PDA

View Full Version : நில நடுக்கம்



இணைய நண்பன்
18-07-2007, 10:46 AM
நிலமகள் கொஞ்சம்
கிளுகிளுப்பாய்
உடலை அசைத்து
நடனமாடினால் ஜப்பானில்
நடனத்தின் ஆவேசத்தில்
சில மக்கள் உயிர் தியாகம்
பல மக்கள் அகதி அந்தஸ்து
பல கட்டடங்கள் நிர்க்கதி

அக்னி
18-07-2007, 10:48 AM
நிலமகள் கிளுகிளுப்பாய்
ஆடவில்லை...
மனிதர்கள் செய்யும்
சில்மிஷம் தாங்காமல்,
சிலிர்க்கின்றாள்...

பாராட்டுக்கள்... இக்ராம்...

அமரன்
18-07-2007, 10:48 AM
நில நடுக்கத்தின் காரணம் இதுவோ..சிறப்பு இக்ராம்....கவிஞர்களின் கற்பனை அலாதியானது....பாராட்டுக்கள்..தொடருங்கள்...

சிவா.ஜி
18-07-2007, 10:49 AM
வித்தியாசமான கற்பனை. ரொம்ப நல்லா இருக்கு இக்ராம்.

அமரன்
18-07-2007, 10:51 AM
நிலமகள் கிளுகிளுப்பாய்
ஆடவில்லை...
மனிதர்கள் செய்யும்
சில்மிஷம் தாங்காமல்,
சிலிர்க்கின்றாள்...

பாராட்டுக்கள்... இக்ராம்...

சில்மிஷம் பிடிக்கவில்லை
நிலமகள் சிலிர்க்கவில்லை
தாண்டவம் ஆடுகின்றாள்...

இணைய நண்பன்
18-07-2007, 10:55 AM
ஏதோ கற்பனையை தட்டிவிட்டேன்.நன்றி தோழர்களே..(அக்னி−அமரன்−சிவா.ஜி)

இனியவள்
18-07-2007, 02:06 PM
நிலநடுக்கம் அருமையான கற்பனை அழகான கவிதை
வாழ்த்துக்கள் இக்ராம்

ரிஷிசேது
18-07-2007, 06:04 PM
நிலமகளின் கோபம் கூட கவிதையானது இக்ராமின் கற்பனையில். பாராட்டுக்கள்
ரிஷிசேது

aren
18-07-2007, 06:18 PM
சரியான நேரத்தில் வந்த கவிதை மிகவும் அருமை இக்ராம் அவர்களே. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இணைய நண்பன்
19-07-2007, 09:44 AM
உங்கள் பாரட்டுக்க*ளுக்கு ந*ன்றி இனிய*வ*ள்− ரிஷிசேது−ஆரென்

ஓவியன்
19-07-2007, 08:21 PM
மக்கள் மாக்களாவதைக்
கண்டு நடுங்கி
அழுகிறாளோ பூமாதேவி?
நில நடுக்கமாய்...........!.

அழகான வரிகள் இக்ராம்!.

lolluvathiyar
21-07-2007, 03:06 PM
சூப்பர் இக்ராம்,
நில மகள் நடனமாடியதுக்கே இப்படி என்றால்
குட்டிகரனம் அடித்தால் எப்படியோ

ஆதவா
21-07-2007, 06:39 PM
முதலாவதாக கவிதை நாடுதாண்டி சென்றதற்கு ஒரு குட்,..
அடுத்து.. இன்னும் கவிதையில் கொஞ்சம் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.. கவிதை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிவதுபோல...

சொல்லவந்த கருத்து மிக அருமை. இன்னும் தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். அதாவது விரிவு படுத்தியிருக்கவேண்டும்.. எனினும் அழகான சிற்பம்.

இணைய நண்பன்
21-07-2007, 06:57 PM
உங்கள் அறிவுரைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.