PDA

View Full Version : இயற்கையோடு நீ

இனியவள்
17-07-2007, 02:18 PM
வெட்ட வெட்ட துளிர்க்கும்
மரம் போல் துளிர்க்கின்றது
உன்னோடான காதல்.....

பச்சைப் பசேலென்ற
மலைகள் போல் குளிர்கின்றது
உன் நினைவு....

பூந்தோட்டத்தில் வண்ண
மயமாய் விரிந்திருக்கும்
பூக்கள் போன்ற உன்
கண்கள்.......

சிணுங்கி விட்டுச் செல்லும்
தென்றல் போல் உன்
மூச்சுக் காற்று...

இசைக்கேற்று அசைந்தாடும்
மரங்கள் போன்ற உன்
ராஜ நடை.....

காலை நேரச் சூரியனை
ஞாபகப் படுத்தும்
உன் அழகிய முகம்...

நட்சத்திரங்கள் உயிர்
பெற்று வந்ததோ
பூமியில் என
அதிசயிக்க வைக்கும்
உன் புன்னகை....

இறைவன் படைத்த
அனைத்திலும் நிழல்
ஆடுகின்றது உன்
நினைவுகள்....

aren
17-07-2007, 02:44 PM
அருமையான கவிதை.

என்னுடைய மனைவி
என்னப்பார்த்து இப்படித்தான்
நினைத்திருப்பாள்
என்ற நினைப்பே புல்லரிக்கிறது

அதுவே உண்மையாக இருந்தால்
அவளுக்கு என் வாழ்நாளை
அர்ப்பணிப்பேன்

அர்ப்பனே
என்ன நினைக்கிறே
பைத்தியம் பிடித்துவிட்டதா

யாரது என்று திரும்பினால்
அங்கே என் மனைவி
கையில் உருட்டு கட்டையுடன்!!!

இனியவள்
17-07-2007, 02:51 PM
அருமையான கவிதை.

என்னுடைய மனைவி
என்னப்பார்த்து இப்படித்தான்
நினைத்திருப்பாள்
என்ற நினைப்பே புல்லரிக்கிறது

அதுவே உண்மையாக இருந்தால்
அவளுக்கு என் வாழ்நாளை
அர்ப்பணிப்பேன்

அர்ப்பனே
என்ன நினைக்கிறே
பைத்தியம் பிடித்துவிட்டதா

யாரது என்று திரும்பினால்
அங்கே என் மனைவி
கையில் உருட்டு கட்டையுடன்!!!

ஹீ ஹீ ஆரென் அண்ணா படிச்சு சிரிச்சுட்டன்:lachen001: :lachen001:
நல்லா இருக்கு

அமரன்
17-07-2007, 02:53 PM
யாரது என்று திரும்பினால்
அங்கே என் மனைவி
கையில் உருட்டு கட்டையுடன்!!!
எல்லா இடமும் ஒரே மாதிரித்தான் இருக்காங்க....

அர்ப்பனே
என்ன நினைக்கிறே
பைத்தியம் பிடித்துவிட்டதா

உன் அப்பன்
என்கையில்
உன்கையை தந்தபோது
பிடித்ததடி பைத்தியம்.
−−−−−−−−−−−−−−−−−
−−−−−−−−−−−−−−−−−
−−−−−−−−−−−−−−−−
தங்கையை தந்திருக்கலாம்..

ஓவியன்
17-07-2007, 02:56 PM
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம், அவ்வாறே காதல் கொண்ட உள்ளத்துக்கும் காண்பதெல்லாம் காதலித்த உள்ளமே...................!

அழகான வரிகள் இனியவள்!

இப்போதெல்லாம் உங்கள் வரிகளில் மெருகு தெரிகிறது!

வழமை போல வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

பி.கு − அரென் அண்ணாவின் பின்னூட்டம் அருமையிலும் அருமை.

ஓவியன்
17-07-2007, 02:57 PM
−−−−−−−−−−−−−−−−
தங்கையை தந்திருக்கலாம்..

உதை வாங்குவது உறுதியென்று முடிவெடுத்தாச்சா.........? :whistling:

இனியவள்
17-07-2007, 02:59 PM
அக்கா உருட்டுக்கட்டையோடு நிற்கிறா
தங்கச்சி வீச்சு அறுவாளோட நிற்க
போறா பார்த்து:lachen001:

இனியவள்
17-07-2007, 03:00 PM
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம், அவ்வாறே காதல் கொண்ட உள்ளத்துக்கும் காண்பதெல்லாம் காதலித்த உள்ளமே...................!
அழகான வரிகள் இனியவள்!
இப்போதெல்லாம் உங்கள் வரிகளில் மெருகு தெரிகிறது!
வழமை போல வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
பி.கு − அரென் அண்ணாவின் பின்னூட்டம் அருமையிலும் அருமை.

