PDA

View Full Version : விளையாடும் மனதுசிவா.ஜி
19-07-2007, 01:56 PM
விடுமுறையில்
வீட்டிலிருக்கும் போதெல்லாம்
வீதியில் விளையாடுவேன்,
சேர்ந்தாடுவோர் சிறார்கள்!
மனைவி இரைவாள்
எப்போ பார்த்தாலும்
பச்சைப்பிள்ளைகளோடு
என்ன விளையாட்டு
மகனுக்கே அப்பாவாகும் வயதென்று!
அவளுக்கென்ன தெரியும்
அவர்களோடு விளையாடுவது
என் வயதல்ல.....மனதென்று!

அமரன்
19-07-2007, 05:00 PM
ம்....ம்...
அகவைகள் அதிகரிக்க
உடல் குறைகிறது
உள்ளம் நிறைகிறது.
தள்ளாடும் உடலில்
உள்ளம்கூட துள்ளும்..
பாராட்டுக்கள் சிவா.

ஓவியன்
19-07-2007, 09:22 PM
உண்மைதான் சிவா!

மனசுக்கேது வயது!, அது எல்லோருக்கும் புரிவதில்லைதான்.........
என்ன செய்வது காலமும் சமுதாயமும் செய்த வேலையது!.

உங்கள் வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

சிவா.ஜி
21-07-2007, 04:57 AM
நன்றி அமரன். நன்றி ஓவியன்.

இனியவள்
24-07-2007, 09:29 AM
ஆண்டொன்று போக
வயதொன்று கூடுகின்றது
வயது உடலுக்கே ஒழிய
உள்ளத்துக்கு ஏது பிள்ளைகளுக்கு
நான் தந்தையானலும் மனதளவில்
நானும் குழந்தையல்லவா....


வாழ்த்துக்கு சிவா...

சிவா.ஜி
24-07-2007, 09:37 AM
பிள்ளைப்பருவம் தொல்லைகளேதும் இல்லாப்பருவம். மீண்டும் அந்த நாட்கள் வராதா என ஏங்கவைக்கும் வசந்த காலம்.எல்லோருடைய மனதிலும் அந்த காலத்தின் வாசம் இல்லாமல் இருப்பதில்லை.வாழ்த்துக்கு நன்றி இனியவள்.

மனோஜ்
24-07-2007, 09:51 AM
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் முறை மனதில்
சுகங்களாக்கும் சிறியவயது
திரும்பிடும் காலங்கள்
தித்தித்திடும் நேரங்கள்
அருமை நண்பா கவிதை

சிவா.ஜி
24-07-2007, 10:01 AM
அன்பு நன்பர் மனோஜின் அருமையான பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள்.

விகடன்
02-08-2007, 04:39 AM
எங்கள் வீட்டில் சிலவேளைகளில் நடைபெறும் ஒரு சம்பவந்தான் சிவா. அம்மா, அப்பாவை இப்படித்தான் கரிச்சுக் கொட்டுவார். என்ன செய்வது. சிலவேளைகளின் அம்மா தான் சமையலில் ஈடுபடும்போது அப்பா மட்டும் பிள்ளைகளுடன் விளையாடுகிறாரே என்ற பொறாமையாக இருக்குமோ! :lachen001: :lachen001: :lachen001:

சிவா.ஜி
02-08-2007, 04:49 AM
அம்மாவும் பாவம்தானே அவர்களையும் சேர்த்துக்கொண்டால் சந்தோஷம் இரட்டிப்பு ஆகிவிடுமே.

kalaianpan
12-08-2007, 04:20 PM
மனைவிக்கும் பழக்கிவிட்டால் போகிறது...

இப்போது தெருவிளையாட்டே மறந்துவிட்டது......

ஆதவா
12-08-2007, 04:57 PM
அருமை அருமை... சிவா.... மனதோடுண்டான விளையாட்டு.. சிலருக்குத் தெரிவதில்லை.... மிகச்சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
13-08-2007, 04:53 AM
மனைவிக்கும் பழக்கிவிட்டால் போகிறது...

இப்போது தெருவிளையாட்டே மறந்துவிட்டது......

