PDA

View Full Version : கற்பனை களம்leomohan
18-07-2007, 09:37 AM
இணையத்தில் கருத்துக்களங்கள் இருக்கின்றன அல்லவா. அதில் எப்போதும் சுவாரஸ்யமான விஷயங்களை பார்க்காலம். சிலர் வாரத்திற்கு ஒரு முறை வந்து ஒரு வெடிகுண்டை தூக்கி போட்டுவிட்டு போய்விடுவார்கள். அதற்கு மாங்கு மாங்கு என்று மற்ற உறுப்பினர்கள் பதில் போட்டுக் கொண்டிருப்பார்கள். திரும்பவும் எப்போதாவது வந்து திரியை குழப்பிவிட்டு போய்விடுவார்கள்.

சிலரோ பக்கம் பக்கமாக எழுதுவார்கள். சிலரோ எழுதிய கருத்தை விட்டு நீ அதிமேதாவியா, நீ புத்திசாலியா, நீ கோமாளியா, நீ சொல்றதெல்லாம் ஒரு தமாஷூ என்று வெறுப்பேத்திக் கொண்டிருப்பார்கள்.


சிலரோ 100 சதவீத கருத்துக்களை எதிர்த்து வேறு ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். யார் எழுதினாலும் தப்பு என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

சிலர் மேல் சொன்ன அனைத்திற்கும் கலவையாக இருப்பார்கள்.

இவர்களை சமாளிப்பதே வழிநடத்துனர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும். அப்படிப்பட்ட இது ஒரு கற்பனை களம் அதில் வரும் நகைச்சுவையும் இதோ.

செய்தி பகுதியில் திரி

பதிவு
தற்கொலை படை தாக்குதல் மூலம் 100 பேர் பலி.


பதில்

இது தேவையில்லாத செய்தி. திருநெல்வேலியில் கொசு மருந்து அடித்து 1000 கொசுக்கள் இறந்துவிட்டன. அதை எழுதுவதை விட்டு வெளிநாட்டில் நடந்த இந்த செய்தி முக்கியமா. கேவலமான இந்தியாவில் பிறந்த நாம் தினமும் கொசுக்களை கொல்கிறோமே அதை எண்ணி வருந்துவதை விட்டு 100 பேர் செத்ததை பெரிய செய்தியாக போட்டிருக்கிறீர்களே. இந்த திரியை பூட்ட வேண்டும்.

மருத்துவ பகுதியில் ஒரு திரி

எழுதுபவர் பல் மருத்தவர்

தினமும் பற்களை இரண்டு முறை விளக்கினால் பல் சுத்தமாக இருக்கும். உடலும் ஆரோக்யமாக இருக்கும்.

பதில் எழுதுபவர் பதித்தவரின் Profileஐ ஒரு முறை கூட பார்த்திருக்க மாட்டார்.

பதில்[/ப்]

இது சுத்த பைத்தியக்காரத்தனமான பேச்சு. காட்டில் வாழும் ஆடு மாடு விலங்குகள் எல்லாம் தினமும் பல்லே தேய்ப்பதில்லை. அதனால் அவை வியாதி வந்து செத்துவிடுகின்றனவா.

பதித்தவருக்கு தான் பெரிய பல் மருத்துவர் என்ற நினைப்பு. இந்த திரியை நகைச்சுவை பதிவுக்கு மாற்ற வேண்டும்.

ஆ[B]ன்மீக பகுதியில் ஒரு திரி

யோகா செய்தால் தினமும் உடல் ஆரோக்யமாக இருக்கும்.

பதில்
இது பகுத்தறிவற்ற ஒரு செயல். அன்டார்டிக்காவில் இருப்பவர்கள் தினமும் யோகாவா செய்கிறார்கள். இதைவிட ஒரு கோமாளித்தனமான பதிவை நான் என் வாழ்நாளான 500 வருடத்திலும் பார்த்ததில்லை. இந்த திரியை உடனடியாக திண்டுக்கல் பூட்டு கொண்டு பூட்ட வேண்டும். அல்லது இதனை உடனடியாக விளையாட்டு பகுதிக்கு மாற்ற வேண்டும்.

