PDA

View Full Version : இயற்கையென்ற கலைஞன்



சிவா.ஜி
19-07-2007, 04:43 AM
இறைவன் இட்ட
கட்டளைப்படி
இயற்கை தூரிகையால்
கருவண்ணம் பூசியதால்
இரவானது!
அடுத்தக் கட்டளையால்
ஆதவன் தன்
வெளிச்ச நீரால்
கரு வண்ணம் கழுவ
பகலானது!

ஓவியன்
19-07-2007, 05:10 AM
வர்ணங்கள் எங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்று.......
பெரும்பாலும் எல்லோருக்கும் பிரகாசமான வர்ணங்களே பிடிக்கின்றது, ஆனால் மென் வர்ணங்களுடன் கடும் வர்ணங்களும் சேர்ந்தாலே ஒரு ஓவியமே அழகு பெறும். வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் போல, நாட்களில் இரவும் பகலும் போல.......

வரிகள் அருமை - பாராட்டுக்கள் சிவா.ஜி!

சிவா.ஜி
19-07-2007, 05:17 AM
நன்றி ஓவியன், வர்ணங்களைப்பற்றி நீங்கள் சொன்னால் அது நிச்சயம் அழகாகத்தான் இருக்கும்.

அமரன்
19-07-2007, 08:41 AM
சிவா...அசத்தட்டீங்க...வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும் என்பதை மனிதனுக்கு உணர்த்தவே ஆண்டவன் இப்படிப்படைத்தானோ...அதிலும் பாருங்க...இருட்டிலும் கருமைக் காலத்திலும் தண்மை நிறைந்த வெண்மை உனக்குண்டு என்று சொல்வதுக்காக நிலாவை அனுப்புகின்றானோ... ரொம்பப்பிடிச்சிருக்கு கவிதை...வாழ்த்துக்கள்.

இனியவள்
19-07-2007, 08:52 AM
அருமை சிவா வாழ்த்துக்கள்...

சோகம் என்னும் கருமை
பூசி இருட்டாக்கப்படும் வாழ்வில்
அன்பு என்னும் ஒளிவெள்ளம்
பாய்ச்சப்பட்டு பிரகாசமாகின்றது

உங்கள் கவியில் இருந்து அறிந்து கொண்டேன்

சிவா.ஜி
19-07-2007, 08:56 AM
நன்றி அமரன். நிலாவின் எடுத்துக்காட்டு அருமை. இருளிலும் ஒளிரமுடியும் என்ற தன்னம்பிக்கையை தருவதாய் சொல்லியிருப்பது நன்றாக உள்ளது.
நன்றி இனியவள்.
உவமைகளால் அசத்துகிறீர்கள்.

aren
19-07-2007, 09:00 AM
அற்புதமான கவிதை. அதற்குவந்த பின்னூட்டங்களும் அருமை. அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
19-07-2007, 09:02 AM
நன்றி ஆரென். எங்கே உங்கள் அடுத்த அசத்தல்...?

aren
19-07-2007, 09:04 AM
நன்றி ஆரென். எங்கே உங்கள் அடுத்த அசத்தல்...?


நான் எங்கே அசத்தறது. இதுவரை அடி வாங்காமல் தப்பித்ததே பெரிய விசயம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
19-07-2007, 09:06 AM
நான் எங்கே அசத்தறது. இதுவரை அடி வாங்காமல் தப்பித்ததே பெரிய விசயம்.
நன்றி வணக்கம்
ஆரென்

தன்னடக்கம் நம்மை உயர்த்தும்....புரிந்துகொண்டேன்.

paarthiban
19-07-2007, 09:23 AM
நல்ல வர்ணனை. பாராட்டுக்கள் சிவாஜி அவர்களே

சிவா.ஜி
19-07-2007, 09:59 AM
நன்றி பார்த்திபன்.

ஷீ-நிசி
19-07-2007, 11:04 AM
இரவுக்கும், பகலுக்கும் இது ஒரு புது விளக்கம்... வாழ்த்துக்கள் சிவா.

சிவா.ஜி
19-07-2007, 11:08 AM
நன்றி ஷீ−நிசி.