PDA

View Full Version : கனவு தீர தீர காதல் புனைவோம்!



lenram80
17-07-2007, 06:57 PM
நீ எனக்கு நிலவு போல!
ஆராய்ந்ததால் தானே காற்றும் நீரும்
நிலவில் இல்லை என்று தெரிந்தது!
அங்கு வாழலாம் என்ற நம்பிக்கை உடைந்தது!

என் மேல் நம்பிக்கை வைத்து நம்பி கை வைத்தவள் நீ!
நான் உன்னை ஆராயப்போவது இல்லை!
என் நிலவில்
கொட்டும் அருவி நீ! சுற்றும் சுத்தக் காற்று நீ!

நீ ஒன்றும் குறைகளே இல்லாத தேவதை இல்லை!
சின்னதாய் சிறகை உடைத்துக்கொண்ட சிட்டுக்குருவி நீ!
நொண்டி முயலை வைத்துக்கொண்டு
வாலையும் சேர்த்து எண்ணி நான்கு கால்
என்று வாதாடும் வழக்கறி்ஞர் நீ!
குறைகளும் சேர்ந்து குலுங்கும் குமரி தான் நீ!

நானும் நிறை மழை பொழியும் நெடு வானம் இல்லை!
ராஜபட்டை கட்டிக்கொண்ட ராஜகுமாரன் இல்லை!
கறை உள்ள கதர் துணி தான் நானும்!
குறைகளை வைத்து கட்டப்பட்ட கோட்டை தான் நானும்!

குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தால்
சிவனையும் கண்டு சிறை பிடிக்க வேண்டும்!

நம் வலிகளை நாமே உடைப்போம்!
நம் வழிகளை நாமே துடைப்போம்!
நிறை ஜல்லிகளை பாசத் தாரில் கலந்து
நம் குண்டு குழிகளை நாமே அடைப்போம்!

இனி,
உன் கன்னத்தில் குழி இல்லாமல் போனதற்காக வருத்தப்படாமல்
உன் கன்னப் பருக்களின் மேடுகளில் சறுக்கி விளையாடலாம் வா!

சின்னதாய் மூக்கு வந்ததற்காக வருத்தப்படாமல்
சிக்கனமாய் வந்ததற்காக சிலிர்க்கலாம் வா!

இன்று வாடிய பூக்கள் என்று சொல்லாமல்
இவை எல்லாம் நேற்று பாடிய பூக்கள் என்று மகிழலாம் வா!

நெறுப்பு உன்னை சுட்டது என்று சொல்லாமல்
நெறுப்பூ உன்னை தொட்டது என்று நெகிழலாம் வா!

உன்னை திட்டினேன் என்று நினைக்காமல்
உரிமையோடு உன்னை மட்டும் தானே திட்ட முடியும்
ஆசையோடு உன்னை மட்டும் தானே அள்ள முடியும்
என்று அளாவலாம் வா!

கன்னத்தில் முத்தமிட்டோம் என்று சொல்லாமல்
கன நேரம் சொர்க்கம் தொட்டோம் என்று சொல்லி திளைப்போம் வா!

தீர்மானித்து விடுவோம் தீர்க்கமாக!
அறிவியலோடு மட்டும் ஆராய்ச்சி செய்வோம்!
காதலோடு காதல் மட்டும் செய்வோம்!

இனி,
நம்மிடம் நமக்கே
பிடிக்காதவைகளை தூர எறிவோம்!
பிடித்தவைகளில் ஊர நனைவோம்!
நம் கனவு தீர தீர காதல் புனைவோம்!
நம் ஆசை ஆர ஆர அன்பில் பினைவோம்!
காதல் குளிரில் ஒன்றாய் வாழ்நாள் முழுதும் அனைவோம்!
குறை குறைப்போம்! நிறை நிறைப்போம்!
உடல் ஓயும் வரை ஒன்றாய் உயிர்ப்போம்!

அக்னி
17-07-2007, 07:08 PM
நிலவே...
நான் வாழ தேவையான
எதுவும் நீ
தரவில்லை ஆனாலும்,
மீண்டும் உன்னை நோக்கி
வரும் எனக்கு,
ஏன் அமாவாசையாய்...
ஒளிகின்றாய்?

லெனின் அவரிகளின் கவிதை அருமை...
நீண்ட கவிதையை மென்மையாக, சுவையாகத் தர வன்மை இருக்கவேண்டும் புலமையில்...
அந்தப் புலமையிடம் இன்னும் எதிர்பார்ப்புக்கள்...
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

ஓவியன்
17-07-2007, 07:10 PM
சின்னதாய் மூக்கு வந்ததற்காக வருத்தப்படாமல்
சிக்கனமாய் வந்ததற்காக சிலிர்க்கலாம் வா!!
உள்ளதை வைத்து திருப்தி பட உயர்ந்த ஒரு பக்குவம் வேண்டும் − அதனைக் காதல் கொடுக்கிறது!.

தந்த வரிகளுக்குச் சொந்தக் காரருக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!. :thumbsup:

aren
18-07-2007, 01:35 AM
என்ன அருமையான கவிதை லெனின் அவர்களே. இப்படி ஒவ்வொரு காதலியும், காதலனனும் நினைத்துவிட்டால் வாழ்வில் பிரச்சனைகளே இல்லாமல் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன். இது நடக்குமா!!

பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
18-07-2007, 02:15 AM
உண்மைதான் அண்ணா!

லெனின் காதல் கவிதைகளில் அன்பும் காதலிரிடை நிலவும் ஊடலும் அழகாக கையாளப்படுவது கண்கூடு...........

இதுவும் அப்படியே...........

வாழ்த்துக்கள் லெனின்!.

சிவா.ஜி
18-07-2007, 04:57 AM
அழகான ஒரு காதல் கவிதையென்று சிக்கனமாக சொல்லமுடியாத அருமையான கரு கொண்ட கவிதை. அவளை அவளாகவே நேசிக்கும் அந்த காதலனின் பரந்த மனமும்,குறைகளை நிறையாக்கிய உள்ளமும் இவை அனைத்திற்கும் மேலாக அளவிடமுடியாத காதலை அவனுக்குள் தேக்கி வைத்துக்கொண்டு அதை சேர்ந்தே அனுபவிப்போம் என்ற அவன் அழைப்பும் அருமை.பாராட்டுக்கள் லெனின்.

ஆதவா
18-07-2007, 06:18 AM
நண்பர் லெனின் அவர்களே! ஒரேகவிதையை இரு இடத்தில் பதிக்கவேண்டாம்..இன்னொரு இடத்தில் இருக்கும் தங்கள் கவிதைக்கான பின்னூட்டங்கள் இதனோடு சேர்க்கப்படுகின்றன..

guna
18-07-2007, 07:40 AM
[B]தீர்மானித்து விடுவோம் தீர்க்கமாக!
அறிவியலோடு மட்டும் ஆராய்ச்சி செய்வோம்!
காதலோடு காதல் மட்டும் செய்வோம்! [/ப்]

அருமை லெனின்..
அழாகான கவிதைக்கு வாழ்துக்கள்

குந்தவை
18-07-2007, 08:03 AM
அன்பில் ஆராய்ச்சிக்கு இடமில்லை.
குறைகளை மறந்து நிறைகளை நேசிக்கும் தன்மை.
அருமை. அருமை.
இந்த காதலர்கள் கொடுத்துவைத்தவர்கள்.
அனேக*மாக* இது காதல் அரும்பிய* ஆர*ம்ப* காலத்தின் உணர்ச்சி என்று நினைக்கிறேன்.



பி.கு

எனது பெயரை "குந்தவை" என மாற்ற விரும்புகிறேன்.

paarthiban
19-07-2007, 09:41 AM
குறைகளியும் நிறைவாய் பார்க்கும் உயர்ந்த காதல் வாழ்க. லெனின் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

அமரன்
20-07-2007, 05:06 PM
ஒவ்வொரு காதல் பறவைகளும் எப்படி இருக்கவேண்டும் என்பதை சொல்லியுள்ளீர்கள். இப்படி இருந்தால் தேவதாசுகள் குறையலாம். பாராட்டுக்கள்.

lenram80
20-07-2007, 10:45 PM
நன்றி அக்னி, ஒவியன், ஆரென், சுகுணா, சிவாஜி, குந்தவை, மற்றும அமரன்