PDA

View Full Version : வாழ்வேமாயம்



aren
19-07-2007, 01:21 PM
வாழ்வேமாயம்
காதலில் தோல்வியடைந்தவன்
சொல்லும் வார்த்தை
பணக்கார இளம் விதவையைக்
காணும்வரை!!!!

சிவா.ஜி
19-07-2007, 01:31 PM
அப்படி போடுங்க அருவாளை. நச்ன்னு இருக்கு கவிதை.சூப்பர் பம்பர் லாட்டரி அடிச்சா மாயமாவது ஒண்ணாவது. கலக்கிட்டீங்க ஆரென். பாராட்டுக்கள்.

இனியவள்
19-07-2007, 02:03 PM
வாழ்வேமாயம்
காதலில் தோல்வியடைந்தவன்
சொல்லும் வார்த்தை
பணக்கார இளம் விதவையைக்
காணும்வரை!!!!

விதவைகள் மறுமணம்
வரவேற்கப் பட வேண்டியது
விதவைகள் மறு ம(ப)ணம்
உடைக்கப் பட வேண்டியது

வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா

மாதவர்
19-07-2007, 02:10 PM
விதவை என்பதை விட கைம்பெண் என்ற சொல்லில் இரண்டு பொட்டு உள்ளது என்றார் கலைஞர் !!!

ஓவியன்
19-07-2007, 02:17 PM
சிவா.ஜி சொன்ன மாதிரி நச் ரகக் கவிதை..........
அருமையா இருக்கு அண்ணா!.

aren
19-07-2007, 03:51 PM
அப்படி போடுங்க அருவாளை. நச்ன்னு இருக்கு கவிதை.சூப்பர் பம்பர் லாட்டரி அடிச்சா மாயமாவது ஒண்ணாவது. கலக்கிட்டீங்க ஆரென். பாராட்டுக்கள்.


நன்றி சிவா.ஜி. பணம் பத்தும் செய்யும் என்பார்கள் இல்லையா!!

நன்றி வணக்கம்
ஆரென்

aren
19-07-2007, 03:54 PM
விதவைகள் மறுமணம்
வரவேற்கப் பட வேண்டியது
விதவைகள் மறும(பணம்)
உடைக்கப் பட வேண்டியது

வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா

நன்றி இளையவள் அவர்களே.

நான் விதவைகள் மறுமணத்தை வரவேற்பவன், ஆனால் அது பணத்திற்காக இருக்கக்கூடாது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
19-07-2007, 03:56 PM
விதவை என்பதை விட கைம்பெண் என்ற சொல்லில் இரண்டு பொட்டு உள்ளது என்றார் கலைஞர் !!!

நன்றி மாதவர் அவர்களே. கைம்பெண் என்பதற்கு பதில் விதவை என்பதே சரியாக இருக்கும் என்பதால் அந்த வார்த்தையை உபயோகித்தேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
19-07-2007, 03:57 PM
சிவா.ஜி சொன்ன மாதிரி நச் ரகக் கவிதை..........
அருமையா இருக்கு அண்ணா!.

நன்றி ஓவியன். எல்லாம் நீங்கள் கொடுத்த தைரியம்தான்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
19-07-2007, 04:55 PM
அண்ணா நச் ரகம். நடக்கக்கூடியது..நடந்திருகின்றது....பாராட்டுக்கள்.

வாழ்க்கை மாயமானது
மயமானதும் கூட..

சினேகமுடன்
அமரன்

இணைய நண்பன்
19-07-2007, 07:26 PM
ஆரென் கவிதை நன்று.இதில் இனியவள் சொல்லும் பின்னூட்ட கவியும் நன்று

aren
20-07-2007, 02:42 AM
ஆரென் கவிதை நன்று.இதில் இனியவள் சொல்லும் பின்னூட்ட கவியும் நன்று

ந*ன்றி இக்ராம் அவ*ர்க*ளே.

ஆமாம் இனிய*வ*ள் அவ*ர்க*ளுடைய* க*விதையில் மெருகு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிற*து.

ந*ன்றி வ*ண*க்க*ம்
ஆரென்