PDA

View Full Version : கொஞ்சம் கொஞ்சும் காதல்!



ஷீ-நிசி
18-07-2007, 05:24 AM
http://farm1.static.flickr.com/12/18112268_0cd61f74ab.jpg

வாடி நிற்குமிந்த
பூவைப் போல! -நானும்

பாவை உனைத்
தேடி நிற்கிறேன்! -விழி

காண இயலாமல்
வாடி நிற்கிறேன்!

வாயென் வண்ண விழியாளே!
வந்தால்.. வசமாவேன்!
நானுன் அன்பு மொழியாளே!

குயிலொன்று பாடியது
யமுனை ஆற்றிலே! -என்
வீட்டோரம் கேட்டது...
அலையுமிந்த காற்றிலே!

சின்ன சின்ன சொல்லெடுத்து
காற்றின் வழியெனக்கு -உன்
குரலனுப்பினாய்.....

சுமந்துவந்த காற்றை
சிறைபிடிக்க சிறகடித்தன....
கீழிருந்து பறவைகளும்,
மேலிருந்து தேவதைகளும்!!

ஏன் குறைவாக
உண்கிறாயென்றேன்?

உடல் குறைப்பு என்றாய்...

முழுமையாக
இருந்தால்தானடி
அது நிலவு...

முக்கால் பாகம் தேய்பிறையென்றால்
ஆனதது களவு!

ஏன் அழுகிறாய் என்றேன்?
காரணம் சொன்னாய்...

சிரித்தேன்!!!!

ஏன் சிரிக்கிறீர்கள் என்றாய்?

பிறகென்ன!
வானமது அழுதால்
யார்தானடி பெண்ணே,
அழுவார்கள் என்றேன்!

சத்தமாக சிரித்தாய்...
அட! இப்பொழுது
இடி இடிக்கிறதே என்றேன்....

இன்னும் சிரித்தாய்!
இப்பொழுது நீ அழவில்லை!

இடி இடித்தால் மழை நிற்குமென்பார்கள்!

உண்மைதான்!
அன்று கண்டேனடி
உன் விழிகளிலே!

இதோ! வருகிறேன்
என்று சொன்னவளே!

வானிலை அறிவிப்பாகிவிட்டதே
உன் அறிவிப்பும்...

இனி வரமாட்டேனென்று
சொல்லிவிடு....
வானிலை அறிவிப்பு போல...

நிச்சயமாய் காத்திருக்கிறேன்...
உனக்காய்....

சிவா.ஜி
18-07-2007, 05:33 AM
நல்ல கவிதை ஷீ. விரிவான பின்னூட்டம் விரைவில் தருகிறேன். அவசரவேலை.

ஆதவா
18-07-2007, 06:10 AM
அருமை ஷீ! நல்ல சிறப்பான கற்பனை; சிந்தனை. அத்தோடு அழகிய தமிழ்..

காட்சியழகு சொட்ட எழுதுபவர் என்று அன்றே இளசு அண்ணா சொன்னாரே! அது மிகச் சரிதான்.

பூக்கள் ஏதோ ஒன்றைத் தேடித்தான் இருக்கவேண்டும்... சிலசமயங்களில் தேனீக்களையும் ஏன் ஆதவனைக் கூட.. கிடைக்காவிடில்???

தேடி நிற்கிறேன்
வாடி நிற்கிறேன்...

"நானுன் அன்பு மொழியாளே" என்பதில் மொழியாலே என்ற சொல் எனக்கு சரி என்று படுகிறது.

நல்ல அழகான எதுகைகள். இதற்கென்றே இட்டவாறில்லாமல் கவிதையோடு ஒட்டி உறவாடி வந்த பதுமைகளாய் இந்த எதுகைகள். சின்னச் சின்ன சொல்லெடுத்து யதார்த்தமான மழையாக வரியமைப்புகள்.

இடித்தால் மழை நிற்கும்... சிரித்தால் நீர் நிற்கும்.. மிகச்சிறந்த பொறுத்தம்.

வரமாட்டேனென்று சொல்லி காத்திருப்பது காதலனுக்கு சரியா? அவ்வப்போது வந்துபோனால்தானே நன்றாக இருக்கும்... ம்.... இதுவும் ஒருவகைக் காதலோ?

காதலனின் சில வரிகள் நல்ல பலமான வரிகள் தான்.

கண நேரத்தில் அழகிய கவிதைகள் அமைப்பது ஷீ-நிசியிடம் மட்டும்தான்.. என்னிடம் அது சாத்தியப்படுவதில்லை - ஆதவா :D

இதற்கு 200 பொற்காசுகள். (நீங்கள் தரவேண்டும். :D)

ஷீ-நிசி
18-07-2007, 06:14 AM
மிக அழகிய விமர்சனம் ஆதவா......

கடைசியில் வார்த்தைகளை மாற்றிபோட்டு கலக்கிபுட்ட ஆதவா..

ஆனால் அது உன் பெருந்தன்மை...... நன்றி ஆதவா....

இனியவள்
18-07-2007, 06:56 AM
கவிதை அருமை ஷீ வாழ்த்துக்கள்

சிவா.ஜி
18-07-2007, 07:01 AM
வானிலை அறிவிப்பாகிவிட்டதே
உன் அறிவிப்பும்...