விவாத பகுதியில் ஒரு திரி

பாஸ்மதி அரிசியை அதிகம் சாப்பிடுவது ஆண்களா பெண்களா

பதில்

இது தேவையற்ற விவாதம். இதை ஆரம்பித்தவர் தன்னை அதிமேதாவியாக நினைத்துக் கொள்கிறார். என்னமோ பாஸ்மதியை பற்றி அவருக்கும் மட்டும் தான் தெரியும் எனும் போங்கு. மேலும் இது 100 கோடி இந்தியரை பிளவு படுத்தவதாக தெரிகிறது. பாஸ்மதியை அதிகம் சாப்பிடுபவர்கள் ஆண்களே என்று இந்த களத்தில் முடிவுக்கு வந்துவிட்டால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிளவு ஏற்பட்டு நாடு இரண்டு துண்டாகிவிடும். நாடே ஆண்ஸ்தான் பெண்ஸ்தான் என்று பிரிந்துவிடும்.

இதனை உடனடியாக பூட்ட வேண்டும். இல்லையென்றால் ஆண் பெண் இரண்டும் இல்லை என்று இன்னொரு optionஐ சேர்க்க வேண்டும். இது மூன்றாம் அணிக்கு அளிக்கப்பட்டிருக்கும் அநீதி.


கற்பனை தொடரும்....

அமரன்
18-07-2007, 09:45 AM
மோகன்...சிரிப்புகள் அருமை....தொடரும்னு வேறு போட்டிருக்கீங்க.....மாத்திரை வாங்கிடவேண்டியதுதான்...

மலர்
18-07-2007, 09:47 AM
நல்ல கற்பனை..
நகைச்சுவையாக உள்ளது...


கற்பனை தொடரும்....
அடுத்த கற்பனைக்கு வாழ்த்துக்கள்..

leomohan
18-07-2007, 09:51 AM
நன்றி மலர். நன்றி அமரன்.

lolluvathiyar
18-07-2007, 10:26 AM
வித்தியாசமான கற்பனை
நன்றாக ரசித்தேன்
தொடருங்கள்
இதில் நான் எந்த பட்டியலில் இருகிறேன் மோகன்?
நடுநிலை என்று சொல்ல வேண்டாம்
நகைசுவையாக ஏதாவது சொல்லுங்கள்.

leomohan
18-07-2007, 10:39 AM
ஹா ஹா

சரி நீங்கள் நகைச்சுவையாக கேட்டதால் தருகிறேன்.

சிலர் பதித்தவருக்கு உதவுகிறேன் பேர்வழி என்று அவருக்கு ஆதரவாக எதையாவது எழுதப்போக வம்பு செய்பவர்கள் அவருடன் சண்டைக்கு வர ஆரம்பித்துவிடுவார்கள்.

திரியை துவங்கியவர் எஸ்கேப் ஆகிவிடு இவர் மாட்டிக் கொண்டு முழிப்புது வேடிக்கையாக இருக்கும்.

இணைய நண்பன்
18-07-2007, 11:20 AM
நல்ல கற்பனை.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

அக்னி
18-07-2007, 11:31 AM
எப்படி மோகன் உங்களால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது...
தொடர்ந்தும் தொடரட்டும் உங்கள் வித்தியாசமான சிந்தனைமுத்துக்கள்...

இதயம்
18-07-2007, 12:12 PM
மோகனுக்கு கற்பனையாக எழுதுவது என்பது கைவந்த கலை. ஒரு நூல் கிடைத்தால் போதும், அதை வைத்து ஜவுளித்தொழிற்சாலை தொடங்கி, உற்பத்தி செய்து அவற்றை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவரின் கற்பனை பரந்து விரியக்கூடியது, அள்ள, அள்ள குறையாதது..! அதை அவருடைய பெரும்பாலான பதிவுகளை படித்தவர்களுக்கு புரியும். பொதுவாக நகைச்சுவை என்பது அனைவராலும் அத்தனை எளிதாக செய்ய முடியாத விஷயம். ஆனால், நண்பர் எழுதும் சின்ன, சின்ன விஷயத்தில் கூட மிகப்பெரும் நகைச்சுவை இருக்கும். இது அவருடைய சிறப்பியல்பு.

