PDA

View Full Version : தமிழனே!குந்தவை
18-07-2007, 09:38 AM
தமிழனே!

ஏனடா திமிர் உனக்கு??

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றிய மூத்தக்குடி என்பதாலா?


வீரத்தின் விளைநிலத்துக்கு உரியவன் என்பதாலா?

எத்தனையோ மக்களைப் பார்த்தாலும்

தமிழ்மகனைப் பார்த்தால்
ஒரு பாசம் வருகிறதே
அது ஏன்?

தமிழனே!

ஆழமான அறிவும்
அதற்கேற்ற கர்வமும்தான்
உன் அடையாளம்!!!

பாரதியின் தலை தாழ்ந்த்தில்லை
கட்டபொம்மனின் தலை தாழ்ந்த்தில்லை
காமராசரின் தலை தாழ்ந்த்தில்லை
என்றும் தமிழனின் தலை தாழக்கூடாது!

இயற்கையனைத்தும்
உன்னை நேசிப்பதை
உணர்ந்து கொள்ளடா!


பிறரை மதிப்பதும்
மதிப்பைப் பெறுவதும்
உனக்கு கைவந்த கலை!

ஊரோடு ஒத்துவாழ்
என் சகோதரனே!

அன்பை பரிமாறுவதில்
நம்மை மீற ஆளில்லை!!!


ஆனால்

எனக்கு ஒரு சந்தேகம்!

புராணங்களிலும் புதினங்களிலும்

வாழ்கிறேனா நான்?

நா.பா.வின் அரவிந்தனும்
குந்தவையின் வந்தியத்தேவனும்
சிவகாமியின் நரசிம்மரும்
கல்கி விளக்கிய ஆதித்தனும்

இன்றும் வாழ்கிறார்களா?

விடையளிப்பாயா என் வீரச்சகோதரனே???
பி.கு.

எனக்கு தெரிந்ததை எழுதினேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

சிவா.ஜி
18-07-2007, 09:43 AM
திறமையுள்ள இடத்தில் திமிர் இருக்கும். நீங்கள் சொல்வதுபோல் இன்னும் புதினங்களிலும் புரானங்களிலும் வாழ்பவர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் நிச்சயமாக இல்லை. அதை விட்டு வெளி வந்து கேள்வி கேட்க தொடங்கிவிட்டீர்களே...இதுதான் தேவை. உங்களின் முதல் படைப்பு என்று நினைக்கிறேன். அட்டகாசமான ஆரம்பம். வாழ்த்துக்கள்.

மனோஜ்
18-07-2007, 09:48 AM
திமிர் என்றால்
இவைகளை விட்டு வெளிவருதல் என்ற அர்த்தமும் உள்ளது
அருமை தொடருங்கள்

குந்தவை
18-07-2007, 09:51 AM
நன்றி அண்ணா!

இது என்னுடைய இரண்டாம் படைப்பு.

முதல் படைப்பையும் பாருங்களேன்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6435


தங்கள் கருத்துக்கள் என்னை செம்மைப்படுத்தும்.

lolluvathiyar
18-07-2007, 10:03 AM
அருமையான கவிதை ஆரேப்,
10 இபணத்துடன் வாழ்த்துகள்


[ப்]
குந்த*வையின் வ*ந்திய*த்தேவ*னும்
சிவ*காமியின் ந*ர*சிம்ம*ரும்
க*ல்கி விள*க்கிய* ஆதித்த*னும்
இன்றும் வாழ்கிறார்களா?


கல்கி ரசிகர் போல் தெரிகிறது.
நானும் கல்கி ரசிகன்தான்
இவர்க்ள் கல்கி மூலம் வாழ்ந்தார்கள்
தமிழ் இருக்கும் வரை வாழ்வார்கள்
தமிழ் என்றுமே சாகாது

(* குறிகளை எடிட் பன்னி நீக்கிவிடவும்)

இணைய நண்பன்
18-07-2007, 10:28 AM
அழகான கவிதை.உங்கள முதல் படைப்பையும் பார்த்தேன்.வித்தியாசமான கோணத்தில் உங்கள் கற்பனை இருக்கிறது.மேலும் படைப்புக்களைத்தர வாழ்த்துக்கள்

அக்னி
18-07-2007, 11:27 AM
தமிழனுக்குத் திமிர் அடையாளமா...?
திமிருக்கு தமிழன் உதாரணமா..?

காவியத்தில் மட்டுமா தமிழ் வீரம்..?
இல்லை...
புயங்களின் துடிப்பு, இன்னமும் இருக்கிறது...
உலகமே எதிர்த்தாலும்,
துவளாத, தமிழனின் வீரம்...
வரம்...

வாழ்த்துக்கள் குந்தவை...
வித்தியாசமான கவிதைகளில் கவர்கின்றீர்கள்...

ஒரு குறிப்பாய், கவிதைகளின் நீளத்தையும், அமைப்பையும் கொஞ்சம் கருத்திற் கொள்ளுங்கள்...

நன்றி!

ஷீ-நிசி
18-07-2007, 12:10 PM
தமிழனைப் பற்றின கவிதை நன்றாக உள்ளது நண்பரே!

தொடர்ந்து படையுங்கள்!

பார்த்திபன்
18-07-2007, 12:39 PM
தமிழன்..
தமிழ்....
வீரம்......
இவற்றால் அவனின் திமிர்..

என்றும் இணைபிரியாதது..
அழிக்கமுடியாதது...

கவி...அருமை..

குந்தவை
19-07-2007, 02:32 PM
பாராட்டுக்களுக்கும் பின்னூட்ட*ங்க*ளுக்கும் ந*ன்றி அன்ப*ர்க*ளே!
ஆலோசனைக்கு நன்றி அக்னி அண்ணா. எண்ண ஓட்டங்களை அப்படியே பதிந்ததால் நீளமாகிவிட்டது. இனி திருத்திக்கொள்கிறேன்.
நான் கத்துக்குட்டி.

ஓவியன்
19-07-2007, 08:11 PM
புராணங்களில் மட்டுமல்ல குந்தவை..........
இன்னமும் பற்றி எரிகிறது வீரம் தமிழனில்!

உணர்ந்திருக்கிறேன் − நீங்களும் அறிவீர்கள் வெகு விரைவில்.

வரிகளுக்கு வாழ்த்துக்கள் குந்தவை.