PDA

View Full Version : வெற்றிலை கதை



சிவா.ஜி
19-07-2007, 09:49 AM
என் மனைவிக்கு ஒரு பழக்கம். அது எனக்குப்பிடிக்காததும் கூட.
வீட்டில் உள்ள தேனீர் கோப்பையின் கைப்பிடி உடைந்தாலும்
அதையேத்தான் பயன்படுத்துவார்.அவர் சொல்வதையும் கேட்காமல் நான் புதிய
கோப்பைகளை வாங்கி வந்து பயன் படுத்தச்சொன்னாலும் 'இருக்கட்டுங்க இந்த பழைய கோப்பை
உடைந்துவிட்டால் வேண்டுமென்றால் புதியதைப் பயன்படுத்தலாம்'
என்று புதியதை பத்திரமாக பேக் செய்து வைத்து விடுவார்.
இது மட்டுமல்ல எந்த புதிய பொருளை வாங்கினாலும் இதே கதைதான்.என்னைப்
பொறுத்தவரை எந்த பொருளை புதிதாக வாங்கினாலும்அப்போதே பயன்படுத்த வேண்டும்
பழையது உபயோகிக்கமுடியாத போது புதியதை உபயோகிகலாம் என்பது அவர் கட்சி.
இதிலிருந்து அவரை மாற்ற நான் எப்போதோபடித்த ஒரு கதையை
அவரிடம் சொன்னேன்.

ஒரு வீட்டில் கனவனும் மனைவியும் இருந்தார்கள்.
ஒருநாள் கனவன் ஒரு கட்டு தளிர் வெற்றிலை
வாங்கி வந்தான். அதை அப்படியே ஒரு துணியில் சுற்றி
மனைவி எடுத்து வைத்துவிட்டாள்.(என் மனைவி போல)
இரவு நல்ல சாப்பாட்டுக்குப்பிறகு இருவரும் வெற்றிலை
போட கட்டைப்பிரித்தால் மேலாக இருந்த நான்கு
வெற்றிலைகள் வாடியிருந்தன. உடனே மனைவி
வாடியதை இப்போது சாப்பிடலாம்,நன்றாக இருப்பதை
நாளை சாப்பிடலாம் என்று சொல்லி அதை கனவனுக்கும் கொடுத்து விட்டு
தானும் சாப்பிட்டாள். அடுத்த நாளும் இதே கதை. அதற்கு
அடுத்த நாளும் இதே.... ஆக அந்த வெற்றிலைகள்
தீரும் வரை அவர்கள் சாப்பிட்டது வாடியவைகளைத்தான்.

கதையை சொல்லிவிட்டு பெருமையாக 'இதிலிருந்து உனக்கு என்ன
தெரிகிறது' என்று கேட்டேன்,

இதைக்கேட்டதும் என் மனைவி சிறிது நேரம் என்னைப்பார்த்துவிட்டு,

'அதுக்குத்தான் அப்பப்ப கொஞ்சமா வாங்கிக்கனும்'

அவள் சொன்னதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.
இப்பவும் எங்கள் வீட்டில் நிறைய புதுப்பொருள்கள்
ப்ளாஸ்டிக் சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

அன்புரசிகன்
19-07-2007, 10:08 AM
'அதுக்குத்தான் அப்பப்ப கொஞ்சமா வாங்கிக்கனும்'


அது தானே... எதற்காக ஒன்று இருக்க இன்னொன்று வாங்கவேண்டும். ஒன்று இல்லையென்ற பின்புதான் இருப்பதை தேடவேண்டும். இது அனைத்துக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். உங்கள் மனைவி சிக்கனமாகத்தானே வாழ்கிறார். கஞ்சத்தனமில்லையே. அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

சிவா.ஜி
19-07-2007, 10:33 AM
ஏற்றுக்கொள்கிறேன் அன்பு ரசிகரே. நன்றி.

ஷீ-நிசி
19-07-2007, 11:14 AM
ஹா! ஹா! உங்கள் மனைவிக்கு நீங்கள் சொன்ன கதையை விட, அவர் கடைசியில் கொடுத்த பஞ்சில் உங்கள் முகம் எப்படி போகியிருக்கும் என்று தெரிகிறது...

நீங்கள் புதியதை உபயோகியுங்கள்... அவரை கட்டாயபடுத்தாதீர்கள்...

சிவா.ஜி
19-07-2007, 11:20 AM
அதேதான் ஷீ.. என் முகம் ராஜேந்திரக்குமாரின் ட்ரேட்மார்க் ஙே...! மாதிரி ஆகிவிட்டது. நான்தான் புதியதை உபயோகிக்கிறேன் வேறு வழி....?

