PDA

View Full Version : ஒரு பூ போதுமடி..



அமரன்
17-07-2007, 06:11 PM
தண்ணீர்ப் பூக்களில்
தனலவன் குளிர்ந்தும்
குளிரவில்லை....

உள்ளிருக்கும் என்மனம்....!

உன் தாமரைகளில் மலரும்
ஒரு பூ போதுமடி...
என்மனம் குளிர..

ஓவியன்
17-07-2007, 06:14 PM
உன் தாமரைகளில் மலரும் ஒரு பூ?

புன்னகையா அமர்?

இனியவள்
17-07-2007, 06:15 PM
தண்ணீர்ப் பூக்களில்
பூமி குளிர்ந்தும்
குளிரவில்லை....
உள்ளிருக்கும் என்மனம்....!
உன் தாமரைகளில் மலரும்
ஒரு பூ போதுமடி...
என்மனம் குளிர..

கவிதை அருமை அமர்

உன் மனம் குளிர
மலரைப் பறித்தாய்
சூடுவதற்கு பதிலதனை
கசக்கியல்லவா விளையாடுகின்றாய்.....

அமரன்
17-07-2007, 06:19 PM
உன் தாமரைகளில் மலரும் ஒரு பூ?
புன்னகையா அமர்?

மரித்தவனுக்குத் தேவை
சிரிக்கும் கண்களல்ல.
கண்ணீர் சிந்தும்
கமலக் கண்கள்......

ஆதவா
17-07-2007, 06:23 PM
நல்ல கற்பனை.... பூமியைவிட சூரியன் இட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

கடைசி மூன்றுவரிகளும் அட்சரம். அதுசரி? ஏன் குளிரவேண்டும்? ஏதாச்சும் தவறு நடந்துவிட்டதா? மனம் வெகும்படி?

அவள் பூக்கள் மருந்தாக பூமிப்பந்தே பொருந்தாத, அழகிய விருந்து இக்கவி.. வாழ்த்துக்கள் அமரன்.

இனியவள்
17-07-2007, 06:24 PM
மரித்தவனுக்குத் தேவை
சிரிக்கும் கண்களல்ல.
கண்ணீர் சிந்தும்
கமலக் கண்கள்......

மன்னிக்க அமர் இதில் எனக்கு உடன்பாடில்லை மரித்தவனுக்கு சிரிக்கும் கண்களும் கண்ணீர் சிந்தும் கண்களும் ஒன்றல்லவா ?

உயிரோடு இருக்கும் போது
கரிசனம் காட்டாத கண்களை
இறந்த பின் கண்ணீர் சிந்தும்
என்று எதிர் பார்ப்பது முட்டாள்
தனமல்லவா...

இருக்கும் போது மற்றவர்களை
மகிழ்வித்து இறக்கும் போதும்
துன்பம் கொடுக்காமல் போவது
தானே சிறந்த வாழ்வின் அடையாளம்....

ஓவியன்
17-07-2007, 06:24 PM
மரித்தவனுக்குத் தேவை
சிரிக்கும் கண்களல்ல.
கண்ணீர் சிந்தும்
கமலக் கண்கள்......

அடடே இப்போது தான் கரு சிக்கியது!.

ஆனால் என்ன பயன் அமர்?

ஒன்றை இழந்து ஒன்று பெறுவது தானே யதார்த்தம்!, காதலையும் இழந்து வாழ்வையும் இழந்து என்னே பயன்?

வரிகள் அருமை − ஆனால் கரு எனக்குப் பிடிக்கவில்லை.

அமரன்
17-07-2007, 06:27 PM
காதலின் தோல்வி
வாழ்வின் முடிவென்பது
பிடிக்காத முடிவு...

மரித்தது அவனல்ல
அவனின் மனம்

இனியவள்
17-07-2007, 06:31 PM
கண்ணீராக காதலை
வரம் கேட்கின்றாய்
காதலே கானலாய்
போன பின் சிந்துமா
கண்ணீரை கண்கள்

அமரன்
17-07-2007, 06:34 PM
நல்ல கற்பனை.... பூமியைவிட சூரியன் இட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

கடைசி மூன்றுவரிகளும் அட்சரம். அதுசரி? ஏன் குளிரவேண்டும்? ஏதாச்சும் தவறு நடந்துவிட்டதா? மனம் வெகும்படி?

அவள் பூக்கள் மருந்தாக பூமிப்பந்தே பொருந்தாத, அழகிய விருந்து இக்கவி.. வாழ்த்துக்கள் அமரன்.

ஆதவன் பெயரால்
மாற்றினேன் கவியை..