நன்றி ஓவியன்

எழுத எழுத மெருகு கூடுது போலும் :sport-smiley-013:

அமரன்
17-07-2007, 03:01 PM
உதை வாங்குவது உறுதியென்று முடிவெடுத்தாச்சா.........? :whistling:

இப்ப மட்டும் என்னவாம்...

மலர்
17-07-2007, 03:01 PM
அமர் ஒருவரிடம் அடி வாங்குவது பத்தாதா....
ம்ம்ம் தங்கை வேரா

கண்டிப்பாக அடி நிச்சயம் உண்டு

ஓவியன்
17-07-2007, 03:04 PM
அமர் ஒருவரிடம் அடி வாங்குவது பத்தாதா....
ம்ம்ம் தங்கை வேரா

கண்டிப்பாக அடி நிச்சயம் உண்டு

ஆமா அவருக்கு ஒரு அடி பத்தாதாம் மலர்!

ஏனென்றால் அவர் மேளம் மாதிரி இரண்டு பக்கத்தால் அடித்தாலும் கத்துவாரே தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டார். :lachen001:

இனியவள்
17-07-2007, 03:05 PM
ஹீ ஹீ அமர் சொன்னதும் தான்
சொன்னார் அமர் பாடு பெரும்
பாடா போச்சே :icon_rollout:

அமரன்
17-07-2007, 03:07 PM
அமர் ஒருவரிடம் அடி வாங்குவது பத்தாதா....
ம்ம்ம் தங்கை வேரா

கண்டிப்பாக அடி "நிச்சயம்" உண்டு

அதுதான் நிச்சயம் பன்ணும்போது தெரிந்ததே...
----------------------------------------------------------------
ஓவியன் கத்துறதா...அதுக்கு வேறா இருக்குமே....ஊமைமேளமப்பா நான்.
---------------------------------------------------------------
ஏங்க இனியவள் படமெல்லாம் போட்டுக்காட்டுறீங்க...பாத்தீங்களா...????:fragend005: :fragend005:

aren
17-07-2007, 03:09 PM
அதுதான் நிச்சயம் பன்ணும்போது தெரிந்ததே...

அடி மனைவியிடமிருந்தா அல்லது மனைவியின் தங்கையிடமிருந்தா!!!!

அமரன்
17-07-2007, 03:11 PM
அடி மனைவியிடமிருந்தா அல்லது மனைவியின் தங்கையிடமிருந்தா!!!!

வாலாட்டினால் யார்க்கிடேயிருந்து விழுமோ.....அவங்ககிட்ட...(பார்க்காத போது ஒருவரடி.பார்த்தால் இருவரடி.)

இனியவள்
17-07-2007, 03:13 PM
அதுதான் நிச்சயம் பன்ணும்போது தெரிந்ததே...
----------------------------------------------------------------
ஓவியன் கத்துறதா...அதுக்கு வேறா இருக்குமே....ஊமைமேளமப்பா நான்.
---------------------------------------------------------------
ஏங்க இனியவள் படமெல்லாம் போட்டுக்காட்டுறீங்க...பாத்தீங்களா...????:fragend005: :fragend005:

அச்சச்சோ சின்னப்பிள்ளை நீங்கள்
எண்டு சொல்லாமல்ல் சொல்றன் அமர்
கண்டுகாதையுங்க அதையெல்லாம் ஹீ ஹீ:lachen001: :lachen001: :lachen001:

இனியவள்
17-07-2007, 03:15 PM
வாலாட்டினால் யார்க்கிடேயிருந்து விழுமோ.....அவங்ககிட்ட...(பார்க்காத போது ஒருவரடி.பார்த்தால் இருவரடி.)

அனுபவம் பேசுதோ ஹீ ஹீ

அனுபவத்தில் சொல்கிறார்
அமர்
ஒருவர் அடித்தால் அடிக்கு
பெருமை
இருவர் அடித்தால் எனக்கு
பெருமை
அடிப்பவருக்கு அது தான்
அசிங்கம் என்று

அமர் சொன்ன தத்துவம் 3:thumbsup:

மலர்
17-07-2007, 03:22 PM
ஆமா அவருக்கு ஒரு அடி பத்தாதாம் மலர்!

ஏனென்றால் அவர் மேளம் மாதிரி இரண்டு பக்கத்தால் அடித்தாலும் கத்துவாரே தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டார். :lachen001:

இனியவள் வாரீர்களா, அப்படியே மெதுவாக சென்று அமர் வாயை கட்டி நாலு சாத்து சாத்தலாம்...

அமரன்
17-07-2007, 03:23 PM
ஒண்ணு கூடிட்டாங்கப்பா...ஒண்ணுகூடிட்டாங்க.....

ஓவியன்
17-07-2007, 03:24 PM
இனியவள் வாரீர்களா, அப்படியே மெதுவாக சென்று அமர் வாயை கட்டி நாலு சாத்து சாத்தலாம்...

