PDA

View Full Version : வாழ்க்கை



aren
18-07-2007, 06:09 PM
மனைவி ஊசியாகவும்
கணவன் நூலாகவும்
இருந்தால்தான்
வாழ்க்கை என்ற
சட்டையைத்
தைக்கமுடியும்!!!

அமரன்
18-07-2007, 06:12 PM
ஆகா ஆரெனண்ணா.அழகான சட்டை மன்னிக்கவும் கவிதை...

தந்தையும் தாயும்
தைத்த சட்டையின்
வண்ணங்கள்தான்
குழந்தைகளோ

aren
18-07-2007, 06:15 PM
ஆகா ஆரெனண்ணா.அழகான சட்டை மன்னிக்கவும் கவிதை...

தந்தையும் தாயும்
தைத்த சட்டையின்
வண்ணங்கள்தான்
குழந்தைகளோ

வாவ்!!! இது இன்னும் அழகாக இருக்கிறதே. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
19-07-2007, 04:57 AM
அழகான தத்துவத்தை
அருமையான கவிதையில் சொன்ன
ஆரென் அவர்களுக்கு
நல்ல சட்டை என்றும் பெற்றிட வாழ்த்துக்கள்!

இளசு
19-07-2007, 07:20 AM
இரண்டு சக்கரம்
இரட்டை மாடு

இப்படிக் கேள்விப்பட்ட உறவைப்பற்றி
முற்றிலும் புதிய கோணம்..
அதிலும் சட்டை உவமை − அசத்தல்!

பாராட்டுகள் அன்பின் ஆரென்!

aren
19-07-2007, 08:55 AM
அழகான தத்துவத்தை
அருமையான கவிதையில் சொன்ன
ஆரென் அவர்களுக்கு
நல்ல சட்டை என்றும் பெற்றிட வாழ்த்துக்கள்!

நன்றி சிவா.ஜி அவர்களே. உங்கள் கவிதைகளில் இருக்கும் வார்த்தைகளைக்கண்டு எப்படி இப்படியெல்லாம் எழுதமுடிகிறது என்று பிரமிப்பவன் நான். உங்களிடமிருந்து வாழ்த்துச்செய்தி. நன்றி சிவா.

நன்றி வணக்கம்
ஆரென்

paarthiban
19-07-2007, 08:56 AM
நல்ல கவிதை பாராட்டுக்கள் ஆரென் அவர்களே

aren
19-07-2007, 08:57 AM
இரண்டு சக்கரம்
இரட்டை மாடு

இப்படிக் கேள்விப்பட்ட உறவைப்பற்றி
முற்றிலும் புதிய கோணம்..
அதிலும் சட்டை உவமை − அசத்தல்!

பாராட்டுகள் அன்பின் ஆரென்!

நன்றி இளசு அவர்களே.

ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆவலில் இது அதிசயமாக வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். பதிக்கும்வரை கொஞ்சம் பயம்தான், அப்புறம் ஆனது ஆகட்டும் என பதித்துவிட்டேன்.

மக்கள் கத்துவார்களோ என்று நினைத்தேன். உங்களிடமிருந்தே பாராட்டு கிடைத்துவிட்டது. மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
19-07-2007, 09:02 PM
தைத்து தைத்துக்
கந்தலானாலும்
தையல் நீ
தைப்பதால்
தைக்கும் வலி கூட
தைக்கவில்லையே!.

lolluvathiyar
21-07-2007, 03:07 PM
அப்பவும் ஊசி போல குத்தர பவர் பெண்களுக்கு தான் போலிருக்கு

ஆதவா
21-07-2007, 06:23 PM
வாவ்!! அசத்தல் உவமை.. நான்குவரி நச் கள் என்றுமே இனிமையாகத்தான் இருக்கும்....

வாழ்வுச் சட்டைக்குத் தகுந்த அமரனின் கவிதையும் அட போடவைக்கிறது.

ஓவியா
06-08-2007, 01:46 AM
மனைவி ஊசியாகவும்
கணவன் நூலாகவும்
இருந்தால்தான்
வாழ்க்கை என்ற
சட்டையைத்
தைக்கமுடியும்!!!

