PDA

View Full Version : தடங்கள் மறை(ற)க்கப்படும்.....!



அமரன்
18-07-2007, 07:57 AM
தடங்கலை தடமாக்கி
முடிவை நாடியவனுக்கு
அடித்துரைத்தது அலை
தடங்கள் மறை(ற)க்கப்படும்.....!

ஆதவா
18-07-2007, 08:06 AM
அட! போடும் கவிதை...

தடங்கள் அல்ல.. தடங்கல். இந்த ஒரு வார்த்தையே கவிதையை மாற்றிவிடும் அமரன்.

கால்தடங்களை மட்டுமல்ல உயிர்த்தடங்கலையே ஏற்படுத்த வல்லவை அலைகள். (உயிர்த்தடங்கல் = உயிர்+தடங்கல் (அடைப்பு) உயிரடைப்பு. அதாவது இறப்பு )

தற்கொலைக்கு சமானம்... நினைவுகளைக் கொல்வது.. அல்லது இம்மாதிரி நினைவுகளைக் கொள்வது..

வாழ்த்துக்கள் அமரன்..

ஓவியன்
18-07-2007, 08:17 AM
அசத்தல் வரிகளில் அழகான் கரு அமர்! - வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.:4_1_8:

தடம் பற்றி
தடையம் தேடியவனை
தடம் புரட்டி
தடையமழித்தது
சுனாமி அலைகளாக,
நிகழ்வுகள்!.

leomohan
18-07-2007, 08:20 AM
தடம் அருமை அமரன். வாழ்த்துக்கள்.

அமரன்
18-07-2007, 10:12 AM
நன்றிகள்..ஆதவா..ஓவியன்...மோகன்..
ஆதவா...உங்கள் பின்னூட்டங்களிலும் கற்க முடிகின்றது..நான் சொல்ல வந்ததை அழகாக புரிந்துகொண்டீர்கள்...நன்றி.

ஓவியனே...கலக்குறீர்...."செல்வம்" விளையாடுது...

ஓவியன்
18-07-2007, 10:21 AM
ஓவியனே...கலக்குறீர்...."செல்வம்" விளையாடுது...ஆம் அமரன்!
நாங்கள் செல்வத்தால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாச்சே!.

ஷீ-நிசி
18-07-2007, 11:36 AM
என்னை 'அட' போட வைத்தது இந்த கவிதை.. வாழ்த்துக்கள் அமரன்...

தடங்கல் இல்லாமல் கவிதைகள் வெளி வர வாழ்த்துக்கள்....

அக்னி
18-07-2007, 11:41 AM
ஆதவாவின் விளக்கத்தில் எளிதாகப் புரிந்துகொண்டேன்...
நன்றி ஆதவரே...

பாராட்டுக்கள் அமரன் & ஓவியன்...

ஆதவா
18-07-2007, 12:08 PM
தடங்களை தடமாக்கி − இங்கேதான் தடங்கல் என்று வரவேன்டுமென்று நினைக்கிறேன் அமரன்....

தடங்கலை தடமாக்கி என்று ஆரம்பித்தால் சரி.... நீங்கள் என்ன கருத்தில் " தடங்கள்" என்று உபயோகித்தீர்கள்?

அமரன்
18-07-2007, 12:35 PM
நன்றி..ஷீ...அக்னி...
ஆதவா.....!நீங்கள் சொன்ன அர்த்தமே.....!இரவுத்தூக்கம் தொலைந்ததால் வந்த கவிதை அது....!
தூக்கம் பழிவாங்கியாதால் தடம் மாறிவிட்டேன்....கட்டி இழுத்துவிட்டீர்கள்...நன்றி...

ரிஷிசேது
18-07-2007, 06:44 PM
தடத்தினை ரசித்தேன் மிக அருமை அமர்

அமரன்
18-07-2007, 06:50 PM
நன்றி ரிஷி...

alaguraj
18-07-2007, 07:33 PM
ஆஹா, என்ன ஞானம்.. என்ன ஞானம்.....எல்லாரும் ரொம்ப ஜீனியஸ்ஸா இருக்கேள்....கலக்கரேள்........

இனியவள்
18-07-2007, 08:06 PM
அருமை அமர் வாழ்த்துக்கள்

அமரன்
27-07-2007, 03:47 PM
நன்றி அழகுராஜ். பெரிய ஞானம் எல்லாம் இல்லைங்க. சின்னதா ஒரு கிறுக்கல் அவ்வளவுதான்.

நன்றி இனியவள்.

மனோஜ்
27-07-2007, 03:53 PM
தடங்கல் தடங்கள் ஆனாது அருமை

அமரன்
27-07-2007, 05:20 PM
நன்றி மனோஜ்..

சிவா.ஜி
28-07-2007, 12:22 PM
கால் சுவடுகளோ காலச்சுவடுகளோ,மீண்டும் அவை அவைகளாலேயே அழிக்கப்படும். தன்னைக் கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. அதுவும் தடங்கல்களுக்காக என்றால் அது அறிவீனம். தடைக்கற்களையே படிக்கற்களாக பாவித்து தடைதாண்டி சிகரம் தொடவேண்டும். கடலலைகளும் அதையே உணர்த்துகின்றன. பல யுகங்களாக கரையை கவர்ந்து கொள்ள அலைகள் வந்து வந்து போகின்றன. வெறும் கையாய் திரும்பிப்போனாலும் மீண்டும் வருகின்றன. நல்ல ஒரு முன்னேற்ற சிந்தனையை அழகான வரிகளில் அளித்த அமரனுக்குவாழ்த்துக்கள்.
இத்தனை நாட்களாக இதைப் பார்க்காமல் விட்டது என் தவறுதான்.

அமரன்
28-07-2007, 12:24 PM
பறவைகள் மட்டுமல்ல..
பார்வைகளும் பலவிதம்
சிவாவின் பின்னூட்டம் புரியவைத்தது....
நன்றி சிவா...

விகடன்
28-07-2007, 12:42 PM
தடங்கலை வைத்தே மீண்டுமோர் தடம் பதித்துவிட்டீர் அமரன். பாராட்டுக்கள்

அமரன்
28-07-2007, 12:59 PM
நன்றி விராடன்...முன்னோர் பதித்ததடத்தில் தடம்பதிக்கிறேன்....