PDA

View Full Version : டன்டனக்கா லொள்ளுவாத்தியார்



lolluvathiyar
19-07-2007, 03:43 PM
டன்டனக்கா

பச்ச கலரு டன்டனக்கா
மஞ்ச கலரு டன்டனக்கா
சவப்பு கலரு டன்டனக்கா
ரோசு கலரு டன்டனக்கா

எரும நட நட
ஆடு நட நட
முயலு நட நட
மடையா நட நட
அட பன்னியே நட நட நட நட

அம்மாபேட்ட மக்கா
சைதபேட்ட கொக்கா
அய்யாபேட்ட மூக்கா
அப்படி போடு மக்கா

அப்படி ஓடு ஓடு ஓடு
திரும்பி பாக்காம ஓடு ஓடு ஓடு

இந்த பாட்டு போதுமா
இன்னும் கொஞ்சம் வேனுமா


பிகு : என்ன அப்படி பாக்கரீங்க சினிமாவுல பாட்டு எழுத சான்ஸ் தேடிட்டு இருக்கேன். யாராவது இத பாத்து குடுப்பாங்களானு தான் பதிச்சிட்டேன்

aren
19-07-2007, 03:47 PM
கொடுத்திலாம் வாத்தியார். சினிமாவில் புதிதாக எது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வார்கள். உங்கள் பாட்டு புதிதாக இருக்கிறது.

யார் இதற்கு மெட்டமைப்பது, நம்ம தேனிசைத் தென்றல் தேவாயை கூப்பிடலாமா?

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

namsec
19-07-2007, 03:48 PM
அப்படி போடு அறுவால நம்ம லொள்ளுவுக்கு இப்படி ஒரு ஆசையா

கண்டவன் கையில் கிருக்கினது எல்லாம் பாட்டவரும் பொழுது ஏன் நம்ம லொள்ளுவுக்கு என்ன குறைச்சல்

நீங்க எழுதுங்க வாத்தியாரே

அன்புரசிகன்
19-07-2007, 03:59 PM
வன்ஸ் மோர் ப்ளீஸ்... :D
நன்றாக உள்ளது வாத்தியாரே..

அமரன்
19-07-2007, 04:49 PM
:grin: :grin: :grin: :icon_shok: :icon_shok:

மீனாகுமார்
19-07-2007, 05:22 PM
வாத்தியாரைய்யா.. இதென்ன புது அவதாரம் ?

ஓவியன்
19-07-2007, 08:18 PM
பிகு : என்ன அப்படி பாக்கரீங்க சினிமாவுல பாட்டு எழுத சான்ஸ் தேடிட்டு இருக்கேன். யாராவது இத பாத்து குடுப்பாங்களானு தான் பதிச்சிட்டேன்

ஹீ!,ஹீ!

உங்களுக்கு சினிமாவில பிரகாசமான எதிர்காலம் இருக்கு வாத்தியாரே!:grin:
அப்படியே நம்ம தேவா சாரைக் கூப்பிடலாம் இசைக்கு,
உதித் நாரயணனைக் கூப்பிடலாம் பாடுவதற்கு,
அவருடன் சேர்ந்து கோரசா டன்டனக்கா போட சுரேஸ்பீட்டர், ஜேசிகிப்ட், எல்லோரையும் கூப்பிடலாம்.

அப்பறம் விருதெல்லாம் கிடைச்சாலும் கிடைக்கும்.............! :grin:

lolluvathiyar
20-07-2007, 04:29 PM
யார் இதற்கு மெட்டமைப்பது,
ஏன் நீங்க*ளே மெட்டு அமைச்சுட*லாமே

ஆதவா
20-07-2007, 06:27 PM
வாத்தியாரே! இதெல்லாம் ரசிப்பதற்கு சுகமாக இருந்தாலும் சுவை சப்பென்று இருப்பதுதான் மிச்சம்... நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்... உங்களின் பழைய கவிதைகள் அனைத்து அருமையாக இருந்தது... ஒரு கவிஞர் ஆகக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமிருந்தன.,. நீங்கள் ஒரு சமூக பிரச்சனையை எடுத்து அதைத் திறமையாக கையாளுவதில் கெட்டிக்காரர் என்பதை நானறிவேன். அதை கவிதைகளில் காண்பியுங்கள்....

மற்றபடி இந்த டண்டணக்காவையும் நான் ரசிக்கிறேன்..

ஓவியன்
20-07-2007, 06:30 PM
ஆதவா மற்றும் வாத்தியார்!

இந்தக் கவிதையை நகைச்சுவைப் பகுதிக்கு மாற்றினால் என்ன?

என் கருத்தைக் கூறினேன், தவறென்றால் மனதைப் புண்படுத்தினால் தயவு செய்து மன்னித்து விடுங்கள்.

அக்னி
20-07-2007, 07:35 PM
வாத்தியாரே...
இன்று தமிழ் சினிமாவில் பாட்டு எழுதும் தகுதி வேண்டுமானால்,
நீங்கள் இன்னும் அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும்...
அதற்கென சில வரையறைகள் உள்ளன..