இவர் ஒரு பெரும்புள்ளியும் கூட..! சர்வதேச, தேசிய, மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் அனைத்து தலைவர்களையும் விகடன், குமுதம் போன்ற பிரபல பத்திரிக்கைகளுக்கு முன் (கற்பனை) இவர் பேட்டி எடுத்துவிடுவார். இவர் தலைவர்களிடம் கேட்கும் கிடுக்கிப்பிடி கேள்விகள் நம்மை விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும்.

இவர் அதிகமாக நகைச்சுவையே எழுதுவதால் சீரியஸாக எழுதப்படும் சில பதிவுகளும் கூட நகைச்சுவை கண்ணோட்டத்துடன் பார்க்கப்படும் அளவுக்கு நகைச்சுவையின் ஆளுமை இவரிடம் மிக அதிகம். அந்த வகையில் நண்பர் மோகன் ஒரு "காமெடி கிங்" என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பதிவை படித்து விட்டு நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அவர் சொன்னவை எதுவும் உண்மை இல்லை என்றாலும் அதை நகைச்சுவை கலந்து சொன்னவிதம் மிக அற்புதம். அவர் இந்த பதிவை அளித்ததன் நோக்கம் வீணாகவில்லை என்பதை இதன் மூலம் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மன்றத்தினரை மகிழ்விக்க மோகன் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு என் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மோகன் இது போல் இன்னும் பல கற்பனை பதிவுகளை பதித்து நம் மன்றத்தை மகிழ்விக்க வேண்டும் என்று அனைவரின் சார்பாக அவரை கேட்டுக்கொள்கிறேன். நன்றி..!

ஷீ-நிசி
18-07-2007, 12:53 PM
மோகன் சார்... சான்ஸே இல்லை.... பிரமாதமான நகைச்சுவை இது.. அந்தர் பன்னிட்ட வாத்தியாரே... கலக்கல்....

ஓவியன்
18-07-2007, 07:47 PM
மோகன் சார்... சான்ஸே இல்லை.... பிரமாதமான நகைச்சுவை இது.. அந்தர் பன்னிட்ட வாத்தியாரே... கலக்கல்....

என்ன ஷீ மோகன் அண்ணாவை இப்படித் திட்டுறீங்க? :grin:

aren
18-07-2007, 07:54 PM
மோகன் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் மன்றத்தில் இருக்கும் ஒரு சிலரை நையாண்டிசெய்து எழுதமாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நகைச்சுவை நகைச்சுவையாகவே இருக்கட்டும். தனி மனித நையாண்டியாக மாறவேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

மனோஜ்
18-07-2007, 08:07 PM
மோகன் சார் கலக்கல் சிறப்பாக இருந்தது
தொடர்ந்து சிரிக்க நாங்க தயார் எழுத நீஙக தயாரா ?

leomohan
19-07-2007, 07:52 AM
ஒரு சிலர் ஏதாவது ஒரு கட்சியின் தீவிர ரசிகராக இருப்பார்கள். அவர்கள் பதித்தவரை எப்படியாவது எதிர் கட்சியாக காட்ட வேண்டும் என்று துடிப்பார்கள். அவர்களுக்கு தன் கட்சி எந்த

தவறு செய்திருந்தாலும் பரவாயில்லை அதே தப்பை அல்லது அதை விட பெரிய செய்திருந்தால் சந்தோஷம்.

பதிவு
குத்திமுக கட்சியை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் ப்ளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேரை தன் டாடா சீயாராவால் ஏற்றிக் கொன்றார்.

பதில்

இதை எழுதியவர் சுத்திமுகவை சேர்ந்தவர் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் ஏனோ இந்த நடுநிலை வேடம். சென்ற சுத்திமுக ஆட்சியில் நின்றுக் கொண்டிருந்து மூன்று பேரை கொன்று சாகும்போது கூட அந்த மூவருக்கும் கஷ்டத்தை கொடுத்திருக்கின்றனர் என்பதை இவரால் மறுக்க முடியுமா. எப்படியிருந்தாலும் படுத்துக் கொண்டு தான் சாக வேண்டும் என்பதை அறிந்த எங்கள் எம் எல் ஏ எந்த கஷ்டமும் கொடுக்காமல் படுத்துக் கொண்டிருந்தவரையே கொன்றார் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.


