PDA

View Full Version : கண்ணீர்



இனியவள்
17-07-2007, 03:56 PM
கண்களில் வடியும்
கண்ணீரின் சூடு
கூட உன் ஸ்பரிசத்தை
நினைவூட்டி கண்களில்
வடியும் கண்ணீருக்கு
அணைபோடுகின்றன......

அன்புரசிகன்
17-07-2007, 04:03 PM
பாராட்டுக்கள் இனியவளே..

தெரிகிறது வலி
நீ அழு(ழி)-கையில்

ஓவியன்
17-07-2007, 04:50 PM
வித்தியாசமான கற்பனை இனியவள்.......

கண்ணீரின் சூட்டாலேயே கண்ணீர் ஆவியாகிவிடுமா?

அமரன்
17-07-2007, 04:53 PM
புரிந்தும் புரியாமலும்
சோகத்தில்
அமரன்

ஓவியன்
17-07-2007, 05:01 PM
புரிந்தும் புரியாமலும்
சோகத்தில்
அமரன்

எது புரிந்தது?

எது புரியவில்லை?

புரியாமல்
ஓவியன்!. :fragend005:

அமரன்
17-07-2007, 05:03 PM
அழுவது புரிந்தது..
அணைபோட்டது ஏன்..புரியவில்லை..

ஓவியன்
17-07-2007, 05:06 PM
அழுவது புரிந்தது..
அணைபோட்டது ஏன்..புரியவில்லை..

காதலன் ஞாபகம் வந்தவுடன் அழ வேண்டியதில்லை தானே!

அது தான் அணை போட்டது போல..............:angel-smiley-026:

அமரன்
17-07-2007, 05:07 PM
அப்போ அழுத காரணம்....?????
சின்னபையன்
அமரன்.

அக்னி
17-07-2007, 05:09 PM
எனக்குச் சுடும் எனது கண்ணீர்...
உனக்குக் குளிர்மையாய்
அல்லவா ஸ்பரிசிக்கும்...
இன்னமும் உனது இதயத்தை
இரும்பாகவே வைத்திருக்காதே...
காதலாகக் கனிந்து விடு...
இல்லையேல்,
குளிர்மையாய் தொடும்
எனது கண்ணீர் கலந்த,
உப்புக்காற்றின்
ஈரம்பட்டு துருவேறிவிடும்...

பாராட்டுக்கள் இனியவளே...

ஓவியன்
17-07-2007, 05:13 PM
அப்போ அழுத காரணம்....?????
சின்னபையன்
அமரன்.

சின்னப் பையங்களுக்கு:icon_rollout: எல்லாம் இந்த விடயங்களை விளக்கி அவர்களைப் பழுதாக்க விரும்பவில்லை.:whistling:

கண்டிப்புடன்
ஓவியன்!.

ஓவியன்
17-07-2007, 05:15 PM
இல்லையேல்,
குளிர்மையாய் தொடும்
எனது கண்ணீர் கலந்த,
உப்புக்காற்றின்
ஈரம்பட்டு துருவேறிவிடும்......

நிரம்பவே இரசித்தேன் − பாராட்டுக்கள் அக்னி!

அமரன்
17-07-2007, 05:17 PM
ஹி...ஹி.....சின்னப்பையனின் சின்னக் கவிதை இது...


உன் நினைவுகள் தீண்ட
வடிந்த கண்ணீரால்
உன் தீண்டல் படுத்த.....

வருத்தம் தர
விரும்பாத கண்ணீர்
அடைபட்டுக்கொண்டதோ....

அக்னி
17-07-2007, 05:19 PM
நிரம்பவே இரசித்தேன் − பாராட்டுக்கள் அக்னி!

நன்றி ஓவியரே...
எல்லாம் இனியவளுக்கே...