அட அருமையான தத்துவம். நன்றி அண்ணா.


பின் குறிப்பு
அப்ப, நான் உடனே ஒரு நூல்கண்டு வாங்க வேண்டுமா!!!. :icon_wink1: :icon_winக்1:

இலக்கியன்
06-08-2007, 08:47 AM
வித்தியாசமான சிந்தனை தொடரட்டும்

ஷீ-நிசி
06-08-2007, 02:41 PM
மனைவி ஊசியாகவும்
கணவன் நூலாகவும்
இருந்தால்தான்
வாழ்க்கை என்ற
சட்டையைத்
தைக்கமுடியும்!!!

முற்றிலும் இது புதிய கற்பனைதான் ஆரென்! வாழ்த்துக்கள்!

கிழிப்பதும், தைப்பதுமே வாடிக்கையாகிவிட்டது பலர் வாழ்க்கை சட்டை!

aren
06-08-2007, 04:00 PM
ஆண்கள் நாரு நாராக கிழிக்கப்படுகிறார்கள் இந்த காலத்தில், அதுவே அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது இல்லையா ஷீ−நிசி.

aren
06-08-2007, 04:02 PM
வித்தியாசமான சிந்தனை தொடரட்டும்

நன்றி இலக்கியன் அவர்களே. ஏதோ உங்களை மாதிரி இருப்பவர்கள் அழகாக எழுதுவதைப் பார்த்து நாமும் ஏதாவது எழுதலாமே என்பதில் வந்த வினை இது. யாரையோ பார்த்து யாரோ சூடு போட்டுக்கொண்டதுமாதிரி.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
06-08-2007, 04:02 PM
அட அருமையான தத்துவம். நன்றி அண்ணா.


பின் குறிப்பு
அப்ப, நான் உடனே ஒரு நூல்கண்டு வாங்க வேண்டுமா!!!. :icon_wink1: :icon_winக்1:


நன்றி ஓவியா. ஆனால் நீங்கள் ஊசியும் வாங்கவேண்டும் அல்லவா?

aren
06-08-2007, 04:04 PM
வாவ்!! அசத்தல் உவமை.. நான்குவரி நச் கள் என்றுமே இனிமையாகத்தான் இருக்கும்....

வாழ்வுச் சட்டைக்குத் தகுந்த அமரனின் கவிதையும் அட போடவைக்கிறது.

நன்றி ஆதவன். சொல்லப்போனால் அமரன் அவர்களின் கவிதையே இதற்கு பலத்தைக் கொடுக்கிறது.

அக்னி
06-08-2007, 04:50 PM
வாழ்க்கை என்ற சட்டையில்,
பொத்தல் போட்டது யார்?
நூலை சட்டையோடு பின்னிவிட்டு,
விலத்திவிடும் ஊசி...
செய்வது தியாகமா?
தியாகம் என்றால்,
இதுதான் விவாகமா?

ஆரென் அண்ணாவின் கவிதை சட்டை அழகு...
அதற்கு வர்ணம் பூசிய அமரன் கவியும் அழகு...
வாழ்த்துக்கள்...

ஓவியா
07-08-2007, 12:39 AM
நன்றி ஓவியா. ஆனால் நீங்கள் ஊசியும் வாங்கவேண்டும் அல்லவா?

ஆமாம் ஊசிமல்லிகை பூச்சரங்கொண்ட மாலையை கழுத்தில் வாங்க வேண்டும். சரிதான்.

இலக்கியன்
07-08-2007, 08:08 AM
நன்றி இலக்கியன் அவர்களே. ஏதோ உங்களை மாதிரி இருப்பவர்கள் அழகாக எழுதுவதைப் பார்த்து நாமும் ஏதாவது எழுதலாமே என்பதில் வந்த வினை இது. யாரையோ பார்த்து யாரோ சூடு போட்டுக்கொண்டதுமாதிரி.

நன்றி வணக்கம்
ஆரென்

உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்