PDA

View Full Version : என்ன வேறுபாடு

இனியவள்
18-07-2007, 08:19 PM
மேகங்கள் போல்
சோகங்கள் எம்மை
சூலும் போது பூனை
போன்று கோழையாய்
ஓடுகின்றாய்...

உனக்கு துன்பங்கள்
நேரும் போது
பருந்தாய் காப்பாற்ற
நாம் வருவோம் என
நீ நினைக்கின்றாய்...

எமக்கு நீ உதவிக்
கரம் நீட்டவில்லை
எம்பதற்காய் உனக்கு
நாங்கள் நீட்டாவிட்டால்
நமக்குள் என்ன வேறுபாடு..

ஓவியன்
18-07-2007, 08:42 PM
நான் முன்பு எப்போதோ எழுதிய வரிகளிவை இனியவள், உங்கள் கவிதைக்காக மீளவும்.........

என்றாவது ஒரு நாள்
காற்றும் திசை மாறும்
நானும் சிகரத்திலேறுவேன்.
அன்று நான் உனை
வெறுக்க மாட்டேன்
ஏனென்றால் எந்தன்
வானுயர்ந்த வளர்ப்பு முறை
அப்படி இது எங்கே
உனக்குப் புரியப் போகிறது???

இனியவள்
18-07-2007, 08:49 PM
நான் முன்பு எப்போதோ எழுதிய வரிகளிவை இனியவள், உங்கள் கவிதைக்காக மீளவும்........
என்றாவது ஒரு நாள்
காற்றும் திசை மாறும்
நானும் சிகரத்திலேறுவேன்.
அன்று நான் உனை
வெறுக்க மாட்டேன்
ஏனென்றால் எந்தன்
வானுயர்ந்த வளர்ப்பு முறை
அப்படி இது எங்கே
உனக்குப் புரியப் போகிறது???

அருமை ஓவியன் வாழ்த்துக்கள்
ஒரு முத்தைப் போட்டு பல*
முத்துக்கள் எடுத்துக்கொண்டிருப்பது
போன்று ஓர் பிரமிப்பு ஒரு கவிதைக்கு
பதில் கவிகள் வளர்கின்றது எமது
திறமை மென்மேலும்

aren
18-07-2007, 11:26 PM
இனியவள் அவர்களின் கவிதை வரிகள் பிரமாதம். ஆனால் இதுதான் இன்றைய உலகின் நிலை. இப்படித்தானே பலர் நினைக்கிறார்கள். அவர்கள் பிரச்சனை அனைத்திற்கும் மற்றவர்கள் வந்து உதவிட வேண்டும் ஆனால் மற்றவர்களின் பிரச்சனை அவர்கள் காதுக்குள் போவதில்லை.

அருமை. தொடருங்கள்.

சிவா.ஜி
19-07-2007, 05:07 AM
நீண்ட இடைவெளிக்குப்பிறகு
காதல் வாசமில்லாத கருத்துக்கவிதை.
சுயநலம் ஒரு நோயாய் எல்லோரையும் பிடித்துள்ளது
சிலர் மட்டும் ஆரம்பத்திலேயே உணர்ந்து
குனப்படுத்திக்கொள்கிறார்கள்.
பாராட்டுக்கள் இனியவள்.

அமரன்
19-07-2007, 08:35 AM
இனியவள் காதல் கவிதைகளில் இருந்து சற்று வெளியேயும் வர ஆரம்பித்துக்கின்றார்...வாழ்த்துக்கள்...
கவிதையை பற்றி ஏற்கனவே நண்பர்கள் சொல்லி விட்டார்கள்...அதனால் சின்னதாக சொல்கின்றேன்...
இதேபோன்று இருப்போர் சிலர்..
அவர்களாலேயே
மனிதன் என்னும் பெயர் எமக்கு இன்னும் நிலைத்திருகின்றது....

மனோஜ்
19-07-2007, 08:39 AM
மனிதனின் உயர்ச்சி அவனின் தான் என்பதிலிருந்து வெளிவரும் பொழுது இதை உணர்த்தும் கவிதை அருமை இனி

இனியவள்
19-07-2007, 08:55 AM
இனியவள் அவர்களின் கவிதை வரிகள் பிரமாதம். ஆனால் இதுதான் இன்றைய உலகின் நிலை. இப்படித்தானே பலர் நினைக்கிறார்கள். அவர்கள் பிரச்சனை அனைத்திற்கும் மற்றவர்கள் வந்து உதவிட வேண்டும் ஆனால் மற்றவர்களின் பிரச்சனை அவர்கள் காதுக்குள் போவதில்லை.

அருமை. தொடருங்கள்.

நன்றி ஆரென் அண்ணா..

தோல்வி ஒன்று இருந்தால் தான்
வெற்றியின் அருமை புரிகின்றது

பிரிவு ஒன்று இருந்தால் தான்
ஒற்றுமையின் அருமை தெரிகின்றது...

இப்படி சிலர் இருப்பதால் தான்
நல்ல மனிதர்களும் இருக்கின்றனர்
என தெரிந்து கொள்ள முடிகின்றது....

இனியவள்
19-07-2007, 09:01 AM
நீண்ட இடைவெளிக்குப்பிறகு
காதல் வாசமில்லாத கருத்துக்கவிதை.
சுயநலம் ஒரு நோயாய் எல்லோரையும் பிடித்துள்ளது
சிலர் மட்டும் ஆரம்பத்திலேயே உணர்ந்து
குனப்படுத்திக்கொள்கிறார்கள்.
பாராட்டுக்கள் இனியவள்.

நன்றி சிவா.ஜி

இனியவள்
19-07-2007, 09:02 AM
இனியவள் காதல் கவிதைகளில் இருந்து சற்று வெளியேயும் வர ஆரம்பித்துக்கின்றார்...வாழ்த்துக்கள்...
கவிதையை பற்றி ஏற்கனவே நண்பர்கள் சொல்லி விட்டார்கள்...அதனால் சின்னதாக சொல்கின்றேன்...
இதேபோன்று இருப்போர் சிலர்..
அவர்களாலேயே
மனிதன் என்னும் பெயர் எமக்கு இன்னும் நிலைத்திருகின்றது....

நன்றி அமர்...

ம்ம் நீங்கள் சொல்லுவதும் சரி தான் அமர்

இனியவள்
19-07-2007, 09:06 AM
மனிதனின் உயர்ச்சி அவனின் தான் என்பதிலிருந்து வெளிவரும் பொழுது இதை உணர்த்தும் கவிதை அருமை இனி

நன்றி மனோஜ் அண்ணா

ஷீ-நிசி
19-07-2007, 09:11 AM
இன்னா செய்தாரை ஒருத்தர் அவர்நாண
நன்னயம் செய்து விடல்...

இது திருக்குறள்...

இனியவளின் கவிதை இந்தக் குறளை பறைசாற்றி நிற்கிறது...