PDA

View Full Version : தமிழில் ஆபாச அராஜகம்..துணைபோகும் கூகிள்alaguraj
18-07-2007, 08:21 PM
கட்டுப்பாடற்ற பிளாக்குகள் மூலம் ஆபாச படங்கள், தமிழிலேயே ஆபாச கதைகள் என பதித்து கலாச்சாரத்தை தொடர்ந்து சில விஷமிகள் கெடுத்துவருகின்றார்கள்.


இப்போது சில தேடு பொறிகள் தமிழ் யுனிகோடிலேயே தேடும் வசதியையும் தருகின்றது, அவற்றில் அனைவரும் விரும்பும் கூகிள், புதிய முயற்சியாக கூகிள் சஜஸ்ட் எனும் வசதியை பயன் படுத்தும் போது, அதுவாகவே சில வார்த்தைக
ளை பரிந்துரைக்கும்..ஆங்கிலத்தி நன்றாக உள்ள இவ்வசதி, தமிழில் எவ்வளவு இலக்கியங்கள், கட்டுரைகள் இணயத்தில் பரவிக்கிடந்தாலும், அவற்றை பரிந்துறைப்பதை விடுத்து..ஆபாச வார்த்தைகளை காட்டுகின்றது. இதை தெரிந்து செய்கிறார்களா அலலது தெரியாம*ல் த*வறு ந*டக்கிற*தா என* தெரிய*வில்லை.

யாராவது கூகிளுக்கு தெரியப்படுத்த முடியுமா?...இது போன்ற ஆபாச தளங்களும் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விசச் செடிகள். வளரவிட்டால் வருங்கால
சந்ததிகள் நம்மை மன்னிக்காது...

ஆவன செய்பவர்களும் செம்மொழி காவலர்கள் தான்..

ஓவியன்
18-07-2007, 08:36 PM
தகவலுக்கு நன்றி அழகு!

நல்லதே நடக்க வேண்டுமென்ற உங்கள் அங்கலாய்ப்புக்குத் தலை வணங்குகிறேன்.

இதயம்
19-07-2007, 05:06 AM
கூகிள் செய்து வரும் அற்புத சேவையை தீயவர்களின் உபயோகத்தை அடிப்படையாக வைத்து தவறாக கூகிளையும் குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். இது உண்மைக்கு புறம்பானது. இன்றைய காலகட்டத்தில் கேட்கும் வரத்தை தெய்வங்கள் கொடுப்பதில்லை. ஆனால், கூகிள் நமக்கு தேவையானதை சில வினாடிகளில் எடுத்து கொடுத்து நம்மை அசத்திவிடுகிறது. இதனால் வலைஞர்கள் மத்தியில் கூகிளில் தேடுவதை "கூகிள் அம்மனிடம்" வரம் கேட்பது என்ற பதம் கூட உபயோகப்படுத்தப்படுகிறது. தேடு பொறிகளில் கூகிளை அடித்துக்கொள்ள இப்போது ஆளே இல்லை. அதன் சேவை மிக, மிக அருமையானது.

நீங்கள் குறிப்பிட்ட பகுதிக்கு வருகிறேன். கூகிள் காலத்திற்கு ஏற்ப தன்னை பல வகைகளிலும் மேம்படுத்திக்கொண்டு வருகிறது. குறிப்பாக தேடுபொறியை சொல்லலாம். பயனாளர்கள் சுலபமாக தான் விரும்பியதை அடைய பல சுலப வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று தான் நீங்கள் குறிப்பிட்ட அறிவுரை பகுதி. கூகிள் வெளியிட்டுள்ள டூல் பார் மூலம் இதை பயன்படுத்த முடியும். அதாவது இணையத்தின் பயன்பாடு அதிகம் அறியாதவர்கள் தனக்கு வேண்டியதை பெற வழி கூறும் வசதி இது. உதாரணத்திற்கு ஒருவருக்கு தமிழ் பிரிவில் வரும் ஒரு பொருளைப்பற்றிய தளத்தை தேடவேண்டும் என்றால் நீங்கள் தமிழ் என்று எழுதினால் போதும் மீதம் உள்ளவற்றை அதுவே அறிவுரை செய்து இது வேண்டுமா, இதுவேண்டுமா என்று காட்டும். இது மிகவும் அற்புதமான உதவி. பல நேரங்களில் நான் முயற்சிக்கும் வேளைகளில் அது பரிந்துரைக்கும் வார்த்தைகளின் வழியே மிக சுலபமாக எனக்கு தேவையான தளம் கிடைத்திருக்கிறது.