இதயம்
19-07-2007, 11:35 AM
தேவைக்கு தகுந்த பொருள் இருக்கும் போது ஆடம்பரமாக பொருட்கள் வாங்கும் உங்களை விட, தேவைக்கேற்ப சிக்கனமாக நடந்து கொள்ளும் உங்கள் மனைவியின் குணம் தான் சிறப்பு. அதனால் உங்கள் ஆடம்பர குணத்தை மாற்றிக்கொள்ளும் படி மன்றம் எச்சரிக்கிறது..! :music-smiley-010:

அன்புரசிகன்
19-07-2007, 11:45 AM
ஆடம்பர குணத்தை மாற்றிக்கொள்ளும் படி மன்றம் எச்சரிக்கிறது..! :music-smiley-010:

எச்சரிக்கை என்ன எச்சரிக்கை. மன்றம் கட்டளையிடுகிறதென்று கூறுங்கள் இதயமே... :D :D :D

சிவா.ஜி
19-07-2007, 01:07 PM
நல்லவேளை என் மனைவி இந்த திரியைப் பார்க்க சந்தர்ப்பம் இல்லை. தப்பித்தவறி பார்த்து விட்டால் என் கதை கந்தல்தான். இதயம் மற்றும் அன்புரசிகன் உங்கள் கட்டளைக்கு கீழ்படிந்து உடனே ஆடம்பரப்பொருட்களை பட்டியலிடுகிறேன்.ஆனால் அதில் முதலாவதாக வருடக்கணக்காக கட்டாமல் வைத்திருக்கும் என் மனைவியின் பட்டுப்புடவைகள்தான் வருகிறது. என்ன செய்ய......?

alaguraj
19-07-2007, 01:40 PM
காய்கறி காரர் கிட்டே எட்டணாவுக்கு கூட பேரம் பேசுறாங்களா?,

எல்லாரு வீட்டுல*யும் ந*ட*க்குற* ச*மாச்சார*ந்தானே....

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்......

சிவா.ஜி
19-07-2007, 01:42 PM
ஆமாம் அழகுராஜ். கவலைப்பட ஒன்ணுமேயில்லையேன்னு கவலைப்படறவங்களும் இருக்கத்தானே செய்றாங்க.

இதயம்
19-07-2007, 01:44 PM
எச்சரிக்கை என்ன எச்சரிக்கை. மன்றம் கட்டளையிடுகிறதென்று கூறுங்கள் இதயமே... :D :D :D

ஏன் நீங்களே நேரடியாக சொல்ல வேண்டியது தானே..!! இப்படி உரு ஏத்தி ஏத்தி என் உடம்பு இரண களம் ஆனது போதாதா..? இன்னுமா..??




ஆனால் அதில் முதலாவதாக வருடக்கணக்காக கட்டாமல் வைத்திருக்கும் என் மனைவியின் பட்டுப்புடவைகள்தான் வருகிறது. என்ன செய்ய......?


ஆஹா கவுத்திட்டீங்களே திருமதி. சிவாஜி..! ஆடம்பரமாக புடவைகளை வாங்கி அடுக்கி வைக்கும் திருமதி.சிவாஜி அவர்களுக்கு இந்த மன்றம் அன்புரசிகனின் மூலமாக கண்டனங்களை தெரிவிக்கிறது. இப்ப திருப்தியா..?!!

alaguraj
19-07-2007, 01:52 PM
பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்
அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்.... ப*ர*வாயில்ல* விடுங்க... இதெல்லாம் ந*ம*க்கு புதுசா என்ன*?

ஓவியன்
19-07-2007, 03:27 PM
இதைக்கேட்டதும் என் மனைவி சிறிது நேரம் என்னைப்பார்த்துவிட்டு,

'அதுக்குத்தான் அப்பப்ப கொஞ்சமா வாங்கிக்கனும்'

அவள் சொன்னதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.
இப்பவும் எங்கள் வீட்டில் நிறைய புதுப்பொருள்கள்
ப்ளாஸ்டிக் சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

ஹீ!,ஹீ சிவா.ஜி!
என்னே சிக்கனமான மனைவி உங்களுக்கு − நீங்க கொடுத்து வைச்சவங்க தான்!:icon_wink1: .

Gobalan
19-07-2007, 03:53 PM
எல்லா மனைவிகளுக்கும் அவர்கள் கணவன்மார்கள் சிக்கினமாக இல்லை என்றுதான் இருக்கும் போல. என் மனைவிக்கும் இதே எண்ணம் தான் என்னை பற்றி. வீட்டுக்கு வீடு வாசப்படி!
நன்றி.

