PDA

View Full Version : மாறாக்காதல்

இனியவள்
18-07-2007, 07:29 PM
அவித்த நெல்
மீண்டும் முளைப்பதில்லை....

கற்ற கல்வி என்றும்
மறப்பதில்லை...

காற்று என்றும் நிற்பதில்லை
அலைகள் கரையைத் தொட
முயற்சிப்பதை நிறுத்துவதில்லை....

உன் விழியை நோக்கும்
என் விழி என்றும் ஓய்ந்ததில்லை....

உன் மேல் என் இதயம்
கொண்ட காதல் என்றும்
மாறவில்லை...

நீ என்னை பிரிந்த போது
உன் நினைவை மறக்க
முயற்சிக்கவில்லை நினைவுகள்
தொடர்கின்றன என்றும்
அழிவில்லாப் பாதையை
நோக்கி

அமரன்
18-07-2007, 07:41 PM
இனியவள் ஆரம்பத்தில் அழகான லேடி டி.ஆராக இருந்துவிட்டு...
முடிவில் அரசியல்வாதி டி.ஆர் ஆகிட்டீங்க போலுள்ளது...
தொடருங்கள்....

alaguraj
18-07-2007, 07:47 PM
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.....

நண்ப*ர்க*ளே...எப்ப*டி இவ*ர் என்ன* எழுதினாலும் க*விதை பூக்க*ள் பூக்கிற*து..

ஓவியன்
18-07-2007, 07:49 PM
நீ என்னை பிரிந்த போது
உன் நினைவை மறக்க
முயற்சிக்கவில்லை நினைவுகள்
தொடர்கின்றன என்றும்
அழிவில்லாப் பாதையை
நோக்கி

அனுபவ பாதையில்
நினைவுகளை அசை
போட்டுக் கவிகளோடு
வாழ்வதும் காதலே!.

வரிகளுக்கு வாழ்த்துக்கள் இனியவள்!

aren
18-07-2007, 11:28 PM
உங்கள் வயது என்று நினைக்கிறேன். எதை எழுதினாலும் அது முத்து முத்தாய் கவிதையாய் வந்து விழுகிறது.

காதலன் இலக்கியம் இதுதானா? பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
19-07-2007, 05:00 AM
காற்று என்றும் நிற்பதில்லை
அலைகள் கரையைத் தொட
முயற்சிப்பதை நிறுத்துவதில்லை....

இனியவளின் கவிதை
என்றும் நிற்பதில்லை
அலைஅலையாய் வரும்
கவிதையில் சுவை என்றும்
குறைவதில்லை!
மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள்.

அமரன்
19-07-2007, 08:29 AM
உங்கள் வயது என்று நினைக்கிறேன். எதை எழுதினாலும் அது முத்து முத்தாய் கவிதையாய் வந்து விழுகிறது.
காதலன் இலக்கியம் இதுதானா? பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அனுபவம் அண்ணா அனுபவம்..

இனியவள்
19-07-2007, 08:42 AM
இனியவள் ஆரம்பத்தில் அழகான லேடி டி.ஆராக இருந்துவிட்டு...
முடிவில் அரசியல்வாதி டி.ஆர் ஆகிட்டீங்க போலுள்ளது...
தொடருங்கள்....

ஹா ஹா அமர் கடைசியில டி.ஆர் ஆக்கிட்டீங்களா

நன்றி அமர்...

இனியவள்
19-07-2007, 08:44 AM
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.....
நண்ப*ர்க*ளே...எப்ப*டி இவ*ர் என்ன* எழுதினாலும் க*விதை பூக்க*ள் பூக்கிற*து..

பெரிய விஷயம் இல்லை அழகுராஜ்

யாரோடையாவது கதைத்துக்கொண்டு
இருக்கும் போது கருக்கிடைக்கின்றது
அதை கொண்டு கவிதை எழுதிக்
கொண்டிருக்கின்றன்..

இனியவள்
19-07-2007, 08:46 AM
அனுபவ பாதையில்
நினைவுகளை அசை
போட்டுக் கவிகளோடு
வாழ்வதும் காதலே!.
வரிகளுக்கு வாழ்த்துக்கள் இனியவள்!

நன்றி ஓவியன்

அழகான நான்கு
வரிக் கவிதைகு
வாழ்த்துக்கள்..

இனியவள்
19-07-2007, 08:47 AM
உங்கள் வயது என்று நினைக்கிறேன். எதை எழுதினாலும் அது முத்து முத்தாய் கவிதையாய் வந்து விழுகிறது.
காதலன் இலக்கியம் இதுதானா? பாராட்டுக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா...

இனியவள்
19-07-2007, 08:48 AM
காற்று என்றும் நிற்பதில்லை
அலைகள் கரையைத் தொட
முயற்சிப்பதை நிறுத்துவதில்லை....
இனியவளின் கவிதை
என்றும் நிற்பதில்லை
அலைஅலையாய் வரும்
கவிதையில் சுவை என்றும்
குறைவதில்லை!
மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள்.

நன்றி சிவா.ஜி