PDA

View Full Version : மறந்து விட்டான்

இனியவள்
19-07-2007, 06:12 PM
ரோஜாவின் நிறத்தைப்
பிரித்து உதடுகள்
செய்து விட்டான்
உனக்கு பிரம்மன்...

நிலவை பிழிந்தெடுத்து
உன் முகத்தைச் சமைத்து
எம்மைக் குளிர்வித்துவிட்டான்...

சூரியனின் ஒளியைப்
பறித்து உன் கண்களைப்
படைத்து எங்களைக்
கண்ணற்றவன் ஆக்கிவிட்டன்..

முத்துக்களைக் கோர்த்து
பல் வரிசைகளை தைத்துனக்கு
ஆட வைத்து விட்டான்
எங்களை.....

ஏனோ உன் இதயத்தை
மட்டும் குத்திக் கிழிக்கும்
முட்கள் கொண்டு படைத்து
விட்டான்..

அழகுகள் இருக்கும் இடத்தில்
ஆபத்தும் இருக்கும் என்பதை
எங்களுக்கு நினைவுப்படுத்தவோ....

இளசு
19-07-2007, 06:20 PM
ஒரு பொய்யாவது சொல் கண்ணே..

ஜோடி படப்பாடலில் வைரமுத்து இதேபோல் ஒரு முரணை அடுக்கினார்..

அங்கே கல் − இதயம்!
இங்கே முள் − இதயம்!

வாழ்த்துகள் இனியவள் கவிதைக்கு!

அமரன்
19-07-2007, 06:35 PM
ரோஜா இதழ், நிலாமுகம்,ஒளிவீசும் பார்வை, முத்துப்பல்..
பழகியதாக இருந்தாலும் புதியதாக தோன்றுகிறதே....
இனியவளின் செதுக்கல் என்பதாலோ....
முட்களால் ஆன இதயம்..
அழகின் ஆபத்து......நன்று.
இக்ககவிதையும் அழகாக இருக்கே?

ரிஷிசேது
19-07-2007, 07:19 PM
நிலவை பிழிந்தெடுத்து.... நல்ல வரிகள்
வாழ்த்துக்கள்
ரிஷிசேது

ஓவியன்
19-07-2007, 07:25 PM
இனியவள்!

மீண்டும் உருக்கும் வரிகள் உங்களிடமிருந்து..........
இப்போதெல்லாம் உங்கள் வரிகள் முன்பை விட அழகாக, மெருகாக இருக்கின்றன.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்........

இனியவள்
20-07-2007, 06:20 AM
ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
ஜோடி படப்பாடலில் வைரமுத்து இதேபோல் ஒரு முரணை அடுக்கினார்..
அங்கே கல் − இதயம்!
இங்கே முள் − இதயம்!
வாழ்த்துகள் இனியவள் கவிதைக்கு!

நன்றி இளசு அண்ணா

இனியவள்
20-07-2007, 06:21 AM
ரோஜா இதழ், நிலாமுகம்,ஒளிவீசும் பார்வை, முத்துப்பல்..
பழகியதாக இருந்தாலும் புதியதாக தோன்றுகிறதே....
இனியவளின் செதுக்கல் என்பதாலோ....
முட்களால் ஆன இதயம்..
அழகின் ஆபத்து......நன்று.
இக்ககவிதையும் அழகாக இருக்கே?

நன்றி அமர்

ம்ம் பழைஅதை புதியதோடு கலந்து பார்த்தேன் :music-smiley-010:

இனியவள்
20-07-2007, 06:22 AM
நிலவை பிழிந்தெடுத்து.... நல்ல வரிகள்
வாழ்த்துக்கள்
ரிஷிசேது

நன்றி ரிஷி ,,,

இனியவள்!
மீண்டும் உருக்கும் வரிகள் உங்களிடமிருந்து..........
இப்போதெல்லாம் உங்கள் வரிகள் முன்பை விட அழகாக, மெருகாக இருக்கின்றன.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்........

நன்றி ஓவியன்

ஜோய்ஸ்
20-07-2007, 06:28 AM
கவிதைக்கு பொய் அழகு,
என்ற கருத்தாழத்தில் படிக்கும் போது,தங்களின் கவிதை எழுத்தாற்றலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இனியவள்
20-07-2007, 07:20 AM
கவிதைக்கு பொய் அழகு,
என்ற கருத்தாழத்தில் படிக்கும் போது,தங்களின் கவிதை எழுத்தாற்றலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நன்றி ஜொய்ஸ்