பாசத்தைக் காட்டி
மனதை மாற்ற.
வேசமென நினைத்து
குளிரக் கேட்கிறான்
பூவிடம் ஒரு
கண்ணீர் பூ

விருந்துண்டு மகிழ்ந்து
வாழ்த்தை மொய்யாக்கி
வழுவை மருந்தாக்கிய
ஆதவாவுக்கு நன்றிகள் பல...

ஓவியன்
17-07-2007, 06:34 PM
கண்ணீருக்காய்
ஏங்கி பலர்
கண்களில் நீர்
வர வைத்து
கண் மூடுவதல்ல
காதல்!!!

சாதல் வரை
கண்ணில் வைத்த
நினைவுகளோடு
வாழ்வதும் தான்
காதல் − அது
கை கூடாத போதும்!

இனியவள்
17-07-2007, 06:38 PM
கண்ணீருக்காய்
ஏங்கி பலர்
கண்களில் நீர்
வர வைத்து
கண் மூடுவதல்ல
காதல்!!!
சாதல் வரை
கண்ணில் வைத்த
நினைவுகளோடு
வாழ்வதும் தான்
காதல் − அது
கை கூடாத போதும்!

கை கூடாத காதலை
கண்களில் நிரப்பி
விழி முலம் உன்னை
மீள்நிரப்பி ஆயுள்
முழுதும் வாழத் தான்
நினைக்கின்றேன் பாழாய்ப்
போன சமுகம் பல கதைகள்
வாழ விடாமல் வழியல்லவா
செய்கின்றனர்...

ஓவியன்
17-07-2007, 06:40 PM
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி.............

உங்கள் கவிதைக்கு இந்த பாடல் வரிகள் பொருந்துகிறதே இனியவள்.

இனியவள்
17-07-2007, 06:43 PM
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி.............
உங்கள் கவிதைக்கு இந்த பாடல் வரிகள் பொருந்துகிறதே இனியவள்.

ம்ம் ஆமாம் ஓவியன் ஆனால்
பல விஷயங்களுக்கு நாங்கள்
நீதிபதியாக இருந்தாலும் எங்களுக்கு
மேல் உள்ள நீதிபதிகள்(பெற்றோர்) தீர்ப்பை
மாற்றுகின்றனரே இது எத்தனை சதவீதம்
பொருந்தும்...????

அக்னி
17-07-2007, 06:52 PM
ஓரு போதுமடி,
காதலிக்காயோ...
ஒரு சிரிப்பு போதுமடி..
அன்றேல்,
என் மரணிப்பு தேடும்
உன் மடி...

அமரரே... வாழ்த்துக்கள்...

அமரன்
17-07-2007, 06:56 PM
ஓரு போதுமடி,
காதலிக்காயோ...
ஒரு சிரிப்பு போதுமடி..
அன்றேல்,
என் மரணிப்பு தேடும்
உன் மடி...

அமரரே... வாழ்த்துக்கள்...

அவனுக்கு தேவை
காயுமல்ல கனியுமல்ல
கனிந்ததைக் காட்டும்
ஒரு பூ....

நன்றியும் பாராட்டுக்களும் அக்னி.

அமரன்
17-07-2007, 07:48 PM
மன்னிக்க அமர் இதில் எனக்கு உடன்பாடில்லை மரித்தவனுக்கு சிரிக்கும் கண்களும் கண்ணீர் சிந்தும் கண்களும் ஒன்றல்லவா ?

உயிரோடு இருக்கும் போது
கரிசனம் காட்டாத கண்களை
இறந்த பின் கண்ணீர் சிந்தும்
என்று எதிர் பார்ப்பது முட்டாள்
தனமல்லவ

கருக்கடிய கரிசனத்தின்
பிறப்பை மறைத்தாள்
கருவில் சுமந்தவளுக்காய்....

பிரிந்ததால் கேட்கின்றான்
புரிந்துகொள்ள கேட்கிறான்
கண்ணீராய் கேட்கிறான்

அவளின் காதலை
புரிந்துகொள்ளாத அவன்
முட்டாள்தான் இனியவள்

அமரன்
17-07-2007, 07:52 PM
இருக்கும் போது மற்றவர்களை
மகிழ்வித்து இறக்கும் போதும்
துன்பம் கொடுக்காமல் போவது
தானே சிறந்த வாழ்வின் அடையாளம்

காதல்கடலில் வீழ்ந்து
பாசவலையில் தொலைத்த
அடையாளங்களை யல்ல
கடலையே தேடுகிறான்
அவள்சிந்தும் கண்ணீரில்
இதில்..
தப்பென்ன இனியவளே...!

