PDA

View Full Version : எக்ஸ்ப்ளோரரில் ஒரே நேரத்தில் பல கணக்குகள



saguni
19-07-2007, 12:32 PM
நண்பர்களே! எனக்கொரு பிரச்சனை. ஒரே நேரத்தில் பல மின் அஞ்சல் கணக்குகளையும் வங்கிக் கணக்குகளையும் திறக்கமுடியுமா? நான் யாஹூ மெயிலையும் என்னுடைய ஐசிஐசிஐ டைரக்ட் என்ற வர்த்தக கணக்கையும் முயற்சித்தேன் முடியவில்லை. ஒரு நேரத்தில் ஒரு கணக்கு மட்டுமே திறக்கமுடிகிறது இன்னொரு விண்டோவை அல்லது டேப்பைத் திறந்து முகவரி இட்டால் முன்னைய விண்டோவில் என்ன இருக்கிறதோ அதுதான் வருகிறது. இதற்காக பயர்பாக்ஸ்யையும் எக்ஸ்ப்ளோரையும் உபயோகிக்கிறேன். ஆனால் பயர்பாக்ஸ் மெதுவாய் இருப்பதால் திருப்தியில்லை. எனவே எக்ஸ்ப்ளோரரில் ஒரே நேரத்தில் இரு கணக்குகளை உபயோகிக்க உதவுங்களேன்.

ஜிங்குசாங்கு
02-09-2010, 09:26 PM
இன்றும் சிலருக்கு இந்த பிரச்சனையை உண்டு. நான் முழுநேர நெருப்பு-நரி (அதாங்க, பயர்பாக்ஸ்) உபயோகிப்பாளன், ஆனலும் ஒரு சில இடங்களில் 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' மட்டுமே உள்ளதால் செய்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது இது:

முதலில், உங்களது 'டெஸ்க்டாப்'பில் காலியான இடத்தில் எலியின் (அதாங்க, 'மௌஸ்') வலது பொத்தானை அமுக்கி, குறுக்குவழியை (ஷார்ட்கட்) தேர்ந்தெடுக்கவும்.


பிரோக்ராம் எங்குள்ளது என கேட்கப்பட்ட இடத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளதை தட்டவும் (டைப் செய்யவும்):

விண்டோஸ் எக்ஸ்பி'யில்:

"C:\Program Files\Internet Explorer\iexplore.exe" "mail.yahoo.com"

விண்டோஸ் விஸ்டா'வில்:

"C:\Program Files (x86)\Internet Explorer\iexplore.exe" "mail.yahoo.com"

பிறகு 'நெக்ஸ்ட்' பொத்தானை அமுக்கவும். இந்த குறுக்கு வழிக்கான பெயரை ("yahoo"??) இங்கு தட்டவும் (டைப்'க்கு சரியான தமிழ் வார்த்தை என்னவோ??)

பிறகு 'பினிஷ்' பொத்தானை அழுத்தவும்.

இந்த புது குறுக்குவழி'யை உபயோகிப்பதன் மூலம், இரண்டு விண்டோக்களிக்கிடையேயான செஷன்-விஷய பரிமாற்றங்கள் (செஷன் டேட்டா ஷேரிங் - அதாங்க, உங்க கணக்கு விவர பரிமற்றம்) தவிர்க்கப்படுகிறது. அதனால், நீங்கள் வேறு ஒரு கணக்கையும் எந்த ஒரு தடங்கலும் இன்றி திறக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும், இந்த குறுக்கு வழியை மட்டுமே பின்பற்ற வேண்டும். கண்ட்ரோல் + N அமுக்கி புது ஜன்னல் திறந்தால், அது உங்களது பழைய கணக்கையே திறக்கும்.

குறுக்குவழி உருவாக்கும் போது "mail.yahoo.com"ஐ தவிர்த்தும் குறுக்கு வழி செய்யலாம். இது உங்கள் கணினியில் 'இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர்'க்கு ஏற்கனவே இருக்கும் குறுக்கு வழியில் இருந்து மாறுபட்டு இயங்கும்.

ஹும், கணினி சம்பந்தமாக முதன் முதலில் தமிழில் எழுதுவதால், சில பல பிழைகள் இருக்கும், தயங்காமல் சுட்டி காட்டவும் (மன்னித்தால் மட்டும் போதாது!)

sivagnanam
25-10-2010, 12:06 PM
it is useful:lachen001:

nambi
25-10-2010, 05:27 PM
சந்தேகம்.....தீர்வு....மிகவும் பயனுள்ள பகிர்வு..நன்றி!

பூங்குழலி
28-10-2010, 10:56 AM
இப்படியும் ஒரு வழி இருக்கா? நல்ல தகவல். தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி!

ஆன்டனி ஜானி
28-10-2010, 02:41 PM
:icon_b: இப்படிம் வளிகள் இருக்கிறதா நான் இன்று தான் அறிந்து கொண்டேன் ..பகிர்ந்த அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்