* தமிழில் மற்ற மொழிகள் கலக்கப்படவேண்டும். மொழிகள் அல்லாத புலம்பல்கள் இன்னும் சிறப்பு.
* தமிழ் பண்டிதர்களுக்குக் கூட விளங்கக் கூடாது.
* இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாசமாக இருத்தல் தகுதியானதாகக் கருதப்படும்.
* சுருதியோடு இணையாதிருத்தல் முதன்மைபெறும்.
* முக்கியமாக, கதைக்கும், காட்சிக்கும், பாடல் வரிகளுக்கும் தொடர்பே இருந்தலாகாது.

இவையெல்லாமே... உங்கள் வரிகளில் மிஸ்ஸிங். ஆதலால், தாங்கள் இன்னும் பயிற்சி எடுத்தபின் முயற்சி செய்யுங்கள்...
இசகு பிசகாக எழுதி, அக்னியின் ஐடியா என்று, என்னை வம்பில் மாட்டி விடாதீர்கள்.

lolluvathiyar
22-07-2007, 12:50 PM
அப்படி போடு அறுவால நம்ம லொள்ளுவுக்கு இப்படி ஒரு ஆசையா


ஆசை இல்லாதவன் ஒருவன் இருக்க முடியுமா சித்தரே.
நானும் தகுதிக்கு மீரிய ஆசை படுவதில் தவறில்லை என்று சுட்டி காட்டிய உங்களுக்கு நன்றி

இதயம்
22-07-2007, 01:16 PM
வாத்தியார்...! கோடம்பாக்கம் உங்களுக்காக வழி மேல விழி வச்சி பாத்து காத்திட்டிருக்கும் போது நீங்க கோயமுத்தூர்ல உக்காந்துகிட்டு என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க..?!!

உங்களுக்கு இப்ப என்ன வேலையிருந்தாலும் சரி.. அதை தூக்கிப்போடுங்க..! ஆத்துலயோ குளத்துலயோ விழுந்து குளிங்க..! இருக்கிறதுல நல்லதா ஒரு செட் ட்ரெஸ் எடுத்து போட்டுக்கங்க.. ஒரு மஞ்சப்பை எடுத்து அதுல உங்க பழைய துணிமணி 2 செட் எடுத்து வைங்க.. அப்பா பாக்கெட்டுல 200.. 300 ரூபாயோ இருக்கிறத திருடி பாக்கெட்டுல வச்சிக்கங்க..யார் கிட்டயும் சொல்லாம, கொள்ளாம நேரா உங்க ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் மெட்ராஸ் போற எதாவது ஒரு ரயில்ல ஏறிக்கங்க.. (மறந்தும் ரயிலுக்கு டிக்கட் எடுத்துராதீங்க.! நீங்க திருடுன பணம் மெட்ராஸில சாப்பாட்டுக்கு காசு இல்லாம அலையப்போறதுக்கு முந்தி கொஞ்சமா சாப்பிட்டு உயிர் வாழறதுக்கு..!!). விடியக்காலையில ஏறக்குறைய எல்லா படத்துலயும் காட்டுற சென்ட்ரல் ஸ்டேஷன்ல இறங்கி கோடம்பாக்கத்துக்கு வழி கேட்டு நடங்க.. வாழ்த்துக்கள்..!!

சாப்பாட்டுக்கு வழியில்லாம பிச்சையெடுத்து, கண்டவன் கால்லயும் விழுந்து சான்ஸ் பிடிச்சி, படத்துக்கு பாட்டு எழுதி, பெரிய ஆளாயி, "கொங்கு நாட்டு கவி"ன்னு பட்டம்லாம் வாங்கி நீங்க பிரபலமான பிறகு குமுதம் ஆனந்தவிகடன், சன் டிவி, ராஜ் டிவியில பேட்டி கொடுக்கும் போது இந்த மஞ்சப்பை, அப்பா பணம், திருட்டு ரயில், சென்ட்ரல் ஸ்டேஷன் எல்லா சொல்லும் போது இது எல்லாத்துக்கும் காரணமான என்ன மட்டும் மறந்துராதீங்க..!!:D :D

lolluvathiyar
28-08-2007, 04:10 PM
நீங்கள் ஒரு சமூக பிரச்சனையை எடுத்து அதைத் திறமையாக கையாளுவதில் கெட்டிக்காரர் என்பதை நானறிவேன். அதை கவிதைகளில் காண்பியுங்கள்....


உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்கிறேன் ஆதவா

பென்ஸ்
04-09-2007, 11:37 AM
வாத்தியாரே....
சொல்லவந்தது நல்ல கருத்து...
சொல்லியவிதம்... ரசிக்கும்படியாய் இல்லை...

ஆதவன் சொன்னது போல்....

நல்ல சிந்தனையாளர் நீங்கள், நல்ல கவிதை கொடுத்து இருப்பீர்கள் என்று வந்தேன்.. இப்படி ஏமாற்றிவிட்டீர்களே...

இலக்கியன்
04-09-2007, 04:17 PM
கலக்குங்கள் வாத்தியாரே:grin:

மனோஜ்
04-09-2007, 05:11 PM
லொல்லரே லெல்பாடல் லேல் படுகிறது அருமை