அமரன்
17-07-2007, 05:21 PM
உப்புக்காற்றின்
ஈரம்பட்டு துருவேறிவிடும்

துருப்பிடிக்குமா?
தட்டிப்பார் தெரியும்
துருக்கள் உதிரும்
மூச்சுக் காற்று
அரித்தது புரியும்....

(சாதா ஈரக்காற்று துருப்பிடிக்க வைக்கும்...உப்புக் கலந்த ஈரக்காற்று இரும்பை அரிக்கும்)

ஓவியன்
17-07-2007, 05:23 PM
தட்டிப்பார் தெரியும்
துருக்கள் உதிரும்
மூச்சுக் காற்று
அரித்தது புரியும்....

துருவேற ஒட்சிசன் தானே முக்கியம், மூச்சுக் காற்றில் காபனீர் ஒட்சைட் தானே இருக்கும்!!

அப்புறம் எப்படி மூச்சுக் காற்று அரிக்கும்? :whistling:

அமரன்
17-07-2007, 05:27 PM
துருவேற ஒட்சிசன் தானே முக்கியம், மூச்சுக் காற்றில் காபனீர் ஒட்சைட் தானே இருக்கும்!!

அப்புறம் எப்படி மூச்சுக் காற்று அரிக்கும்? :whistling:
மூச்சுக்காற்றுத்தானே
உயிர் வாயு
இரும்பு எரிவதில்
என்ன தப்பு...
விஞ்ஞானம் விந்தை..
காதல் அதன் தந்தை..

ஓவியன்
17-07-2007, 05:34 PM
மூச்சுக்காற்றுத்தானே
உயிர் வாயு
இரும்பு எரிவதில்
என்ன தப்பு...
விஞ்ஞானம் விந்தை..
காதல் அதன் தந்தை..

பிடியுமையா பந்தை
நான் வரவில்லை
உந்த சந்தை.........!

இனியவள்
17-07-2007, 05:52 PM
பாராட்டுக்கள் இனியவளே..
தெரிகிறது வலி
நீ அழு(ழி)-கையில்

நன்றி அன்பு


வித்தியாசமான கற்பனை இனியவள்.......
கண்ணீரின் சூட்டாலேயே கண்ணீர் ஆவியாகிவிடுமா?

நன்றி ஓவியன்

கண்ணீர் ஆவியாகவில்லை
ஆவியாகியவர்களைத்
தேடுகின்றது இருட்டிலே
கிடைக்காது என்று தெரிந்தும்...

இனியவள்
17-07-2007, 05:53 PM
எனக்குச் சுடும் எனது கண்ணீர்...
உனக்குக் குளிர்மையாய்
அல்லவா ஸ்பரிசிக்கும்...
இன்னமும் உனது இதயத்தை
இரும்பாகவே வைத்திருக்காதே...
காதலாகக் கனிந்து விடு...
இல்லையேல்,
குளிர்மையாய் தொடும்
எனது கண்ணீர் கலந்த,
உப்புக்காற்றின்
ஈரம்பட்டு துருவேறிவிடும்...
பாராட்டுக்கள் இனியவளே...

உங்களுக்கும் எனது பாராட்டுக்கள் அக்னி
உங்கள் கவியை மிகவும் ரசித்தேன்

இனியவள்
17-07-2007, 05:55 PM
அமர் & ஓவியன் சபாஷ் சரியான போட்டி
நன்னாவே இருக்கு :whistling:

ஓவியன்
17-07-2007, 06:10 PM
கண்ணீர் ஆவியாகவில்லை
ஆவியாகியவர்களைத்
தேடுகின்றது இருட்டிலே
கிடைக்காது என்று தெரிந்தும்...

அமரையும் அக்னியையும் தானே சொல்லுறீங்க...........! :whistling:

இனியவள்
17-07-2007, 06:13 PM
அமரையும் அக்னியையும் தானே சொல்லுறீங்க...........! :whistling:

ஹீ ஹீ ஓவியன் எப்படி இப்படி எல்லாம்

அமர் ஆவி வேடத்தை கலைத்தாகி விட்டது

அமரன்
17-07-2007, 06:13 PM
யாரோ அழைத்தது போலிருக்கே....

