PDA

View Full Version : சில காதல் கவிதைகள் - 11



ப்ரியன்
19-07-2007, 12:07 PM
சில காதல் கவிதைகள் - 11

#

பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!

#

உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!

#

என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!

#

உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!

#

மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!

#

- ப்ரியன்.

சிவா.ஜி
19-07-2007, 01:11 PM
ப்ரியன் கலக்கிட்டீங்க.சில வரிகளில் பல உணர்வுகள். ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து வியக்கிறேன். மிகமிக பாராட்டுக்கள்.

இனியவள்
19-07-2007, 03:42 PM
பிரியன் அருமையான காதல் குறுங்கவிகள் வாழ்த்துக்கள்

உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!

அருமை பிரியன் வாழ்த்துக்கள்

paarthiban
19-07-2007, 05:26 PM
அருமையான கவிதைகள், வாழ்த்துக்கள் இவன்ப்ரியன் அவர்களே

அமரன்
19-07-2007, 06:39 PM
ப்ரியன் சின்னச் சின்ன கவிதைகளில் உணர்ச்சிபூர்வமாக காதலைச் சொல்லியுள்ளீர்கள்..பாராட்டுக்கள்..
முதலாவது கவிதையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உதவமுடியுமா.?

ப்ரியன்
20-07-2007, 03:02 AM
நன்றி சிவா.ஜி , இனியவள்,பார்த்திபன் & அமரன்

aren
20-07-2007, 03:19 AM
நன்றாக இருக்கிறது இவன்ப்ரியன் அவர்களே. முதலிலிருந்து படித்துவிட்டு வருகிறேன். புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

ப்ரியன்
20-07-2007, 03:32 AM
அமரன்,

இயல்பாக அய்யனார் கையில் என்ன இருக்கும்? - கத்தி...அவள் பொங்கல் வைத்து படையலிட வருவது அறிந்ததும் அய்யனார் கத்தியை வீசிவிட்டு அவளுக்கு தர கையில் பூவேந்தி நிற்கிறார்...

இப்போது கவிதை புரிகிறதா அமரன்...

ப்ரியன்
20-07-2007, 03:33 AM
நன்றி ஆரென்...

அமரன்
20-07-2007, 09:03 AM
அடடே....புரிந்தது ப்ரியன்.
அபாரம்..
நன்றியும் பாராட்டுகளும்..

ஓவியன்
20-07-2007, 09:35 AM
மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!
அருமை ப்ரியன்!

மூங்கில் காட்டை புல்லாங்குழலாக மாற்றினால் தானே இசையாக வரும், இல்லையென்றால் அழுது தானே வரும்.