ஷீ-நிசி
18-07-2007, 03:13 AM
ஆதவன் சொன்னதுபோல அந்த கடைசி 3 வரிகள் கவிதைக்கு மிக சிறப்பாய் உள்ளது.. வாழ்த்துக்கள் அமரன்.

aren
18-07-2007, 03:31 AM
கவிதை கொஞ்சம் ஹைடெக் என்று நினைக்கிறேன். இந்த மரமண்டைக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

ஓவியன்
18-07-2007, 03:42 AM
ஆரென் அண்ணா!

என்னுடைய விளக்கம் இது தான்.....

காதலில் தோற்ற ஒருவன் இறந்து விடுகிறான், அவனை மண்ணில் எரித்துப் புதைத்தும் விடுகிறார்கள், தண்ணீரால் அவனைப் புதைத்த(எரித்த) மண் குளிர்ந்தும் குளிரவில்லை அவன் நெஞ்சம்.......
காதலியின் கண் மலரும் கண்ணீர்த் துளியால் ஆறக் காத்திருக்கிறது அவன் நெஞ்சம்.......

ஷீ-நிசி
18-07-2007, 03:49 AM
கவிதை கொஞ்சம் ஹைடெக் என்று நினைக்கிறேன். இந்த மரமண்டைக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

ஆமாம்! ஆரென்.. ஹைடெக் கவிதை போல்தான் உள்ளது... இந்தக் கவிதையில் எனக்கு தோன்றின கருதான் அமரனுக்கும் தோன்றியிருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான்..

தண்ணீர் பூக்களில்
தனலவன் குளிர்ந்தும்....

தண்ணீர் பூக்களை மழை என்று சொல்லலாம்.... தனல்+அவன் = நெருப்பு குளிரிந்தும், நெருப்பே குளிர்ந்தாலும் என் மனம் குளிரவில்லை....

உன் தாமரைகளில்....
மலரும் ஒரு பூ போதுமடி...
என மனம் குளிர

பொதுவாக தாமரை என்பதை பெண்ணின் முகமாய் குறிக்கலாம்.. அந்த அழகிய முகத்தில் உதிர்க்கும் உன் புன்னகை என்னும் பூ ஒன்று போதுமடி, என மனம் குளிர்ந்துவிடும்...

நெருப்பையே குளிர்விக்கும் நீராலும் என் மனதினை குளிரவைக்க இயலாது. உன் புன்னகை ஒன்று போதும், என மனம் குளிர...

இது எனக்கு விளங்கியது.. அமரின் பார்வையில் என்ன கருத்து என்று அவர் சொல்லவேண்டும்.. கவிதை புரிந்துகொள்வதில் கொஞ்சம் சிரமமாக உள்ளது தான்....

சிவா.ஜி
18-07-2007, 04:38 AM
உன் தாமரைகள் என்பது இரண்டு கண்கள், அவற்றிலிருந்து அவனுக்காக விழும் ஒரு துளி கண்ணீர் தான் ஒரு பூ. அந்த பூவுக்காக இன்னும் ஆறாமல் இருக்கிறது இறந்த அந்த காதலனின் இதயம். இப்படி காதல் ஒன்றையே நினைத்து, காதல் ஒன்றையே வாழ்ந்து மறையும் காதலர்களால்தான் காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாராட்டுக்கள் அமரன்.

அமரன்
18-07-2007, 09:29 AM
உனக்கு ஊட்டமளித்த ஓவியன்,இனியவள்,அக்னி,ஷீ,ஆரென் அண்ணா,சிவா அனைவருக்கும் நன்றிகள்.

ஷீ....சிவா இருவர் பார்வையும் சரியானது...

இறப்புத்தான் கவிதையின் கரு...
அந்த இறப்பில் இரண்டு வகை..
இதயம் இறந்திருந்தால்..ஷீயின் பின்னூட்டம் பொருத்தமானது.......
ஆனால் தாமரைகள் என்று சொன்னது கமலக்கண்கள் என்பதை குறிக்கின்றது...
பூ என்பது கண்ணீரைக் குறிக்கின்றது...
"தனலவன் குளிர்ந்ந்தாலும்" மழைநேரத்தில் குளிர் பரவுகின்றது....
காரணம் சூரியன் குளிர்ந்தானோ எனச் சிந்தித்தேன்.......
தனலனுக்குப் பதிலாக பூமி என்று எழுதினேன்...
ஆதவா அதை சூரியன் என போட்டால் சிறப்பென்றார்...
சூரியன் என்பதை விட தனலவன் என்பது பொருந்தியதாக நினைத்ததால் இப்படி எழுதினேன்..

அவனே இறந்திருந்தால் எனும்போது சிவாவின் பார்வை பொருத்தமானது...அவன் இறந்தும் இறக்காமல் இருக்கும் இதயம் குளிர--(ஆத்மா சாந்தியடைய) அவள் கண்ணீர் பூவைக் கேட்கின்றான்.