PDA

View Full Version : கண்டுபிடி



சிவா.ஜி
18-07-2007, 07:09 AM
குலை குலையா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்......
எங்குமிருப்பான் அவனை விடு
நல்லவனிருப்பான் கண்டுபிடி!

அமரன்
18-07-2007, 07:43 AM
சிவா...எனக்கென்னமோ காவல்துறையை கிண்டல்பண்றாப்போல இருக்கு. அரசியல் சித்துவிளையாட்டை சொல்றாப்போலவும் இருக்கு....கொஞ்சம் விளக்க முடியுமா?

சிவா.ஜி
18-07-2007, 07:54 AM
நம்மைச்சுற்றி எத்தனையோ கொள்ளைக்காரர்கள். பொருளை மட்டுமல்ல, சில சமயம் நம் கற்பனையையும், சில சமயம் நம் கண்டுபிடிப்புகளையும், சில சமயம் நம் உறவுகளையும் கூட கொள்ளையடிப்போர் இருக்கிறார்கள். இதில் யாரயென்று தேடிக்கண்டுபிடிப்பது. அதனால் அவர்களை விட்டுவிட்டு நல்லவர்களைக் கண்டுபிடித்து அங்கீகரிப்போம் என்பதை குழந்தைகள் விளையாட்டின் வரிகளை கடன் வாங்கி கவிதையில் கொண்டு வந்தேன் அமரன்.

அமரன்
18-07-2007, 08:00 AM
நல்லவற்றைப் பார்ப்போம்,நல்லவற்றை பேசுவோம்,நல்லவற்றை கேட்போம்.
பாடம் புரிந்தது. கடன்வாங்கினாலும் அதிக வட்டியுடன் திருப்பி கொடுத்து அசத்திவிட்டீர்கள் சிவா...தொடருங்கள். பாராட்டுகள்.

ஆதவா
18-07-2007, 08:11 AM
பள்ளி செல்லாத முன்பு தந்தை சொல்வார்

"அர்ச்சுனனுக்கு அந்த பறவை மட்டுமே தெரிந்தது.. ஏனைய தெரியவில்லை... இலக்கு எதுவோ அதை மட்டுமே மனம் கொண்டிருக்கவேண்டும்..."

பள்ளி பருவத்தில் வாத்தியார் சொல்வார்..

காகிதத்தில் உள்ள புள்ளியை கவனிக்கிறாயே? ஏனைய வெறுமை இடங்கள் உனக்குத் தெரியவில்லையா?


இதில் எதை நாம் எடுத்துக் கொள்ளலாம்?

நல்லவனைக் கண்டுபிடிப்பதாக கொள்ளையனை விட்டுவிடலாமா?

தேடல் என்பது எல்லா பக்கமும் நடக்கவேண்டும்.. நான்கு நல்லவர்களைத் தேடுவது கடினம். கெட்டவர்கள் அருகிலே கூட இருக்கலாம்..

உங்கள் தத்துவம் எனக்கும் பிடித்ததே...

அதுசரி... முதலிரண்டு வரிகள் எதற்கென்று சொல்லுங்களேன்.

சிவா.ஜி
18-07-2007, 08:18 AM
ஆதவா அது விளையாட்டின் பாடல் வரிகள்.
குலை குலையா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்..
கூட்டத்திலிருப்பான் கண்டுபிடி!

என்பதுதான் முழு பாடல். அதைத்தான் கடன் வாங்கியிருக்கிறேன்.
மிக்க நன்றி ஆதவா.

மனோஜ்
18-07-2007, 09:29 AM
குழுந்தை பெரியதாய் சிந்தித்தது அருமை சிவா

சிவா.ஜி
18-07-2007, 09:30 AM
நன்றி மனோஜ். குழந்தைகள் தானே நாளைய உலகத்தை வழிநடத்தப்போகிறவர்கள்.

ஓவியன்
19-07-2007, 03:08 AM
சிவா உங்களுக்கு முதல் என் நன்றிகள்!

உங்கள் கவிதை நான் இளவயதில் படித்த பாலர் பாடல்களை நினைவூட்ட நான் நேற்றிரவே சிறுவர் பகுதியில் ஒரு திரியைத் தொடங்கி விட்டேன்.

இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள், நாம் சிறுவயதிலேயே நம் சிறார்க்கு பாடல்களுடன் நல்ல விடயங்களைப் புகுத்துவது காலத்தின் கட்டாயம்.........

சரியாகப் புரிந்து கவி வடித்தமைக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்!.

சிவா.ஜி
19-07-2007, 04:37 AM
மிக்க நன்றி ஓவியன்.
உங்கள் அந்த அசத்தல் திரி அடடா அருமை.