PDA

View Full Version : காத*ல் பாட*ம்



theepa
19-07-2007, 12:20 AM
காத*ல் பாட*ம்


காதல் என்னும் கடலில் என்னை தள்ளி விட்டு
மனசு என்னும் படகினாலே பார்வை எனும்
துடுப்பால் என்னை கரையேற வைத்தவனே..!


காதல் என்னும் சுகத்தை கொடுத்து கனவு நிரைந்த*
இரவை கொடுத்து தேடல் என்னும் அவஸ்த்தைய
கொடுத்து என் மனசினை சிறை வைத்தவனே...!


காதல் என்னும் பாடத்தை படித்து வாழ்க்கை என்னும்
பரிட்சையில் சித்தி அடைந்து வாழ்க்கை பூறாவும்
என்னுடன் இனைந்து உன் மனைவி என்ற பட்ட*த்தை
கொடுத்துவிடு....!!!




அன்புட*ன்,
ல*துஜா

என் உயிரே ஏன் உன*க்கு என் ம*ன*ம் புரிய*வில்லை

அக்னி
19-07-2007, 12:45 AM
காதல் என்னும் கடலில் என்னை தள்ளி விட்டு,
மனசு என்னும் படகினாலே, பார்வை எனும்
துடுப்பால், என்னை கரையேற வைத்தவனே..!
ஆனால், நான் நீட்டிய துடுப்பை, பறித்துவிட்டு,
என்னை நடுக்கடலில் தத்தளிக்கவிட்டுவிட்டாயே..?
பற்றியிருந்தால்,
நான் உன்னுடனும், நீ என்னுடனும்
கரையேறியிருப்போமே...

தத்தளிக்கும் மனம் ஒன்று பற்றிய காதலின் பற்று...


காதல் என்னும் சுகத்தை கொடுத்து, கனவு நிறைந்த
இரவை கொடுத்து, தேடல் என்னும் அவஸ்த்தையை
கொடுத்து, என் மனதினை சிறை வைத்தவனே...!
உன்னைக் காதலித்த பின் சயனம் ஏது..?
சொப்பனம்தான் ஏது..?

காதல் சிறையில் அகப்பட்ட மனதின் தேடல் என்னும் அவஸ்தை...


காதல் என்னும் பாடத்தை படித்து, வாழ்க்கை என்னும்
பரிட்சையில் சித்தி அடைந்து, வாழ்க்கை பூராவும்
என்னுடன் இணைந்து, உன் மனைவி என்ற பட்டத்தை
கொடுத்துவிடு....!!!

காதல் பாடம் நான் படிக்க வேண்டும்...
வாழ்க்கை பரீட்சையில் நான் சித்திபெறவேண்டும்...
ஆனால், என்னிடம் வராமலே,
பட்டம் மட்டும் உனக்கு வேண்டுமோ..?

உனது மனைவி எனும் பட்டத்திற்காக, நான் படித்துத் தேறும் காதல்...

மூன்று பார்வைகளில், வந்தாலும், ஒப்புநோக்கின்,
காதல், காதலி, காதலன்
எனும் மூன்று பாத்திரங்களையுமே கவிதை சுழல்கின்றது...
நன்று...
எழுத்துப் பிழைகளைக் களைந்து, குறியீடுகளையும் பயன்படுத்துங்கள்...
இன்னும் சிறக்கும்...

பாராட்டுக்கள் தீபா என்கின்ற லதுஜா...
தொடர்ந்தும் படையுங்கள்...

aren
19-07-2007, 03:44 AM
தீபா, கவிதை அருமை. இப்படி எங்கே இந்த காலத்து காதலிகள் நினைக்கிறார்கள். இன்னொருத்தர் பெட்டராக கிடைத்தால் அண்ணா என்னை மன்னித்துவிடு என்றல்லவா சொல்லிவிட்டு செல்கிறார்கள்.

அமரன்
19-07-2007, 08:18 AM
லதுஜா...நல்ல கவிதை வாழ்த்துக்கள்...
தொடருங்கள்.

சிவா.ஜி
19-07-2007, 08:23 AM
நல்ல கவிதை. மனைவியெனும் பட்டம் பெற காதல் பாடம் படிக்கச்சொல்லும் காதலன்,படித்து முடித்ததும் நீ தேறவில்லையென்று சொல்லிவிட்டால்.......கவலையில்லை விடுங்கள் அரியர்ஸில் பாஸாகிவிடலாம்.
அமரனின் மற்றும் ஆரெனின் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக இருந்தது.
கவிதைக்கு பாராட்டுக்கள் தீபா.

ஓவியன்
19-07-2007, 09:31 PM
ஆண்களின் ஏக்கக் கவிதைகளை ஏகமாக பார்த்த எனக்கு இப்போது பெண்களின் கோணத்தில் இருந்து வரும் கவிதைகள் வித்தியாசமாகவும் அழகாகவும் உணர்ச்சி தெறிக்க வருவது வேறு பட்ட அனுபவமாக உள்ளது!.

ஏற்கனவே இனியவள் பின்னியெடுக்கிறார், இப்போது நீங்களும்...........
வாழ்த்துக்கள் லதுஜா − இன்னும் நிறைய எழுதுங்கள்!.