ஒரு சிலர் ஏதாவது ஒரு தலைவரின் மேல் வெறித்தனமான மதிப்பை கொண்டிருப்பார்கள். அவர்களை பற்றி ஏதாவது சொல்லிவிட்டால் வில்லும் வாளும் எடுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்.

பதிவு
தலைவர் ஜகாஸ் ஜக்குவிற்கு உண்மையில் வழுக்கை தலை. அவர் முடிவளர வேண்டும் என்று தினமும் கேரளாவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட எண்ணெய் தடவி வந்தார்.

இதனை கவிஞர் கின்னதாசன் தனது சுயசரிதையில் 1964ல் எழுதியிருந்தார்.


பதில்
இதையெழுதியவர் ஒரு ஆதிக்க வெறியர் என்பது இதில் இருந்தே தெரிகிறது. ஆதிக்க வர்கத்தினர் தலையில் முடியிருக்கும் போதே எண்ணெய் தடவி வந்தார்கள். இது 5000 ஆண்டுகளுக்கு முன் நாமெல்லாம் கண்கூடாக பார்த்த உண்மை. அவ்வாறு இருக்க எங்கள் தலைவர் மொட்டை என்பதால் தானே எண்ணெய் தடவினார். உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயம்.

இந்த ஆதிக்கத்தை நாங்கள் ஒழிக்காமல் விடமாட்டோம்.


ஒரு சிலர் பாரட்டுவது போல் பாராட்டி ஆப்பு வைத்துவிடுவார்கள்

புதிய உறுப்பினர் ஒருவரின் பதிவு

நண்பர்களே என்னுடைய கவிதை குமுதம் இதழில் முதன் முறையாக வெளியானது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பதில்

தோழரே தங்கள் கவிதை வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி. குமுதம் போன்ற மட்டமான சஞ்சிகையில் வீணர்கள் வெட்டியாக இருப்பவர்கள் படிக்கும் பத்திரிக்கையில் தங்கள் கவிதை வெளிவந்ததை நினைத்து என் உடலில் இருக்கும் மயிற்காற்கள் அனைத்தும் நெட்டுகுத்தாய் எழுந்து நின்று ஆள் தோட்ட பூபதிக்கு நடனம் ஆடுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது போலவே மட்டமான புத்தகங்களில் தங்கள் கவிதை வெளிவந்து மட்டக் கவிஞர் மகாதேவன் என்று தாங்கள் பட்டம் பெற வேண்டும் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனை வேண்டிக் கொள்வேன்.

குறிப்பு − இதுபோன்ற ஆப்பிற்கு சுவீட்டாப்பு என்று பெயர் தரலாம். அவ்வாறு எழுதுபவரை சுவீட்டாப்பிஸ்ட் என்று அழைக்கலாம்.

ஒரு சிலர் கவிதை கதைகளை மட்டும் எழுதுவார்கள். எப்போதாவது நேரம் கிடைத்தால் விவாதப்பகுதிக்கு வருவார்கள். அதுவும் திரி 500 பக்கங்கள் தாண்டிய பிறகு. அவர்கள் பொறுமையாக முழுவதையும் படித்த பின்னர் ஒரு எழவும் புரியாமல் ஏதாவது ஒரு கேள்வி கேட்டு வாங்கி கட்டிக் கொள்வார்கள்.


பதிவு500 பக்கங்கள் கடந்தது தலைப்பு - காதல் இல்லையேல் சாதல்

இங்கு என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. காதலா சாதலா

பதில்

யோவ் இத்தனை நேரம் எங்கேய்யா போயிருந்தே. இங்க 1500 உறுப்பினர்கள் பல்லு கூட தேய்க்காமல் 15 நாளா இந்த தலைப்பை பத்தி பேசிக்கிட்டு இருக்கோம். நீ இப்ப வந்து சம்பந்தம் இல்லாமல் இந்த மாதிரி கேள்வி கேட்கறே. போ, போயி 500 பக்கங்களை படித்து விட்டு வா.