இனி வரமாட்டேனென்று
சொல்லிவிடு....
வானிலை அறிவிப்பு போல...
முதல் வானிலை அறிவிப்பு அவள் வராமல் இருந்ததை நையாண்டி செய்ய,
அடுத்த வானிலை அறிவிப்பு வரமாட்டேன் என்று அவள் அறிவித்தது பொய்யாகிப்போக. கலக்கல் ஷீ−நிசி. இதைப்போல சொல்லாடல்களை அபூர்வமாகத்தான் பார்க்கமுடிகிறது. ஆனால் உங்கள் கவிதையில் அடிக்கடி பார்க்க முடிகிறது. எப்படி உங்களால் மட்டும் முடிகிறது?ஆதாவாவின் பின்னூட்டம் அழகு, அதைவிட நான் என்ன சொல்லிவிடப்போகிறேன். நல்ல படைப்பு. பாராட்டுக்கள் ஷீ.

ஷீ-நிசி
18-07-2007, 07:04 AM
நன்றி இனியவளே!


டச் பன்னிட்டீங்க சிவா... நான் ரசிச்ச இடத்த..... நன்றி சிவா...

அமரன்
18-07-2007, 07:51 AM
ஷீ அருமை. உங்கள் எத்தனை கவிதைகள் இருந்தாலும் அதில் உங்கள் கவிதை தனித்துத் தெரியும். உவமானங்கள், தெளிந்த நடை,பொருத்தமான எதுகைகள் மோனைகள்...என அழகிய சிறபாக இருக்கும் உங்கள் கவிதை. இந்தக்கவிதையில் வானிலை மையத்தை நையாண்டி வேறு செய்திருகின்றீர்கள். கற்பனையும், நாளந்த வாழ்க்கையும் கலந்து அமிர்தமாக ஒரு கவிதை. இடி இடித்தால் மழை நிற்கும்...பொருத்தமாக அமைத்திருகின்றீர்கள். வானிலை அறிக்கை...ஏக்கத்தை புரியவைத்தது....கவிச்செல்வனே! பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
18-07-2007, 08:44 AM
நன்றி அமரன்...

ஆதவன், அமரன், ஓவியன், அக்னி, காயத்ரி................

சின்ன சின்ன சொல்லெடுத்து
காற்றின் வழியெனக்கு -உன்
குரலனுப்பினாய்.....

சுமந்துவந்த காற்றை
சிறைபிடிக்க சிறகடித்தன....
கீழிருந்து பறவைகளும்,
மேலிருந்து தேவதைகளும்!!

இதற்கு விளக்கம் சொல்லுங்கள்... நான் எழுதியது உங்களை சேர்ந்திருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்...

அமரன்
18-07-2007, 08:49 AM
அலைபேசியில் பேசுவதை சொல்கின்றீர்களோ..:confused: :confused: :confused:

ஷீ-நிசி
18-07-2007, 08:58 AM
அலைபேசியில் பேசுவதை சொல்கின்றீர்களோ..:confused: :confused: :confused:


அவ்ளோதான் முடிஞ்சது.... அதேதான்... நன்றி அமரன்...:icon_cool1:

aren
18-07-2007, 07:14 PM
கவிதை நன்றாக இருக்கிறது. இன்னும் பல விஷயங்களை உள்வாங்க வேண்டும். மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு பின்னுட்டம் இடுகிறேன்.

சுகந்தப்ரீதன்
19-07-2007, 08:12 AM
http://farm1.static.flickr.com/12/18112268_0cd61f74ab.jpg


இனி வரமாட்டேனென்று
சொல்லிவிடு....
வானிலை அறிவிப்பு போல...

நிச்சயமாய் காத்திருக்கிறேன்...
உனக்காய்....

கலக்குறீங்க.....வாழ்த்துக்கள்!
நிச்சயமாய் காத்திருக்கு உங்கள் கவிகளுக்கு நல்ல ஒரு எதிர்காலம்!

மனோஜ்
19-07-2007, 08:21 AM
சிறப்பான கவிதை ஷீ
சின்ன சின்ன சொல் எடுத்து வரிகள் மிகவும் அருமையாக இருந்தது
மிக விரைவில் புத்தகம் வெளிட வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
19-07-2007, 08:42 AM
நன்றி ஆரென்! நன்றி ப்ரீதன்! நன்றி மனோஜ்!

ஓவியன்
20-07-2007, 01:42 PM
சுமந்துவந்த காற்றை
சிறைபிடிக்க சிறகடித்தன....
கீழிருந்து பறவைகளும்,
மேலிருந்து தேவதைகளும்!!....
ரொம்பவே இரசித்தேன் இந்த வரிகளை..........

ஷீ!
அழகாக பர்த்துப் பார்த்து வரிகளைக் கோர்த்துள்ளீர்கள் - பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

ஷீ-நிசி
20-07-2007, 02:04 PM
ரொம்பவே இரசித்தேன் இந்த வரிகளை..........

ஷீ!
அழகாக பர்த்துப் பார்த்து வரிகளைக் கோர்த்துள்ளீர்கள் - பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

நன்றி ஓவியன்