ஆனால், எல்லாவற்றிலும் தீமையும் நன்மையும் இருப்பது போல் தொழில்நுட்ப வளர்ச்சியான இணையத்திலும் உண்டு. கூகிளின் இது போன்ற வசதிகளை குப்பைகளை எழுதி இணையத்தை சீரழிக்கும் தீயவர்களால் தீமைக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது யுனிகோட் முறை தமிழ் எழுத்துருவில் வந்து விட்டதால் அவர்களுக்கு மிகவும் கொண்டாட்டம். விபரம் தெரியாதவர்கள் கூட கூகிளின் உதவியை நாடும் போது அவர்கள் பயன்படுத்திய தீய வார்த்தைகளை மிக சுலபமாக கூகிள் இனம் கண்டு பரிந்துரைத்துவிடுகிறது. இதன் மூலம் மனம் சபலத்தை ஏற்படுத்தி வழிகெடுக்க வாய்ப்புகள் அதிகம் தான். ஆனால், அதற்கு நாம் கூகிளை குற்றம் சொல்ல முடியாது. காரணம், அது பரிந்துரைக்கும் வார்த்தைகள் அனைத்தும் ஏற்கனவே தேடிய அல்லது இணையத்தில் நம் "அதிபுத்திசாலிகள்" பயன்படுத்தியது என்பதால் அதிகம் தேடப்பட்ட பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தவறாக புரிந்து வைத்து தன்னுடைய கோப்பில் அதை பதிய வைத்து நாம் தேடும் போது பரிந்துரைக்கிறது. ஆக கூடி, நம்மவர்களின் கீழ்த்தர எண்ணத்தின் அடிப்படையில் தேடப்பட்ட வார்த்தைகள் நாம் காண்பவையே தவிர, கூகிள் தானாக தேர்ந்தெடுத்து கொடுப்பதில்லை. பொருளின் சொந்தக்காரர்கள், வாங்குபவர் ஆகிய இருவரும் நம்மவர்களே, கூகிள் நமக்கு எடுத்துக்கொடுக்கும் ஏஜெண்ட் வேலையை தான் செய்கிறது. அதை குற்றம் சாட்டி பிரயோசனம் இல்லை. ஒழுக்கமில்லாத மனிதர்கள் வழிகேட்டில் பயணிக்கும் போது ஏற்படும் முரண்பாடு இது.

பல மொழிகளில் சேவை செய்துவரும் கூகிளுக்கு ஆபாசம், அநியாயம், வன்முறை வார்த்தைகளெல்லாம் தெரியாது. அதையெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கவெல்லாம் அவர்களுக்கு நேரம் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை. இது போன்ற கீழ்த்தர பதிவுகள் அதிகமாக ப்ளாக்குகளில் இருப்பதை நம்மவர்கள் மூலம் அறிந்த சவுதி அரசு ப்ளாக்குகள் அனைத்தையும் தடை செய்து வைத்துள்ளது. ஒரு சில இழிபிறவிகள் செய்யும் தவறால் பயனுள்ள விஷயங்களை பயன்படுத்துபவர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். தீயை கொண்டு சமைத்தும் சாப்பிடலாம், ஊரையும் கொளுத்தலாம். அது பயன்படுத்துபவர்களின் கையில் தான் உள்ளது. அப்படி தான் இதுவும்..!!

lolluvathiyar
19-07-2007, 05:37 AM
இதயம் சொல்வது போல் கூகிள் மீது எந்த தவறும் இருக்க முடியாது.
தேடி தரும் சேவையை செய்யும் சைட் அதன் டெக்னிக்கல் அடிபடையில் தான் இயங்க முடியும். அதில் எல்லாம் கிடைக்கும். நல்லதை மட்டும் தந்து கெட்டது விட வேண்டும் என்று டெக்னிகலாக செய்ய முடியாது.
வெம்சைட்களுக்கு தர சான்றிதல் மாதிரி ஏதாவது வந்தால் தான் கட்டுபடுட்த முடியும். இனையத்தின் முதுகெலும்பே சான்றிதல் இல்லாததால் தான்.
நாம் தான் கட்டுபாடுடன் இருக்க வேண்டும்

ஷீ-நிசி
19-07-2007, 06:32 AM
இதயம் அவர்களின் விளக்கம் மிக தெளிவாக உள்ளது... தீயவர்கள் செய்யும் செயல்கள் கொஞ்ச காலம்தான் விஸ்வரூபமாக தெரியும்.. தொடர்ந்து அனைவரும் நல் நோக்கத்திற்காய் பயன்படுத்த ஆரம்பித்தால்... இது போன்ற செயல்கள் மறைய குறைய எதிர்காலத்தில் வாய்ப்புள்ளது.

alaguraj
19-07-2007, 06:54 AM
இதயம் நீங்கள் கூருவது போல், நானும் கூகிள் தேடலை நன்கு பயன் படுத்துபவன் தான். ஆனால் பரிந்துரை வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியாது என்பது முற்றிலும் தவறகவே படுகிறது. அதற்காக அவசியம் கூகிளுக்கு இல்லை என்று பொருப்பை தட்டிக்கழித்து விடமுடியாது.

உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் a, d, u, என்று ஆரம்பித்தால் கூட adult என்ற வார்த்தையைக் காட்டுவதில்லை. ஆனால் தமிழில் அ, space, then, delete space...இப்போது அ மட்டும் தான் உள்ளது. ஆனால் பரிந்துரையில் வரும் வார்தைகள் பாதிக்கு மேல் மிகவும் கொடுமையானது. இது அஜாக்ஸ் என்னும் புதிய டெக்னாலஜி கொண்டு எழுதப்படுவது. இதை எளிதில் மாற்றவும் முடியும்.கூகிள் நிர்வாகத்துக்கு தக்க ஆதாரங்கள் கொடுத்தால் நிச்சயமாக சரி செய்ய வாய்ப்பு உள்ளது.

யாராவது மணிகட்டுவார்களா என்பதே நமது ஆதங்கம்.

இதயம்
19-07-2007, 07:14 AM
நீங்கள் சொல்லும் வழியில் ஆபாசத்தை தடுக்க முடியாது. உதாரணத்திற்கு நம்முடைய பெரும்பாலான தமிழ் இலக்கிய நூல்களின் பெண்ணின் மார்புக்கான கொச்சை சொல் இலக்கிய அழகு பெற்ற வார்த்தையாகவே நம் இலக்கியங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சொன்ன பெரும்பாலான ஆபாச தளங்களின் அடிப்படை வார்த்தைகளில் அந்த இலக்கிய அழகு வார்த்தையும் ஒன்று என்பதற்காக அந்த தளங்களை தடுக்கவோ அல்லது பரிந்துரைப்பதை தடுக்கவோ நினைத்தால் நாம் இலக்கியங்களின் முழுப்பயனை அடைய முடியாது. இன்று நாட்டின் முன்னேற்றம், நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் தனிமனித ஒழுக்கம் என்பது மிக, மிக முக்கியம். எல்லோரையும் திருத்துவதோ, தண்டனை மூலம் தடுப்பதோ முடியவே முடியாத விஷயம். தனி மனித ஒழுக்கம் வளர சிறந்த கல்வி, ஆசிரியர்கள், நல்லவற்றை ஊட்டி வளர்க்கும் பெற்றோர்கள், மனசாட்சியின் அடிப்படையில் நேர்மையுடன் நடக்கும் மக்கள் என்று பலரின் கூட்டு தேவைப்படுகிறது. இது எல்லாம் ஒட்டுமொத்தமாக கிடைப்பதும் அரிது தான். ஆனால், இவற்றில் எந்த தேசம் பெரும்பான்மையை பெற்று இருக்கிறதோ அங்கு குற்றம் குறைவாக இருக்கும், மக்கள் நிம்மதியுடன் வாழ்வார்கள்.

இது போன்ற தளங்களால் சீரழிவது நம்மை போன்ற வயது வந்தவர்கள் அல்ல. நாம் இதை விட பெரும் சீர்கேடுகளை நடைமுறை வாழ்க்கையில் பார்த்துக்கொண்டே நல்வழி நடப்பவர்கள். ஆனால், அறிந்தும் அறியாமல் விடலைப்பருவத்தில் இருப்பவர்கள் இதன் மூலம் திசை திருப்பப்படுவது மிக மிக மோசமான விஷயம். டீன் ஏஜ் பருவம் என்படும் அந்த பருவத்தில் மனதை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் உயரத்தை அடைவார்கள். வாழ்க்கையை புரிந்து நடக்கும் பக்குவம் வரும் வரை அவர்களை வழி நடத்துவது பெற்றோர்களின் கடமை. இக்காலகட்டத்தில் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவேண்டியவை. முக்கியமாக இணைய பயன்பாடு. அவர்களே தீயவற்றை அறியாமல் இருந்தாலும் அதை அறிய வைத்து திசை திருப்ப இணையத்தில் நிறைய நச்சுக்கள் இருக்கின்றன. பருவ வயது பெண்களை வைத்திருப்பவர்கள் மிக, மிக கவனமாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வியாபாரம் என்ற அடிப்படையில் தான் இயங்குகின்றன. நம் நன்மை தீமைகளை வியாபாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். நமக்கு தேவையானதை நாம் எடுக்க வேண்டும், தேவையற்றதை விலக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் கூகிள் நிறுவனம் நம் வேண்டுகோளை ஏற்க வாய்ப்பில்லை. அப்படியே சொற்களை வைத்து தடுத்தாலும் நம் புத்திசாலி சிகரங்கள் தடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏதுவான புனைப்பெயர், செல்லப்பெயர் வைத்துக்கூட எழுதுவார்கள். அப்போது என்ன செய்ய முடியும்..? விஞ்ஞானம் என்பது விலங்கிட முடியாத விந்தை உலகம்.