அமரன்
19-07-2007, 05:15 PM
ஹா...ஹா...சம்பவத்தைப் படித்துக்கொண்டு வந்தபோது சாதாரண கதையாக இருக்குமென நினைத்தேன். பஞ்சால் பஞ்சாகப் பறந்தது எதிர்பார்ப்பு. சரியாகத்தான் சொல்லீருக்காங்க..

அன்புரசிகன்
20-07-2007, 07:20 AM
ஏன் நீங்களே நேரடியாக சொல்ல வேண்டியது தானே..!! இப்படி உரு ஏத்தி ஏத்தி என் உடம்பு இரண களம் ஆனது போதாதா..? இன்னுமா..??

எல்லாம் உங்க மேல இருக்கிற ஒரு அன்புதான். :grin:



ஆஹா கவுத்திட்டீங்களே திருமதி. சிவாஜி..! ஆடம்பரமாக புடவைகளை வாங்கி அடுக்கி வைக்கும் திருமதி.சிவாஜி அவர்களுக்கு இந்த மன்றம் அன்புரசிகனின் மூலமாக கண்டனங்களை தெரிவிக்கிறது. இப்ப திருப்தியா..?!!

இல்ல... அந்த புடவைகளைக்கட்டி நம்ம சிவாஜியை சிரிக்கவைத்து ஒரு படம் பிடித்து எமக்கு அனுப்பிவைக்கவேண்டும். (ஆதாரம் வேணுமெல்லே... :grin: :grin: :grin: )

அக்னி
20-07-2007, 08:10 PM
சிவா.ஜி யின் சம்பவமும்... தொடர்ந்த பின்னூட்டங்களும் மிக அருமை...
எனக்கு இப்போது ஒரு ஆசை...
இந்தத் திரியின் சுட்டியை, அல்லது இதனைப் பிரதிசெய்து, திருமதி சிவா.ஜி அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் அது...

சிவா.ஜி
21-07-2007, 04:37 AM
சிவா.ஜி யின் சம்பவமும்... தொடர்ந்த பின்னூட்டங்களும் மிக அருமை...
எனக்கு இப்போது ஒரு ஆசை...
இந்தத் திரியின் சுட்டியை, அல்லது இதனைப் பிரதிசெய்து, திருமதி சிவா.ஜி அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் அது...

அக்னிக்கு என் மீது அப்ப்படி என்ன கோபம்...? ஏற்கனவே தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் முடியிருக்கிறது..அதையும் என் இல்லாளிடம் கொடுத்து மொத்தமாகவே இல்லாமல் ஆகிவிட வேண்டுமா...?செய்யுங்க செய்யுங்க......

lolluvathiyar
21-07-2007, 04:46 AM
பழைய பொருளை பயன்படுத்தலாம், அவை முற்றிலும் பயனற்ற நிலை அடையும் போது புதியது வாங்கலா.
ஆனால் உடைந்த பொருட்களை அப்போதே டிஸ்போஸ் பன்னிவிட வேண்டும். அந்த விசயத்தில் நீங்கள் செய்தது தான் சரி.
(உடைந்த பொருட்களிலிருந்து சிறிய துகள்கள் உனவு பொருட்களில் கலக்க வாய்புள்ளது)

சிவா.ஜி
21-07-2007, 07:02 AM
சரியான கருத்து வாத்தியாரே. இதுவும் இருக்கட்டும் அதுவும் இருக்கட்டும் என்று எல்லாவற்றையும் அப்படியே வைத்துக்கொண்டிருந்தால் வீனான குப்பைகளாத்தான் இருக்கும். உபயோகமில்லாததை உடனே எறிந்து விட வேண்டும்.

இனியவள்
21-07-2007, 07:06 AM
சிவா ஒரு யோசனை மனைவி பாவிக்கும்
பழைய பொருட்டகளை திருடி ஒளிச்சு வையுங்க
என்னடா சொந்த வீட்டிலையே திருட வைச்சு
அடிவாங்க திட்டம் போட்டுத் தாராவே என்று
யோசிக்கிறீங்களா ஒரு நன்மை நடக்க வேணும்
என்றால் எத்தனை அடியும் வாங்கலாமில்லோ. ஹீ ஹீ

பொருளைக் காணாட்டி என்ன பண்ணுவா ஆத்துக்காரி
புதுசை பாவிப்பாவிலோ எப்படி என் யோசனை...:grin:

சிவா.ஜி
21-07-2007, 07:13 AM
ஆஹா எனக்கு அடி வாங்கி கொடுப்பதிலேயே எல்லோரும் குறியா இருக்காங்கப்பா......இனியவள் நீங்க சொன்ன மாதிரி நான் செய்தால்.ஒளித்துவைத்தது என் மனைவியால் கண்டுபிடிக்கப்பட்டால்.....ஏங்க நான் தலையில் கட்டோட அலையுறதப் பாக்கனுமா?