ஆதவா
17-07-2007, 06:15 PM
கொஞ்சம் வித்தியாச சிந்தனைதான் இனியவள்..

கண்ணீரின் சூடு கூட
உன் ஸ்பரிசத்தை........... என்று வந்திருக்கவேண்டும்.... மீண்டும் படித்துப் பாருங்கள்.. அனைபோட அல்ல அணைபோட....

திரும்பவும் கண்களில் வடியும் என்ற வார்த்தை இட்டிருக்கவேண்டியதில்லை. இதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...

கண்களில் வடியும்
கண்ணீரின் சூடு கூட
உன் ஸ்பரிசத்தை நினைவூட்டி
கண்ணீருக்கு அணைபோடுகிறது..

இது என் கருத்து..........

ஆனாலும் கவிதைக் கரு எனக்குள் இலகுவில் சிக்க மறுக்கிறது..

ஓவியன்
17-07-2007, 06:16 PM
அமர் ஆவி வேடத்தை கலைத்தாகி விட்டது

இல்லை இன்றும் போட்டாரே? :whistling:

அமரன்
17-07-2007, 06:17 PM
ஆனாலும் கவிதைக் கரு எனக்குள் இலகுவில் சிக்க மறுக்கிறது..

ஹி....ஹி.....இன்னொரு சின்னப்பையன் .... :082502hi_prv: :082502hi_prv:

ஆதவா
17-07-2007, 06:17 PM
அமரன் மற்றும் அக்னி...... மனதில் பட்டதைச் சொல்லுகிறேன். நாம் வெளிப்படையாகவே இருப்போம். மறைந்திருந்து போர்தொடுத்து ஜெயிப்பதைவிட வெளிப்படையாக தோற்கலாம்... ஆவி வேடம் கலையுங்கள்.. இது என் வேண்டுகோள்.. (பகிரங்கமாக விட்டதற்கு மன்னிக்கவும்...)

இனியவள்
17-07-2007, 06:20 PM
கொஞ்சம் வித்தியாச சிந்தனைதான் இனியவள்..
கண்ணீரின் சூடு கூட
உன் ஸ்பரிசத்தை........... என்று வந்திருக்கவேண்டும்.... மீண்டும் படித்துப் பாருங்கள்.. அனைபோட அல்ல அணைபோட....
திரும்பவும் கண்களில் வடியும் என்ற வார்த்தை இட்டிருக்கவேண்டியதில்லை. இதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...
கண்களில் வடியும்
கண்ணீரின் சூடு கூட
உன் ஸ்பரிசத்தை நினைவூட்டி
கண்ணீருக்கு அணைபோடுகிறது..
இது என் கருத்து..........
ஆனாலும் கவிதைக் கரு எனக்குள் இலகுவில் சிக்க மறுக்கிறது..

நன்றி ஆதவா ஆழமான கருத்துக்கு இனி திருத்திக்கொள்வேன்...

அதாவது பிரிந்து சென்றவனின்
நினைவைக் கண்ணீர் கொண்டு
அழிக்க முற்படும் போது
அக் கண்ணீரே அவன் ஸ்பரிசத்தை
நினைவூட்டிச் செல்வதால் அணைபோடுகின்றது
கண்கள் கண்ணீருக்கு....

அமரன்
17-07-2007, 06:22 PM
ஆதவா..நான் மறைவதுக்குக் காரணம்....தேடலே...நண்பர்களின் பழைய கவிதைகளை படிக்கும்போது மறைந்து விடுவேன். படித்ததும் ஆவி வேடம் கலைத்துவிடுவேன்...இன்றைய தேடல் பூவின் கவிதைகள். உங்கள் கருத்து தப்பில்லை.