ஹீ!
சேர்ந்திட்டீங்களா?
முதல் அமர், அப்புறம் நான் தானே!

அதுக்கு முதல் ஓவி எஸ்....................கேப்.:thumbsup:

இனியவள்
17-07-2007, 03:29 PM
இனியவள் வாரீர்களா, அப்படியே மெதுவாக சென்று அமர் வாயை கட்டி நாலு சாத்து சாத்தலாம்...

மலர் பாவம் அமர்
விடுவன் வேணுமென்றால்
ஓவியனை சாத்துங்க நாலு
என்ன பத்து அடி கூட
தாங்குவாரு ஓவியன் வடிவேல்
மாதிரி :whistling:

அமரன்
17-07-2007, 03:32 PM
அருமையான கவிதை இனியவள்...

இயற்கைப் படைத்தான் இறைவன்..
அதில் அவரை கண்டனர் சிலர் ..
அதில் இரையைக் கண்டனர் சிலர்..
அதில் அவனைக் கண்டது இனியவள்...

அமரன்
17-07-2007, 03:35 PM
ஓவியன் வடிவேல்
மாதிரி
வலிக்காத மாதிரி நடிப்பாரோ...

மலர்
17-07-2007, 03:36 PM
ச்ச ஒவியன் பாவம் இல்லையா..
பரவாயில்லை அமருக்கு பாதியை கொடுக்கலாம் மீதியை ஒவியனுக்கு கொடுக்கலாம்

ஓவியன்
17-07-2007, 03:36 PM
மலர் பாவம் அமர்
விடுவன் வேணுமென்றால்
ஓவியனை சாத்துங்க நாலு
என்ன பத்து அடி கூட
தாங்குவாரு ஓவியன் வடிவேல்
மாதிரி :whistling:

ஆமா சொல்லிப் போட்டேன்!

வேண்டாம், எதுனா பேசியே தீர்த்துக்கலாம் இனியவள்! :fragend005:

இனியவள்
17-07-2007, 03:36 PM
அருமையான கவிதை இனியவள்...
இயற்கைப் படைத்தான் இறைவன்..
அதில் அவரை கண்டனர் சிலர் ..
அதில் இரையைக் கண்டனர் சிலர்..
அதில் அவனைக் கண்டது இனியவள்...

நன்றி அமர்

ஓவியன்
17-07-2007, 03:37 PM
ச்ச ஒவியன் பாவம் இல்லையா..
பரவாயில்லை அமருக்கு பாதியை கொடுக்கலாம் மீதியை ஒவியனுக்கு கொடுக்கலாம்

நீங்களுமா?

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.............

சோகத்துடன்
ஓவியன் :mad:

இனியவள்
17-07-2007, 03:38 PM
வலிக்காத மாதிரி நடிப்பாரோ...

ஹீ ஹீ ஆமாம் அமர்

அடிக்கும் போது என்னை
நல்ல ஓவியன் எவ்வளவு
அடி வாங்கினாலும் அடி
வாங்கிறதை கச்சிதமாய்
படம் வரையிறான் என்று
சொல்லிப் போட்டாங்கள்டா
மாமு என்று சொல்லுவார்

ஓவியன்
17-07-2007, 03:40 PM
சொல்லிப் போட்டாங்கள்டா
மாமு என்று சொல்லுவார்

மீண்டும் தூரிகைப் போர் தொடங்கப் போகிறது!!!!!!!!

சரியான கோபத்துடன்
ஓவியன்:mad:

இனியவள்
17-07-2007, 03:40 PM
ஆமா சொல்லிப் போட்டேன்!
வேண்டாம், எதுனா பேசியே தீர்த்துக்கலாம் இனியவள்! :fragend005:

ஹீ ஹீ ஓவியன் இப்படி
எல்லாம் பயப்பிடக் கூ....டா...து...
சின்னப் பிள்ளை மாதிரி :icon_rollout:

இனியவள்
17-07-2007, 03:41 PM
மீண்டும் தூரிகைப் போர் தொடங்கப் போகிறது!!!!!!!!
சரியான கோபத்துடன்
ஓவியன்:mad:

போரா அய்யோ இங்கையுமா
எஸ்கேப் :whistling:

ஓவியன்
17-07-2007, 03:44 PM
போரா அய்யோ இங்கையுமா
எஸ்கேப் :whistling:

தப்ப முடியாதுங்கோ அடுத்த இலக்கு தாங்களே தான்!. :whistling:

இனியவள்
17-07-2007, 03:48 PM
தப்ப முடியாதுங்கோ அடுத்த இலக்கு தாங்களே தான்!. :whistling:

நாங்களும் வரைஞ்சுடுவமில்லோ கணனி துணை கொண்டு :whistling: