PDA

View Full Version : நேர்(மாறு) விகித சமன்!



ஓவியன்
17-07-2007, 06:46 PM
நேர் விகித சமனாய்
இருந்த என்
காதலையும் கனவுகளையும்
நேர் மாறு விகித சமனாய்
மாற்றிப் போனது உன்
வார்த்தை - மறந்திடு
எல்லாத்தையும்............!

இனியவள்
17-07-2007, 06:49 PM
நேர் விகித சமனாய்
இருந்த என்
காதலையும் கனவுகளையும்
நேர் மாறு விகித சமனாய்
மாற்றிப் போனது உன்
வார்த்தை - மறந்திடு
எல்லாத்தையும்............!

அடடா கவிதை நல்லா இருக்கு ஓவியன் :thumbsup:

அனைத்தையும் மறந்து
விடுவதற்கு காதல் என்ன
நேற்றுப் பெய்த மழையில்
பூத்த காலானா??

உயிரை உயிருக்கு தெரியாமல்
இடமாற்றி என் இதயத்தைக்
களவாடி சென்று விட்டு
மறந்து விடு என்றால் எப்படி
முடியும் ......

ஓவியன்
17-07-2007, 06:51 PM
நன்றி இனியவள்!

இன்று அலுவலகத்தில் சில கணித சமன்பாடுகளுடன் அல்லாட வேண்டி வந்தது − அதன் விளைவே இந்தக் கவிதை!.

அமரன்
17-07-2007, 06:53 PM
நேர் விகித சமனாய்
இருந்த என்
காதலையும் கனவுகளையும்
நேர் மாறு விகித சமனாய்
மாற்றிப் போனது உன்
வார்த்தை - மறந்திடு
எல்லாத்தையும்............!

ஓவியரே...
கணக்குப்பண்ண தெரிந்த உமக்கு
போடத்தெரியலையே
காதல் கணக்கு

காதலிக்கும் போது
கேட்காதீர்
கல்யாணக்காட்சி எப்போது?


கவிதை அருமை....பாராட்டுக்கள்.

இனியவள்
17-07-2007, 06:54 PM
நன்றி இனியவள்!
இன்று அலுவலகத்தில் சில கணித சமன்பாடுகளுடன் அல்லாட வேண்டி வந்தது − அதன் விளைவே இந்தக் கவிதை!.

கணக்கா :shutup: அதற்கும் எனக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது :whistling:

ஓவியன்
17-07-2007, 06:58 PM
காதலிக்கும் போது
கேட்காதீர்
கல்யாணக்காட்சி எப்போது?.

கணக்குப் போட்டுக்
கணக்குப் பண்ணியது
கணக்குப் போட்டு
கணக்குப் போட்டு
கணக்குப் பிழை
என்று போய்விட்டது!

பிறகு எங்கேயாம் கல்யாணம்?, காட்சி?

அழுகையுடன்
ஓவியன்!. :mad:

அமரன்
17-07-2007, 06:59 PM
பிறகு எங்கேயாம் கல்யாணம்?, காட்சி?

கல்யாணம் காட்சியானதே
கணக்குப் பிழைத்ததா
பண்ணியது பிழைத்ததா..

ஓவியன்
17-07-2007, 06:59 PM
கணக்கா :shutup: அதற்கும் எனக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது :whistling:

அப்போ ஒரு ரவர் கிறேனை வைச்சு ஏறுறது? :whistling:

ஓவியன்
17-07-2007, 07:01 PM
கல்யாணம் காட்சியானதே
கணக்குப் பிழைத்ததா.

பிழைக்கும் என்று
நினைத்த கணக்கு
பிழைத்தது − என்
கவலையீனத்தால்........!

அமரன்
17-07-2007, 07:02 PM
பிழைக்கும் என்று
நினைத்த கனக்கு
பிழைத்தது − என்
கவலையீனத்தால்........!


"கவன"* ஈனத்தால்
விளைந்தாலும்
கவலை ஈனமே

ஓவியன்
17-07-2007, 07:06 PM
"கவன"* ஈனத்தால்
விளைந்தாலும்
கவலை ஈனமே

கவலையீனத்தால்
கணக்குப் பிழைத்தால்
மீளவும்
கணக்குப் பண்ணலாம்!

"கவன" ஈனத்தால்
கணக்கு பிழைத்தால்.........?

அமரன்
17-07-2007, 07:08 PM
கவனத்தில் ஈனமிருந்தால்
கணக்கும் பிழைக்கும்
ஈனமான கவலை
கனமாய் இருக்கும்...

அக்னி
17-07-2007, 07:10 PM
தைக்கின்றாயே என் காதலை...
உன் வார்த்தைகளால்...
இன்றுதான் தெரிந்தது,
என் காதல்
கிழிந்திருந்தது என்று...

அனைத்தும் கவிச்சமரே....
அனைவருக்கும் பாராட்டுக்கள்...

அமரன்
17-07-2007, 07:12 PM
தைக்கின்றாயே என் காதலை...
உன் வார்த்தைகளால்...
இன்றுதான் தெரிந்தது,
என் காதல்
கிழிந்திருந்தது என்று...

அனைத்தும் கவிச்சமரே....
அனைவருக்கும் பாராட்டுக்கள்...

தெரிந்துதானே தைத்தேன்
மீண்டு வருவாயென
மீண்டும் போறாயே
முட்களைத் தேடி...

அக்னி
17-07-2007, 07:13 PM
தெரிந்துதானே தைத்தேன்
மீண்டு வருவாயென
மீண்டும் போறாயே
முட்களைத் தேடி...


தைத்த சொல்லைவிட...
தைக்கும் முட்களின், வலி...
இதமாக இருக்கிறது...

ஓவியன்
17-07-2007, 07:13 PM
என் காதலைக் கிழித்துப் பின்
மீளத் தைத்த நீ
உண்மையில்
காதல் பைத்தியம் தான்!.

ஓவியன்
17-07-2007, 07:16 PM
தைப்பதும் பின்
தையல் போடுவதும்
காதலில் மட்டும் தான்
சாத்தியமாகிறதோ?!.

அமரன்
17-07-2007, 07:16 PM
தைத்த சொல்லைவிட...
தைக்கும் முட்களின், வலி...
இதமாக இருக்கிறது...

நான் சொன்ன
முட்கள் தரும் வலி
இதமாக இருந்தாலும்
மதம் பிடிக்க வைக்கும்..

அமரன்
17-07-2007, 07:17 PM
[COLOR="DarkRed"]
தையல் போடுவதும்
COLOR]

ஓவியரே தையல் "போட்ட" ^பின்னரே பல காதல் உருவாகுது.

ஓவியன்
17-07-2007, 07:18 PM
கணக்குப் பிழைத்து கவிதைகள் தைக்கத் தொடங்கி விட்டதே?

அக்னி
17-07-2007, 07:19 PM
கவி தை எங்கே...???

அமரன்
17-07-2007, 07:19 PM
கவி தை எங்கே...???

தாவிவிட்டது...

ஓவியன்
17-07-2007, 07:26 PM
தாவிவிட்டது...
இல்லைத் தூங்கிவிட்டது!. :thumbsup:

ஓவியன்
18-07-2007, 04:59 AM
நேர் விகித சமனாய்
இருந்த என்
காதலையும் கனவுகளையும்
நேர் மாறு விகித சமனாய்
மாற்றிப் போனது உன்
வார்த்தை - மறந்திடு
எல்லாத்தையும்............!

நேர் மாறிய வார்த்தைகள்!
நேர் விகித சமனாக்கியது.
என் காதலையும் கனவுகளையும்!!.

ஆதவா
18-07-2007, 06:50 AM
ஆஹா.....

ஓவியன்.. இந்த மாதிரி அலுவலகக் கவிதைகள் நிறைய தோன்றும்.. கவிதை நினைவுகளில் இருப்பவர்களுக்கு இது சாதாரணம்.. நாம் வாழ்க்கையிலிருந்து கவிதைகள் எடுக்கிறோம்.. அதனால்தான் இந்த தோன்றல்.

நான் எனது அலுவலகத்திலேயே உறங்குகிறேன். நான் காலையில் எழுந்ததும் கண்களைக் கூட விழிக்காமல் கணிணியை உயிர்ப்பித்துவிட்டுதான் எழுந்து தியானம் செய்வேன்.. அப்போது தோன்றியது என்ன தெரியுங்களா?

கண்விழித்துக் கொண்டோம்
நானும் எனது கணிணியும்.
-------------
எனக்கு முன்னே
கண் விழித்துக் கொண்டது
எனது கணிணி.
-------------------
ஓவியம் தெரியாது எனக்கு
இருந்தாலும்
நான் ஓவியன்.
---------------
இவையெல்லாம் தனியாக விடமுடியாது.... அவ்வப்போது வந்துபோகும்...

கவிதை அருமை... வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
18-07-2007, 07:21 AM
சமன்(பாடு) கவிதையா ஓவியன்... கலக்கல்.....

ஓவியன்
18-07-2007, 09:03 AM
ஆஹா.....
ஓவியன்.. இந்த மாதிரி அலுவலகக் கவிதைகள் நிறைய தோன்றும்.. கவிதை நினைவுகளில் இருப்பவர்களுக்கு இது சாதாரணம்.. நாம் வாழ்க்கையிலிருந்து கவிதைகள் எடுக்கிறோம்.. அதனால்தான் இந்த தோன்றல்.

அருமையான பின்னூட்டம்!
மிக்க நன்றி ஆதவா!
உங்கள் அலுவலகக் கவிதைகளையும் ரசித்தேன் பாராட்டுக்கள்!

ஓவியன்
18-07-2007, 09:12 AM
சமன்(பாடு) கவிதையா ஓவியன்... கலக்கல்.....பட்ட பாடுகளைச்
சமப்படுத்த முடியாமல்....
கவியால்
சமப்படுத்தும் முயற்சியே!
இந்த சமன் பாடு!

மிக்க நன்றி ஷீ!

அமரன்
18-07-2007, 09:38 AM
பட்ட பாடுகள்
பட்டு போக
சம"படுத்தும்" முயற்சி
சிறக்க வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
18-07-2007, 10:04 AM
எனக்கும் அப்படித்தான் ஓவியன் கணக்கை கணக்கு பன்ன முடியாமல் அதனோடு பிணக்கு உண்டான காலங்கள் மறக்க முடியாதவை. இருந்தாலும் உங்கள் கணக்கு தவறவில்லை. நேர்விகித சமன் நிறை விகித சமன் ஆக இருக்கிறது. பாராட்டுக்கள்.

அக்னி
18-07-2007, 10:40 AM
ஆதவரே...
அலுவலகத்தில் ஒரே விழிப்புக் கவிதைகளாகவே வருகின்றதோ...???
:4_1_8: :smilie_bett:

ஓவியன்
18-07-2007, 04:25 PM
எனக்கும் அப்படித்தான் ஓவியன் கணக்கை கணக்கு பண்ன முடியாமல் அதனோடு பிணக்கு உண்டான காலங்கள் மறக்க முடியாதவை. இருந்தாலும் உங்கள் கணக்கு தவறவில்லை. நேர்விகித சமன் நிறை விகித சமன் ஆக இருக்கிறது. பாராட்டுக்கள்.

மிக்க நன்றி சிவா!
வாழ்க்கையில் சில கணக்குகள் பிழைக்கும், சில கணக்குகள் சரிவரும் சில இன்னமும் குழப்பத்தில் இருக்கும்...............!

கணக்குக்கும் வாழ்க்கைக்கும் அப்படி ஒரு தொடர்பு.

ரிஷிசேது
18-07-2007, 06:42 PM
கவனமாய் கணக்கை கவிதையாக்கியுள்ளீர்
வாழ்த்துக்கள்
ரிஷிசேது

aren
18-07-2007, 06:46 PM
மறந்துவிடு எல்லாவற்றையும்
என்ன எளிதான வார்த்தை
அதைச் சொல்லிவிட்டால்
பிரச்சனை முடிந்தது என்று
அர்த்தம் ஆகுமா
இதுதான் ஆரம்பம்
மறக்காதே எதையும்!!!!

கவிதை அருமை ஓவியன். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
19-07-2007, 02:58 AM
கவனமாய் கணக்கை கவிதையாக்கியுள்ளீர்
வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் ரிஷி!:nature-smiley-008:

ஓவியன்
19-07-2007, 03:00 AM
இதுதான் ஆரம்பம்
மறக்காதே எதையும்!!!!

கவிதை அருமை ஓவியன். பாராட்டுக்கள்.மிக்க நன்றிகள் அண்ணா!

பின்னூட்டக் கவிதை அருமை!.