இனியவள்
21-07-2007, 07:17 AM
ஆஹா எனக்கு அடி வாங்கி கொடுப்பதிலேயே எல்லோரும் குறியா இருக்காங்கப்பா......இனியவள் நீங்க சொன்ன மாதிரி நான் செய்தால்.ஒளித்துவைத்தது என் மனைவியால் கண்டுபிடிக்கப்பட்டால்.....ஏங்க நான் தலையில் கட்டோட அலையுறதப் பாக்கனுமா?

அடியும் வாங்கக்கூடாது பழைய பொருளும் பாவிக்கக் கூடாதா
ஹிம் ஒண்டு பண்ணுங்கோ கைதவறி பொருளை உடைக்கிற மாதிரி
பழைய உடையக்கூடிய பொருளை உடைச்சுடுங்கோ உங்க பிரச்சனை
ஒரு வழிக்கு வந்திடும் ...

சிவா.ஜி
21-07-2007, 10:03 AM
இது நல்ல யோசனையாகப்படுகிறது. அடுத்த முறை செயல்படுத்திப்பார்க்கிறேன் இனியவள்.நன்றி(பொருள் உடையப்போகுதா இல்ல என்........ஆண்டவா காப்பாத்து

அன்புரசிகன்
21-07-2007, 11:33 AM
ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பாங்க சிவாஜி. சப்போஸ் ஏதாச்சும் விபரீதம் நடந்தால் இனியவளை அணுகுங்க. அதிலிருந்து எப்படி மீள்வதென அவர் ஐடியா தருவார்.

இனியவள்
21-07-2007, 11:39 AM
ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பாங்க சிவாஜி. சப்போஸ் ஏதாச்சும் விபரீதம் நடந்தால் இனியவளை அணுகுங்க. அதிலிருந்து எப்படி மீள்வதென அவர் ஐடியா தருவார்.

அன்பு இப்படி என்னை வம்பில
மாட்டி விடுவதில் குறியாக இருக்கிறீரே
ஏன் :icon_shok:

அன்புரசிகன்
21-07-2007, 11:42 AM
அன்பு இப்படி என்னை வம்பில
மாட்டி விடுவதில் குறியாக இருக்கிறீரே
ஏன் :icon_shok:

பயப்படாதீங்க. நான்செய்யும் வம்பு நன்மையில் தான் முடியும். எனது வம்பில் உங்கள் மூலம் சிவாஜியின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கினால் சந்தோஷமே... :grin: :sport-smiley-014:

சிவா.ஜி
21-07-2007, 12:39 PM
வாங்க அன்பு.....ரொம்ப சந்தோஷம். என் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கினால் எல்லோருடனும் பங்கு போட்டுக்கொள்கிறேன்.(உங்களுக்கும் இனியவளுக்கும் கொஞ்சம் அதிகம்...பங்கு)

அன்புரசிகன்
21-07-2007, 12:44 PM
எனக்கு வேண்டாம். இனியவளுக்கே குடுத்திடுங்க...

சிவா.ஜி
21-07-2007, 01:00 PM
நீங்கள் வேண்டாமென்றாலும் கொடுத்தே தீருவேன். இனியவளுக்கு வேண்டுமானால் கொஞ்சம் அதிகமாகத் தரலாம். ஏனென்றால் அவர் கவிதையில்தான் சோகம் அதிகமாக இருக்கிறது.

விகடன்
27-07-2007, 02:35 PM
மனைவியை பாராட்டத்தான் வேண்டும். உபயோகிக்கக்கூடியதாக இருக்கும் பட்சத்தில்த்தானே பாவிக்கிறார்.

வாங்கும்போது தரமானதாக வாங்கவேண்டும். அது பழுதடைந்துவிட்டால் முதலில் வீட்டிலிருந்து அகற்றிவிட வேண்டும். அதன் பின்னரே அடுத்ததற்கு ஹாடவேண்டும். உங்கள் கதையைக்கேற்கும் போது ஒன்றை கேற்கலாம் என்று தோன்றுகிறது!!


வீட்டில் என்ன மதுரை ராச்சியமா?

மனோஜ்
27-07-2007, 03:38 PM
சிவா.ஜு அவர்களே உங்கள் மனைவியின் பாங்கு அருமை
இதில் அவருக்கு திருப்தி இருந்தால் விட்டுவிடுங்கள்