் பிடிக்குது..அப்படியே தொடருங்கள்.

ஓவியன்
20-07-2007, 01:19 PM
கோப்புகளை மடக்குவதில் அவள் ஒரு ஜிப்!!!இந்த வரிகளை ரொம்பவே இரசித்தேன்.

அட்டகாசமாக இருக்கு கவி வரிகள்.