புதிய உறுப்பினர்கள் பயனர் கணக்கை பதித்துக் கொண்டதும் அதே நாளில் ஏதாவது பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ் தட்டச்சு முழுவதும் பயிலாமல் இப்படி எழுதுவார்

பதிவு
என் பெயர் லியோ. வனக்காம்

பதில்

உங்கள் பெயர் லியோ என்று சொன்னதும் தெரிந்துக் கொள்ள நீங்கள் என்ன பெர்னாட்ஷாவா லிங்கன்னா அல்லது மோனிகா லிவிங்க்ஸ்கியா. உங்களை பற்றி ஒரு நாளு பத்தி எழுதங்கள்.

தமிழை திருத்திக் கொள்ளுங்கள். நல்வரவு. நன்றி. வணக்கம்.


ஒரு சிலர் தன் திரிகளை யாரும் பார்வையிடுவதில்லை என்று வருந்துவர். அவர்கள் தாமாகவே இன்னொரு பயனர் கணக்கு துவங்குவார்கள். ஆனால் ஐபி வைத்து வழிநடத்துனர்கள்
கண்டுபிடித்துவிடுவார்களே. அதனால் வீட்டில் இருந்து பதிவு செய்துவிட்டு அலுவலகத்திற்கு வந்து பாராட்டு பதிவு போட்டுக் கொள்வார்கள். அப்படியில்லை என்றால் கிராமத்தில் இருக்கும் தம்பியை கட்டாயபடுத்தி தினமும் பாராட்டு பதியும் படி சொல்வார்கள். இல்லையென்றால் வெளிநாட்டில் வேலை தரமாட்டேன் என்று சொல்லிவிடுவார்கள்.இந்த தம்பி மார் குறிப்பாக அண்ணனுடைய பதிவுகளில் மட்டும் அப்பாவியாக பாராட்டி பின்னூட்டம் இட்டுவிடுவார். அதற்கு மேல் இன்டெர்நெட் கபேயில் உட்கார்ந்தால் யார் காசு தருவது.

பதிவு
ரயில் வண்டியை வெள்ளைக்காரன் கண்டுபிடித்து இருந்தாலும் ரயில் பெட்டிகளை தமிழ் நாட்டில் தான் தமிழர்கள் தயாரிக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடுக்கூடாது.


பதில்
அற்புதமான பதிவு. அழகான ஆராய்ச்சி. வெட்டியாக நமீதாவின் இடையளவு என்ன எனும் திரிகளை விட இதுபோன்ற பயனுள்ள யாருமே அறியாத செய்திகளை தருகிறீர்கள். நன்றி அண்ணா.


பின்குறிப்பு - ஆரென் அவர்களே நகைச்சுவை கற்பனை நன்றாக வந்துக் கொண்டிருந்ததால் எழுதியிருக்கிறேன். இதற்கு பிரதியும் எடுத்து வைத்துக் கொண்டேன். சரியில்லாததாக தாங்கள் நினைக்கும் பத்திகளை நீங்கள் நீக்கிவிடலாம். நன்றி.

அமரன்
19-07-2007, 09:49 AM
மோகன்....ஒவ்வொன்றும் அருமை..தொடருங்கள்..

lolluvathiyar
19-07-2007, 02:51 PM
மோகன் கற்பனை களம் பிரமாதமாக கொண்டு செல்கிறீர்கள்.

என்னை போல சிலர் இருப்பார்கள் பாருங்கள் விதன்டாவாதம் செய்யலீனா தூக்கம் வராதவர்கள்
ஏதாவது ஹாட் திரி இருகிறதான் என்று கழுகு பார்வையில் துழாவி, போன வருசத்து திரியை எடுப்பார்கள்,
விவாதம் வளர்க்க அருமையான திரி கிடைத்தவுடன் அனைத்தும் படித்து விடுவர்கள்.
பென் டிரைவில் காப்பி எடுத்து ஆபிஸுக்கு கொண்டு சென்று விடுவார்கள்.
அனைவருக்கும் சூடான பதில் மனதில் யோசித்து விட்டு அதை டைப் அடித்து தயார் செய்து விடுவார்கள
அடுத்த முரை பிரௌசிங் சென்டர் வந்து மீன்டும் லாகின் ஆகி பதிக்க நினைத்து திட்டம் போட்டு திரியை திறந்த பிறகு தான் தெரியும் அது பூட்டு பட்டு பல நாள் ஆகி இருக்கும் என்று.
விடுவார்களா டைப் அடித்தது வேஸ்டா போயிடுமே, அனைத்தையும் ஒன்னு சேத்தி தனி திரியாகவே பதித்து விடுவார்கள்.