உண்மைதான் கலையன்பன்..இப்போதெல்லாம் சிறுவர்களும்,சிறுமிகளும் கணிணியைத்தான் மைதானமாக பாவித்துக்கொள்கிறார்கள். மனைவிக்கு பழக்கிவிட்டால் நல்லதுதான்......அப்றம் ரொம்ப அலுப்பா இருக்கு நீங்களே சாப்பாடு செஞ்சிடுங்க என்று சொல்லிவிட்டால்...(சாப்பாடு செய்வதில் பிரச்சினை இல்லை அந்த தண்டனையை ஏன் அவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்றுதான் யோசிக்கிறேன்..)

சிவா.ஜி
13-08-2007, 04:54 AM
அருமை அருமை... சிவா.... மனதோடுண்டான விளையாட்டு.. சிலருக்குத் தெரிவதில்லை.... மிகச்சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்.

மனம் நிறைந்த நன்றி ஆதவா.

இளசு
18-08-2007, 06:50 AM
மகனுக்கே அப்பாவாகும் வயது..
இவருக்கு தாத்தாவாகும் வயது..
ஆனாலும் பிள்ளைகளோடு தெருவிளையாட்டு!

காயகல்பம் எங்கே இருக்கிறது?
மனித மனதில் அல்லவா?


வாழ்த்துகள் சிவா...!
வாழ்க்கைப் பாடத்துக்கு!

சிவா.ஜி
21-08-2007, 09:52 AM
நன்றி இளசு.
நாங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் குவிப்பதை...ஓரிரு வாக்கியங்களில் அடக்கிவிடும் நீங்கள்..காவிரியை கமண்டலத்தில் அடக்கிய அகத்தியருக்கு இணை.அதிசயித்து நிற்கிறேன்.

தளபதி
21-08-2007, 10:10 AM
கவிதையில் கலக்குகிறீர் நண்பரே!!
உங்கள் மனது என்றென்றும் இளமையுடனும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
21-08-2007, 10:38 AM
இப்படிப்பட்ட நட்புக்கள்தான் இன்னும் எழுத தூண்டுகிறது.மிக்க நன்றி குமரன்.

ஷீ-நிசி
21-08-2007, 11:52 AM
மனதோடு விளையாட கொடுத்துவைத்திருக்கிறது சிவா... உங்களுக்கு....

வாழ்த்துக்கள்! அருமையான எண்ண அலைகள்...

பூமகள்
21-08-2007, 12:21 PM
எல்லோருள்ளும் இருக்கும் குழந்தைப் பருவத்திலேயே இருந்திருக்கலாகாதா என்ற ஏக்கம்..!!
உங்கள் கவி அழகாகச் சொன்னது மனம் எப்போதும் குழந்தை தான் என்று..
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்... சகோதரரே...!

kampan
21-08-2007, 12:35 PM
அருமையான வரிகள் மனம் ஒரு குரங்கு என்பதை பொய்யாக்கி அதை குழந்தையாக்கிவிட்டார்.

அரசன்
21-08-2007, 01:59 PM
உள்ளத்து உணர்வுகளை யாரறிவார். வாழ்த்துக்கள் சிவா!

சிவா.ஜி
22-08-2007, 04:57 AM
மனதோடு விளையாட கொடுத்துவைத்திருக்கிறது சிவா... உங்களுக்கு....

வாழ்த்துக்கள்! அருமையான எண்ண அலைகள்...

மிக்க நன்றி ஷீ−நிசி.அந்த விளயாட்டுதானே ஷீ..நம்மை என்றும் மார்க்கண்டேயன்களாக வைத்திருக்கும்.

சிவா.ஜி
22-08-2007, 05:00 AM
எல்லோருள்ளும் இருக்கும் குழந்தைப் பருவத்திலேயே இருந்திருக்கலாகாதா என்ற ஏக்கம்..!!
உங்கள் கவி அழகாகச் சொன்னது மனம் எப்போதும் குழந்தை தான் என்று..
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்... சகோதரரே...!

ஆமாம் பூமகள்...மனம்நிறந்த மகிழ்வோடு விளையாடும்போது நம்மை மறந்து நம் பால்யபருவத்துக்குப் போய்விடுகிறோம். பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி.

சிவா.ஜி
22-08-2007, 05:01 AM
வாழ்த்திய நல்ல உள்ளங்கள் அரசனுக்கும்,கம்பனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.