தூங்கர திரிய தட்டி எழுப்பர லாஜிக் இருக்கே அடடா அத சொல்லாம இருக்க முடியாது. ஆனால் விரைவில் மோகனே சொல்லிருவாரு பாருங்க*

alaguraj
19-07-2007, 03:01 PM
கைவலிக்க (சிறப்புறை) ஆற்றிய இதயத்துக்கு இந்தாங்க ஒரு சோடா...

lolluvathiyar
19-07-2007, 03:03 PM
கைவலிக்க (சிறப்புறை) ஆற்றிய இதயத்துக்கு இந்தாங்க ஒரு சோடா...

வெறும் சோடா கொடுத்தா எப்படி கூடவே மிக்ஸிங் ஏதாவது இருக்கா?

ஓவியன்
19-07-2007, 03:07 PM
வெறும் சோடா கொடுத்தா எப்படி கூடவே மிக்ஸிங் ஏதாவது இருக்கா?ஆமா பச்சைத் த*ண்ணி வேணும்னா மிக்ஸ் ப*ண்ணிக்க*லாமாம்...........:grin:

விகடன்
26-07-2007, 02:17 PM
கலக்கிறீக லியோமோகன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

leomohan
26-07-2007, 02:39 PM
நன்றி விராடன்

விகடன்
26-07-2007, 02:49 PM
இதில் நன்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது. உண்மையில் சொல்லப்போனால் உங்களை திட்டவேண்டும்!!!

ஏனென்றா கேற்கிறீர்கள்?

இப்படி ஒரு திறமையை இவ்வளவு காலமாக காண்பிக்காது இருந்தமைக்குத்தான்.

leomohan
26-07-2007, 02:57 PM
இதில் நன்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது. உண்மையில் சொல்லப்போனால் உங்களை திட்டவேண்டும்!!!

ஏனென்றா கேற்கிறீர்கள்?

இப்படி ஒரு திறமையை இவ்வளவு காலமாக காண்பிக்காது இருந்தமைக்குத்தான்.

ஹா ஹா. இந்த கிறுக்கல்களை திறமை என்று நம்பியதற்கு

leomohan
12-08-2007, 01:01 PM
வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும்....


உறுப்பினர்

கிழக்கில் சூரியன் உதிக்கிறது.சூரியனை பற்றி மேல் விபரங்கள் அறிய http://www.moreinformationonsun.com எனும் தளத்தை பாருங்கள்.

பின்னூட்டம் - உறுப்பினர் 1

மேற்கே தான் சூரியன் உதிக்கிறது என்ற எங்கள நம்பிக்கைக்கு எதிரான பதிவு. மேலும் உறுப்பினர் கொடுத்த தொடுப்பில் கிழக்கில் தான் சூரியன் உதிக்கிறது என்று எங்கும் எழுதப்படவில்லை. இதிலிருந்தே அவர் தன்னுடைய சொந்த கற்பனையில் இதை எழுதியிருக்கிறார் என்பது விளங்குகிறது.

இது போல உணர்ச்சிகளை தூண்டுவிட்டு களமே மெகாபைட்ஸ் கிகாபைட்ஸாக உடைந்து பிட்ஸ் அண்ட் பைட்ஸாக சிதறி கிடப்பதை எண்ணி மனம் பதைபதைக்கிறது.

உறுப்பினருடைய பாதுகாப்பிற்காக அவரை மன்றம் கடத்த வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன். இது அவருக்குத்தான் நல்லது. இங்கே இருந்தார் என்றால் பக்கம் பக்கமா எழுதி அவருக்கு டார்ச்சர் கொடுத்த கொன்று விடுவோம் எனும் நல்ல எண்ணத்தில் தான் சொல்கிறேன்.

நான் பல நாட்களாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இவருடைய திரிகள் முதுகு தண்டு வடத்தை சிலிர்க்கச் செய்து, கைகளை நடுங்கச் செய்து, கால்களை கைபிசைய செய்து, வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டி, தலைமுடிகளை செங்குத்தாய் நிற்க வைத்து வாள மீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம் என்று ஆடவைக்கிறது.

இதனால் அவருடைய திரிகளை நகைச்சுவை பகுதிக்கு, வேண்டாம், களத்திற்கு வெளியே ஏதாவது திரியில் போட்டுவிடங்கள்.

இல்லாவிட்டால் இது போன்ற உணர்ச்சிமிகு திரிகளை அவர் தொடங்கும் முன்பே அந்த திரிகளை பூட்டிவிட வேண்டும் என்று பேரன்புடன், பணிவன்புடன், சிற்றின்பத்துடன், பேரின்பத்துடன், வணங்கி, தரையில் விழுந்து உருண்டு புரண்ட சட்டையை கிழித்துக் கொண்டு கேட்டுக் கொள்கிறேன்.

பின்னூட்டம் - உறுப்பினர் 2 (அதே உறுப்பினர் வேறு பெயரில் வந்து, ஏனென்றால் அவர் கணினி துறையில் இருப்பதால் அலுவலத்தில் பல கணினிகளில் ஒரே நேரத்தில் வேலை செய்வார் போலும்)

நான் மேலே சொன்னவற்றை ஆமோதிப்பதை தவிர வேறு வழியே இல்லாததை நிலையில் தள்ளப்பட்டிருக்கிறேன். எழுந்து வர நேரமாகும். அதனால் இந்த திரியை பூட்டி, அதிக பூட்டிய திரிகளை துவங்கியவர் என்று லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் அவர் பெயர் வெளி வர ஆவன செய்ய வேண்டும்.

இளசு
12-08-2007, 02:12 PM
வேண்டாம் மோகன்..

வலைப்பக்கங்கள் போல் மன்றம் ஆகாமல் எங்கள் சொந்த நேரத்தைச் செலவிட்டு பாதுகாத்து வருகிறோம்..

ஒரு பண்பை அறிவால் வெல்ல நீங்கள் முயல்கிறீர்கள்..
உங்கள் முயற்சி வெற்றியடையாது போக என் ஆசிகள்!

leomohan
12-08-2007, 02:37 PM
நன்றி இளசு.

மன்மதன்
13-08-2007, 08:23 AM
அவர் இந்த பதிவை அளித்ததன் நோக்கம் வீணாகவில்லை என்பதை இதன் மூலம் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த திரியை பாராட்டிய பதிவின் நோக்கம் அறியா அப்பாவி மக்களை பற்றி சொல்லி இருக்கீங்களா..:icon_ush:

இதயம்
13-08-2007, 08:36 AM
இந்த திரியை பாராட்டிய பதிவின் நோக்கம் அறியா அப்பாவி மக்களை பற்றி சொல்லி இருக்கீங்களா..:icon_ush:
ஆமாம்.. மோகனின் நோக்கத்தை அறியாமல் அல்லது தங்களுடைய பெருந்தன்மையின் அடையாளமாக தான் நண்பர்கள் பாராட்டியிருக்கிறார்கள்..! இதன் தலைப்பு கற்பனைக்களம், எழுதியதும் கற்பனை, இட்டதும் சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவையில்லாத நகைச்சுவை பகுதி என்பதால் இது பற்றிய விமர்சனங்களை அதிகம் வளர்க்கவேண்டாமே மன்மதன்.. ப்ளீஸ்..! மோகன் அவர் வழியில் போகட்டும்.. விடுங்கள்..!! நண்பர் இளசு அவர்கள் தன் கருத்தை முன்பே கூறிவிட்டார்.! இனி, மேலும் என்ன செய்கிறார் என பார்ப்போம்..!